சுற்றிலும் உறவுகள்...
கதறியழும் மனைவி...
காலருகே மகள்கள்...
தலையருகே மருமகள்கள்...
சோகமாய் மகன்கள்...
துக்கத்தோடு மருமகன்கள்...
பச்சை கொண்டு
பரபரப்பாய்
திரியும் சம்பந்திகள்...
நட்பும்... சுற்றமும்...
நாலா பக்கமும்...
சாரயம் கொடுத்த
ஊக்கத்தில்
துள்ளி அடிக்கும்
தப்பாட்டக்காரர்கள்...
வெட்டி வந்த
கம்பில் பாடை
கட்டும் சோனையன்...
சுடுகாட்டில்
குழி வெட்டப்
போனவர்களோடு
கூடப் போன
நாகப்பன்...
எட்டி நின்று
எல்லா பார்க்கிறேன்...
அவர்களின் வலி
கஷ்டப்படுத்தியது...
பாடி எப்ப எடுக்கிறது
கேள்விக்கான பதிலாய்..
ராத்திரி ஆனது...
வாசம் வந்திரும்...
பாடியை சீக்கிரம்
எடுத்திடலாம்...
பெரியவன்
சொன்னபோது...
நீர்மாலைக்கு
ஏற்பாடு பண்ணச்
சொல்லுங்கப்பா...
யாரோ சொல்ல...
நேற்று வரை
அப்பாவாய்
இதோ இப்போது
பாடி ஆகிவிட்டேன்...
ஆம்...
இறந்த பின்
சொந்தங்களைத் தேடிய
என் ஆன்மா
வலியோடு இறந்தது....
-'பரிவை' சே.குமார்.
படிக்கும் பொழுது எனக்கும் வலித்தது நண்பரே அருமை எல்லோரும் நாளை சந்திக்கும் தருணங்களே...
பதிலளிநீக்குவாங்க அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மீண்டும் வலி...?
பதிலளிநீக்குவாங்க அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நல்ல கவிதை,வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇருக்கும் போது தேடும் சொந்தங்கள் வருவதில்லை,
கல்யாணம் என்றால் பத்திரிக்கை வைக்க வருகிறார்கள்.
நெருக்கம் என்பது சொந்தங்களிடையே மிகவும்
குறைந்து வருகிறதுதான்/
வாங்க அண்ணா...
நீக்குதங்கள் வருகை... ரொம்பச் சந்தோஷம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
படிக்கும்போது மனது வலித்தாலும் இதுதானே நிதர்சனம் :(
பதிலளிநீக்குவாங்க சகோதரி...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வித்தியாசமான சிந்தனை. ஆனாலும் அனைவரும் எதிர்கொள்வதே.
பதிலளிநீக்குவாங்க ஐயா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அனைவரும் ஒரு நாள் சந்தித்துதானே ஆகவேண்டும் இந்நிலையை
பதிலளிநீக்குவாங்க ஐயா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தம +1
பதிலளிநீக்குவாக்களித்தமைக்கு நன்றி ஐயா...
நீக்குகாயத்தில் காற்றுள்ளவரைதான் பெயர் போனபின் அது வெறும் கட்டைதான்! உலக நடப்பை வலியோடு சொன்ன கவிதை! அருமை!
பதிலளிநீக்குவாங்க சகோதரா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குநிச்சயம் ஒருநாள் ...போகத்தான் வேண்டும்..த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன்...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இறந்தவன் மீண்டும் இறந்தேன்!
பதிலளிநீக்குதலைப்பூ வலிக்கின்றது! மகன், சகோதரன், அப்பா, சித்தப்பா பெரியப்பா தாத்தாவெல்லாம் உயிர் போனபின் பாடியும் பிணமும் ஆவதேன் என நானும் பல முறை யோசித்திருக்கின்றேன் குமார்.
நீங்கள் அதையே கவிதையாக்கி விட்டீர்கள். அனைவரும் சமம் என்பது இந்த விடயத்திலாவது ஒன்றாகின்றதே... மரணத்தின் பின் ஆன்மா சொந்தங்களை தேடி அழுமோ?
வாங்க அக்கா..
நீக்குகண்டிப்பாக சொந்தங்களைத் தேடி அழ மட்டும் செய்யாது... அலையவும் செய்யும்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ரொம்பக் கஷ்டமா இருக்கு சகோ.. ஆன்மா இப்படித்தான் துடிக்குமோ? உடையார் நாவலில் இவ்வாறு படித்திருக்கிறேன்..
பதிலளிநீக்குநல்ல கவிதை சகோ
வாங்க சகோதரி...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நன்றாக இருக்கின்றது. நன்றி
பதிலளிநீக்குவாங்க திரு. கண்ணன்...
நீக்குதங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
படிக்கவே கஷ்டமாய் இருக்கிறது ஆனால் நடக்கும் உண்மையை சொல்லும் கவிதை.
பதிலளிநீக்குவாங்க அம்மா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உண்மைதான்! இன்றுவரை பெயருடன், உறவுடன் இருப்பவர் இறந்ததும் பிணம், பாடி என்ற சொற்களுக்குள் புகுத்தப்படுகின்றார். வலிதான்...அருமை..
பதிலளிநீக்குகீதா: எனது பழக்கம் இது. ஒருவர் இறந்த பின்னும் கூட நான் பாடி என்றோ பிணம் என்றோ சொல்லுவதில்லை. பெயர் சொல்லி இல்லை உறவைச் சொல்லி எல்லை படர்க்கையில் சொல்லித்தான் கேட்பதுண்டு...பாடி எப்ப எடுக்கறீங்க என்றெல்லாம் கேட்பதில்லை...பெயரைச் சொல்லி, இல்லை உறவைச் சொல்லித்தான் கேட்பதுண்டு...அதுவும் "எடுக்க" என்ற வார்த்தைகளும் இல்லாமல் பேசுவது பலருக்கும் புரிவதில்லை..ஆனாலும் நான் இந்தப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவும் இல்லை ...
வாங்க துளசி சார்...
நீக்குஅது ஒரு வலிதானே..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க கீதா மேடம்...
தாங்கள் சொல்வது போல் சிலர் இருக்கிறார்கள்... நல்ல பழக்கம் அதை மாற்ற வேண்டியது இல்லை...
ஆனால் பெரும்பாலும் பாடி என்றுதானே சொல்கிறார்கள்...