புதன், 11 மார்ச், 2015

சாக்கடையில் மிருகம்...

டும் நீருக்குத்
தெரிவதில்லை
சாதி... மதம்..!

வீசும் காற்றுக்குத்
தெரிவதில்லை
சாதி... மதம்..!

கிக்கும் நெருப்புக்குத்
தெரிவதில்லை
சாதி... மதம்..!

விரிந்த ஆகாசத்துக்குத்
தெரிவதில்லை
சாதி... மதம்..!

ந்தறிவு ஜீவன்களுக்குத்
தெரிவதில்லை
சாதி... மதம்..!

குளிரும் நிலவுக்குத்
தெரிவதில்லை
சாதி... மதம்..!

சுடும் பகலவனுக்குத்
தெரிவதில்லை
சாதி... மதம்..!

தாங்கும் பூமிக்குத்
தெரிவதில்லை
சாதி... மதம்..!

சாதியும் மதமும்
அதன் பின்னான
சண்டைகளும்...
உயிர் எடுத்து
உயிர் இழக்கும்
உக்திகளும்

பாழாப்போன மனிதா
உனக்கு மட்டும்
தெரிவது ஏனோ?

-'பரிவை' சே.குமார்.

43 கருத்துகள்:

  1. அட! என்னாங்க சார், திடீரென்று? நன்றாகவே சொன்னீர்கள். கவிதைக்கு வாழ்த்துக்கள்.
    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. கவிதை!..
    பல விஷயங்களைப் பேசுகின்றது!..

    அருமை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. வணக்கம்
    அண்ணா

    மனிதன் சிந்திக்கும் அறிவு... அதனால் இப்படி நடக்கிறான் அருமையான வரிகள் பகிர்வுக்கு நன்றி த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன்...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. அருமை நண்பரே சவுக்கடி வார்த்தைகள் ஸூப்பர்,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  5. ஆண்டவன் மனிதனைப் படைக்க
    மனிதன் சண்டைகளைப் படைக்க
    சாதி... மதம்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பாவாணன் ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. பாழாகப் போவதால் தெரிகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  8. அருமையான கருத்துக் கவிதை. என்ன சாதிக்குப் பிறந்தோம் என்பதை விட என்ன சாதிக்கப் பிறந்தோம் என்ற எண்ணம் மக்களிடம் எழுந்தோங்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராஜா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  9. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : காயத்ரி தேவி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என்னில் உணர்ந்தவை

    வலைச்சர தள இணைப்பு : கதம்ப மாலை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      தங்கள் வருகைக்கும் விவரம் தெரிவித்தமைக்கும் நன்றி.

      நீக்கு
  10. அருமையான வரிகள்! சூப்பர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளசி சார்/கீதா மேடம்...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  11. உண்மைதான்.. மிக அருமையான கவிதை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அக்கா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  12. சிந்திக்க வைக்கும் வரிகள் !! மிக மிக அருமை குமார் .விஷால் பூரண குனமடைந்த்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி.

    என்னுடைய பதிவு காலிபிளவர் மிளகு பொரியல் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  13. சரியான சாட்டையடி... தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரி...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  14. ஆறறிவின் அட்டகாசங்கள் தான் எல்லாம்.
    அருமையான வரிகள் வாழ்த்துக்கள் சகோ.
    தம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  15. ஆறறிவின் அட்டகாசகங்கள் தான் தாங்க முடிவதில்லை.
    அருமையான ஆக்கம் வாழ்த்துக்கள்.
    தம7

    பதிலளிநீக்கு
  16. நெத்தியடி வரிகள். அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  17. பதில்கள்
    1. வாங்க சகோதரி...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  18. உண்மை ! கவிதை உரைத்தவிதம் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  19. எல்லாம் சரி, யார் உணரனும், நாம் ஆரம்பித்தது, நிறுத்துவோமா? சுயநலப் பேய்கள் இதன் பெயரால் பணம் பன்னுவோர் இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம், நன்றி. என் தளத்தில் பீச்சாங்கை காண வருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரி...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  20. அருமை... தம்பி ... அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  21. சாதி இரண்டொழிய வேறில்லைஎன்றாள் அவ்வைப் பாட்டி. மனிதன் மாறி விட்டான் . மதத்தில் ஏறிவிட்டான் திரைப்பாடல். ஐந்தறிவு ஜீவிக்கு இல்லாத சாதி மதம் பேதம் எல்லாம் மனிதனுக்கு மட்டுமேநெஞ்சு பொறுக்காமல் எழுதுவதுதான் மிஞ்சுகிறது. எறியும் கல்லை விடாமல் எறிவோம். .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  22. கவிதைக்கேற்ற புகைப்படம். நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி