வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

சிறுபூக்கள் - II



மனதைக் கவர்ந்தது
வானவில்...
மழலைச் சிரிப்பைக்
காணும் வரை..!

****

சொந்த வீடு சுகமே...
சந்தோஷமாய் ஊஞ்சலாடியது
தூக்கணாங்குருவி..!

****

கோவிலில் அன்னதானம்
குருக்கள் வீட்டில்
கொதித்தது அரிசி..!

****

கல்லூரிச் சாலை...
இரு மருங்கிலும் மரங்களாய்
மாணாக்கர்கள்..!

****

மக்கும் குப்பையாக நான்
மக்காத குப்பையாய்
உன் நினைவுகள்...!

-'பரிவை' சே.குமார்

வலைச்சர வாரத்தில்...

நான்காம் நாள் கட்டுரையான சிறுகதை சிற்பிகள் படிக்க...

ஐந்தாம் நாள் கட்டுரையான விளைச்சல்கள் படிக்க...

20 கருத்துகள்:

  1. அனைத்து கவிதைகளும் அருமை . வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. தூக்கணாங்குருவி.இது சூப்பர்

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா20/8/10, 12:42 PM

    அருமை நண்பா!
    முதலிரண்டும் வெரி நைஸ்!

    பதிலளிநீக்கு
  4. //மழலைச் சிரிப்பைக்
    காணும் வரை..!//
    எல்லா கவிதையும் பட்டைய கலப்புதுங்க ..
    அருமை ..

    பதிலளிநீக்கு
  5. //சொந்த வீடு சுகமே...
    சந்தோஷமாய் ஊஞ்சலாடியது
    தூக்கணாங்குருவி..!//

    நல்லாயிருக்குங்க குமார்... அனைத்தையும் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  6. நல்லா இருக்கு குமார்..

    முதலும் கடைசியும் மிக நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  7. \\மனதைக் கவர்ந்தது
    வானவில்...
    மழலைச் சிரிப்பைக்
    காணும் வரை..!\\
    படமும், கவிதையும் அழகு.

    பதிலளிநீக்கு
  8. முதலிரண்டும்....அத்தனையுமே நல்லாயிருக்கு குமார் !

    பதிலளிநீக்கு
  9. மக்கும் குப்பையாக நான்
    மக்காத குப்பையாய்
    உன் நினைவுகள்...!
    //

    இது அருமை குமார்..

    பதிலளிநீக்கு
  10. மக்கும் குப்பையாக நான்
    மக்காத குப்பையாய்
    உன் நினைவுகள்...!

    ...very nice.

    பதிலளிநீக்கு
  11. குமார், கடைசி கவிதை சூப்பரோ சூப்பர்.

    பதிலளிநீக்கு
  12. //மக்கும் குப்பையாக நான்
    மக்காத குப்பையாய்
    உன் நினைவுகள்...!//

    this is lines super sir...

    பதிலளிநீக்கு
  13. மக்கும் குப்பையாக நான்
    மக்காத குப்பையாய்
    உன் நினைவுகள்...!

    realy super kumar

    பதிலளிநீக்கு
  14. //
    மனதைக் கவர்ந்தது
    வானவில்...
    மழலைச் சிரிப்பைக்
    காணும் வரை..!/

    நச்:) ரொம்பவே ரசித்தேன்:)

    பதிலளிநீக்கு
  15. வாங்க பனித்துளி சங்கர்...

    வாங்க சௌந்தர்...

    வாங்க பாலாஜி சரவணா...

    வாங்க செல்வக்குமார்...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வாங்க க.பாலாஜி...

    வாங்க வானம்பாடிகள் ஐயா...

    வாங்க சுசி...

    வாங்க அம்பிகா...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வாங்க ஹேமா...

    வாங்க தேனம்மை அக்கா...

    வாங்க சித்ரா மேடம்...

    வாங்க சிநேகிதன் அக்பர்...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வாங்க வானதி...

    வாங்க புஷ்பா மேடம்...

    வாங்க சரவணன்...

    வாங்க ரசிகன்...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி