அது நடந்திருக்கக் கூடாதுதான்
ஆனால் நடந்துவிட்டது...
தொடரும் முயற்சிகள் எல்லாமே
தோல்வியின் பிடியில்...
அப்படியிருந்தும் துவளவில்லை
முயற்சிகளின் எண்ணிக்கை
கூடிக்கொண்டேதான் இருந்தது...
இருப்பினும் மனதில் மட்டும்
அது நடந்திருக்க கூடாதென்ற
எண்ணம் வட்டமிட்டுக்
கொண்டுதானிருந்தது...
மீண்டும் மீண்டும் எகிறினாலும்
ஏனோ எட்டமுடியவில்லை...
மற்றவர்களின் கிண்டல்களை
மனதுக்குள் செல்ல விடவில்லை
முயற்சியின் வேகம்...
'முயன்றால் முடியும்...' என்ற
தாயின் கூவல் இன்னும்
உத்வேகத்தைக் கொடுத்தது...
முயற்சிகள் எல்லாம்
முடிவில் பூஜ்ஜியமாய்...
விடாது தொடரும்
முயற்சிக்கு இறுதியில்
வெற்றி கிடைக்கலாம்...
எதிர்மறையாகும் போது
பரிதவிக்கும் தாயின் கரம்
எளிதாக தூக்கியும் விடலாம்...
எது எப்படியோ...
வீழும் போதெல்லாம்
விரிக்கும் சிறகுகளில்
விண்ணைத் தொடும் வேகம்...
வெற்றியைச் சுவைக்கும்
வேகத்தில் சிறகை விரித்தது
தவறுதலாய் குழிக்குள்
விழுந்த கோழிக்குஞ்சு..!
-'பரிவை' சே.குமார்
அருமை! மிக அருமை சகோதரரே!
பதிலளிநீக்குமுயற்சி திருவினையாக்கும்!
முயற்சியே உயற்சிதரும்!
உங்கள் முயற்சியும் அபாரம்!
மனம் தொட்ட கவிதை! வாழ்த்துக்கள் சகோ!
த ம 2
அருமை. இரண்டு நாட்களுக்குமுன் கிணற்றுக்குள் விழுந்த யானைக்குட்டி ஒன்றை மீட்டதைத் தொலைக்காட்சியில் காட்டினார்கள். அது நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்குகவிதை
பதிலளிநீக்குசின்ன சிறகுகளை விரித்து
வானில் பறக்கிறது
வேறெங்கும் விழுந்துவிடவில்லை
தொடர்க
கோழிக்குஞ்சுகளுக்கு மட்டுமல்ல. நமக்கும் பொருந்தும். நன்றி.
பதிலளிநீக்குஎது எப்படியோ...
பதிலளிநீக்குவீழும் போதெல்லாம்
விரிக்கும் சிறகுகளில்
விண்ணைத் தொடும் வேகம்...
அருமை நண்பரே
தம +1
எப்படியோ.. கோழிக் குஞ்சு தப்பித்ததில் மகிழ்ச்சி!..
பதிலளிநீக்குஇனிய கவிதை.. வாழ்க நலம்!..
அருமையான கவிதை.
பதிலளிநீக்குகற்பனைச் சிறகை விரித்து விட்டீர்கள்! அருமை!
பதிலளிநீக்குவீழும் போதெல்லாம் விண்ணைத் தொடும் வேகம்...நல்ல வரிகள்...ராபர்ட் புரூஸ் பற்றிய கதை நினைவுக்கு வந்தது...இது நம் எல்லோருக்குமே பொருந்தும் ஒரு நல்ல வரிகள்...அருமை..
பதிலளிநீக்குஅருமை நண்பரே வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டால் வெற்றி நிச்சயம் நண்பரே...
பதிலளிநீக்குமுயற்சி வெற்றி அளிக்கும் நிச்சயம்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
முயற்சியின் முக்கியத்துவம் கவிதையில் மிக அழகாகச் சொன்னீர்கள் சகோதரா... அருமை!
பதிலளிநீக்கு