சனிக்கிழமை என்பது கமலஹாசனுக்கான நாள். இந்த வாரம் பூராம் கவினும் லாஸ்லியாவும் செய்து கொண்டிருக்கும் கூத்துக்கள் குறித்துப் பேசுவார் என்ற நினைப்பை வீணாக்கிய மற்றொரு நாள்.
கமலைப் பொறுத்தவரை அடித்து ஆடினார் என்றால், 'ஆங்க்... கண்மணி அன்போடு காதலன் நான் நான் எழுதும் லெட்டர்... சீ... மடல்... இல்ல கடுதாசி வச்சுக்கலாமா... வேண்டாம் கடிதமே இருக்கட்டும்...' அப்படின்னு இழுவையாப் பேசமாட்டார், தடாலடியாக 'ராஜா கைய வச்சா... அது ராங்கப் போனதில்லை...'தான். ஆனா நேற்று கண்மணி அன்போட கடிதம்தான்.
வந்ததும் தமிழர்கள், கீழடி, ஐவகை நிலம், அது இதுன்னு பத்து நிமிடத்துக்கு தமிழும் தமிழ் சார்ந்தும் பேசினார். தமிழன் இராஜஸ்தான் வரை விரிந்து கிடந்தான் என்றும், காவல் தெய்வங்கள் எல்லாம் எவனும் உள்ளே வராமல் காக்கத்தான் வடக்க பார்க்க நிற்கிறது என்றும் தீவிர அரசியல்.. ச்சை... தமிழியல் பேசினார்.
அதன் பின் வெளங்காதவனுங்க வெளையாண்ட வெள்ளிக்கிழமையைப் பாருங்கன்னு சொல்லிட்டு பால் சாப்பிடப் போய்விட்டார்.
89ம் நாளின் தொடர்ச்சியாய்... உள்ளே இறுதிப் போட்டிக்குச் செல்ல தங்க நுழைவுச் சீட்டுக்கான கடைசி டாஸ்க்கில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார்கள் சாண்டி, முகன், தர்ஷன் மற்றும் லாஸ்லியா.
விடாமல் மணிக்கணக்கில் ஓட்டுதல் என்பது கடினமே... இருப்பினும் ஆண்களுக்கு நிகராக லாஸ்லியாவும் ஓட்டிக் கொண்டிருந்தார். இதை விளையாட்டின் மீதான வெறியின்னு எல்லாம் சொல்ல முடியாது. பிக்பாஸ் எப்படியும் கவின் போட்டாவைத்தான் இங்க மறைச்சி வச்சிருப்பான்... கவினுக்குப் பாயிண்ட் எடுக்க விளையாடுவோம்ன்னு விளையாடியிருக்கும் என்றாலும் வாழ்த்தலாம் தப்பில்லை.
சைக்கிள் பின் சக்கரத்தில் துணி மாட்டி நின்று போக, கிருஷ்ணான்னு பாஞ்சாலி கத்தியதும் சேலையோட ஓடிவந்த மாதிரி கவினுன்னு சாண்டி குரல் கொடுத்ததும் இந்தா வந்துட்டேன் வடிவேலு கணக்கா பய பாய்ந்து வந்து பதறிப்போய் ஷெரினின் துணையுடன் துணியை எடுக்க, நான் இப்ப ஓட்டவான்னு அம்மணி ஐயாக்கிட்ட கேட்க, ஓட்டுறதுன்னா ஓட்டலாம் இல்லேன்னா இல்லைன்னு எப்பவும் போல குழப்பி அடிக்க, லாஸ்லியா இறங்கிவிட்டார்.
இறங்கியவர் கீழே விழப்போக கவின் முதலுதவி மருத்துவரானார். ஒரு பெண்ணுக்கு முடியவில்லை என்னும் போது அருகில் நின்ற ஷெரினைக் கூப்பிட்டுப் பார்க்கச் சொல்லுதலே அழகு... அதை விடுத்து தான் மட்டுமே லாஸ்லியாவுக்கு எல்லாம் செய்ய பூமியில் அவதரித்த கிருஷ்ண பரமாத்மா என்ற நினைப்பு அவனுக்கு... அவன் செய்த முதலுதவிகள் பார்க்கச் சகிக்கலை... பெண்ணைப் பெத்தவங்க காசிக்குப் போயிடலாம்.
சன் டிவியில தங்கையைப் பத்துப் பேர் கெடுக்கணும்ன்னு சொன்ன வசனம் வர்ற கல்யாணப்பரிசு சீரியலுக்கு 2.5 லட்சம் அபராதம் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டதாம். இந்த விஜய் டிவியில அவனவன் குடும்பமே நடத்துறானுங்க புள்ளை குட்டியோட வெளிய வருவானுங்க போல, அபராதமெல்லாம் போட மாட்டீங்களே கனம் கோர்ட்டார் அவர்களே.
இத்தனை கேமரா இருக்கு... தொட்டுத் தூக்குதல்... முதுகு தடவுதல்... தொடையில் பிடித்தல் எல்லாம் எல்லாருக்கும் தெரியத்தான் செய்யும் என்பதை அறியாதவன் அல்ல கவின்... இதெல்லாம் வெளியில் தெரிய வேண்டும் என்பதற்காகவே இப்படி நடந்து கொள்கிறான்.
இலங்கை முழுவதுக்கும் இப்போது லாஸ்லியா சீதையில்லையாம் சூர்ப்பனகையாம். நீ தள்ளியிரு அதான் ஷெரின் இருக்காங்கதானே.... அவங்களை வச்சி சரி பண்ணிக்கிறேன்னு லாஸ்லியா ஒரு வார்த்தையும் சொல்லலை... இதைத் தவறெனச் சுட்டினால் கவினை மாதிரி என்னைப் பார்த்துக்க எங்கப்பனாலயும் முடியாதுன்னு சொல்லிடும்... என்ன ஜென்மங்களோ...
அப்புறம் முகன் அவுட்டானான்... சாண்டியும் அவுட் ஆக, தர்ஷன் வெற்றி பெற்றான்... அவன் ஓட்டியது முகனுக்காக... சாண்டி ஷெரினுக்கு... முகன் சாண்டிக்கு... ஷெரின் தர்ஷனுக்கு.. சேரன் சேரனுக்கு... கவின் லாஸ்லியாவுக்கு... லாஸ்லியா கவினுக்கு... மொத்தத்தில் முகன்தான் வெற்றியாளன் என்பது எல்லாருக்கும் தெரியும்.
எல்லாரும் கையைப் புடிச்சிக்கிச்சு காலைப் புடிச்சிக்கிச்சுன்னு விழுந்து கிடக்க, எட்டு மணி நேரம் ஓட்டிய பின்னரும் தர்ஷனும் சாண்டியும் 'போராடினால் நாம் வெல்லலாம்' பாட்டுக்கு ஆடிக்கிட்டு இருந்தானுங்க... இந்த இருவருக்குள்ளும் இருக்கும் தன்னம்பிக்கை மற்றும் ஆற்றல் அதிகம்... கவினெல்லாம் இவர்கள் பக்கத்தில் கூட நிக்க முடியாது. அதனால்தான் லாஸ்லியா பக்கம் நிக்கிறான்னு யாரும் ஜோக்கடிக்கக் கூடாது.
அப்புறம் அசதியில படுத்திருந்தானுங்க... ரிசல்ட் அறிவிக்கப்பட்டது.
90ம் நாளுக்கான டாஸ்க்காய் நிப்பான் பெயிண்ட்டுக்கு ஒரு நிமிட விளம்பரத்தை உருவாக்கி நடிச்சிக் காட்டணும்... தர்ஷன், முகன், கவின் மிகச் சிறப்பாச் செஞ்சாங்க... சாண்டி, லாஸ்லியா, ஷெரின் பரவாயில்லை... நடுவரான சேரன் இரண்டு அணி குறித்தும் சொல்லி தர்ஷன் அணியே சிறப்பு என்றார். எல்லாருக்கும் திங்கிறதுக்குக் கொடுத்துட்டானுங்க..
முதலாவதாய் இறுதிப் போட்டிக்குச் செல்கிறார் முகன்னு சொல்லிட்டானுங்க... அவனுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்... முகனைப் பொறுத்தவரை பின்னால் இருக்கிறான்... பின்னால் இருக்கிறான் எனச் சொன்னாலும் தனக்கான விளையாட்டை யாருடன் சார்பு நிலை கொள்ளாது... மற்றவர்களை பலியாக்கி விளையாடாமல்... அடுத்தவரின் அன்புக்கும் நட்புக்கும் மதிப்பளித்து... குறிப்பாக உணர்வுகளுக்கு மதிப்பளித்து விளையாடுகிறான்...
எப்பவும் மகிழ்வாய்... எல்லாருடனும் ஓரளவு ஒத்துப் போறவனாய் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறான். போட்டிகளில் விட்டுக்கொடுக்காத தன்மையே அவனுக்கு இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறது. வாழ்த்துக்கள் முகன். என்னோட கணிப்பில் முகன் வெளியேற்றப்படுவான் என்று நினைத்திருந்தேன். இந்த வாரம் அவனின் விளையாட்டு அருமை... அது எல்லாத்தையும் மாற்றிப் போட்டு விட்டது. வாழ்த்துக்கள் முகன்.
கமல் வந்தார்... அகம் வழி அகம் செல்லும் முன் முகனைக் கண்ணைக்கட்டி தனி அரங்கு ஒன்றிற்கு வரவைத்து அங்கு சென்று நீ நீயாக விளையாண்டதால்தான் இந்த வெற்றி என்று சொல்லி, கோல்டன் டிக்கெட் பதக்கத்தை மாட்டிவிட்டு இதை உடைக்க வேண்டாம்... வீட்டுக்கே கொண்டு செல்லலாம் என்று சொல்லி செல்பி எடுத்துக் கொண்டார். இதையெல்லாம் மற்ற போட்டியாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். லாஸூக்குத்தான் ஒரு நளாயினியாக, ஒரு சாவித்திரியாக, தன் இல்லானுக்கு எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டதேன்னு வருத்தம். வெளியில் மகிழ்வாய் காட்டிக் கொண்டாலும் மனசுக்குள்ள மழை அடிக்கலை.
அகம் வழி அகம் புகுந்த கமல், சாண்டிக்கிட்ட தன்னோட மொத்த வித்தையையும் இறக்கினார். கவினுக்கும் சாண்டிக்குமான பிரச்சினை, அதில் லாஸ்லியா தலையீடு, சாண்டி பிக்பாஸிடம் அழுதது என எல்லாவற்றையும் குறித்துக் கேட்டார். சாண்டி நிகழ்வு இதுதான் என்றாலும் கவின் மீது நேரடிக் குற்றச்சாட்டை இறக்காமல் தாமரை இலைத் தண்ணீர் போல பட்டும் படாமலும் விளக்கினார். கமலும் துருவித் துருவிக் கேட்டார்... சாண்டியிடமிருந்து சரியான பதில் வரலை.
அப்போது கவின் நான் பேசலாமான்னு வண்டியில ஏறி, லாஸ்லியாவைத் தள்ளிவிட்டது... கடைசி இடத்தில் இருந்த எங்களைக் குறி வச்சி விளையாண்டது எனது எல்லாமும் பேசினான்... ஆனால் எதுவுமே நேரடியான பேச்சில்லை... எப்பவும் போல குறுக்குச் சந்து பயணம்தான். நான் ஒரு ஸோன்ல இருக்கேன் சார்... நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க பாதிக்கப்பட்ட என்னாகும்ன்னு உங்களுக்குத் தெரியாததான்னு சொல்லி சிரித்தான்.
என்ன எழவோ நான் போடுற டுவிட் புரிந்தாலும் இவன் பேசுறதை மட்டும் எவனும் புரிஞ்சிக்க முடியாது போலன்னு நினைச்ச கமல், அப்ப தர்ஷனுக்கு அடிபட்டப்போ பதறலையேன்னு கேட்டுட்டு, அது வேற பாசம் இல்லையா என்றார்.
கவின் சாண்டி மேல் தப்புச் சொல்வது போல் பேச, லாஸ்லியாவும் அவுக நல்லவுக... இந்த சாண்டிதான்னு ஆரம்பிக்க, சாண்டி சப்பைக் கட்டுக்கட்ட, இருங்கடா இதை முடிக்க நான் குறும்படம் போடுறேன்னு சொல்லிட்டு, இது கொஞ்சம் நீளம் அதிகம் அதனால் குறுகுறுகுறும்படம்ன்னு சொன்னார்.
அங்கே சாண்டி மோதி லாஸ்லியா விழுந்தது... கவினும் லாஸ்லியாவும் ஒண்ணா மண்ணாப் படுத்திருந்தது... சாண்டியிடம் கவின் மோதியது... சாண்டியிடம் லாஸ்லியா மோதியது... லாஸ்லியாவும் கவினும் பேசியது என எல்லாமும் போடப்பட காதல் ஜோடி முகத்தில் அமாவாசை இருட்டு... சாண்டிக்கோ பௌர்ணமி அலைகள்.
சரி நீங்க ரெண்டு பேரும் ஒரு பிளானோட வந்தோம்ன்னு சொல்றீங்களே... அப்படி என்ன பிளானோட வந்தீங்கன்னு கமல் கேட்க, சாண்டியும் கவினும் மீண்டும் மழுப்பலாய்ப் பேச ஆரம்பிக்க, அடேய் கொல்லாதீங்கடா சொல்லித் தொலைங்கடான்னு கமல் அழ ஆரம்பிக்க, நாங்க அஞ்சு பேரும் இறுதிப் போட்டியில் இருக்கணுங்கிறதுக்காக ஒவ்வொரு ஆளாக் காவு கொடுத்தோம் சார்... நாங்க செய்யிறதை மக்கள் தீர்ப்புன்னு நீங்களும் அங்கீகரிச்சீங்க... இதுவரை நல்லா விளையாண்ட முக்காவாசிப் பேரை நாம ரெண்டு பேரும் சேர்ந்து வெளியே அனுப்பிட்டோம். நல்லா விளையாடாத கவினையும் லாஸையும் லாஸ் ஆகாம பாத்துக்கிட்டோம்ன்னு சொன்னானுங்க.
அப்ப ஷெரின், சேரனெல்லாம் என்ன தக்காளித் தொக்கான்னு கமல் கேக்க, தக்காளி எடுத்துக் கொடுக்குறான் பாருடான்னு கவினும் சாண்டியும் சிரிச்சிக்கிட்டு, எங்களுக்காக விளையாடுற உங்களுக்கு நன்றி ஆண்டவான்னு சொல்லிட்டு ஆமாமா அடுத்தடுத்து ஷெரின், சேரனை அனுப்பத்தானே நம்ம பிளான்னு சொன்னாங்க. ஷெரினுக்கும் சேரனுக்கும் வருத்த அலைகள் வயித்துக்குள் அடித்துக் கொண்டிருந்தது.
இங்க இந்த அஞ்சு பேர் லாஜிக் ரொம்ப உதைக்குது இல்லையா... வெளியில் திட்டம் தீட்டிய போது முகன், தர்ஷன், லாஸ்லியாவெல்லாம் இவங்க பக்கமே இல்லையே... பின்னே எப்படி இந்த லாஜிக்... குழப்புறானுங்கன்னு தோணுதுதானே.. இதுவும் விளையாட்டில் ஒரு திட்டம்தான்... கமலுக்கே காது குத்திட்டானுங்க...
உணர்ச்சிகளுக்கு இடங்கொடுக்காதீங்கன்னு சொல்லிக்கிட்டே இருக்கோம் ஆனா நீங்க யாரும் அதைப் பின்பற்றவே இல்லை என்றார் கமல்.
அண்ணன் என்னைய விட்டு விலகிப் போயிருச்சுன்னுதான் தோணுது என்னோட நண்பன் வந்தப்போ அவனைத் தனியா விடுங்கன்னு சொல்லிட்டுப் போனதால கூட இருக்கலாம்ன்னு கவின் சொன்னப்ப யாரு அறை நண்பனா என கமல் கவுண்டர் கொடுக்க, பார்வையாளர்கள் சிரிக்க, அட ரூம் மெட் என்பதைத் தமிழ்ப்படுத்தினேனுங்க... நீங்க வேற என்றது செம.
போட்டியின் போது கூடையை உதைத்துவிட்டுச் சென்ற ஷெரினிடம் அப்படிச் செய்வது தவறில்லையா என்று கமல் கேட்டதும் விளையாட்டு முக்கியக் கட்டத்தில் இருக்கும் போது தன்னோட் பொண்டாட்டியைப் பார்க்க கவின் போனதும் அதுக்காக முகன் விளையாட்டை சிறிது நேரம் நிப்பாட்டுங்கன்னு சொன்னதும் மத்தவங்களோட ஸ்திரத்தன்மையைக் குறைக்கிறது மாதிரி இருந்தது... அதன் வெளிப்பாடுதான் என்னுடைய கோபம் என்றார். இதை கமல் ரசித்ததுடன் பாராட்டவும் செய்தார்.
மேலும் கவினுக்கு விளையாட்டின் மீது கவனமில்லைன்னு சொல்றீங்களான்னு கேட்ட கமலிடம் இல்லைன்னு சொல்லலை ஆனா அவன் இல்லாத மாதிரி காட்டிக்கிறான்... நடிக்கிறான்... என்று உண்மையை உண்மையாய்ச் சொன்னார். இதுதான் உண்மை... கவினுக்கு விளையாடத் தெரியாமல் இல்லை... லாஸ்லியாவுக்காக, அவரிடம் நல்ல பெயர் வாங்க, அவரின் காதலை முழுவதும் பெற, ஒண்ணுமே தெரியாத அப்பாவிபோல் இருக்கிறான். இப்படிப்பட்ட நடிகர்களிடம்தான் ரொம்பவும் பாதுகாப்பாய் இருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறிவிட்டார் லாஸ்லியா... தடுக்கி விழுந்தது மட்டுமில்லாமல் தரங்கெட்டதனமாகவும் நடந்து கொள்கிறார். பெற்றவர்கள் செத்த பிணமாகியிருப்பார்கள்.
இதே கேள்வியைக் கவினுக்கு கேட்ட போது மூணு நிமிசத்துல சொல்ல வேண்டிய பதிலை முப்பது நிமிடத்துக்கு நீட்டி முழங்குது மூதேவி. என்ன சொன்னுச்சுன்னு அடுத்தாளுக்குப் புரியலைன்னாலும் பரவாயில்லை... அதுக்கே புரியாது... எதிராளிக்குப் பதில் கொடுக்கிறேன் பேர்வழின்னு எதிராளிக்குப் பேதிக்கு மருந்து கொடுப்பதில் கவின் கில்லாடி. கடைசி வரைக்கும் என்ன பேசினான்னு கமலுக்கு மட்டுமில்லை பக்கத்தில் இருந்தவர்களுக்கும் புரியலை. ஆனால் என்னமோ பேசினான்.
அப்புறம் லாஸ்லியாவுக்குத் தாவிய கமலுக்கு லாஸ்லியாவும் கவினின் வளர்ப்பு என்பதை நிரூபிக்கும் விதமாக எதையோ பேச, வெளியேற்றம் இருக்கு யாரைக் காப்பாற்றுவது... அதை நாளைக்குப் பார்ப்போம்ன்னு கமல் கிளம்பிட்டார்.
கவின் - லாஸ்லியாவின் கேவலங்களை எல்லாம் எப்போதும் போல் கமல் கண்டு கொள்ளவும் இல்லை... கண்டிக்கவும் இல்லை... விளையாட்டில் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதீங்க... நட்பு, உறவெல்லாம் வெளியில் போய் வைத்துக் கொள்ளுங்கள் என்றதுடன் சரி. எப்பவும் போல் கவின் - லாஸ்லியாவுக்கு பாதுகாப்பு அரணாகத்தான் கமல் நின்றார்.
இன்று சேரன் போகவே அதிக சந்தர்ப்பம்... ஏனெனில் கவின் - லாஸ் காதல் இன்னும் பத்து நாளைக்கு வேணும் டி.ஆர்.பி. தீனிக்கு... என்னதான் கதாநாயகன் கதாநாயகி இருந்தாலும் நகைச்சுவைச் ஜோடி ஒண்ணு இரண்டாவதாய் சினிமாவில் தேவைப்படுவது போல தர்ஷன் - ஷெரின் ஜோடியும் வேணும்... கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் வாக்கின்படி இறுதியில் இல்லாத சேரனுக்கே இது இறுதிநாள்.
இங்கிருக்கும் போட்டியாளர்கள் எல்லாம் கடினமாக விளையாடுறாங்களாம்... கடந்த மூன்று நாட்களாகச் சரியாகத் தூங்கவே இல்லையாம்... வெளியில் இருந்து சுலபமாகச் சொல்லலாம்.. நீங்களே வந்து விளையாண்டால்தான் தெரியும்... எவ்வளவு கடினமானது என்பது என கமல் சொன்னார்... சாதாரண மனிதர்களை கூப்பிடுவார்களா என்ன..? அவங்க கோடியில் கொழிக்க, கைக்காசை செலவு பண்ணி வாக்களிக்க மட்டுமே சாதாரண மக்கள்... நீங்கள் அளிக்கும் ஓட்டின்படியே நடக்கிறது உங்கள் பிக்பாஸ்ன்னு சொல்றதெல்லாம் சுத்த ஹம்பக். எல்லாமே ஏமாற்று வேலை.
கமல் இந்த முறை கை விலங்கிடப்பட்ட நிலையில்தான் இருக்கிறார். அடித்துப் பேசும் கமல் இல்லை... காதல் ஜோடிக்கு சப்பைக் கட்டுக் கட்டும் சினிமா நாயகன் கமலாய்த்தான் நிற்கிறார்.
இன்று கவினும் லாஸ்லியாவும் காப்பாற்றப்படும் பட்சத்தில் மக்கள் தங்களுக்கு அதிக வாக்குகள் அளிப்பதாகவும் தாங்கள் செய்வது சரியென்றும் முடிவு செய்து இன்னும் மோசமான நிகழ்வுகளை எல்லாம் வரும் வாரத்தில் நிகழ்த்துவார்கள்.
மொத்தத்தில் கமலின் எபிசோடும் தண்ணியில்லாத கண்மாய் மாதிரித்தான் வறண்டு கிடக்கிறது.
ஆனால் கமல் என்ன சொன்னார் தெரியுமா..?
என்ன சொன்னார்...?
இதுவரை நடந்த சீசன்களிலே இதுதான் சிறப்பானது என மக்கள் சொல்கிறார்களாம்.
சத்தியமா நான் சொல்லலை...
ஆமா நீங்க யாராச்சும் சொன்னீங்களா..?
பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.
சீசன் 1 நன்றாக இருந்தது...
பதிலளிநீக்குஅதுதான் உண்மை... இன்று லாஸ்லியா, ஷெரினைக் காப்பாற்ற சேரன் வெளியேற்றப்பட்டாராம்... இதுதான் மக்களின் வாக்குகளின் அடிப்படை...
நீக்குInga alagaana pathiwu......
பதிலளிநீக்குWeru yaarellam bb Patri eluthuranga enru solla mudiyumaa