ஆரம்பிக்கிறது மழை...
நனைந்து கொண்டே
நடக்கிறேன்...
விண்ணில் இருந்து
விழும் துளிகளெல்லாம்
என்னில் புதைந்திருக்கும்
காதல் நினைவுகளைப்
பூக்க வைக்கின்றன...
எனக்கோ மழை
மண்ணில் விழுமுன்
என்மேல் விழப்பிடிக்கும்
உனக்கோ மண்மீது
விழும் மழைத்துளி
உன் மீது விழப்பிடிக்காது...
பலமுறை
மழையே நம்
ஊடலின் காரணியாய்
இருந்திருக்கிறது..
சிலமுறை அதுவே
கூடலின் காரணியாகவும்...
என்னைப் போல்
பலர் நனைகிறார்கள்...
உன்னைப் போல்
சிலர் ஒதுங்குகிறார்கள்...
நனையாதேவென
எனக்குள் நீ
கத்திக் கொண்டே
இருக்கிறாய்...
நான் மனிதர்களை
மழையோடு கடக்கிறேன்...
மழை என்னை
மனிதர்களோடு கடக்கிறது...
மழையில் பூத்த
நினைவுச் சாரலோடு
சிரித்துக் கொண்டே
நனைகிறேன்...
ரசித்துக் கொண்டே
நடக்கிறேன்...
சில்லென்ற மழைநீர்
முகத்தில் பட்டு
தெறிக்கும் போது
நம்மின் காதல் காலச்
சந்தோஷங்களும்
சேர்ந்தே தெறிக்கின்றன...
நின்று நனைய ஆசை
நிறைய இருக்கிறது...
நீ விரும்பமாட்டாய்
என்பதால்...
நனைந்தபடி விரைகிறேன்
ஓட்டமும் நடையுமாய்...
எப்படியும் நனைந்து
வருவானென எனக்காய்
செல்லக் கோபத்தோடும்...
துப்பட்டாவோடும்
நனைந்தும் நனையாமலும்
வாசலில் காத்திருப்பாள்
என் காதல் மனைவி...
நினைப்பின் சிலிர்ப்போடு
மழையைக் கடக்கிறேன்...
-'பரிவை' சே.குமார்.
>>> நின்று நனைய ஆசை
பதிலளிநீக்குநிறைய இருக்கிறது..<<<
மழை போலவே அழகான கவிதை..
வாங்க ஐயா...
நீக்குஎனக்கும் மழையில் நனைய ரொம்ப ஆசைதான்... இங்கு மழையே இல்லையே..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மழை கவிதை அருமை குமார். தங்களுக்கு திருக்கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள் !!
பதிலளிநீக்குவாங்க அம்மா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள் அம்மா...
மழைச்சாரலின் குளுமை கவிதையில்! மிக அருமை!
பதிலளிநீக்குவாங்க அம்மா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அருமையாக இருக்கு கவிதை,,,,
பதிலளிநீக்குவாங்க சகோதரி...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சரியான காலத்தில் மழை பெய்யாமல், உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடிய வல்லமை படைத்த மழையே... சரியாக பெய்வதன் காரணமாக உயிர்களுக்கு வாழ்வைக் கொடுத்து, காக்கும் வல்லமை படைத்ததும் நீயே...
பதிலளிநீக்குஇணைப்பு : →அனைவரும் இங்கு சரிசமமென உணர்த்திடும் மழையே...!←
வாங்க அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அருமை நண்பரே நானும் கவிதை மழையில் நனைந்தேன்.... வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதமிழ் மணம் 3
வாங்க அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பலமுறை
பதிலளிநீக்குமழையே நம்
ஊடலின் காரணியாய்
இருந்திருக்கிறது..
சிலமுறை அதுவே
கூடலின் காரணியாகவும்...///
சில்லென்ற மழைநீர்
முகத்தில் பட்டு
தெறிக்கும் போது
நம்மின் காதல் காலச்
சந்தோஷங்களும்
சேர்ந்தே தெறிக்கின்றன...//
அருமை குமார்!
வாங்க துளசி சார்...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மழைக்குள் நீங்களும் நனைந்தாகி விட்டதா? அருமை!
பதிலளிநீக்குவாங்க அக்கா...
நீக்குமழையில் நனையிறதுன்னா எமக்கு ரொம்ப இஷ்டம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மழை கவிதை மிக அருமை. எனக்கும் மழையில் நனைய பிடிக்கும் சிறுவயதில். இப்போதும் பிடிக்கும் வீட்டில் எல்லோரும் திட்டுவார்கள்.
பதிலளிநீக்குமழையில் நனைவதும் இன்பம்தானே
பதிலளிநீக்குஅருமை
தம +1
மழைசொல்லும் கவிதை
பதிலளிநீக்குபிழையெல்லாம்
நம்மீது வைத்து
கேட்கும் கேள்விகளுக்கு
பதில் யார்
சொல்வது....
சுந்தரமான கவிதை....
வாழ்த்துக்கள்
அப்பா. மழையைக்கொண்டாடியாற்று....
பதிலளிநீக்குகவிஞர் கூட்டங்கள்..
அடுத்த பக்கம் பார்வையை
திருப்பலாம்.
உங்கள் கவிதையின் சாரல்
இங்குவரை அடிக்கிறது...
அருமை
அப்பா. மழையைக்கொண்டாடியாற்று....
பதிலளிநீக்குகவிஞர் கூட்டங்கள்..
அடுத்த பக்கம் பார்வையை
திருப்பலாம்.
உங்கள் கவிதையின் சாரல்
இங்குவரை அடிக்கிறது...
அருமை