வெள்ளி, 19 மார்ச், 2010

சிம்பும் தாசனும் என் பதிவர்களும்..!

எண்ணம் - 1:

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும், நடித்து மட்டுமே இருக்கும் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் சில நாட்களுக்கு முன்னர் பார்த்தேன். பார்த்ததும் அது குறித்து பதிவு எழுதலாம் என்றிருந்தேன். அறை மாறியதால் மன நிம்மதி போயாச்சு. நெட் வசதியும் இல்லை. அதனால் எதுவும் எழுத எண்ணம் இல்லை.



எனக்கு சிலம்பரசன் படங்கள் பார்க்கும் எண்ணம் இதுவரை மனசுக்குள் மலர்ந்ததில்லை. இருந்தாலும் கௌதம் மேனன் படம் என்பதால் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் பார்த்தேன். அட சிம்புவா இது... உண்மையில் அசந்தேன். நல்ல திறமை உள்ளவர் தேவையில்லாமல் விரலு... விசிலு என்று இதுவரை தன்னைத்தானே வீணடித்திருக்கிறாரே என்று நினைத்தபோது இனிமேலாவது அவர் மாறுவாரா என்ற எண்ணம் எனக்குள் மேலோங்கியது.

'விண்ணைத்தாண்டி வருவாயா' கௌதம் மேனனுக்கே உரிய வசனங்களோடு கலந்த ஆங்கில உரையாடல்களுடன் இருந்தது. இதில் கொஞ்சம் மலையாள நெடியும் வீசியது. சிம்பு, கார்த்திக் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது வசன உச்சரிப்பும் அசால்டான அந்த நடிப்பும் இதுவரை எங்கே இருந்தது.

அவருக்கும் திரிஷாவுக்கும் இடயேயான நெருக்கமான காதல் காட்சிகளின் போது இருவரும் காதலிக்கிறார்கள் என்று பத்திரிக்கைகள் விட்ட புரளி உண்மைதானோ என்று நினைக்கத் தோன்றியது.

கடைசியாக சிம்புவுக்கு, நல்ல படங்ளாக பார்த்து நடியுங்கள். உங்கப்பா வழியில் செல்வதால் வீணாவது உங்கள் திறமையுடன் நீங்களும்தான் என்பதை உணர்ந்தி நடியுங்கள். கண்டிப்பாக நல்ல கதாநாயகன் என்ற நிலையை விரைவில் எட்டலாம்.

எண்ணம்-2:

திரு, பெரியார்தாசன் அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார் என்பது எல்லோரும் அறிந்ததே. இதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. சாதி, மதம் எல்லாம் நாமாக வகுத்துக் கொண்டதுதான். அவர் மாறிவிட்டார் என்பதால் எதோ பெரிய வெற்றியை சுவைத்தது போல் பல இஸ்லாமிய பதிவுலக நண்பர்கள் சந்தோஷ பதிவுகளை போடுகிறார்கள் என்றால் மற்றவர்கள் கண்டனப் பதிவுகளை போடுகிறார்கள்.

அவர் இந்து மதத்தில் இருந்து பௌத்த மதத்திற்கு மாறினார். பின்னர் அங்கிருந்து இஸ்லாத்திற்கு மாறியுள்ளார். அது அவரது தனிப்பட்ட விஷயம். ஆனால் சேஷாசலம் என்பது அவரது இயற்பெயர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். பெரியார் மீது கொண்ட பற்றுதலால் அவர் பெரியார்தாசன் ஆனார். எல்லோருக்கும் அவரை பெரியார்தாசனாகத்தான் தெரியும்.

அந்த பெரியார்தாசன் கடவுள் இல்லை என்று எத்தனை கூட்டங்களில் பேசியிருக்கிறார். அவரது பேச்சை நம்பி கெட்டவர்கள் பலர். அவர் இஸ்லாமுக்கு வந்ததற்காக நண்பர்கள் சந்தோஷப்படுவது நீடிக்குமா என்பது அவரது கையில்தான் உள்ளது. கடவுளைத் தேடினேன் எனக்கு இதுதான் பிடித்தது என்கிறார். நாளை இதுவும் இல்லை என்று வேறு எதற்காவது மாறினாலும் ஆச்சரியமில்லை.

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை... ஏன் எல்லோருமே வயதானதும் இறைவனை நாடுகிறோம்... சாவு பயம் அங்கு அழைத்துச் செல்கிறதோ..?.

எது எப்படியோ. நீங்கள் இஸ்லாத்துக்கு மாறியதில் எம் இஸ்லாமிய சகோதரர்களுக்கு நல்ல பேச்சாளர் கிடைத்த சந்தோஷம். அதை மெய்யாக்குங்கள். இதுவரை இறைவன் இல்லை என்று சொன்ன நீங்கள் எங்கள் அல்லாவின் புகழை எடுத்து உரையுங்கள். எங்கோ செய்த தவறுக்கு அங்காவது புண்ணியம் கிடைக்கட்டும்.

மதம் மாறுவது உங்கள் விருப்பம். அதையே விருப்பமாக எடுத்துக் கொண்டு அங்கிருந்து எங்கு செல்லலாம் என்று யோசிக்காதீர்கள். பிறந்த வீட்டில் இருந்து மாமியார் வீடு போய் சரியில்லை என்பதால் தனிக்குடித்தனம் போயாச்சு.. இனி போனால்...?

எண்ணம் - 3

முழுக்க முழுக்க என்னைக் கவர்ந்த, நான் வாசித்த பதிவர்கள் குறித்து எழுந்த எண்ணங்களின் வீச்சுதான். எல்லோரையும் சொல்லும் வாய்ப்பு விரைவில் கிடைக்கும். இப்ப முத்துக்களில் சில மட்டும் ( என் மனதில் பட்டதை சொல்கிறேன்... அவ்வளவுதான்)

நாடோடி இலக்கியன் - நாடோடியாய் இலக்கியம் எழுதும் நல்ல இலக்கியவாதி, அருமையான எழுத்து.

வெ.பூங்குன்றன்- இவரது கவி வரிகளை படித்து வியந்திருக்கிறேன். அப்படி ஒரு வார்த்தை ஜாலம் பாக்தாத்தில் இருந்து முழங்கும் தமிழ் கவி.

தேனம்மை - சும்மா எழுதுகிறேன் என்று சொல்லி என்னமாய் எழுதுகிறார் பாருங்கள். நல்ல இலக்கியவாதி, விமர்சகர்.

செ.சரவணக்குமார் - நிறைய புத்தகங்கள் படித்து விமர்சனங்களில் கலக்குபவர் பக்கங்களெல்லாம் சரவணக்குமாரின் எழுத்துக்களிம் வீச்சுதான்.

புலவன் புலிகேசி - வழிப்போக்கனாய் எழுதினாலும் அருமையான எழுத்து நடை.நிறைய திறமைகளை உள்ளடக்கிய புலி.

பா.ராஜாராம் - கருவேல நிழலில் இளைப்பாறலாம் என்று சற்றே ஒதுங்கிப்பாருங்கள். மரத்தை விட்டு வரமாட்டீர்கள். கவிதைகள், கதைகள் காய்த்துப் பூத்துக் குலுங்குகின்றன்.

ஷங்கர்- பலா பட்டறையில் பல்சுவை தந்து ஷங்கராக மாறினாலும் பலாவின் சுவையில் குறையில்லை.

தியாவின் பேனா - பேனாமுனையின் கூர்மையுடன் எழுதும் இவரது எழுத்துக்களை ரசித்து அனுபவிக்கலாம்.

திவ்யாஹரி - திவ்வியமான கருத்துக்கள் மற்றும் கவிதைகள்.

நிலாமதி - பௌர்ணமியான எழுத்துக்கள். நிலாவின் வீச்சு இவரது எழுதுக்களில்.

அன்புடன் மலிக்கா - கலைச்சாரலில் நீரோடையாய் எழுத்துக்களை பாயவிடுபவர்.

கண்மணி - இவர் கூட்டத்தில் கும்மி அடிக்காமல் தனியாக கும்மி அடிப்பவர். அருமையான எழுத்துக்கள்.

சித்ரா- வெட்டிப்பேச்சு என்பது இவரது பார்வை. ஆனால் நம் பார்வையில் இவர் விவேகமான எழுத்தாளர்.

விடிவெள்ளி - நட்சத்திரமாய் சொலிக்கும் இவரது செண்பக எழுத்துக்கள்.

கமலேஷ் - இவர் சுயம் தேடும் பறவையாம். ஆம் நீண்ட கவிதைகளின் மூலம் நம் சுயம் தேட வைப்பவர்.

அம்பிகா - சொல்லத்தான் நினைக்கிறேன் என்று எழுத்தால் இதயங்களை ஆக்கிரமிப்பவர்.

மீன்துள்ளியான் - மீனாக துள்ளி மின்னலாக இருப்பவர். அருமையான எழுத்துக்கள் ஒருமுறை மீன் பி(ப)டித்துப் பாருங்கள்.

விக்னேஷ்வரி - சில நாட்களுக்கு முன் பதிவுகளை பார்த்தேன். ஆழமான எழுத்துக்கள்.

இரா.குணசீலன் - எல்லோரும் கதை, கவிதை என் பகிர்வுகளில் இருக்க, இவர் தமிழின் வேர்களைத்தேடி இலக்கிய அமுது படைப்பவர்.

நிலாரசிகன் - அனைவரும் ரசிக்கும் பௌர்ணமி இவர்.

ஸ்ட்ராஜன் - நிலா அது வானத்து மேலே என்று சொன்னாலும் நல்ல பகிர்வுகளை கொடுக்கும் பதிவர்.

சத்ரியன் - மனவலி ஏற்படுத்தாத மனவிழி எழுத்துக்கள இவரது கையில் விளையாடுகின்றது.

க.நா.சாந்தி லெட்சுமணன் - கிராமங்களில் காந்தியத்தை தேடும் பெண் பதிவர். நல்ல பதிவுகளை இவரது தளத்தில் மேயலாம்.

ரசிகா - ரசிகக் கூடிய பதிவர்களில் ரசிக்கும்படி எழுதுபவர்.

ஏஞ்சல் - எண்ணங்களின் உருவத்தில் எழுதும் இவர் நல்ல இலக்கியவாதி என்பது இவரது பின்னூட்டங்களில் அறியலாம்.

மேலும் பல நல்ல பதிவுகளைத்தரும் நண்பர்கள் எனது அடுத்த பதிவில் வலம் வருவார்கள் என்ற நம்பிக்கையிடன் முடிக்கிறேன்.

கடைசியாக... நண்பர் செ.சரவணக்குமாரின் நண்பர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அவர் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அவருக்கு அறுவைச் சிகிச்சை முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர் பூரண குணம் அடைய நாம் எல்லாம் இறைவனை பிரார்த்திப்போம்.


-'பரியன் வயல்' சே.குமார்

57 கருத்துகள்:

  1. உங்களின் மனதின் பிரதிபலிப்பு அருமை.அனைவரும் சிறந்த பதிவர்கள்.

    நண்பர் சரவணகுமாரின் நண்பர் விரைவில் நலம்பெற ப்ரார்த்திக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. விண்ணைத்தாண்டி வருவாயாவும் பெரியார்தாசன் பற்றியும் மிக அருமையாக எழுதி இருக்கிங்க குமார் அட உங்களைக் கவர்ந்த பதிவர்களில் நானுமா .. மிக்க நன்றி குமார் .. உங்களின் ஊக்க மொழி என்னை இன்னும் நன்கு எழுதத் தூண்டுகிறது

    பதிலளிநீக்கு
  3. //இவர் கூட்டத்தில் கும்மி அடிக்காமல் தனியாக கும்மி அடிப்பவர்.//

    எங்க கூட்டமும் நாங்க அடித்த கும்மியும் [கல்யாணக்]கல் விழுந்த காக்கைக் கூட்டமாய்ப் போய் நாளாகி விட்டது.

    கும்மியில் பங்களிப்பு செய்தவர்களின் பெயர்கள் மட்டுமே மிச்சமுள்ளது.
    புதிதாக சேர விருப்பமிருந்தால் யாரும் வரலாம்.
    இல்லையெனில் தனியாக டீ ஆத்த வேண்டியதுதான் :)))))))))))))

    //அருமையான எழுத்துக்கள்.//

    ஏதோ அப்படியிருந்தா சரிதான்.ஆனால் அது கண்மணி பக்கத்திற்கான சிறப்பாக இருக்கவே விரும்புகிறேன்.
    கும்மி ச்சும்மா ஜாலிக்கு மட்டுமே

    என்னையும் உங்கள் ரசனை லிஸ்ட்டில் சேர்த்தமைக்கு நன்று.நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அருமை அருமை அலசல் மிக நன்று.. பகிர்வுக்கு நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  5. ஏதோ பதிவுகளை வாசித்தேன் போனேன் என்று இல்லாமல், பதிவுகளை தொடர்ந்து படித்து - பதிவர்களை குறித்த உங்கள் நல் எண்ணங்களை சொல்லி உற்சாகப் படுத்தி இருப்பதற்கு நன்றிகள் பல. ஒவ்வொரு பதிவர் பற்றியும் அருமையாக எழுதி இருக்கிறீர்கள். நன்றி.
    பதிவுலக நண்பர், வெ.சரவணகுமார் விரைவில் குணம் அடைய பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  6. ரொம்ப நன்றி குமார்!

    குமாருக்கு பிடித்த மற்ற என் நண்பர்களுக்கும்,வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. பெரியார் தாசனை பற்றி மிகவும் கண்ணியமாகவும்
    ஹிந்து, இஸ்லாமிய சகோதரர்கள் மனம்
    புண்படாத வகையிலும் உங்கள் விமர்சனம்
    மிகவும் அருமை...!

    பதிலளிநீக்கு
  8. சே.குமார்,

    //கௌதம் மேனன் படம் என்பதால் பார்த்தேன்.//

    நானும் அப்படியே குமார்.

    அவருடைய “திரைக்கதை”யின் மேல் எனக்கு அபார நம்பிக்கையுண்டு.

    //மனவலி ஏற்படுத்தாத மனவிழி எழுத்துக்கள் இவரது கையில் விளையாடுகின்றது.//

    எனது “எண்ணங்கள்” எழுத்துக்களாய் உங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    பதிலளிநீக்கு
  9. உங்கள் ”எண்ணம் - மூன்றும் ” அருமை.

    நீங்கள்,

    குறிப்பிட்டுள்ள அனைத்து பதிவர்களும் அருமையான ” எண்ணப் பகிர்வாளர்கள் “ குமார்.

    பதிலளிநீக்கு
  10. விண்ணைத்தாண்டி வருவாயா சிம்புவைப் பற்றிய கருத்தோடு அப்படியே ஒத்துப்போகிறேன்.என்னை படம் அவ்வளவாக கவரவில்லை எனினும் சிம்புவின் நடிப்பைப் பார்த்து நானும் உங்களைப் போன்றே வியந்துபோனேன்.

    பெரியார்தாசன் குறித்து எழுதியிருக்கும் பத்தி சிறப்பான எழுத்து.


    சில மாதங்களாய் பதிவுலகைவிட்டு விலகியிருக்கும் என்னையும் நினைவு வைத்து எழுதியதற்கு மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  11. நண்பரே உங்கள் பதிவுகளை வாசித்தேன்...
    உங்கள் ரசனையும் புரிந்து கொண்டேன் ...அருமை...
    பதிவர்களில் ஒருவராகவும் இணைத்திருக்கிறீர்கள்... நன்றி....
    இந்த தளத்திற்கும் தொடர்ந்து வருவேன்...தொடருங்கள்.......

    பதிலளிநீக்கு
  12. ப்ரியத்திற்கு நன்றி குமார்..:))

    அன்றே சொன்னதுதான், எல்லாவற்றையும் இங்கேயே பதிவிடுங்கள், உங்களின் மற்ற தளங்களில் பின்னர் வகை படுத்திவிடுங்கள். படிக்கவும், பின் தொடரவும் இதுதான் மிக வசதியாய் இருக்கும்..:))

    வாழ்த்துகள்.:-)

    பதிலளிநீக்கு
  13. உங்களைக் கவர்ந்த பதிவர்களில் நானுமா?மிக்க நன்றி குமார்.உங்களின் ஊக்க மொழி என்னை இன்னும் நன்கு எழுதத் தூண்டுகிறது

    பதிலளிநீக்கு
  14. உங்கள் மனதில் பட்டதை பட்டுனு சொல்லி இருக்கீங்க.

    செல்வ குமாரரின் நண்பர் விரைவில் குணமடைய ,பிரத்தனைகள்.

    பதிலளிநீக்கு
  15. Hi shruvish,
    Congrats!
    Your story titled 'மனசு: சிம்பும் தாசனும் என் பதிவர்களும்..!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 19th March 2010 07:25:02 PM GMT
    Here is the link to the story: http://www.tamilish.com/story/206790
    Thank you for using Tamilish.com
    Regards,
    -Tamilish Team

    வாக்களித்த அன்பு நட்புக்கும் வாய்ப்பளித்த தமிழிஷ்க்கும் நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  16. வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் நன்றி திருமதி. மேனகாஸாதியா.

    பதிலளிநீக்கு
  17. கருத்துக்கு நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  18. @கண்மணி
    உங்கள் கும்மி நல்ல கும்மிதான்.
    எல்லோருக்கும் திருமணத்திற்குஇ முன்பிருந்த நட்பு எல்லாம் நினைவுகளாய் மட்டுமே. என்ன செய்ய?

    பதிலளிநீக்கு
  19. நன்றி நிலாரசிகன்.

    நன்றி ஸ்டார்ஜன்.

    பதிலளிநீக்கு
  20. நன்றி சித்ரா. நண்பர் செ.சரவணக்குமாரின் நண்பருக்குத்தான் விபத்து. இருந்தாலும் உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி.

    நன்றி பா.ரா.

    பதிலளிநீக்கு
  21. முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் நன்றி சரி.

    உங்கள் பெயர் சரியா? இல்லை சாரியா?

    பதிலளிநீக்கு
  22. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  23. நன்றி சத்ரியன். உங்கள் எழுத்துக்களின் வீச்சு எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    பதிலளிநீக்கு
  24. நன்றி நாடோடி இலக்கியன்.
    நீண்ட நாட்களுக்குப் பிறகு என் தளத்தில் உங்கள் பின்னூட்டம். ஆமா ஏன் பதிவு எழுதவில்லை?
    நான் பதிவு எழுதவந்து எனது முதல் கதை குறித்து உங்கள் தளத்தில் எழுதியவரல்லவா நீங்கள். அப்புறம் எப்படி மறப்பது?

    பதிலளிநீக்கு
  25. தொடர்ந்து உங்கள் அன்பான கருத்துக்களை தாருங்கள் விடிவெள்ளி.

    நன்றி இரசிகை.

    பதிலளிநீக்கு
  26. தொடர்ந்து உங்கள் அன்பான கருத்துக்களை தாருங்கள் விடிவெள்ளி.

    நன்றி இரசிகை.

    பதிலளிநீக்கு
  27. நன்றி ஷங்கர். உங்கள் கருத்து என் பரிசீலனையில் இருக்கிறது. விரைவில் ஒரு தளத்தில் வரும். கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  28. உங்கள் பதிவுகள் நல்ல பதிவுகள் தோழி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி க.நா.சாந்தி லெட்சுமணன்.

    பதிலளிநீக்கு
  29. நன்றி ஷலீலா. மனதில் பட்டதை சொல்வது மட்டுமே மனசு.

    பதிலளிநீக்கு
  30. குமார் உங்கள் பாசத்திற்கு நன்றி ..கண்டிப்பா மீன் பிடிச்சிடலாம் ..

    பதிலளிநீக்கு
  31. பெரியார்தாசன் பற்றி சூப்பரா சொன்னீங்க... அவர் ஒரு காமெடி பீஸ்ங்க...

    பதிலளிநீக்கு
  32. மிக்க நன்றி நண்பரே. விண்ணைத் தாண்டி வருவாயா பார்த்தாச்சா... சூப்பரு. :)

    பதிலளிநீக்கு
  33. தங்களுடைய பதிவு சுவையாய் இருந்தது.
    நண்பர் செ. சரவணக்குமாரின் நண்பர்
    விரைவில் பூரண குணம் காண துஆ
    (பிரார்த்தனை) செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  34. மிகவும் நன்றி ....உங்க மனசு ...இல் நானுமா?. நான் மிகவும் ஆரம்ப் பதிவர். உங்க பதிவு வட்டத்தில் என்னயும் இணைத்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி ...மீண்டும் சந்தித்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  35. நண்பர் மீன்துள்ளியான், கண்டிப்பாக உங்கள் வலையில் நிறைய மீன்கள் பிடிக்கலாம். அவ்வளவும் அருமையான மீன்கள்.

    பதிலளிநீக்கு
  36. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. அது ஊரறிந்த விஷயம் தானே நாஞ்சில் பிரதாப்.

    பதிலளிநீக்கு
  37. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி விக்னேஷ்வரி.

    பதிலளிநீக்கு
  38. முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் நன்றி நிஜாமுதீன்.

    பதிலளிநீக்கு
  39. நீங்கள் ஆரம்பப் பதிவராக இருந்தாலும் ஆர்வமான பதிவர்தானே தோழி. உங்களைப் போன்றவர்களுடன் நட்பு வட்டத்தை விரிவுசெய்யவே விரும்புகிறேன் நிலாமதி..

    பதிலளிநீக்கு
  40. அல்லாவே நாந்தான் லேட்ட்டு. சாரி குமார் இரண்டுநாள் விடுமுறை அதான் வரமுடியலை..

    மிகஅழகான எண்ணங்களும் எழுத்துக்கள்.
    மதம் என்பது அவரவர் மனங்களைச்சார்ந்தது..

    அப்புறம் நானும் உங்கள் எண்ணங்களில் நானும் மிகுந்த சந்தோஷம் குமார் மிக்க நன்றி.

    தொடர்ந்து எழுதுங்கள்.
    வாழ்த்துக்கள் என்னோடு உங்கள் எண்ணங்களுக்குள் நுழைந்தவர்களுக்கும்...

    பதிலளிநீக்கு
  41. ஊக்கம் கொடுப்பதில் மற்றுமோர் பாணி

    நன்று நண்பரே!

    பதிலளிநீக்கு
  42. தாமதமானால் என்ன சகோதரி மலிக்கா, உங்கள் கருத்துக்கள் என்னை ஊக்கப்படுத்தும் வைட்டமின் மாத்திரைகள்.

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  43. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்புடன் ஜமால். அடிக்கடி வாங்க. நானும் வருகிறேன் நட்போடு.

    பதிலளிநீக்கு
  44. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  45. இது நல்ல யோசனையா இருக்கே !

    பதிலளிநீக்கு
  46. பகிர்வுக்கு நன்றி !

    மீண்டும் வருவான் பனித்துளி !

    பதிலளிநீக்கு
  47. ///////////கடைசியாக... நண்பர் செ.சரவணக்குமாரின் நண்பர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அவர் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அவருக்கு அறுவைச் சிகிச்சை முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர் பூரண குணம் அடைய நாம் எல்லாம் இறைவனை பிரார்த்திப்போம். /////////


    அவர் பூரண குணம் அடைய நாம் எல்லாம் இறைவனை பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  48. வாங்க பனித்துளி.
    பனித்துளி எதன் மீது அமர்ந்தாலும் அழகுதான்.
    உங்கள் வருகை என் தளத்திற்கு அழகு அடிக்கடி வாங்க.
    நன்றி மூன்று பின்னூட்டத்திற்கும்..!

    பதிலளிநீக்கு
  49. உங்கள் மனம் கவர்ந்த பதிவர் வரிசையில் நானும்...
    சந்தோஷம் குமார்.
    ஒரு வாரம் ஊரில் இல்லை. எனவே தான் தாமதமான பின்னூட்டம்.
    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  50. உங்களைக் கவர்ந்த பதிவர்களில் நானுமா .. மிக்க நன்றி குமார் ..

    பதிலளிநீக்கு
  51. தாமதமாக வந்தாலும் வாசித்து பின்னூட்டமிட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் அம்பிகா.

    பதிலளிநீக்கு
  52. உங்கள் கவிதைகள் ஆழகாகவும் அர்த்தம் பொதிந்த ஆழமாகவும் இருக்கின்றன திவ்யா ஹரி. வருகைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  53. நீங்கள் மல்லிகா அக்காவுக்கு கொடுத்த லிங்கிலிருந்து, முதன் முதலாக உங்கள் தளத்துக்கு வருகிறேன்.

    சிம்பு, பெரியார் தாசன், "வாசித்த பதிவர்கள் குறித்து எழுந்த எண்ணங்களின் பதிவுகள்" அனைத்தும் மிக அருமை சார்.

    (((வாசிப்பவர்களை நேசிக்க வைக்கவும், யோசிக்க வைக்கவும் சிலபேருக்கு தான் வரும். அதில் நீங்களும் அடக்கம். வாழ்த்துக்கள்!!!)))

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி