வியாழன், 7 ஜனவரி, 2016

மனசின் பக்கம் : பசிக் கனவுகளும் பிறந்தநாளும்


சென்ற திங்கள்கிழமை நம்ம தஞ்சையம்பதி செல்வராஜூ அய்யா அவர்களின் பேத்தியின் பிறந்ததினம். மாலை அவர்கள் இல்லத்தில் நடந்த பிறந்தநாள் விழாவுக்கு அழைப்பு வந்திருந்தது. கில்லர்ஜி அண்ணா அவர்கள் ஒருவாரமாகவே ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தார். எனக்கும் செல்ல ரொம்ப ஆசை... ஆனால் கடந்த சில வாரங்களாகவே ஒரு பிரச்சினைக்குரிய வேலையை எடுத்திருக்கிறோம். இதை முடித்தால் இந்த வேலை முடிவுக்கு வந்துவிடும். அதன் காரணமாக எங்களுக்குள் பிரச்சினை மேகம் சூழ்ந்திருந்தது. அது பெருமழையாகி அடிதடி... வெட்டுக்குத்து... என எல்லாம் நடக்கலாம் என்ற சூழலில்தான் பயணித்தோம்... இன்னும் பயணிக்கிறோம். அதனால் மாலை சீக்கிரம் வீடு திரும்ப முடியவதில்லை... அண்ணனிடம் விபரம் சொன்னேன்... சரி ஆறு மணிக்குள் வர முடிந்தால் செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்றார்... நம்ம நேரம் பாருங்க... அன்னைக்கு நான் வெளியில் வந்து போன் பண்ணும் போது ஆறுக்கு மேலாகியிருந்தது. இனி அறைக்கு வந்து கிளம்பி... நம்மால் ஏன் அவருக்கும் தாமதமாக வேண்டும் என அண்ணனிடம் மீண்டும் போனில் பேசி விபரம் சொல்லி எனது வாழ்த்தையும் சொல்லிவிடுங்கள் என்று சொல்லி விட்டேன். இங்கு சொந்தங்கள் கிடைப்பதே அரிது... அப்படியிருக்க அன்பாய் அழைத்த பிறந்தநாளுக்குச் செல்ல முடியவில்லை... குட்டீஸ்க்கு வாழ்த்துச் சொல்ல முடியவில்லை என்ற வருத்தம்தான் மனசில்... கில்லர்ஜி அண்ணாவுடன் இடையில் ஒருநாள் சென்று வர வேண்டும்... இப்போதைக்கு செல்லக்குட்டிக்கு எங்கள் அன்பான வாழ்த்துக்கள்.


ந்த மனுசனை கொஞ்ச நாளாத்தான் பதிவுப்பக்கம் காணோம்...ஆனா ஆளு எதோ முக்கியமான வேலையா இருக்காருன்னு மட்டும் தெரியுது. இல்லேன்னா எங்க யாரு எழுதியிருந்தாலும் அங்க இவரோட கருத்து இருக்கும். சில நாட்களில் இங்கு இரவு பனிரெண்டு மணிக்கு (இந்திய நேரம் இரவு 1.30) யாருக்காச்சும் கருத்துப் போடப் போயி அங்க நாமதான் முதல்லு நினைச்சு காலரைத் தூக்கி விட்டுக்கிட்டா... இவர் அங்கு கருத்து இட்டிருப்பார்... வலைச்சரத்தில் உங்களைப் பற்றிச் சொல்லிய அந்த வார ஆசிரியர் விவரம் சொல்ல வருமுன் இவர் அங்கே சொல்லி இணைப்பும் கொடுத்திருப்பார்... நமது தளத்தில் ஏதாவது பிரச்சினையா ஓடி வந்து உதவுவார்... யாரைச் சொல்றேன்னு உங்களுக்கெல்லாம் தெரியாமயா இருக்கும்... ஆமா நம்ம வலைச்சித்தர் அண்ணன் தனபாலன் அவர்களைத்தான் சொல்றேன். அவரைப் பற்றி எதுக்கு எழுதுறான்னு எல்லாம் நினைக்கமாட்டீங்க... ஏன்னா நீங்கள்லாம்தான் அவரோட முகநூல் பக்கத்துல வாழ்த்து மழை பொழிஞ்சிட்டீங்களே...  அந்த குங்குமப் பொட்டுக்காரரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு வரவில்லை என்றாலும் இரண்டு முறை போனிலும் சில பல மின்னஞ்சலிலும் எங்கள் உறவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அன்பு அண்ணன் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


ன் மனைவியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்ன அனைத்து உறவுகளுக்கும் நன்றி சொல்லச் சொன்னார்... எல்லாருக்கும் என் மனைவியின் சார்பாகவும் என் சார்பாகவும் நன்றி. உங்கள் வாழ்த்தே எங்களை மலர்ச்சியோடும் மகிழ்ச்சியோடும் நலமோடும் வளமோடும் வாழ வைக்கும்... மீண்டும் நன்றி.

ன் மனைவியின் பிறந்தநாளுக்கு சேனையில் வாழ்த்துப் போட்ட நிஷா அக்காவுக்கும் அங்கு வாழ்த்திய நண்பன் உள்ளிட்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி. மேலும் இன்று பிறந்தநாள் கொண்டாடும், என் கொலையாளி யார்..? குறுநாவலின் தொடர் வாசகி, என்னை ஊக்கப்படுத்தி எழுத வைத்த என் எழுத்தின் ரசிகை, எனது அன்பு அக்கா பானு ஷாபனா அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 


பாக்யாவில் மக்கள் மனசு பகுதியில் எனது கருத்தை தொடர்ந்து பூங்கதிர் சார் பகிர்ந்து வருவது மகிழ்ச்சி என்றால் சென்ற வாரத்தில் வாசகர் வாய்ஸ் என்ற பகுதிக்கு எழுதியதில் பாக்யராஜ் சார் தேர்வு செய்த கருத்துக்களில் என் கருத்தும் ஒன்று... ரொம்பச் சந்தோஷமாக இருந்தது... திரைக்கதை மன்னனல்லவா அவர்... அவரின் மனசுக்கு பிடிச்ச மாதிரி நம்ம கருத்து இருப்பதே பெரிய விஷயம் அல்லவா.. என்னவோ தெரியலை முந்தாநாள் தாவணிக் கனவுகள் படம் பார்க்கணுமின்னு தோணுச்சு... இதற்கு முன் அந்தப்படத்தை முழுவதும் பார்த்ததில்லை... கோழி கிளறியது போல் சில இடங்களை மட்டும் பார்த்திருப்பேன். நேற்று உட்கார்ந்து பார்த்தேன்... என்ன அழகான ஸ்கிரீன்பிளே... ஐந்து தங்கைகளின் அண்ணனாக... அதுவும் கஷ்டப்படும் குடும்பத்தின் மூத்த பிள்ளையாக மனுசன் வாழ்ந்திருக்கிறார். வசனங்களில் அத்தனை ஷார்ப்... அதுவும் பாரதிராஜா அவர்களின் படத்தில் எடுக்கப்பட்ட ஒரு காட்சி குறித்து ராதிகாவிடம் நடித்துக் காண்பிக்கும் போது பேசும் வசனங்கள்.... அதேபோல் இறுதிக்காட்சியில் மனிதர் பேசாமல் பெண்களைப் பேச விட்டு வேடிக்கை பார்க்கும் இடத்தில் வரும் வசனங்கள்... தியேட்டர் காட்சிகள் சிரிக்க வைத்தாலும் ரொம்பவே சிந்திக்க வைத்தது. திரைக்கதை மன்னன்னா அவர்தான் போங்க... அவருக்கும் பிறந்தநாளாம்... ஆர்.வி. சரவணன் அண்ணன் மட்டும்தான் சொல்வாரா நாமளும் அவருக்கு வாழ்த்துச் சொல்லிடுவோம்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாக்யராஜ் சார்.


ன்னடா ஒரே பிறந்த நாளா இருக்குன்னு யோசிக்காதீங்க வாங்க கொஞ்சமா அரசியலும் பேசுவோம், பொங்கல் பரிசுன்னு சொல்லி ஒரு ரெண்டு கோடியை அம்மா கட்டம் கட்டிருச்சு போல. வெள்ள நிவாரணத்துக்கு வந்த தொகை இப்போ மக்களை மயக்கி முட்டாளாக்கி ஜெயிக்கிறதுக்காக பயன்படப்போகுது... சரி விடுங்க... பச்சரிசி, வெல்லம், கரும்பு, கையில 100 ரூபா... (இதுல நிறைய 100 ரூபாய் அம்மாவுக்கே திரும்பி போயிரும் டாள்மார்க் வாயிலாக) எல்லாம் கொடுக்கிறாங்களாம்.. விடாதீங்க... வாங்கிக்கங்க... ஆமா என்ன கொடுத்தாலும் வாங்கிக்கங்க.. செய்வீங்களா... செய்வீங்களான்னு கேட்டா செய்வோம்... வச்சிச் செய்வோம்ன்னு  மறக்காம சொல்லிடுங்க...? அதே மாதிரி ஐந்து வருடத்துக்கு முன்னால நாம அனுப்புன எம்.எல்.ஏ. ஓட்டுக் கேட்டு வருவாப்ல... இப்பத்தான் வழி தெரிஞ்சுச்சான்னு எல்லாம் கேக்காதீங்க... வரவேற்பு கொடுங்க... ஆளுயர மாலை போடுங்க...முடிஞ்சா அடிக்காம அடிக்கு ஒரு கட் அவுட்டோ பதாகையோ வையுங்க.. உனக்குத்தான் ஓட்டு... உன்னை வச்சிக் குத்துறோம்ன்னு சொல்லுங்க... அப்புறம் ஆல் அல்லக்கைஸ் கண்டிப்பா  அம்மா, அய்யான்னு வருவாங்க... தவறிக்கூட உங்க கோபத்தைக் காட்டிராதீங்க... கொடுக்கிறதை வாங்கிக்கங்க... அவங்களை கொண்டாடி அற்புதப்படுத்துங்க... முடிஞ்சா கரகாட்டம், ஆடல்பாடல் எல்லாம் வச்சி ஜமாய்ங்க... ஆனா தப்பித்தவறிக்கூட உங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொல்லாதீங்க.... எல்லாம் உங்களுக்கேன்னு சொல்லி வர்றவனுக்கிட்ட எல்லாம் வஞ்சமில்லாம சிரிச்சி வையுங்க... ஆனா தேர்தலப்போ சிந்தித்து ஓட்டுப் போடுங்க... காசுக்கும் சேலைக்கும் பொங்கல் பரிசுக்கும் ஏமாந்துறாதீங்க... அப்புறம் அடுத்த அஞ்சு வருசத்துக்கு உங்க வாழ்க்கையில பஞ்சம்தான்... இந்த முறை ஆணவ ஆட்சியையும் வாரிசு அரசியலையும் ஒளித்து வாழ்க்கைக்கு வளமான ஆட்சியாளரைத் தேர்ந்தெடுங்க.



சி படம் பார்க்கணும்ன்னு ரொம்பநாளா ஆசை... ஆனா பார்க்க முடியாமலே போனது... நேற்றுப் பார்க்க முடிந்தது... அருமையான படம்... அதுவும் ஷோபா... அப்பப்பா அந்த மாதிரி நடிக்கிற நடிகை நம்ம காலத்துல இல்லாமப் பொயிட்டாங்களே... குப்பத்துப் பெண்ணாய்... சும்மா மும்பையில அந்தப் பையன் அடித்த ஆயிரம் ரன்னு மாதிரி பத்து மடங்கு புகுந்து விளையாடியிருக்காங்க... என்ன நடிப்பு... என்ன நடிப்பு... அடேங்கப்பா... டெல்லிகணேஷ் குடும்பத்தை பற்றி சிந்திக்காத ஒரு தந்தையாக வருகிறார்... அவரும் நன்றாக நடித்திருக்கிறார். படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் எல்லாருமே அருமையா நடிச்சிருக்காங்க. கமல் ஒரு காட்சியில் வருகிறார். சோகமான முடிவாய் இருந்தாலும் கடைசிக் காட்சியில் திரையில் போடப்படும் வரிகள் அருமை. படம் பார்க்கும் போது நல்ல நடிகை... தேசிய விருது வாங்கியவர்... தற்கொலை செய்து கொண்டு எதற்காக சாகணும்... வாழ்ந்திருக்கலாமே... இன்னும் நிறைய சாதிச்சிருக்கலாமே என்றுதான் தோன்றியது. பாவம் ஷோபா... 


சில தொடர்கள், சில கதைகள் எழுதும் எண்ணம் மேலோங்கியிருக்கிறது. அலுவலக வேலையின் பிடியில் சிக்கி கற்பனைக்கு சிறையிட்டு இருக்க வேண்டியதாகிவிட்டது. அப்படியிருந்தும் 2016 தொடக்கத்தில் எதாவது எழுதணும் என இரண்டு கதைகள் எழுதியாச்சு.. இனி வரும் நாட்களில் நிறைய எழுதணும்... வித்தியாசமான முயற்சியாய் நல்ல தொடர்கள் எழுதணும்... இங்கு இன்னுமொரு காதல் தொடர்கதை ஆரம்பிக்கணும் என்ற ஆசையிருக்கிறது. எண்ணங்கள் ஈடேறும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

ப்படியே ஷோபா நடித்த முள்ளும் மலரும் படத்தில் இருந்து ஒரு பாட்டையும் கேட்டுட்டுப் போங்க...



மனசின் பக்கம் அடுத்த வெள்ளியில் மீண்டும்..
-'பரிவை' சே.குமார்.

20 கருத்துகள்:

  1. டிடி தனது வியாபாரத்தில் கவனமாக இருக்கிறார். பாக்யாவில் தெரிவானதற்கு வாழ்த்துகள். ஷோபாவைப் பிடிக்கும் என்றாலும் பசி பார்க்கும் துணிவு வந்ததில்லை!! 'அடி பெண்ணே' பாடல் எனக்கும் ரொம்பவும் பிடிக்கும்!
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      பசி அந்தளவுக்கு ஒன்றும் பெரிதாய் இல்லை... குப்பத்து வாழ்க்கை, ஆடவனால் ஏமாற்றம், அதனால் வாழ்க்கை இழப்பு இப்படித்தான் போகிறது... ஷோபாவின் நடிப்பு பிரமாதம்...

      தனபாலன் அண்ணா பதிவர் திரட்டி பணியில் இருக்கிறார்... பொங்கலுக்கு பதிவர் திரட்டி வருமென்று சொல்லியிருந்தார்....

      அடிபெண்ணே... கலக்கல் பாடல்... இன்று முள்ளும் மலரும் பிட்டுப்பிட்டாய் பார்த்தேன்...

      பிடிக்காத ரஜினியும் பிடித்தார்... ஷோபா பத்துக் கமலஹாசன்....
      காலம் அழித்துவிட்டதே அந்த அழியாத கோலத்தை...

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. சிந்திக்க ஆரம்பித்தால் "49ஓ"விற்குதான் ஒட்டு விழும். பிறந்த நாள் கொண்டாடும் அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே...
      அதுக்கு ஓட்டிடுவதால் என்ன லாபம்... அப்படிச் சிந்திப்பதே வேஸ்ட்தானே...
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. நன்றி சகோதரரே...

    வருகிறேன் விரைவில் - நல்லதொரு தகவலோடு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      விரைவில் வாங்க... நீங்க இல்லாம பதிவுலகம் டல்லா இருக்கு போங்க...
      திரட்டியோடு வாங்க...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. கதம்பம் நன்று வலைச்சித்தருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  5. பசி படம் சூப்பரா இருக்கும். நிறைய முறை பார்த்திருக்கேன். அடி பெண்ணே! பாட்டு செம சூப்பர். மனசு பாரமா இருக்கும்போது இந்த பாட்டை கேட்டால் லேசாகிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அக்கா....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      பசியில் ஷோபாவுக்கு நடிப்புப் பசி என்னமா நடிச்சிருக்காங்க...

      நீக்கு
  6. உங்க எழுத்துல சினிமா விமர்சனம் படிச்சாலே பாதி படம் பார்த்த திருப்தியும் படம் பார்க்கும் ஆவலையும் உண்டு பண்ணுகிறது குமார்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அக்கா...
      ரொம்பச் சந்தோசம் அக்கா... படத்தோட கதையை பாதி சொல்லிப்புடுறேனோ அக்கா... ஆஹா...

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. என் பிறந்த நாளுக்கு வாழ்த்தியதற்கு ரொம்ப ரொம்ப நன்றீ குமார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அக்கா...
      நாங்க வாழ்த்துச் சொல்லணும்... பெரியவங்க நன்றி எல்லாம் சொல்லக்கூடாது...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  8. ஒட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு போட்டோம் குமார். கமிஷன் சுவிஸ் வங்கியில் கரெக்டாக அனுப்பி வையுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அக்கா....
      ஹையோ எங்க அக்கா ஓட்டுப் போட்டாச்சு... இனி நம்ம பதிவுக்கெல்லாம் ஒரு ஓட்டு கூடுதல்...

      கமிஷந்தானே வேணும்... எங்கம்மா கொடுக்க ஆரம்பிச்சிடாங்க... அனுப்பல்லாம் முடியாது... ஊருக்கு வந்தா ஓட்டுக்கு இவ்வளவுன்னு கொடுத்திருவோம்...

      ஆனா வர்றதுக்கு பிளைட் டிக்கெட் நீங்கதான்... அதை நிர்வாகம் ஏற்காது.

      நீக்கு
  9. திண்டுக்கல தன்பாலன் சாரை சமீபகாலமாக் காணோம் என நானும் யோசித்தேன் குமார். எனது முதல் நான்கைந்து பதிவுகளுக்கு முதல் பின்னூட்டமாய் அவரின் கருத்து நச்சுன்னு இருக்கும். இப்ப அவரை காணோம். நலமாக இருக்கின்றார் என அறிந்ததில் மகிழ்ச்சி.

    தாமதமானாலும் என் வாழ்த்துகளையும் அவருக்கு உங்கள் திரி மூலம் சொல்லி விடுங்கள்.

    பானுவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள், சேனையில் திரி தொடங்கி வாழ்த்த முடியல்ல. நண்பன் தொடங்கி விட்டார். அங்கேயும் வாழ்த்தணும்

    மற்றும் கடந்த, இந்த வாரத்தில் பிறந்த நாள் கொண்டாட இருக்கும் அனைத்து குட்டீஸ் முதல் பெரியவர்களுக்கும் வாழ்த்துகள்.

    முன்னொரு காலத்தில் நானும் பாக்யா வாசகிதான். பாக்யராஜின் கேள்வி பதில்களின் ரசிகை நான். பாக்யா வார இதழ் தொடர்ந்து ஆர்டர் செய்து எடுத்து படிப்போம். இப்போது எல்லாம் விட்டாகி விட்டது.

    பசி படம் நேரம் கிடைத்தால் பார்க்க வேண்டும்.தாவணிக்கனவுகள் பார்த்திருக்கேன்.பாக்கியராஜின் விசிறியாகிட்டீர்கள் குமார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அக்கா...

      தனபாலன் அண்ணா... பதிவர் திரட்டி ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் இருக்கார். அதற்கான பணியில் இருப்பதாகவும் தை முதல்நாள் பதிவர் திரட்டி வரும் என்றும் முகநூலில் சிலர் பகிர்ந்ததையும் அண்ணனின் கருத்தையும் பார்த்தேன். அதைச் சொல்ல வேண்டாம் என்றே சொல்லலை... அண்ணன் நலமே...

      உங்கள் வாழ்த்தை சொல்லிவிடுவோம்.

      பானு அக்காவை சேனையில் வாழ்த்திய நண்பனுக்கும்... உங்கள் வாழ்த்துக்கும் நன்றி.

      எல்லா குட்டீஸ்க்கும் பெரியவர்களுக்கும் உங்கள் வாழ்த்தை சொல்லிடலாம்...

      நான் பாக்யா கேள்வி பதிலுக்கு அடிமை... அதற்காகவே புத்தகம் வாங்கியவன். கல்லூரியில் படிக்கும் போதே படத்துக்கு கவிதை எழுதி பாக்யராஜ் அவர்களால் இரண்டாவது கவிதையாக தேர்ந்தெடுக்கப்பட்டவன்.

      அதற்கு முன்னே அவரின் படங்களின் தீவிர ரசிகன்... அவர் போட்டோக்களை வாங்கிச் சேகரித்தவன்... அப்புறம் முதல் நாள் தூறல் நின்னு போச்சு படம் பார்த்து... மறுநாள் பள்ளியில் நண்பன் தள்ளிவிட்டு கை ஒடிய, அம்மாவோ படம் பார்த்துட்டு அதுல வர்ற மாதிரி சண்டை (?) போட்டிருப்பாய் என்று அடித்து உதைத்தது வேறு கதை... காலை 8.30க்கு கட்டுக்கட்ட பஸ்ஸில் குன்றக்குடி செல்ல வேண்டும்.. எங்க ஊரில் இருந்து பக்கத்தில் இருக்கும் கண்டதேவிக்கு குறுக்குப் பாதையில் நடந்து வரவேண்டும். அதை விட்டால் ஒரு மணி நேரமாகும். அப்போத்தான் பாழாப்போன ரேடியோவில் தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளியோ, ஏஞ்சோக கதையைக் கேளு தாய்க்குலமேயோ அல்லது ஏரிக்கரை பூங்காற்றோ போடுவான்... இரும்மா போகலாம் என பாட்டைக் கேட்டு அம்மாவிடம் பாட்டு வாங்கியவன்... அப்படியாக பாக்யராஜ் ரசிகனாய் இப்ப இல்லை சின்ன வயதில் இருந்தே இருப்பவன்... அவரின் திரைக்கதை, அதைக் கொண்டு செல்லும் விதம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதையெல்லாம் என்னோட பழைய பதிவில் சொல்லியிருக்கேன்...

      தாவணிக்கனவுகள் பார்க்கணுமின்னு ரொம்ப நாள் ஆசை... இந்த வாரம் நிறைவேறியது.

      பசி பாருங்கள்... ஷோபாவை ரொம்பப் பிடிக்கும்... முள்ளும் மலரும் கூட இன்று என்னைப் பார்க்க வைத்தார் ஷோபா...

      தங்களின் நீண்ட கருத்துக்கு நன்றி அக்கா...

      நீக்கு
  10. நண்பர் தனபாலன் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்......

    ஷோபா.... - எனக்கும் பிடித்த நடிகை. முடிவு தான் சோகமானது.

    அரசியல் - எதைக் கொடுத்தாலும் வேண்டாமெனச் சொல்லாது வாங்கிக் கொள்ளுங்கள்.... சிந்தித்து வாக்கு அளியுங்கள். அதே தான்! ஆனால் யாருக்கு?

    பதிலளிநீக்கு
  11. டிடிக்கு வாழ்த்துகள்!!!அவரு கொஞ்சம் பிசினசில் பிசியாகவும் இப்போது திரட்டியில் பிசியாகவும் இருக்கிறார்..ஆம்!

    பசி அப்போதே பார்த்தாச்சு. அருமையான படம். ஷோபா அசாத்திய நடிப்பு. அச்சய்மம்தான் ஷோபா இறந்த சமயமும் என்று நினைவு. அப்போது பசி பார்த்து மனம் அப்படியே கனத்துவிட்டது. இப்போது நாங்கள் பார்த்தால் ஒரு வேளை அவ்வளவாக இருக்காதோ என்னவோ....வயதும் அனுபவங்களும் காரணமாக இருக்கலாம்.

    அடி பெண்ணே பாடல் அருமையான பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    கீதா : சென்னையில் இன்டெர்நாஷனல் ஃபில்ம் ஃபெஸ்டிவல் அதற்குப் போய் வருவதால் கொஞ்சம் இணையத்தில் வருவது கொஞ்சம் தாமதம்...

    அரசியல் ஹஹஹ சரிதான்!!!

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி