புதன், 4 ஆகஸ்ட், 2010

மனசின் பக்கம் - I

நேற்றிரவு எங்கள் அறையில் சாப்பிட அமரும்போது சன் மியூசிக்கில் நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த நிகழ்ச்சி நடத்தும் சூர்யாவின் பேச்சும் அவர் சொல்லும் கவிதைகளும் எல்லோருக்கும் பிடிக்கும் என்பதால் தினம் பார்க்கும் நிகழ்ச்சியானது.


ராசிபுரத்தில் இருந்து ஒரு பெண் பேசினார். அப்போது அவர் தனது கணவருக்கு 25ஆம் தேதி பிறந்தநாள் என்றும் அவருக்காக நல்ல பாடலாக போடுங்கள் என்று சொன்னார். அதற்கு அவர்கள் போட்ட பாடல்...

'நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா...'

பாடலைக் கேட்டதும் எல்லாரும் சிரித்ததில் புரையேறி... நாங்களே ரொம்ப கஷ்டப்பட்டோம் என்றால் கேட்ட கணவர் நிலை...?

அடுத்து ஒரு பெண்மணி அதே போல் தனது கணவருக்காக பாடல் கேட்க போடப்பட்ட பாடலோ...

'சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே...'

நாம் கேட்க நினைக்கும் பல நல்ல பழைய பாடல்களை ஒளிபரப்புகிறார்கள் சந்தோஷமே. ஆனால் பாடல் கேட்பவர்கள் அவர்களாக படத்தின் பெயரை சொல்லும்பட்சத்தில் அதே பாடலை போடலாம். ஆனால் எதாவது பாட்டுப்போடுங்கள் என்று சொன்னால் அதற்கு தகுந்தாற் போல் பாடல் போட்டால் நல்லாயிருக்கும். 

 நிகழ்ச்சி நடத்தும் சூர்யாவிற்கு வாழ்த்துக்கள்.

-----------------------

ம்ம ஊரில் வளர்ந்த மரங்களை வெட்ட நாம் மலைப்பதும் இல்லை... வருந்துவதும் இல்லை. கட்டில் செய்யவும்... கதவுகள் செய்யவும் பார்த்துப் பார்த்து வளர்த்த மரங்களை வெட்ட நாம் தயங்குவதில்லை. ஆனால் இங்கு இருக்கும் அரபிகள் பேரீச்சம் பழ மரத்தை எக்காரணம் கொண்டும் வெட்டுவதில்லை. அது எவ்வளவு பெரிய மரமாக இருந்தாலும் அந்த மரங்களை வேறுடன் பிடிங்கி எங்கு தேவையோ அங்கு நட்டு அதன் இலைகளை ஒன்று சேர்த்து சாக்கால் கட்டி வைத்து தண்ணீர் விட்டு வைக்கிறார்கள். அது மீண்டும் துளிர்த்ததும் சாக்கை எடுத்து விடுகிறார்கள். மரமும் தழைத்து வளரும்.

நாம் மரங்களை வேறுடன் பிடிங்கி வைப்பது என்பது சாத்தியமில்லைதான் பட்ட மரங்களை துளிர்க்க வைக்க முடியாது. நம்மால் முடிந்த மரக் கன்றுகளை நட்டு நீர் விட்டு வந்தால் கண்டிப்பாக நல்ல மரங்களை நம் சந்ததிக்கு விட்டுச் செல்லலாமே.

மரம் வளர்ப்போம்... அதனுடன் சேர்த்து மனிதமும் வளர்ப்போம்.

---------------------

திவு திருட்டு என்றும் திருடவில்லை தவறுதலாக ஆகிவிட்டது என்றும் நம் நட்புக்குள் நேற்று கலவரமாகியிருந்தது.

நடந்துவிட்டது அது சரி தவறென்று பட்டி மன்றம் நடத்துவதைவிட சம்பந்தப்பட்ட இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டால் இந்தப் பிரச்சினை முற்றுப் பெறும்.


இந்த சிறு புள்ளி வளர்ந்து காட்டுத்தீயாக மாறமல் இருக்க நமக்குள் ஒத்துமை வேண்டும். எனவே அடுத்தவர் பதிவை எதாவது ஒரு காரணத்துக்காக எடுக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவருக்கு தெரிவித்தால் நட்பு வளரும்.

வலை நட்பை வாழ்நாளெல்லாம் கொண்டு செல்வோம்.

இனி அடிக்கடி அல்ல மனசில் தோன்றும்போது மனசின் பக்கம் தொடரும். (அடிக்கடி உங்களை கஷ்டப்பட வைக்க மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்)

-பரிவை சே.குமார்.

படங்களுக்கு நன்றி  : Google.com

27 கருத்துகள்:

  1. \\வலை நட்பை வாழ்நாளெல்லாம் கொண்டு செல்வோம்.\\
    நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
  2. உங்கள் மனசின் பக்கம் - சரியான கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறது. பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  3. அருமையான பகிர்வு.

    மனசின் பக்கங்களை அடிக்கடி புரட்டுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. மனசில் உள்ளதை பகிர்ந்துக் கொண்டாலே, வேலைச் சுமையும், மனச் சுமையும் பாதிக்கு மேல் குறைந்து விடுமே சார்!

    பதிலளிநீக்கு
  5. சூர்யாவுக்கு வெளிநாடுகளில நிறைய ரசிகர்கள் இருப்பாங்க போலிருக்கு :)

    மரம் வைக்கிற இடத்தில எப்படி எத கட்டலாம்னு தான் மனிதம் நினைக்கும் :((

    பதிலளிநீக்கு
  6. நல்லாருக்குங்க:)

    பதிலளிநீக்கு
  7. எங்கள் வீட்டிலும் நாங்கள் சூர்யா ரசிகர்கள்தான்..என் கணவர் அவருடைய தீவிர ரசிகர் என்றே சொல்லலாம்..அவர் நிகழ்ச்சியை நடத்தும் விதம் எனக்கும் பிடிக்கும்..

    மனசில் உள்ளதை பளிச்சுன்னு சொல்லிட்டீங்க...

    பதிலளிநீக்கு
  8. மனசின் பக்கம் மூன்றுமே
    அழகுதான் குமார்.

    பதிலளிநீக்கு
  9. வாங்க அம்பிகா...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க சித்ரா மேடம்...
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வாங்க அக்பர்...
    முடிந்ததளவு முயல்கிறேன் நண்பரே.
    மிட்டாய் அளவுக்கும் சிறப்பாக இருக்குமா சொல்லுங்கள்.
    மிட்டாயில் கலக்குறீங்க போங்க.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வாங்க அப்துல் காதர்...
    உங்கள் கூற்று உண்மைதான்... மன பாரம் குறைய வேண்டும் என்றால் சுமையை இறக்கி வைக்கத்தானே வேண்டும்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வாங்க சுசி மேடம்...
    ரசித்து பார்க்கக் கூடிய நிகழ்ச்சி மட்டுமின்றி நடத்தும் விதம் மற்றும் பாடல்கள் எல்லாம் மிக அருமை.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வாங்க சுசி மேடம்..
    உங்கள் கருத்து உண்மைதான் மரம் வைக்கும் எண்ணம் நமக்குள் முதலில் துளிர்க்க வேண்டும் அல்லவா?
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வாங்க வானம்பாடிகள் சார்...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க மேனகா மேடம்...
    அங்கயுமா?... அது சரி...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க ஹேமா மேடம்...
    ரொம்ப நன்றி ரசித்து பின்னூட்டமிட்டமைக்கு...!

    பதிலளிநீக்கு
  15. "மனசின் பக்கம்" தலைப்பு நல்லா இருக்கு குமார். பகிர்வுகளும். தொடரவும்..

    பதிலளிநீக்கு
  16. மரம் வெட்டாமல் வேரோடு கொண்டு போய் வேறிடத்தில் நடுவது நல்ல ஐடியா. இதெல்லாம் எங்கள் நாட்டில் சாத்தியமே இல்லை. தேவையில்லை எனில் உடனடியாக வெட்டி விடுகிறார்கள்.
    நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  17. பேரிச்சை மரம் பற்றியதெனக்கு புதிய தகவல். தொடருங்கள்.....

    பதிலளிநீக்கு
  18. I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

    பதிலளிநீக்கு
  19. மிக நல்ல பகிர்வு நண்பரே..

    பதிலளிநீக்கு
  20. மனசுல நல்ல பக்கமா பதிஞ்சு வச்சிருக்கீங்க.. மரம் பத்திய தகவல் சூப்பர்...
    இங்க தமிழ் சானல் எங்க வீட்டில தடா ( டிஷ் சரியான கோணத்தில வைக்க முடியல)...மறுக்கா வாரன்..

    பதிலளிநீக்கு
  21. //நிகழ்ச்சி நடத்தும் சூர்யாவிற்கு வாழ்த்துக்கள்.// - இது வாழ்த்தா உள்குத்தா ?
    //வலை நட்பை வாழ்நாளெல்லாம் கொண்டு செல்வோம்.// - அருமை
    முன்றும் அருமை.
    நீங்கள் மனசின் பக்கத்தை புரட்டுவதை அடிக்கடி செயுங்கள்.

    பதிலளிநீக்கு
  22. நல்ல பகிர்வு குமார்.

    பதிலளிநீக்கு
  23. வாங்க பா.ரா. அண்ணா...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா.
    தொடர முயல்கிறேன்.

    வாங்க வானதி...
    கருத்துக்கு நன்றி.
    வேருடன் பிடுங்கி வைக்க வேண்டாம். சிறு செடியை வேறுடன் நடலாமே.

    பதிலளிநீக்கு
  24. வாங்க கலாநேசன்...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


    வாங்க ஸ்வேதா...
    நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வாங்க கமலேஷ்...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க இலா...
    நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அடிக்கடி வாங்க.

    பதிலளிநீக்கு
  26. வாங்க கார்த்திக்...
    உள் குத்தெல்லாம் இல்லை சாமி. உண்மையான வாழ்த்துதான்.
    கருத்துக்கு நன்றி.

    வாங்க சரவணன்...
    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  27. ஹா ஹா.... சிட்டிவேஷன் பாடல் சூப்பர் போங்க...

    //வலை நட்பை வாழ்நாளெல்லாம் கொண்டு செல்வோம்.//

    இதுவும் அருமை.. :-)

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி