கடந்த ஒரு வாரகாலமாக கணிப்பொறி முன் அமரும் வாய்ப்பு கிட்டவில்லை. காரணம் நாங்கள் தங்கியிருந்த கட்டிடத்தை இடிக்க ஆணை பிறப்பித்தாச்சு, மார்ச் 3ஆம் தேதி கடைசி நாள் என்றார்கள். நாங்களும் அறை தேடி அலுத்து கடைசி நேரம் பார்க்கலாம் என்று அசால்டாக இருந்து விட்டோம். (இன்னும் இரண்டு மாதம் நீடிக்கும் என்று ஒரு சிலர் சொன்ன வார்த்தைகளின் நப்பாசையால்..." மார்ச் ஒண்ணு நல்ல மழை.... அதனால எங்க பிளாட் மட்டும் மின்சாரம் கட்டாகியுள்ளது என்பதை அறியாமல் அலைந்து திரிந்து அதைவிட வசதிகள் குறைந்த அறையை அதிக வாடகைக்கு எடுத்தாச்சு.. இப்ப புதிய அறையில் வாசம்.. இன்னும் பல வேளைகள் பாக்கியிருக்கு... அதனால சில நாட்களுக்கு அடிக்கடி வலைப்பக்கம் வரமுடியாது அப்பப்ப வருவேன்... நண்பர்களுக்கு பின்னூட்டம் இட முடிந்த வரை முயற்சிக்கிறேன். இன்டர்நெட் இல்லைங்க அதான் பிராப்ளம்.
நித்திய ஆனந்தர் குறித்து பத்திரிக்கைகளிலும் வலைப்பக்கங்களிலும் பரபரப்பு செய்திகள். இத்தனை பரபரப்புக்கு காரணம் என்ன? யோசித்தால் காமம் அவ்வளவுதான். அவங்களும் மனிதர்கள்தான்... எதோ சில நல்ல கருத்துக்களை ஆன்மிகம் மூலமாக சொல்லும்போது நம்ம மக்கள் சாமி ஆக்கிவிடுகிறார்கள்... அவர்களும் பணம், புகழ் வந்ததும் காமத்தை எடுத்துக் கொள்கிறார்கள். பிரபலம் ஒருத்தி மாட்டியதால் செய்தியாகும் காமசாமியிடம் எத்தனை முகம் அறியா பெண்கள் அழிந்திருப்பார்கள்... அவர்கள் மனநிலை இப்போது எப்படி இருக்கும்..? . ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை .ஏமாற்றுக்கரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்... அன்று பிரேமானந்தா... இன்று நித்யானந்தா... இடையில் எத்தனை ஆனந்தாக்கள்...?
அவர்களை குற்றம் சொல்லும் நாம் முதலில் திருந்துவோம்... அவர்களை உச்சாணிக் கொம்பில் ஏற்றுவது நாம்தானே... இவர்கள் எல்லாம் நாலு நாளோ ஒருவாரமோ பரபரப்பின் மூலதனமாக இருப்பார்கள். அப்புறம் எதாவது அரசியல்வாதியோ அல்லது பணம் படைத்தவர்களோ தலையிட்டு ஒன்றும் இல்லாமல் பண்ணிவிடுவார்கள். அவ்வளவுதான்.
சில மாதங்களில் நம் மக்கள் அடுத்த ஆனந்தாவை நம்பி புறப்பட்டு விடுவார்கள். தெய்வத்தின் பெயரால் கேவலச்செயல் செய்யும் இவர்களை எல்லாம் தெருவில் நிறுத்தி சுட்டுக் கொள்ளவேண்டும்.எந்த நாயோ எக்கேடோ கெட்டுப் போகட்டும்... வலைப்பூவில் நல்ல விசயங்களை எழுதலாமே...?
நாக்கில் சனி பிடித்த நடிகர் விவேக் அவர்களே... நீங்கள் மேடையில் என்ன வேண்டுமென்றாலும் பேசலாம் அப்போது இருந்த மனநிலையில் பலத்த கை தட்டு கிடைக்கும் என்று பேசினாயே... இப்போது உன் முகத்தை எங்கு வைப்பாய்... காசுக்காக முந்தி விரிப்பவர் யார் என்பது தெரியும்தானே... எதையும் நிதானித்துப் பேச கற்றுக்கொள்.
சரிங்க, நம்ம கதைக்கு வருவோம்... நண்பர் புலவன் புலிகேசி அவரோட வலைத்தளத்தில் எனது ஆசிரியர் என்ற சிறுகதை குறித்து எழுதியிருந்தார். அவருக்கு நன்றிகள் பல. அவருக்கு பின்னூட்டமிட்ட நண்பர்கள் பலர் வாழ்த்தியிருந்தார்கள். அவர்களுக்கும் நன்றி. குறிப்பாக தோழி தேனம்மை என்னை ரொ...ம்...பபபபபபபபப... நல்லா எழுதுறவன்னு சொல்லியிருந்தாங்க... (உண்மையாகவா...?) அவருக்கு நன்றி
சில நாட்களுக்கு முன் அபுதாபியில் பாரதி நட்புக்காக அமைப்பின் சார்பாக திருமதி. பி.சுசிலா அவர்களுக்கு பாராட்டு விழாவும் திரு.டெல்லி கணேஷ் அவர்கள் தலைமையில் விவாதமேடையும் நடத்தப்பட்டது. அது குறித்து 'அபுதாபியில் அமுதைப் பொழியும் நிலவே' என்ற தலைப்பில் வலையில் எழுதியிருந்தேன். அதை படித்த திரு. சுபான் அண்ணா அவர்கள் அந்த அமைப்பின் தலைவரிடம் சொல்லி அவரும் என்னிடம் பேசினார். நன்றாக இருந்தது என்று சொன்னார். அவருக்கு எனது நன்றி.
இன்று காலை எனக்கு வந்த mail பார்த்துக் கொண்டிருந்த போது நண்பர் சுபான் அண்ணா ஒரு forward mail அனுப்பியிருந்தார். அவரிடம் இருந்து அதிகம் mail வரும் அதில் ஒன்று என்ற நினைப்பில் கிளிக்கினால் திரு. டெல்லி கணேஷ் எனது கட்டுரை படித்து பாராட்டு அனுப்பியுள்ளார் (நல்லா எழுதி இருக்கீங்க. ரொம்ப ரொம்ப நன்றி. நிகழ்ச்சியை மறுபடியும் பார்த்த மாதிரி இருந்துது. Hats Off to u Kumar). அவருக்கு எனது நன்றிகள் பல. (எனக்கென்னவோ அந்த கட்டுரையில் திரு.டெல்லி கணேஷ் பற்றி அதிகம் எழுதவில்லை என்ற எண்ணம். இருந்து) அவரிடம் இருந்து பாராட்டு. எனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல மேன்மக்கள் மேன் மக்களே..!
-'பரியன் வயல்' சே.குமார்
//ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ,ஏமாற்றுக்கரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்...//
பதிலளிநீக்குநூற்றுக்கு நூறு உண்மை தலைவா
வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநித்திய ஆனந்தர்கள் பற்றி எழுதி விழிப்புணர்ச்சி வரனும் தப்பில்லை.
வருகைக்கு நன்றி ஒருவார்த்தை. எத்தனை ஆனந்தாக்கள் பிடிபட்டாலும் நம் மக்கள் திருந்துவார்கள் என்று நினைக்கிறீர்களா?
பதிலளிநீக்குவிழிப்புணர்ச்சி தேவைதான் கண்மணி. பிரபல பதிவுக்காக மட்டும் எழுத வேண்டும் என்று நினைப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை. என்ன ஒரு ஒருவார காலம் பரபரப்பாக இருக்குமா? அப்புறம் நாம் யாராவது விழிப்புணர்வுக்காக எழுத முன் வருவோமா சொல்லுங்கள் தோழி.
//ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ,ஏமாற்றுக்கரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்...//
பதிலளிநீக்குஏமாறக்காத்திருக்கும் உலகம் என்ன செய்ய??????????
வாழ்த்துக்கள்..
நேரம்கிடைக்கும்போது இதையும்வந்துபாருங்கள்..
http://fmalikka.blogspot.com/2010/03/7.html
யாரோ சிலர் பரபரபுக்காக எழுதுகிறார்கள் என்பதற்காக நாம் பின் வாங்கக் கூடாது.
பதிலளிநீக்குஊர் கூடித் தேரிழுத்தால்தான் ஓடும்.
ஓட்டுக்காக பின்னூட்டத்திற்காக என நினைக்காமல் மனதில் பட்டதைச் சொல்லவே பதிவுகள்.
அன்புடன் மலிக்கா,
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கண்மணிக்கு,
உங்கள் கருத்து உண்மைதான் தோழி.
உங்கள் மனதில் தோன்றியதை நன்றாக தொகுத்து இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்கு