தொடர்பதிவுகள் முடிவதில்லை என்பது போல் கடவுளைக் கண்டு கேட்ட கேள்விகள் இன்னும் முடியாதபட்சத்தில் இப்போ பயணங்கள் முடிவதில்லை எனும் தலைப்பில் சகோதரி மகிழ்நிறை மைதிலி ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். இது நம்ம பக்கமெல்லாம் வராது... புதுக்கோட்டைப் பக்கமாத்தான் சுத்தும்ன்னு நினைச்சேன்... ஆனா சகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ்கிட்ட நம்ம ஆல்ப்ஸ் தென்றல் நிஷா அக்கா மாட்டிக்கிட்டதும் இல்லாம நம்மளையும் மாட்டிவிட்டுட்டாங்க... சரி அழைத்தாச்சு... எழுதுறதுதான் மரியாதை... அப்படியே நமக்கும் ஒரு பதிவு தேறும்... அதுபோக நாம ரெண்டு அப்பாவிகளை மாட்டிவிடலாமே... சரி வாங்க ஒரு ரவுண்ட் போகலாம்...
1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?
நாம இருந்தது தமிழகத்தின் கடைக்கோடியில்... கல்லூரி, பல்கலைக்கழகம், பின்னர் தேவகோட்டை கல்லூரியில் பணி என என் வாழ்க்கை வயலோடும் வரப்போடுமே திருமணம் வரை பயணித்தது. எங்கு சென்றாலும் பேருந்துப் பயணமே... ரயில் பயணம் என்பது திருமணத்திற்குப் பின்னர்தான். முதல் பயணம் சென்னையில் இருந்து டெல்லிக்கு என்னோட சான்றிதழ்களில் அமீரக தூதரகத்தில் கையெழுத்துப் பெறுவதற்காக மனைவியின் மாமா மற்றும் உறவினர் பையனுடன் போனேன். மிகவும் அருமையானதொரு பயணம்... ஒரு ராணுவ வீரரின் குடும்பத்துடன் பேசியபடி பயணித்தோம். இரண்டு நாட்கள் பயணம்... சந்தோஷமான பயணம்.
2.மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?
மறக்கமுடியாத பயணம்ன்னா நிறைய இருக்கு... ஒவ்வொன்னாப் பார்ப்போமே... ரயிலில் என்றால் சென்னையில் இருந்து மதுரை, திருச்சிக்கு சென்ற பயணங்கள்... அதிலும் குறிப்பாக நான், மனைவி, என் மகள் ஸ்ருதி என மூவரும் பயணித்த பயணங்கள்... ஸ்ருதிக்கு சன்னல் வழியே செழிப்பான, விளைந்து நின்ற வயல்களைக் காட்டியபடி பயணித்தது மறக்க முடியாதது.
பேருந்தில் என்றால் எம்.சி.ஏ., பண்ணும் போது காரைக்குடியில் இருந்து என்.என்.எல் பேருந்தில் பயணித்த தினங்கள்... பிடித்த பாடல்கள்... எங்களது நட்புக்கூட்டம், கண்டக்டருடன் அரட்டை, எங்களுக்காக பேருந்தை நிறுத்தி வைத்து ஏற்றி வருவது என அது ஒரு சந்தோஷமான பயண அனுபவம்தான் போங்கள்.
வேனிலோ காரிலோ என்றால் அம்மா, அப்பா, அக்காக்கள், அண்ணன்கள், தம்பி என எங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் அழகர் கோவில் சென்று அப்படியே மீனாட்சியை தரிசித்து வரும் அந்த நாட்கள் என்றுமே மகிழ்ச்சியான நாட்களே... அப்படி ஒரு பயணம் சென்ற முறை அழகர்கோவிலுக்கு ஏற்பாடாகி பின்னர் சிலகாரணங்களால் முடியாமல் போக பின்னர் திருச்செந்தூருக்கு அதேபோல் ஒரு பயணம் அமைந்தது. இப்ப இருக்கும் குடும்ப பிரச்சினைகளில் இனி அது போன்றதொரு பயணம் அமையுமா என்று தெரியவில்லை... ஆனால் அந்தப் பயணம்தான் எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியான பயணம்.
பைக்கில் என்றால் எங்கள் கணிப்பொறி மையம் பள்ளிகளில் வகுப்பெடுக்கும் போது கிட்டத்தட்ட 20, 25 கிலோ மீட்டரில் இருக்கும் கிராமத்துப் பள்ளிகளுக்கு நானும் என் நண்பன் முருகனும் ஆளுக்கொரு வண்டியிலோ அல்லது ஒரே வண்டியிலோ முன்னால் கணிப்பொறி மற்றும் கீபோர்டை வைத்து ஓட்ட பின்னால் ஒருவர் சிபியூ பிடித்திருக்க பயணிப்போம். அந்தப் பயணம் கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கும்.
சைக்கிளில் என்றால் கல்லூரி படிக்கும் போது நாங்கள் பத்துபேர் ஒரு குழுவாய் இருப்போம்... நல்ல நட்பு வட்டம்... கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு தேவகோட்டையில் இருந்து பிள்ளையார்பட்டிக்கு சைக்கிளில் சென்றோம். அது மிகவும் இனிமையான பயணம்.. கல்லூரி வாழ்க்கையை நினைத்தால் மனசுக்குள் நவநீ, ஆதி, திருநா, ராம்கி, பிரான்சிஸ், முத்தரசு, அண்ணாத்துரை, சேவியர் என எல்லாரும் வந்து செல்லும்போது இந்த சைக்கிள் பயணமும் வந்து மலர்ச்சியை மனதில் புகுத்திச் செல்லும். அதேபோல் தினமும் தேவகோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து நண்பர்களுடன் நானும் ராம்கியும் மட்டும் சைக்கிளை மெதுவாக ஓட்ட மற்றவர்கள் நடந்துவர பயணித்த மூன்று வருடங்கள் மறக்கமுடியாதது.
நடைப்பயணம் என்றால் பழனிக்கு நடந்த அந்த ஆறு ஆண்டுகள், சபரிமலை சென்ற நான்கு ஆண்டுகள், திருப்பரங்குன்றம் சென்ற பயணம் மறக்க முடியாதது.
3. எப்படி பயணிக்கப் பிடிக்கும்?
நமக்கு பேருந்துப் பயணத்திலே அலாதி இன்பம்... அதுவும் பின்புற வழிக்கு முன் இருக்கையோ அல்லது பின் இருக்கையோதான் என்னோட தேர்வு. காற்றும் வேண்டும் அதே நேரம் வேடிக்கை பார்த்தபடி பயணிக்க வேண்டும் எனவே சன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணிக்கவே பிடிக்கும். பேருந்தில் நின்று கொண்டோ அல்லது படியில் தொங்கிக் கொண்டோ பயணிக்கப் பிடிப்பதில்லை.
4.பயணத்தில் கேட்க விரும்பும் இசை?
ராசாதான்..... 80, 90களில் ராசாவின் ஆதிக்கம் மேலோங்கிய பாடல்கள்தான் ரொம்பப் பிடிக்கும். அதுவும் மனநிலையைப் பொறுத்து மெலோடியோ அடிப்பாடலோ கேட்கத் தோன்றும். ராமராஜனின் பாடல்கள் எல்லாம் விருப்பம்... வேனில் பயணித்தால் நான் தேடித்தேடி பதிந்து வைத்திருக்கும் கேஸெட்டுக்களை அள்ளிக் கொண்டு போய்விடுவேன். அதுதான் காலை முதல் இரவு திரும்பும் வரை.... இப்பவும் எனக்கு ராசா பாடல்களே...
5.விருப்பமான பயண நேரம்?
அப்படியெல்லாம் எதுவும் இல்லை... எப்பக் கிளம்ப வேண்டும் என்றாலும் ரெடிதான்.. இந்த நேரத்தில்தான் பயணிக்கனும் என்று எண்ணுவதில்லை.
6. விருப்பமான பயணத்துணை?
படிக்கும் காலத்தில் ஏதாவது வார, மாத இதழ்கள். இப்போ பெரும்பாலும் மொபைலில் சேமித்து வைத்திரும் பாடல்கள்.
7. பயணத்தில் படிக்க விரும்பும் புத்தகம்?
பயணத்துக்கு என தனி புத்தகம் எல்லாம் எடுப்பதில்லை... பெரும்பாலும் வார மாத இதழ்கள்தான்.
8. விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?
மழையில் நனைந்தபடி சைக்கிளில் அல்லது வண்டியில் பயணிப்பது.... அதுவும் மழை அடித்துப் பெய்யும் போது முழுக்க நனைந்தபடி முகத்தில் சுளீரென பட்டுத் தெறிக்கும் மழையை ரசித்தபடி பயணிப்பதே எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?
அப்படியெல்லாம் எதுவுமில்லை... கேட்க்கும் பாடல் வரியும் வார்த்தையும் மாறாமல் அப்படியே முணுமுணுப்பேன்... அதே ராகத்திலும். அது இப்பவும் உண்டு. அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது காதில் நுழையும் பாடல் வாய் வழியாக வெளியே வந்து கொண்டுதான் இருக்கும். சில நேரங்களில் பிடித்த பாடலென்றால் சத்தமாகவும் வரும்.
10. கனவுப் பயணம் ஏதாவது ?
கனவுப் பயணம் என்றெல்லாம் எதுவும் இல்லை... நிறையக் கனவுகளைக் செயலாக்க நினைத்து இன்னும் ஏமாற்றத்தில்தான் இருக்கு. அதனால் கனவுப் பயணம் என்றெல்லாம் எதுவும் இல்லை. மனைவி, குழந்தைகளுடன் எங்காவது பயணிக்க வேண்டும்.
(மழையும் சரிதாவும் பிடிக்கும் என்பதால் இந்தப்பாடல்)
சரி.. நம்ம பயணம் முடிவுக்கு வந்தாச்சு... அடுத்த டிரைவரை மாற்றி விட்டுட்டு நாம இறங்கணும்.. அப்படி மாட்டபோற ரெண்டு பேரு... ம்... கில்லர்ஜி அண்ணாவை மாட்டலாம் என்றால் நிஷா அக்கா முந்திக்கிட்டாங்க... அதனால நாம மாட்டிவிட்டா ஏன் எதுக்கு என்று கேட்காமல் நாலு மாசம் ஆனாலும் எப்படியும் எழுதி முடிக்கும் என் அன்பு அண்ணன்கள் குடந்தையூர் ஆர்.வி. சரவணன் அவர்களையும் சந்தித்ததும் சிந்தித்ததும் வெங்கட் நாகராஜ் அவர்களையும் மேடைக்கு அழைக்கிறேன். இருவரும் நேரம் கிடைக்கும் போது மெதுவாக என்னைத் திட்டாமல் (திட்டமாட்டாங்க) எழுதுங்கள் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
இதுல என்ன விஷேசம்ன்னா நான் சொல்லியிருக்கும் இருவருக்குமே பயணம் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதனால் இருவரின் பகிர்வும் பக்காவாக இருக்கும் என்பதை இங்கு சொல்வதில் சந்தோஷப்படுகிறேன்.
-'பரிவை' சே.குமார்.
சுவாரஸ்ய அனுபவங்கள்தான்.
பதிலளிநீக்குதம +1
வாங்க அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உண்மைதான் நண்பரே. எழுதுவதை நிறுத்தி விடலாம் அல்லது குறைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் வேளையில் யாரேனும் ஒருவர் தொடர்பதிவில் இழுத்து விடுகிறார்கள். அப்புறம் எழுதுவது தொடர்கதை ஆகி விடுகிறது..
பதிலளிநீக்குஉங்களைப் போலவேதான் நானும், பின்புற வழிக்கு முன் இருக்கையோ அல்லது பின் இருக்கைக்கு முன் உள்ள ஜன்னல் ஓர இருக்கையோதான் என்னுடைய விருப்பமும். எல்லாவற்றையும் உங்களுக்கே உரிய எளீமையான நடையில் சுவாரஸ்யமாக சொன்னதற்கு நன்றி.
வாங்க ஐயா....
நீக்குஎழுதுவதை குறைத்துக் கொள்ளலாமே தவிர நிறுத்தி எல்லாம் விட வேண்டாம் ஐயா...
எனது ரசனை தங்கள் ரசனையோடு ஒத்துப் போவதில் மகிழ்ச்சி.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கணினியோடு பயணம் ரொம்பவே வித்தியாசம்...
பதிலளிநீக்குவாங்க அண்ணா...
நீக்குஆம் அண்ணா... தொடர்ந்து நான்கைந்து ஆண்டுகள் இப்படித்தான்...
25 கிலோ, 50 கிலோ அரிசி மூடையை முன்னால் வைத்து எவ்வளவு தூரம் என்றாலும் ஓட்டிக் கொண்டு போய் விடுவேன்....
அதனால் கணிப்பொறி ரொம்ப கஷ்டப்படுத்துவதில்லை...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பயணங்கள் எப்போதுமே சுவாரஸ்யம் தான் இல்லையா...நன்றாக இருந்தது உங்கள் அனுபவங்கள் சகோ
பதிலளிநீக்குதம + 1
வாங்க அக்கா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பயணம் சுகமாக இருந்தது.
பதிலளிநீக்குவாங்க நண்பரே...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அழைப்பிற்கு நன்றி குமார். ஏற்கனவே கிரேஸ்-உம் அழைத்திருக்கிறார். நாளையே என் பதிவு வெளி வரும்.....
பதிலளிநீக்குஅருமையான நினைவுகளைச் சொல்லி இருக்கிறீர்கள். பகிர்ந்த பாடலும் நன்று. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
வாங்க அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
>>> மழையும் சரிதாவும் பிடிக்கும் என்பதால் .. <<<
பதிலளிநீக்குஇது மழைக்குத் தெரியுமா!..
வாங்க ஐயா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நான் இது மனைவிக்குத் தெரியுமான்னு படிச்சி அப்படியே ஷாக் ஆயிட்டேன் ஐயா...
மழைக்கு எனக்கு அனுஷ்காவும் மழையும் பிடிக்கும் என்றுதான் தெரியும்... ஹி...ஹி...
பயணத்தில் இணைத்தமைக்கு மிக்க நன்றி அண்ணா! மாலையில் படித்துவிட்டு மீதி கருத்துக்களை கூறுகிறேன்.
பதிலளிநீக்குவாங்க சகோதரி...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பாட்டு சூப்பர், கம்யூட்டருடனான பயணம் இன்னும் சூப்பர்.
பதிலளிநீக்குமுதல் ரயில் பயணம்? அப்புறம் பிரெண்ஸுடன் ஜாலி டிரிப் ...ஸ்ருதியோட ஸூப்பர் ட்ரிப். ஆன்மீக ட்ரிப் என மொத்தமாக கொண்டு வந்து முடித்து விட்டீர்கள் குமார். அழைப்பை ஏற்று பதில் தந்ததூக்கு நன்றி.
தொடர் பதிவுக்கு அழைத்தவரை திட்டும் பதிவு அடுத்ததுன்னு பட்சி வந்து ஓதியதே. அப்படின்னால் என்னை திட்டாதிங்க.மீ பாவம். நான் ஏதும் அறியாத அப்பாவி!
மைதிலியையும் கிரேஸையும் நல்லா திட்டு திட்டின்னு திட்டுங்கோ@!அவங்க தான் என்னை மாட்டி வைத்தார்கள்.
அப்பாடா குமாரை போட்டுக்கொடுக்கும் வேண்டுதல் நிறைவேறியது.
வாங்க அக்கா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஹா..ஹா... இனி வாரம் ஒரு பிரச்சினையான பதிவுதான்...
நாமெல்லாம் சேனையில் அடிச்சிக்கிட்டு நாறணும்...
ஏதோ பெரிய திட்டம் போலவே! நான் எஸ்கேப். அதேன் நாறணும் எனும் வார்த்தைப்பிரயோகம் மணக்கணும் என சொல்லுங்க , பூவோரு சேர்ந்து நாரும் மணக்குமாக்கும். நிஷாவோடு சேர்ந்து விவாதமும் களை கட்டும்.
நீக்குபதிவை சுவாரஸ்யமாக கொண்டு சென்றீர்கள் நண்பரே வாழ்த்துகள் பயணம் பிடிக்காத மனிதர்கள் குறைவென்றே தோன்றுகிறது நானும் குழம்பித்தான் இருக்கின்றேன் மாட்டிக் கொண்டோமே என்ன எழுதுவதென்று ? பார்க்KALAM
பதிலளிநீக்குதமிழ் மணம் 8
வாங்க அண்ணா...
நீக்குவிரைவில் எழுதுங்க... ஆவலாய்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பயணங்கள் என்றுமே இனிமையானவை
பதிலளிநீக்குஅருமை நண்பரே
வாங்க ஐயா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்கள் பயண ஏக்கங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவாங்க சகோதரி...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குசொல்லிய ஒவ்வொரு அனுபவங்களும் மிக அருமையாக உள்ளது..தொடருகிறேன். த.ம9
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன்...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சில பதில்கள் கவிதைக்கும் கதைக்குமான களங்களாகத் தெரிகின்றன பரிவையாரே!
பதிலளிநீக்குஉங்கள் எழுத்து உள்ளீர்க்கிறது.
தொடர்கிறேன்.
த ம 11
வாங்க ஐயா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆஹா... இதை நான் கவனிக்கலையெ... அப்ப கதை எழுதிடலாம்..
பயணம் பற்றிய பயணம் அருமை!
பதிலளிநீக்குவாங்க சகோதரரே...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
**். இது நம்ம பக்கமெல்லாம் வராது... புதுக்கோட்டைப் பக்கமாத்தான் சுத்தும்ன்னு நினைச்சேன்** ஹாஹ்ஹா ...அதற்காகத்தானே நிலவன் அண்ணாவை தவிர வேறுஎந்த புதுகைகாரர்களையும் அழைக்கவில்லை. பகவான்ஜி சார் வழி கில்லர்ஜி வந்து, பின் உங்கள் கைக்கு வரும் என கணக்கிட்டேன்:)
பதிலளிநீக்குவிஜூ அண்ணா சொன்னது போல ஒவ்வொரு விடையும் ஒவ்வொரு சிறுகதை போல அத்தனை சுவை.
இந்த மழைக்காலம் முழுக்க பல நாள் மாலை சொல்லிவைத்தது போல பள்ளி மணி அடித்தவுடனே மழை பெய்தது. மற்ற ஆசிரியர்கள் மழைவிடும் வரை காத்திருந்தாலும் நானும் என் ஸ்கூட்டியும் இது தான் சாக்கென்று ஆசை தீர மழையில் நனைந்து தீர்த்தோம்.
பெரும்பாலும் ஒத்தரசனை அண்ணா! சூப்பர்! சூப்பர்!
வாங்க சகோதரி...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அதுசரி... நிலவன் ஐயாவை அழைத்தால்தான் போதுமே... பெரும்பாலும் புதுகைப்பக்கமா சுற்றுவதற்கு... :)
ஆஹா.... நீங்க சுற்றுப் பாதையை நினைத்திருக்கிறீர்கள்... அங்கெல்லாம் போகாமல் என்னை ஹைவே மூலமாக அடைந்துவிட்டது போலும்...
அப்ப கதைகள் எழுதலாம்....
ஆம்... எனக்கு மழையில் நனைய ஆசை அதிகம்... இங்கு மழையே பெய்வதில்லை... :(
நம் ரசனைகள் ஒத்துப் போவதில் மிக்க மகிழ்ச்சி.
நீங்கள் கேட்டவாறே, இன்று என் வலைத்தளத்தில்....
பதிலளிநீக்குஆதலினால் பயணம் செய்வீர் - தொடர்பதிவு.
தகவலுக்காக!
வாங்க அண்ணா...
நீக்குநான் பார்த்துவிட்டேன்.
நன்றி.
அட! அழகான சுவாரஸ்யமான உங்கள் பயணங்கள் குறித்த பதிவு...நாங்களும் ட்ராக்கில் இருந்ததால உங்கள் பதிவைப் படிக்கவில்லை. இப்போது பதிந்துவிட்டதால் உங்கள் பதிவைப் படித்தோம்...சூப்பர்!
பதிலளிநீக்கு