கல்லூரிச் சாலையில்
நீயும் நானும்
பேசியபடி வருகிறோம்...
எதைச் சொன்னாலும்
சிரிக்கிறேன்
சிரிக்கிறாய்
சிரிக்கிறோம்...
கோபப்படுத்தும்
போதெல்லாம்
'சாரி' நம்மிடையே
மாட்டிக் கொண்டு
விழிக்கிறது...
ஏதேதோ பேசி
எல்லாத்துக்கும்
சிரித்தும்
முறைத்தும்
அடித்தும்
ரசித்தும்
கடக்கிறோம்
சாலையை...
என்ன பேசினோம்
என்பது
இருவருக்கும்
தெரியாது...
தினசரி நிகழ்வானாலும்
சலிப்பதில்லை
நம் வீதிவுலாவும்...
காதல் பேச்சும்...
வீட்டருகே வந்து
விடை கொடுத்துப்
பிரியும் போது
தவிக்கும் கண்கள்
மறுநாள் விடியலுக்கான
மறுதலிப்போடு...
-'பரிவை' சே.குமார்
பேசியது மட்டுமா...? மெய் மறந்ததால் ஞாபகம் ஏதும் இருக்குமா என்ன...?
பதிலளிநீக்குரசித்தேன்... வாழ்த்துக்கள்...
அழகான வரிகளுடன் அற்புத கவிதை...
பதிலளிநீக்குஎளிய தமிழில் நல்ல கவிதை!வாழ்த்துக்கள்!!!
பதிலளிநீக்குதங்களின் தளம் : http://jeevanathigal.blogspot.com/2013/07/14-to-20-07-2013.html
பதிலளிநீக்குகுமார்... இந்தக்கவிதை எனது தொகுப்பில் மூன்றாமிடத்தை அலங்கரித்திருக்கிறது. தொடர்ந்து பல நல்ல படைப்புகளைத்தர வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குhttp://jeevanathigal.blogspot.com/2013/07/14-to-20-07-2013.html