சனி, 7 செப்டம்பர், 2019

மனசின் பக்கம் : கணினித் தமிழும் ரியாத் தமிழ்ச்சங்கமும்

புதுக்கோட்டை கணினித் தமிழ்சங்கம் நடத்தும் இணையத் தமிழ் பயிற்சி முகாம் ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரியில் வரும் அக்டோபர் மாதம் 12, 13ம் தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது. 

எதிர்காலத்தில் தமிழ் வளர்ச்சி என்பது இணையம் இல்லாது சாத்தியமில்லை... இனி வரும் காலம் இணையத்தோடு பயணிக்கும் காலம்தான். இணையத் தமிழில் சிறந்தவர்களைக் கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட இருக்கின்றன. 

இந்தப் பயிற்சிக்கு நன்கொடையாக் மாணவர்கள் எனில் ரூ.100ம் மற்றவர்களுக்கு ரூ.200 ம் செலுத்த வேண்டும். இந்தத் தொகை இரண்டு நாட்களுக்கான மதிய உணவு, தேநீர், கையேடு போன்றவைகளுக்காக மட்டுமே. மேலும் இந்த நிகழ்வுக்கு நன்கொடை செலுத்த நினைப்பவர்கள் முத்து நிலவன் ஐயாவின் பதிவில் கொடுத்திருக்கும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம். ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து இரண்டு மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.


மொத்தம் நூறு பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதாலும் பயிற்சியாளர்கள், விழாவிற்கு வரும் சிறப்பு விருந்தினர்கள் என 25 பேருக்கு மேல் கலந்து கொள்வார்கள் என்பதால் 75 பேருக்குத்தான் இந்த வாய்ப்பு. விரைந்து முன்பதிவு செய்யுங்கள். மிகச் சிறப்பானதொரு வாய்ப்பு இது வாய்ப்பு இருப்பவர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள்.

விழா குறித்த முழு விபரங்கள் அறிய அழைப்பிதழ் பார்க்க முத்துநிலவன் ஐயாவின் கீழ்க்கண்ட பதிவுகளின் சுட்டி வழிச் சென்று அறிந்து கொள்ளுங்கள்.
இணையத் தமிழ்ப் பயிற்சி முகாமில் பங்கு பெற அழைப்பு
இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் அழைப்பிதழ்
வருடா வருடம் சிறப்பாக பயிற்சி முகாம் நடத்தும் புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் மற்றும் திண்டுக்கல் தனபாலன் அண்ணா, மற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

விழா சிறக்க வாழ்த்துக்கள்.

னது சிறுகதை மூன்றினை பிரதிலிபியில் ஆடியோ கதையாக மாற்றியிருக்கிறார்கள்.  தொழில் நுட்பக் கோளாறு என்பதால் கதை எழுதிய, வாசித்தவரின் பெயர் இடம்பெறவில்லை. சென்ற முறை இரு கதைகளை இதே போல் ஆக்கிய போது ஆடியோ பைல் எழுதியவருக்கு அனுப்பப்படவில்லை. இந்த முறை நான் கேட்டிருந்ததால் அனுப்பியிருக்கிறார்கள். ஆடியோ பதிவை இங்கு இணைக்க முடியவில்லை. அனுப்பிக் கொடுத்த அவர்களுக்கு நன்றி.

சிறுகதைகள். காம் தளத்தில் எனது முதல் கதை (விழலுக்கு இறைத்த நீர் - சேனைத்தமிழ் உலா சிறுகதை போட்டி -2015-ல் முதல் பரிசு பெற்றது) சென்ற வாரம் பகிரப்பட்டு அந்த வாரத்துக்கான சிறந்த கதையாக தெரிவு செய்யப்பட்டு சிறந்த கதைகள் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது. நன்றி சிறுகதைகள்.காம்.


ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில நான்கு நடுவர்களின் தேர்வாய் வெற்றியாளர்களைத் தேர்வு செய்ய இருக்கும் ஐந்தாவது நடுவரின் கரத்துக்குச் சென்ற 40 கதைகளில் எனது கதையும் ஒன்று என்பதில் மகிழ்ச்சி. பரிக்குரிய கதையாக தேர்வாகிறதோ இல்லையோ வெற்றியாளர்கள் பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றிருப்பதே மிகப்பெரிய விஷயம்தான்... அழுகாச்சி கதைகள் எல பலர் கேலி செய்தாலும் இவையே வாழ்க்கையைப் பேசுகின்றன என்பதை என் 'வீராப்பு' நிரூபித்திருக்கிறது. நன்றி ரியாத் தமிழ்ச் சங்கம்... இதைத் தெரிவித்த, எங்கள் அமீரக எழுத்தாளர் குழுமத்தில் பகிர்ந்து கொண்ட சகோதரர் அய்யனார் விஸ்வநாத் அவர்களுக்கும்  வாழ்த்திய நட்புக்களுக்கும் நன்றி.

மனசின் பக்கம் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

10 கருத்துகள்:

  1. //ஆடியோ பதிவை இங்கு இணைக்க முடியவில்லை...//

    கண்டிப்பாக இணைக்கலாம் குமார்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/04/how-to-add-mp3-in-blogger.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முயற்சித்தேன் முடியவில்லை...
      ஒருநாள் உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன் அண்ணா.

      நீக்கு
  2. அனைத்தும் மகிழ்ச்சி தரும் செய்திகள்.

    இணையத் தமிழ் பயிற்சி சிறக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் எழுத்துக்கான அங்கீகாரம் என நினைக்கிறேன். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துகள் குமார்.

    பதிலளிநீக்கு
  5. மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி