இடைநில்லாப் பேருந்தில்
இரைச்சலில்லா
இரவுநேரப் பயணம்...
தார்ச்சாலை இருட்டைத்
தகர்த்து இலக்கை நோக்கி
விரையும் பேருந்துக்குள்
இசையாய் இசைஞானி...
படியில் தொங்கும்
பயணிகள் இல்லை...
இடித்து நிற்கும்
இம்சையும் இல்லை...
பக்கத்து மனிதனின்
தோள் சாயாது
காலி இருக்கையில்
கால் நீட்டித் தூங்கும்
மனிதர்கள்...
பின்னிரவிலும் விழித்திருக்கும்
காதலிக்கு பேசியபடி வரும்
முன்னிருக்கை காதலன்...
எதிலும் ஒட்டாமல்
சாய்ந்து படுத்தவன்
மெல்ல விலக்கினேன்
சன்னல் கண்ணாடியை...
திறக்காத சன்னலால்
திமிறிய காற்று...
வழி கிடைத்ததும்
கன்னத்தில் அறைந்தது...
கடந்து செல்லும் மரத்தை
ரசிக்க மறுத்த மனசு...
அவளின் நினைவுகளை
மீட்டி எடுத்து வாட்டி வதைத்தது...
நாளை திருமணம்...
வாழ்த்த வரணுமாம்...
மென்று விழுங்கிய
வார்த்தைகளால்
கொன்று வீசினாள்
காதலையும் என்னையும்...
ஏமாற்றுவது ஆண்கள்
மட்டுமல்ல பெண்களும்தான்...
ஏமாறுவது பெண்கள்
மட்டுமல்ல ஆண்களும்தான்...
கொஞ்சம் சன்னலை
அடைங்க தம்பி குளிருது
பின்னிருக்கை குரலால்
அடைத்துச் சாத்தினேன்
சன்னலோடு அவள் நினைவையும்...
வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்...
பேருந்துப் பாடல்
பெருமழையென
மனதுக்குள் இறங்க
மூடிய விழிக்குள்ளிருந்து
வெளியான கண்ணீர்
கன்னத்தில் இறங்கியது...
வீணையடி நீ எனக்கு
நான் சொல்லும் வரிகள்...
அவள் விரும்பும் வரிகள்...
ஆளில்லாத பக்கத்து
இருக்கையில் சாய்ந்திருந்தது
திருமணப் பரிசாய்
வாங்கிய அழகிய வீணை...!
இரைச்சலில்லா
இரவுநேரப் பயணம்...
தார்ச்சாலை இருட்டைத்
தகர்த்து இலக்கை நோக்கி
விரையும் பேருந்துக்குள்
இசையாய் இசைஞானி...
படியில் தொங்கும்
பயணிகள் இல்லை...
இடித்து நிற்கும்
இம்சையும் இல்லை...
பக்கத்து மனிதனின்
தோள் சாயாது
காலி இருக்கையில்
கால் நீட்டித் தூங்கும்
மனிதர்கள்...
பின்னிரவிலும் விழித்திருக்கும்
காதலிக்கு பேசியபடி வரும்
முன்னிருக்கை காதலன்...
எதிலும் ஒட்டாமல்
சாய்ந்து படுத்தவன்
மெல்ல விலக்கினேன்
சன்னல் கண்ணாடியை...
திறக்காத சன்னலால்
திமிறிய காற்று...
வழி கிடைத்ததும்
கன்னத்தில் அறைந்தது...
கடந்து செல்லும் மரத்தை
ரசிக்க மறுத்த மனசு...
அவளின் நினைவுகளை
மீட்டி எடுத்து வாட்டி வதைத்தது...
நாளை திருமணம்...
வாழ்த்த வரணுமாம்...
மென்று விழுங்கிய
வார்த்தைகளால்
கொன்று வீசினாள்
காதலையும் என்னையும்...
ஏமாற்றுவது ஆண்கள்
மட்டுமல்ல பெண்களும்தான்...
ஏமாறுவது பெண்கள்
மட்டுமல்ல ஆண்களும்தான்...
கொஞ்சம் சன்னலை
அடைங்க தம்பி குளிருது
பின்னிருக்கை குரலால்
அடைத்துச் சாத்தினேன்
சன்னலோடு அவள் நினைவையும்...
வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்...
பேருந்துப் பாடல்
பெருமழையென
மனதுக்குள் இறங்க
மூடிய விழிக்குள்ளிருந்து
வெளியான கண்ணீர்
கன்னத்தில் இறங்கியது...
வீணையடி நீ எனக்கு
நான் சொல்லும் வரிகள்...
அவள் விரும்பும் வரிகள்...
ஆளில்லாத பக்கத்து
இருக்கையில் சாய்ந்திருந்தது
திருமணப் பரிசாய்
வாங்கிய அழகிய வீணை...!
-'பரிவை' சே.குமார்.
கவிதை வரிகளை அழகாக மீட்டி இருக்கின்றீர்கள் வாழ்த்துகள்
பதிலளிநீக்குவணக்கம் அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வீணையடி நீ எனக்கு நன்றாக மீட்டப்பட்டிருக்கிறதே குமார்!!! அருமை..ரசித்தோம் வீணையின் சோக ராகத்தின் வரிகளை!
பதிலளிநீக்குவணக்கம் துளசி சார்...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
>>>
பதிலளிநீக்குதிறக்காத சன்னலால்
திமிறிய காற்று...
வழி கிடைத்ததும்
கன்னத்தில் அறைந்தது...
<<<
அழகு.. வாழ்க நலம்..
வணக்கம் ஐயா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சிறப்பான கவிதை! கடைசி வரிகள் கலக்கல்!
பதிலளிநீக்குவணக்கம் சகோதரா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எங்கிருந்தாலும் வாழ்க என நலம் வாழ்த்தும் நல்லதோர் வீணை இது
பதிலளிநீக்குவணக்கம் நண்பரே...
நீக்குதங்கள் முதல்வருகையும் கருத்தும்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அருமை குமார். பாராட்டுகள்.
பதிலளிநீக்குவணக்கம் அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.