அன்புத்தோழமைகளுக்கு தமிழ்க்குடில் நிர்வாகியின் அன்பு வணக்கம்.
திரு. காமராசர் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் இரண்டாம் ஆண்டு கட்டுரைப்போட்டியின் விவரங்களைத்தங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். தங்களுடைய தொடர்ந்த ஒத்துழைப்பை வேண்டுகிறோம். தங்கள் நட்புகளிடமும் போட்டி பற்றிய விவரங்கள் பகிரவும்.
திரு காமராசர் அவர்களின் 112வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் இரண்டாம் ஆண்டு கட்டுரைப்போட்டியினை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
தலைப்பு
1. தனி மனிதனாகக் காமராசர்
2. தேசியத் தலைவராகக் காமராசர்
3. நிர்வாகியாகக் காமராசர்
4. அரசியல்வாதியாகக் காமராசர்
விதிமுறைகள்
1. போட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும் இருக்கலாம்.
2. குறைந்தது 3 பக்கம் முதல் 10 பக்கம் வரை இருக்கவேண்டும்.
3. படைப்புகள் வேறு எங்கும் பகிர்ந்ததாகவோ, அச்சிடப்பட்டதாகவோ இல்லாமல் தமிழ்க்குடிலின் போட்டிக்காக பிரத்யேகமா எழுதி அனுப்பவேண்டும்.
4. கட்டுரைகள் காப்பி பேஸ்ட்டாக இல்லாமல் தங்கள் வாழ்வில், உங்கள் பார்வையில் நீங்கள் திரு.காமராசரை உணர்ந்த விதத்தில் கட்டுரைகள் படைக்க வேண்டுகிறோம்.
5. படைப்பாளிகள் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரியுடன் படைப்புகளை tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பி வைக்கப்பட வேண்டும். குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச் செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது.
6. படைப்புகளை லதா, பாமினி ஒருங்குறியில் தட்டச்சு செய்து வேர்டு ஆவணமாக அனுப்ப வேண்டுகிறோம். தங்கள் படைப்புகள் எழுதியிருக்கும் பக்கத்தில் தங்கள் பெயர், முகவரி குறிப்பிடாமல் மின்னஞ்சலில் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.
7. படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 15.08.15
8. முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்.
பரிசு விவரம்
முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு, வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் தனிச்சின்னம் பொறிக்கப்பட்ட பதக்கம் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி போட்டிக்காக வரும் கட்டுரைகளில் சிறந்தபடைப்புகள் தேர்வு செய்யப்பட்டு நூலாகவும் அச்சிடப்படும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இதை போட்டி என்று மட்டுமே எண்ணாமல், நமது தனித் திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும் ,பயிற்சியாகவும் கொள்ள வேண்டுகிறோம்.
நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்வோமாக. அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொள்வதோடு அல்லாமல் மற்றவர்களையும் எழுத ஊக்குவித்து இந்தப்போட்டியினை சிறப்பித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் உங்களுடன்,
-தமிழ்க்குடில்.
அனைவரும் கல்ந்து கொண்டு போட்டியினை சிறப்பித்து பரிசுகளை வெல்லுங்கள்...
நன்றி.
நட்புக்காக இந்தப் பகிர்வு....
-'பரிவை' சே.குமார்.
let me share this on fb..
பதிலளிநீக்குnice initiative
wishes..
vote +
வாங்க மதுசார்...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
சிறந்த பகிர்வு
பதிலளிநீக்குதொடருங்கள்
வாங்க கவிஞரே...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நல்ல செயல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாங்க அம்மா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
சிறந்த போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குவாங்க அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நல்ல முயற்சி. போட்டியில் பங்கு பெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாங்க அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நல்லதொரு முயற்சி! வாழ்த்துகள்
பதிலளிநீக்குவாங்க மதுசார்...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வணக்கம்
பதிலளிநீக்குநிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள். த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன்...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குவாங்க சகோதரா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி