இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட பதிவு. யார் மனதையும் புண்படுத்தும் விதமாக எழுதப்படவில்லை என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன். என்னடா அப்படி எழுதப்போறே... பில்டப்பு எல்லாம் விடுறேன்னு கேக்காதீங்க... சும்மா நகைச்சுவைக் கிறுக்கல்தான்...
தினசரியில் தீவிரமாக மூழ்கியிருந்த சொக்கு 'என்னண்ணே... பேப்பருல அப்படி என்ன போட்டிருக்கு' என்ற குரல் கேட்டு நிமிர்ந்தார்.
"அடடே... வா செங்கோடா... என்னப்பா காலையில வந்திருக்கே"
"சும்மாதாண்ணே..."
"உட்கார்... காபி சாப்பிடுறியா"
"இல்ல... வேண்டாண்ணே.."
"சொல்லு... என்ன விசயம்..."
"அது வந்துண்ணே... இப்ப எல்லாரும் பிளாக்கு... பிளாக்குன்னு கிடக்காங்க... நீங்க கூட ரெண்டோ மூணோ வச்சிருக்கீங்க"
"டேய் நல்லா சொல்லு.. ரெண்டு மூணு வச்சிருக்கேன்னா வேற மாதிரி அர்த்தமாயிடும்... அழகா தமிழ்ல வலைப்பூன்னு சொல்லலாமே..."
"அது என்ன பூவோ... நான் ஞானசூன்யமுண்ணே... எனக்கு பிளாக்குன்னுதான் தெரியும்... ஆமா என்ன சொன்னீங்க வலைப்பூவா... அப்படின்னா மல்லிகைப்பூ.. கனகாம்பரம் மாதிரி இதுவும்..."
"அட வெளங்காதவனே இது அந்தப்பூ இல்ல இது இணையத்துல பிளாக்ஸ்க்கு தமிழ் சொல்..."
"அப்படியா... இருக்கட்டுங்கண்ணே... எதுக்கு வலைப்பூன்னு வச்சாங்க..."
"அட வேற ஒண்ணுமில்ல... குடும்பத்தைகூட இப்படி பாக்கமாட்டோம்... இத பூ மாதிரி சும்மா பொத்திப் பொத்தியில்ல பாக்கிறோம்.... அதனாலதான்.."
"அது சரி எனக்கு ஒரு பிளாக்கு வேணுமின்னே..."
"அடேய்... அதான் வலைப்பூன்னு தமிழ்ல சொல்லிக் கொடுத்தேன்ல..."
"ஈசியா வாரதை விட்டுட்டு வலைப்பூ... வாழைப்பூன்னு... எனக்கு ஒண்ணு வேணும்"
"சரிடா... ஒனக்கு ஒரு வலைப்பூ ரெடி பண்ணலாம்... அதுல என்ன பண்ணப்போறே..."
"நீங்கள்லாம் என்ன பண்றீங்க..."
"நாங்க நாட்டு நடப்பு, கதை, கவிதை, அரசியல், சினிமான்னு எழுதுவோம்"
"அதே கருமாந்திரத்தை நானும் எழுதுறேன்"
"இங்க பாரு எழுத்தை கருமாந்திரமுன்னெல்லாம் சொல்லப்படாது..."
"இந்த வார்த்தையெல்லாம் புளோவுல வாரதுண்ணே... விடுங்க”
“சரி எழுதி...”
“என்னண்ணே கொஸ்டினா கேக்குறே... நீ வேற பிரபல பதிவர்ன்னு டீக்கடையில பேசுறாங்க... அதான் உங்கிட்ட வந்தேன்... என்னென்ன செய்யணும் தெளிவா சொல்லுண்ணே...”
“சரி... இப்ப உனக்கு ஒரு வலைப்பூ தயார் பண்ணி பதிவு போட்டதும்...”
“அண்ணே பதியமுன்னா விதை போட்டு...”
“டேய்ய்ய்ய்.... ஏண்டா கொல்லுறே... பதியமில்லை... இது பதிவு... நீ எழுதுறதை இங்க பதிவுன்னு சொல்வோம்... எழுதுறவரை பதிவர்ன்னு சொல்வோம்..”
“ஒ.கே. விளங்கிடுச்சு...”
“நீ பதிவுலகத்துக்கு புதுசா இருக்கிறதால...”
“ இது ஒரு தனி உலகமா...”
“எழுதிப்பாரு... அப்பத்தெரியும்... இந்த உலகத்தைப் பத்தி...”
“சரிண்ணே... மேல சொல்லுங்க...”
“மத்தவங்க வலைப்பூவுக்கு போயி படிக்கணும்... அங்க போயி படிக்கிறப்போ...”
“எங்க போயி படிக்கணும்...”
“குறுக்க குறுக்க பேசாதடா... அதுக்கெல்லாம் நிறைய திரட்டி இருக்கு... திரட்டின்னா என்னன்னு கேக்காதே... வரிசையா வாரேன்... அப்படி படிக்கிறப்போ அவங்களை பின் தொடரணும்...”
என்னண்ணே பின்னால போகச் சொல்றீங்க... இப்படித்தான் ரெண்டு நாளைக்கு முன்னால நம்ம தேவிப்புள்ள பின்னாடி போனேன்... முதல்ல முறைச்சிச்சு... நாம யாரு... மறுபடியும் பின்னால போனேன்... செருப்பு பிஞ்சு போயிடுமுன்னு சொல்லிருச்சி...”
“நீ பின்னால போன அது செருப்பு ஏன் பிய்யணும்...”
“என்னண்ணே... நக்கலா? “
“சரி விசயத்துக்கு வா... இப்ப சொன்ன செருப்பு மேட்டரையே முதல் பதிவாக்கிடலாம்...”
“என்னையவே கேவலப்படுத்திக்கச் சொல்றிங்களா?”
“ இதுல என்ன கேவலமுன்னேன்... நண்பனுக்கு நடந்தா எழுது... சரி பின் தொடரணுமுன்னு நான் சொன்னது அவங்களோட பாலோவர்ஸ் ஆகிறது...”
“ம்... இப்ப சொன்னீங்க பாருங்க அழகா தமிழ்ல புரியிற மாதிரி...”
“ இது தமிழ்...சரிதான்...”
“எத்தனை படத்துல பாக்கிறோம்... நாம எத்தனை விசயத்துல பாலோ பண்ணுன்னு சொல்லியிருப்போம்... அப்ப தமிழ்தானே...”
“சரிப்பா... அவங்களும் உன்னை பாலோ பண்ணுவாங்க... அதுக்கு அப்புறம் முக்கியமானது பின்னூட்டம் போட மறக்கக்கூடாது...”
“ஹா...ஹா...ஹா...ஹி...ஹி... எனக்கு பின் ஓட்டம் தெரியும்... ரெண்டு நாளைக்கு முன்னாடி பின் ஓட்டத்தால கக்கூஸ் உள்ளயே படுத்திருந்தேன்... பின்னூட்டமுன்னா...”
“அட கருமம் பிடிச்சவனே... பின்னூட்டமுன்னா எழுதுனதை படிச்சிட்டு நல்லாயிருக்கு... இந்த வரி பிடிச்சிருக்கு அப்படின்னு அவங்களுக்கு கமெண்ட் போடணும்...”
“கமெண்ட் அடிக்கிறதுன்னு சொல்ல வேண்டியதுதானே.... அதை விட்டுட்டு பின்னோட்டம்... முன்னோட்டமுன்னு... ஈஸியான வார்த்தைகளை சொல்ல பழகுங்கண்ணே...”
“சரி... இந்த பின்னூட்டத்துல ஈஸியான வழி என்னன்னா ‘nice’, ‘super’, ‘wow’ ‘good’ ‘கலக்கல்’, ‘அருமை’ இப்படின்னு போட கத்துக்கணும். அது கூட smiley-ம் போட்டா எடுப்பா இருக்கும்...”
“அது என்ன கருமாந்திரமண்ணே... புதுசா இருக்கு...”
“ இப்பதானே சொன்னேன்... இப்படியெல்லாம் பேசக்கூடாதுன்னு... சிரிப்புன்னா ‘:)’ இப்படி... வெறுப்புன்னா ‘:(‘ இப்படி... இது மாதிரி... போகப்போக கத்துக்குவே... இந்த பின்னூட்டத்துல முக்கியமா கும்மி அடிக்கத் தெரியணும்”
“கும்மியா... இங்க ஏன் அது வருது...”
“காரணம் இருக்கு... இப்ப ஒருத்தர் ஒரு பதிவு எழுதுறாரு... அதுல ஒரு வார்த்தையை எடுத்து பின்னூட்டம் போடும் போது சம்பந்தம் இல்லாம நமக்கு தெரிந்த பதிவரை இழுத்து விடணும்... அப்புறம் அவரு பின்னூட்டம் போடும் போது நமக்கு பதில் சொல்லி அடுத்த கேள்வியை நமக்கு வைப்பாரு... அதுக்கு யாராச்சும் பதில் சொல்ல வருவாங்க... அப்ப நாம மறுபடிக்கும் எண்டராகி அள்ளி விடணும்... இதுல முக்கியம் கூட்டமா கும்மி அடிக்கணும்... சும்மா அவருக்கு ஹிட்ஸ் அள்ளிக்கிட்டு போகும்... அந்த பாசத்துல நாம போட்ட மொக்க பதிவா இருந்தாலும் நம்ம வலைப்பூவுக்கும் வந்து கும்மி அடிப்பாங்க...”
“மொக்கைப் பதிவுன்னா...”
“ஒண்ணுமே இருக்காது.... ஆனா இருக்க மாதிரி ஒரு பில்டப்போட எழுதி முடிக்கத் தெரியணும்... அப்புறம் நம்மளையும் மொக்கைப் பதிவர் வட்டத்துல சேர்த்து பிரபல மொக்கைப் பதிவர்ன்னு சொல்லிடுவாங்க...”
“ஓ...”
“திரட்டியின்னு சொன்னேன்ல... அது என்னன்னா நாம எழுதுறதை மத்தவங்கிட்ட கொண்டு சேக்கிற நல்ல வேலைய செய்யிற வலைப்பக்கங்கள். நாம எழுதி அதுல இணைச்சிட்டோமுன்னா... பாக்க வர்றவங்க நம்ம பகிர்வு பிடிச்சிருந்தா ஓட்டுப் போடுவாங்க... இங்க பதிவரசியல் இருக்கும்...”
“என்னண்ணே அரசியலா... நம்ம முதல்வர் பண்ற குடும்ப அரசியல் மாதிரியா...”
“டேய்... அரசியலை இழுக்காதேடா... நாம ஸ்டேட்ல நடக்கிறது மன்னர் ஆட்சி... மதுரையில இப்ப குறுநில மன்னர் கல்யாணம் வச்சதுக்கு கோடிக்கணக்குல செலவு பண்ணிட்டு எல்லாருக்கும் சாப்பாடு போட்டாங்க... திங்கப்போன நாம இந்த பணமெல்லாம் ஏதுன்னு திங்க் பண்ணினமா... மன்னர் என்ன திருக்குவளையில கோடிகளோட பிறந்தா வந்தாரு... “
“என்னய பேசாதேன்னு சொல்லிட்டு நீங்க டீப்பா போறீங்களேண்ணே...”
“கிளப்பி விட்டுட்டே... சரி விசயத்துக்கு வா... இந்த அரசியல் என்னன்னா... நீ எவ்வளவுதான் நல்லா எழுதியிருந்தாலும் உனக்கு ஓட்டுப்போட மாட்டோம்... எங்களுக்குன்னு ஒரு குரூப் வச்சுப்போம்... அதுக்குள்ள ஓட்டுப் போட்டு மகுடமெல்லாம் சூட்டிப்போம்...”
“அடப்பாவிங்களா... அப்ப நல்லா எழுதுறவனெல்லாம்...”
“எவனாயிருந்தா என்ன... கும்மியடிச்சு அதிக ஹிட்ஸ்சும் குழு ஓட்டும் வாங்கிட்டா முன்னணியில இருக்கலாம்... மொக்கைப் பதிவோ... கச்சடா பதிவோ... கவலையில்லை... நீ வேணா நெனச்சுக்கலாம்... நான் நல்லா எழுதியிருக்கேன்னு... அதை நாங்க சொல்லணும் பின்னூட்டத்துலயும் ஓட்டுலயும்...”
“ம்...”
“அப்புறம் முக்கியமான விஷயம்... பதிவ எழுதிட்டு யார்ரா பின்னூட்டம் போடுறான்னு கம்ப்யூட்டர் பக்கத்துலயே கண் கொத்தி பாம்பாட்டம் பாத்துக்கிட்டே இருக்கணும். ஒரு பின்னூட்டம் வந்தாலும் அதுக்கு உடனே நன்றின்னு நீ முன்னூட்டமிடனும்.”
“அது சரி... கம்யூட்டர் பக்கத்துலயே இருக்கணுமா...”
“ஆமா... 24 மணி நேரமும் வலையில்யே இருந்தியன்னா சீக்கிரம் பிரபல பதிவராயிடலாம்... அதுக்கு மடிக்கணினி வாங்கி வச்சுக்க...”
“என்னது... மடக்குற கணினியா... அப்படின்னா...”
“ஐய்யோ... அது லாப்டாப்...”
“முன்னமே சொன்னேன் தெரிஞ்ச தமிழ் வார்த்தையில பேசுங்க... தெரியாத வார்த்தையில பேசாதீங்க... இப்ப பாருங்க ஒச்சாயின்னு தமிழ் சாமி பேர்ல படமெடுத்ததுக்கு வரி விலக்கு இல்லையின்னு சொன்ன முத்தமிழ் கலைஞரோட அவையில குவாட்டர் கட்டிங்ன்னு சூப்பர் தமிழுக்கு கொடுத்தாங்கள்ல... சும்மா மடிக்கணினி, வலைப்பூ, பின் தொடர்ன்னு...”
“ஏண்டா... இம்புட்டு டென்சனாகிறே... சரி பதிவெழுதிட்டு... அடிக்கடி பின்னூட்டம் வந்திருக்கான்னு பாக்கணும்... வரலைன்னா திரட்டிய ஓப்பன் பண்ணி யாருக்காச்சும் பின்னூட்டம் போடு... உடனே அவருகிட்ட இருந்து உனக்கு பின்னூட்டம் வரும்... இது இங்க எழுதப்படாத பாலிசி... நீ பாட்டுக்கு ஒரு பதிவ போட்டுட்டு நாளு நாளைக்கு அந்தப் பக்கமே போகாம இருக்கப்படாது...”
“அதாவது எவனையாவது அறிக்கைவிடச் சொல்லிட்டு கொடநாட்டுல போயி படுத்துக்கிற மாதிரி...”
“அடேய்... அந்த சாக்கடைக்குள்ளயே ஏண்டா இறங்குறே... அப்புறம் முக்கியமானது இதுதான் பதிவுலகத்துல அப்பப்ப போட்டியெல்லாம் வைப்பாங்க யோசிச்சு கலந்துக்கணும்... நீ பாட்டுக்கு தப்பா எழுதியிருந்தியன்னா போச்சு..."
“என்னண்ணே வீட்டுக்கு ஆட்டோவெல்லாம் வருமா?”
“அதெல்லாம் இல்லடா.... சொல்றேன்... இப்ப 'உயிர் ஊசல்'ன்னு எழுதுறதுக்குப் பதிலா 'உயிர் உசல்'ன்னு எழுதியிருக்கேன்னு வச்சுக்க... போட்டி நடத்துற பதிவர் தமிழ் பண்டிட்டை கூட்டியாந்து தப்பெல்லாம் கண்டு பிடிச்சு அதை ஒரு பதிவா போடுவாரு... அப்புறம் அவங்க உன்னோட படைப்பைப் பத்தி எது வேணாலும் எழுதுவாங்க... நீ எதுவும் பேசக்கூடாது... அப்படி எதாவது எதிர்த்தா உனக்கு குழுவா மிரட்டல் வரும்...”
“அம்மாடி... இவ்வளவு இருக்கா இதுக்குள்ள... இந்த கருமாந்...”
“சனியனே... இதை சொல்லாத சொல்லாதேன்னு எத்தனை தடவை சொல்றது எளவெடுத்தவனே...”
“சாரிண்ணே... வாய் தவறி... அதுக்காக கோவப்படாதீங்க...”
“சரி... நாம உனக்கு ஒரு வலைப்பூ தயார் பண்ணலாம். அதுல என்னென்ன சேக்கலாம் எப்படி சேக்கலாம்ன்னு விரிவா எழுதுற நண்பர்கள் வலைப்பூ இருக்கு... அதுல பாத்து அப்புறம் நல்லா டிசைன் பண்ணிக்க... இப்ப சாதாரணமா உனக்கு ஒரு வலைப்பூ தயார் பண்ணலாம்... என்ன பேரு வைக்கணும்.... “
“பிரபல பதிவர்ன்னே வையுங்கண்ணா...”
“அடங்கொய்யாலே... பேர கேட்டா...”
“ இல்லண்ணா... பிரபலமாகிறமோ இல்லயோ படிக்கிறவங்க பிரபல பதிவர்ன்னு சொல்வாங்கள்ல...”
“நல்லா யோசிக்கிறே... பதிவுலகத்துல பெரிய ஆளா வருவே...”
“உங்க ஆசிர்வாதம் அண்ணே...”
“சரி... எதாச்சும் எழுதி இன்னைக்கு பதிவிடு...”
“எதுல போயி எழுதணும்... தமிழ் டைப்பிங்க போகணுமா...”
“ஒரு புண்ணாக்கும் வேணாம். நிறைய தமிழ் எழுதிகள் இருக்கு... நான் தர்றேன்... ammaன்னு கொடுத்தா அம்மான்னு வரும்... ரொம்ப ஈஸி...”
“சரிண்ணே... நாமளும் கலக்கிடுவோம்... ரொம்ப நன்றிண்ணே... பொறுமையா சொன்னதுக்கு... நீங்க எதாவது எழுதியிருக்கிங்களா...”
“ இப்பத்தான் புயலடிக்கும் அலைக்கற்றைன்னு பாதி ரெடி பண்ணி வச்சசிருக்கேன்... ஏண்டா”
“அந்த பாதிய தொடருமுன்னு போட்டு என்னோட பிளாக்குல முத கட்டுரையா எம் பேருல போட்டிங்கண்ணா...”
“அடிங்கொய்யால... நரிக்கு ஒதுங்க எடம் கொடுத்தா கிடைக்கு ரெண்டு ஆடு கேட்டுச்சாம்... ஓடிப் போயிடு... செருப்பு மாட்டரையே பதிவா போடு...”
“அண்ணே... பாருங்க... எங்க ஓபனிங்க... சும்மா டெர்ரரா பதிவு போடுவோமுல்ல... நாளைக்கு இந்த பிரபல பதிவர்கிட்ட நீங்க ஆர்ட்டிக்கிள் கேட்டு நிக்கிற நிலமை வரும்... வரட்டா....”
“வராதே... தொலை...”
-’பரிவை’ சே.குமார்.
Google - Thanks for photo...
ஹஹஅஹா குமார் சூப்பர்...
பதிலளிநீக்குநல்லா சிரிச்சேன்!
பதிலளிநீக்குரசிச்சு படிச்ச்சேங்க!:-)
good one...
பதிலளிநீக்குHi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....
பதிலளிநீக்குwww.ellameytamil.com
ஹா ஹா நல்லாயிருக்குங்க..ரசித்தேன்!!
பதிலளிநீக்குசூப்பரா இருக்கு. நிறைய இடங்களில் அப்பாவியின் ( பிரபல பதிவர் ) டயலாக் நல்லா இருக்கு.
பதிலளிநீக்கு//போட்டி நடத்துற பதிவர் தமிழ் பண்டிட்டை கூட்டியாந்து தப்பெல்லாம் கண்டு பிடிச்சு அதை ஒரு பதிவா போடுவாரு... அப்புறம் அவங்க உன்னோட படைப்பைப் பத்தி எது வேணாலும் எழுதுவாங்க... நீ எதுவும் பேசக்கூடாது... அப்படி எதாவது எதிர்த்தா உனக்கு குழுவா மிரட்டல் வரும்...”//
haha..... No comments, Sir.
:))
பதிலளிநீக்குsuper
பதிலளிநீக்குkalakkal
:)))
ம்ம்ம் கலக்குறீங்க போங்க பதிவுலகத்தின் புதிய நண்பர்களுக்கு நல்லதொரு அறிமுறை :)
பதிலளிநீக்குஇப்போதான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன், படிச்சு முடிச்சிட்டு அடுத்த வாரம் வர்ரேன்!
பதிலளிநீக்குஓஹோ இப்படித்தான் வலைப்பூ, ஸாரி-
பதிலளிநீக்குபிளாக் ஆரம்பிக்கணுமா!!!
குருவே, எனக்கும் ஒரு பிளாக்
ஆரம்பிச்சு, அப்படியே நீங்களே
ஒரு பதிவையும் அதிலே போட்டு
விட்டீங்கன்னா(ண்ணா)...
ரொம்ப நல்லாயிருக்கு... என்னைப் பொறுத்தவரை இதுவும் ஒருவித விழிப்புணர்ச்சி தான்...
பதிலளிநீக்குபுட்டு புட்டு வச்சிட்டீங்க,புதிய பதிவர்களுக்கு நல்ல டிப்ஸ்.
பதிலளிநீக்கு:))))
பதிலளிநீக்கு:))
பதிலளிநீக்குசூப்பர்..
பதிலளிநீக்குடெம்ப்ளேட் பின்னூட்டம் அல்ல:)))
வாங்க எல்.கே...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க எஸ்.கே
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சமுத்ரா...
பதிலளிநீக்குஉங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மணிபாரதி...
கண்டிப்பாக பதிகிறோம். நன்றி.
வாங்க மேனகாக்கா...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வானதி...
கமெண்ட் அடிக்கணுமின்னுதானே எழுதினேன்... நோ கமெண்ட்டுன்னு ஜாகா வாங்கினா எப்படி சகோதரி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க கார்த்திக்....
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வசந்த்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க இந்து...
பதிலளிநீக்குரொம்ப நாளாக் காணோம்... அறிவுரையா... அப்படின்னா?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ராம்சாமிங்ண்ணா...
பதிலளிநீக்குநீங்க படிச்சிட்டு பின்னால கருத்துக்கு வாங்ண்ணா... அதுவரைக்கு வெய்ட்டிங்ண்ணா.
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்ண்ணா.
அடிக்கடி நம்ம வீட்டாண்ட வாங்ண்ணா...
வாங்க நிஜாமுதீன்...
பதிலளிநீக்குநான் உங்கள போல பிரபல பதிவர்கிட்ட கேட்கலாமுன்னு லேசா எழுதி வச்சா நீங்க நம்ம கிட்ட கேட்டா எப்படி...? இங்க சரக்கு கம்மி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க நிஜாமுதீன்...
பதிலளிநீக்குநான் உங்கள போல பிரபல பதிவர்கிட்ட கேட்கலாமுன்னு லேசா எழுதி வச்சா நீங்க நம்ம கிட்ட கேட்டா எப்படி...? இங்க சரக்கு கம்மி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சகோ. ம.தி.சுதா...
பதிலளிநீக்குவிழிப்புணர்ச்சியெல்லாம் இல்லங்க... சில பாதிப்புக்கள் நகைச்சுவையாய்.... அவ்வளவுதான்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஆசியாக்கா...
பதிலளிநீக்குஇங்கயும் சமையல் பத்தி பேசுறீங்க... காலையில கடையில புட்டு கேட்டா இல்லைன்னு சொல்லிட்டான்... நீங்க ரெண்டு புட்டு போட்டு இருக்கீங்க... ஹா...ஹா...ஹாஹா
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பிரபாகரன்...
பதிலளிநீக்கு:)))) - இதையும்தான் சொல்லியிருந்தோம்.... சரிங்களா?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஸ்ரீஅகிலா...
நீங்களும் :) - பின்னூட்டம்தானா?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வித்யாக்கா...
பதிலளிநீக்குமுதல்ல படிக்கும் போது புரியலை... இப்பத்தான் புரியுது... சூப்பர்.... கலக்கல் (இதுவும் பதிவுல வாரமாதிரியில்ல)
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வித்யாக்கா...
பதிலளிநீக்குமுதல்ல படிக்கும் போது புரியலை... இப்பத்தான் புரியுது... சூப்பர்.... கலக்கல் (இதுவும் பதிவுல வாரமாதிரியில்ல)
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
“அடிங்கொய்யால... நரிக்கு ஒதுங்க எடம் கொடுத்தா கிடைக்கு ரெண்டு ஆடு கேட்டுச்சாம்... ஓடிப் போயிடு...
பதிலளிநீக்கு...ha,ha,ha..... :-))
சும்மா பின்னி பிடல் எடுத்திட்டேங்க அண்ணாச்சி
பதிலளிநீக்குறொப்பவே சிரித்தேன் .
நல்லாவே இருக்கு வலைப்பூ பாடம் !
பதிலளிநீக்குஹா ஹா நல்லாயிருக்கு
பதிலளிநீக்குசூப்பர் பாஸ்!
பதிலளிநீக்குஎனக்கு இப்படி பாடம் எடுக்க ஒரு நல்ல வாத்தியார் இல்லாம போய்டாங்க ;)
பதிவு நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குSuper Teaching for making blogs
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவை உணர்வு இருக்கிறது :-)
பதிலளிநீக்குஅடடே அண்ணே அது அறிவுரை இல்லேங்க அறிமுறை
பதிலளிநீக்குநம்மல போல பதிவுலகிற்கு புதியவங்களுக்கு நல சொநேங்க அண்ணே வலைப்பூ பற்றி
:))))
பதிலளிநீக்குவாங்க சித்ராக்கா...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பவி...
பின்னி பெடலெடுக்கிற அளவுக்கா எழுதியிருக்கோம்... நம்பவே முடியலையே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஹேமா...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பாலாஜி சரவணா...
பதிலளிநீக்குநாங்க வாத்தியாரெல்லாம் இல்லங்க... சும்மா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க இசக்கிமுத்து...
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க இந்து...
பதிலளிநீக்குகண்டிப்பா நீங்க சொல்றது மாதிரி அறிவுரை இல்லைங்க... எதோ எழுதிப்பாத்தோம்.... அம்புட்டுத்தான்....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க உழவன்...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ராதாகிருஷ்ணன் சார்....
உங்கள் வருகைக்கும் :))))-க்கும் நன்றி.
காமெடினு சொல்லிட்டு எல்லா உன்மையையும் சொல்லிடீங்க.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇந்த உலகம் வந்து தான் பல விஷயங்களை மறந்து. தினமும் அருவாளும், வேல் கம்பும துரத்துறாங்க(கனவுல).
பதிலளிநீக்குஎன் பாஸ் அடிக்கடி சொல்றது- எவனுமே online ல இருக்க மாட்டேன்கிறீங்க except குமார் மட்டும் தான் onduty எப்பவுமே.
மத்த நாட்டு ஆபீஸ்ல எல்லாம் என்ன வேல பாக்கரீங்கன்னே தெரியல.
என்னிக்கி மண்ட உடயபோதோ தெரியல.
ஓஹோ.... பிரபல பதிவர் ஆகற விசயம் இப்படித்தானா...?
பதிலளிநீக்குநண்பா .... நிறைய சொல்லிக் கொடுத்துட்டீங்க....
சிரிக்க முடியல.... வயிறு குலுங்கி....மனசு குலுங்கி..
ஒரே கலகலப்புதான் போங்க...
"மொக்கை பதிவுகள்" எப்படி போடரதுன்னு
ஒரு பதிவு போடுங்க நண்பா......
சூப்பர்... nice.
பதிலளிநீக்கு‘nice’, ‘super’, ‘wow’ ‘good’ ‘கலக்கல்’, ‘அருமை’
பதிலளிநீக்கு