செவ்வாய், 28 ஜூலை, 2015

அக்னிச் சிறகு காற்றிலே...


தங்களைக் கடந்து மனிதம்
கண்டவன் மாமனிதன் நீ..!
மாணவர்கள் உலகத்தில்
மகிழ்ந்து கிடந்தவன் நீ..!
வல்லரசு ஆகும் நல்லரசு
காண ஆசைப்பட்டவன் நீ......
ஜனாதிபதிக்கான இலக்கணத்தை
மாற்றி எழுதியவன் நீ..!
குரான்... கீதை... பைபிளை
படித்து அறிந்தவன் நீ..!
அழகனில்லைதான் ஆனால்
அறிவு நிறைந்தவன் நீ..!
அக்னிச் சிறகாய் உலகை
வலம் வந்தவன் நீ..!
நீண்ட முடியும்
தவழும் புன்னகையுமாய்...
உனக்கு நிகர் நீயென வாழ்ந்து
கனவு காணச் சொல்லி
நனவாகும் முன்னே
ஏவுகணையாய் பறந்தவனே...
அக்னி சிறகொன்று
காற்றிலே கரைந்ததேயென
மனசு மறுதலித்தாலும்
நீ நிரந்தரமானவன்
உனக்கு மரணமில்லை...
-'பரிவை' சே.குமார்.

27 கருத்துகள்:

  1. வணக்கம்,
    நாமும் நம் அஞ்சலியை அந்த மாமனிதருக்கு செலுத்துவோம்.
    நன்றி,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ...
      தங்கள் வருகைக்கும் இரங்கலுக்கும் நன்றி.

      நீக்கு
  2. இன்னும் ஒரு நினைவுக்கு வர முடியவில்லை.. மறுகுகின்றது மனம்..

    அவரது ஆன்மா அமைதியுற வேண்டுவோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      தங்கள் வருகைக்கும் இரங்கலுக்கும் நன்றி.

      நீக்கு
  3. இந்தியாவுக்கு மாபெரும் இழப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      தங்கள் வருகைக்கும் இரங்கலுக்கும் நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      தங்கள் வருகைக்கும் இரங்கலுக்கும் நன்றி.

      நீக்கு
  5. அன்னாரது பூத உடல் நம்மை விட்டு பிரிந்தாலும் புகழுடலான கருத்துக்கனல்கள் இவ்வையகம் வாழும் வரைக்கும் வருங்கால வம்சாவளியினர் மனதில் கழன்று கொண்டுதான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராஜா...
      தங்கள் வருகைக்கும் இரங்கலுக்கும் நன்றி.

      நீக்கு
  6. மாமேதை அவர்களை மனதிற் சுமந்து
    வடித்த வரிகள் கண்டேன்!

    கசியும் கண்களுடன் ஆழ்ந்த இரங்கல்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அக்கா...
      தங்கள் வருகைக்கும் இரங்கலுக்கும் நன்றி.

      நீக்கு
  7. நீ நிரந்தரமானவன்
    உனக்கு மரணமில்லை....//

    சத்தியமான வார்த்தை சகோ
    +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அக்கா...
      தங்கள் வருகைக்கும் இரங்கலுக்கும் நன்றி.

      நீக்கு
  8. அருமையான வரிகள்! அம் மாமனிதருக்கு! ஆழ்ந்த இரங்கல்கள்! அவரதுகனவை நாம் எல்லோரும், அடுத்த தலைமுறையினரும் நம்மால் இயன்ற அளவு சிறியதாகவேனும் நனவாக்க முடிந்தால் அதுவே நாம் அவருக்குச் செய்யும் அஞ்சலி, மரியாதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளசி சார் / கீதா மேடம்...
      தங்கள் வருகைக்கும் இரங்கலுக்கும் நன்றி.

      நீக்கு
  9. அருமையான வரிகள்! அம் மாமனிதருக்கு! ஆழ்ந்த இரங்கல்கள்! அவரதுகனவை நாம் எல்லோரும், அடுத்த தலைமுறையினரும் நம்மால் இயன்ற அளவு சிறியதாகவேனும் நனவாக்க முடிந்தால் அதுவே நாம் அவருக்குச் செய்யும் அஞ்சலி, மரியாதை!

    பதிலளிநீக்கு
  10. ஆழ்ந்த இரங்கல்கள்! அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டுவோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ...
      தங்கள் வருகைக்கும் இரங்கலுக்கும் நன்றி.

      நீக்கு
  11. ஆழ்ந்த இரங்கல்கள். நீங்கள் செலுத்தும் அஞ்சலியில் நானும் கலந்துகொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      தங்கள் வருகைக்கும் இரங்கலுக்கும் நன்றி.

      நீக்கு
  12. இனியாயினும் கலாம்
    ஓய்வெடுக்கட்டும்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      தங்கள் வருகைக்கும் இரங்கலுக்கும் நன்றி.

      நீக்கு
  13. டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்!

    கனவு காணச் சொல்லி
    நனவாகும் முன்னே
    ஏவுகணையாய் பறந்தவனே...
    அக்னி சிறகொன்று
    காற்றிலே கரைந்ததேயென
    மனசு மறுதலித்தாலும்
    நீ நிரந்தரமானவன்
    உனக்கு மரணமில்லை...

    அறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்?
    http://eluththugal.blogspot.com/2015/07/blog-post_28.html

    பதிலளிநீக்கு
  14. ஆழ்ந்த இரங்கல்கள்

    சகோ,இங்க பிள்ளைகள் விடுமுறையில் இருப்பதால் அதிகம் வரமுடியவில்லை..தொடர்கதைகள் இன்னும் படிக்கவில்லை,படித்த பின் நிச்சயம் கரைத்துரையிடுவேன்,மிக்க நன்றி சகோ!!

    பதிலளிநீக்கு
  15. சாதி... மதம்...
    அழிக்க - நீ
    விதைக்கப்பட்ட
    உன் பூமியில் இருந்து
    கிளம்பட்டும்...
    அக்னிச் சிறக்கொன்று...

    விதையாய் நீ...
    உன்னில் இருந்து
    வீரியமாய் கிளம்பட்டும்
    விருட்சங்கள்...!

    பதிலளிநீக்கு
  16. உங்களின் கவித்திறனை மேலும் காணக் காத்திருக்கிறேன்.

    அப்துல்கலாம் அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்.

    நன்றி

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி