பிஞ்சுகளின் ரத்தம்
குடித்த மத மூடர்களே....
மனிதம் கொன்று
மதம் வளர்க்க
எந்த மதத்தில்
சொல்லியிருக்கிறது..?
அன்பை விதைக்கச்
சொன்ன இறைவன்
அழிவை ஆதரிப்பதாக
எப்போது சொன்னான்..?
தேவைகளுக்காக
போராட்டமா...
இல்லை
தேடி அழிக்கும்
போராட்டமா..?
உரிமைகளுக்காக
போராட்டமா...
இல்லை
உயிரை எடுக்கவே
போராட்டமா..?
எந்த மதமும்
மனித ரத்தம்
கேட்கவில்லையே..?
வாழ வேண்டிய
பிஞ்சுகளை
வாடச் செய்ய
எப்படி மனது
வந்தது..?
பிஞ்சுகளின்
கொஞ்சும் கண்கள்
கெஞ்சியும் கூட
நஞ்சு மனதில்
ஈரம் இல்லையா
முட்டாள்களே...?
கனவுகளைச் சுமந்த
வண்ணத்துப் பூச்சிகளை
ரத்த சேற்றில்
மிதக்க விட்ட மதம்
என்னடா மதம்..?
மதத்தின் பேரால்
செய்யும் செயல்களுக்கு
நியாயம் கற்பிக்க
ஒரு கூட்டம்...
அதை ஆதரிக்க
சில நாடுகள்...
வெட்கக் கேடு...!
கேவலம்...
ரத்த வாடையில்
மதம் வளர்க்க
நினைக்கும் மூடர்களே...
மனிதம் வளருங்கள்
மதம் நிலைக்கும்...
குடித்த மத மூடர்களே....
மனிதம் கொன்று
மதம் வளர்க்க
எந்த மதத்தில்
சொல்லியிருக்கிறது..?
அன்பை விதைக்கச்
சொன்ன இறைவன்
அழிவை ஆதரிப்பதாக
எப்போது சொன்னான்..?
தேவைகளுக்காக
போராட்டமா...
இல்லை
தேடி அழிக்கும்
போராட்டமா..?
உரிமைகளுக்காக
போராட்டமா...
இல்லை
உயிரை எடுக்கவே
போராட்டமா..?
எந்த மதமும்
மனித ரத்தம்
கேட்கவில்லையே..?
வாழ வேண்டிய
பிஞ்சுகளை
வாடச் செய்ய
எப்படி மனது
வந்தது..?
பிஞ்சுகளின்
கொஞ்சும் கண்கள்
கெஞ்சியும் கூட
நஞ்சு மனதில்
ஈரம் இல்லையா
முட்டாள்களே...?
கனவுகளைச் சுமந்த
வண்ணத்துப் பூச்சிகளை
ரத்த சேற்றில்
மிதக்க விட்ட மதம்
என்னடா மதம்..?
மதத்தின் பேரால்
செய்யும் செயல்களுக்கு
நியாயம் கற்பிக்க
ஒரு கூட்டம்...
அதை ஆதரிக்க
சில நாடுகள்...
வெட்கக் கேடு...!
கேவலம்...
ரத்த வாடையில்
மதம் வளர்க்க
நினைக்கும் மூடர்களே...
மனிதம் வளருங்கள்
மதம் நிலைக்கும்...
-'பரிவை' சே.குமார்.
வெட்க்க்கேடு மனிதனுக்கு ஆறறிவு எனச்சொன்னவன் யார் சில மிருகங்கள்கூட வேற்று மிருகங்களின் குட்டிகளுக்கு பால் கொடுக்கிறதே... தேவையற்ற மிருகங்கள் மனித உருவில் வலம் வருகிறதே உலகில்....
பதிலளிநீக்குவணக்கம் அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பிஞ்சு அறியா
பதிலளிநீக்குநெஞ்சு கொண்ட
மிருகங்களின் நெஞ்சு
பிளக்க வேண்டும்....
வணக்கம் சகோதரி...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இவர்களை எல்லாம் மிருகங்கள் என்று சொல்வது,
பதிலளிநீக்குமிருகங்களை அவமதிக்கும் செயலாகும்
கோழைகள்
வணக்கம் ஐயா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தம 2
பதிலளிநீக்குவணக்கம் ஐயா...
நீக்குதங்கள் வருகைக்கும் வாக்குக்கும் நன்றி.
மனிதம் வழியும் கவிதை, வலியும் ..
பதிலளிநீக்குத ம மூன்று
வணக்கம் சகோ...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அவர்கள் மனிதர்களே இல்லை...
பதிலளிநீக்குவணக்கம் அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சரியாகச் சொன்னீர்கள் !
பதிலளிநீக்குத ம 5
வணக்கம் ஜி...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மிருகங்களின் அற்புத குணங்களைப் பற்றியெல்லாம் காணொளிகள் தற்சமயம் காணக் கிடைக்கின்றன.
பதிலளிநீக்குமிருகங்கள் பசிக்காகத் தான் வேட்டையாடுகின்றன.. இரத்தவெறி பிடித்து அலைவதில்லையே!..
வணக்கம் ஐயா...
நீக்குஇவர்கள் மிருகங்கள் அல்ல ஐயா மத வெறி பிடித்த காட்டு மிராண்டிக் கூட்டம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
துரை அய்யா சொல்வைது தான் சரி!! மிருகங்கள் இவர்களை விட மேலானவை!
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கவிதை வரிகள் அருமை. கருத்தும் அருமை ஆனால் வலிமிகுந்தது....நாங்களும் துரை ஐயா சொல்வதை வழிமொழிகின்றோம்....நல்ல கருத்து.
பதிலளிநீக்குவணக்கம் துளசி சார்..
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குகவிதை வரிகள் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்...
நீக்குதங்கள் தளத்தை திறந்து படிப்பதில் எனக்கு இன்னும் சிக்கல் இருக்கிறது.
எனக்கு மட்டும்தான் இல்லை மற்றவர்களுக்குமா?
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மனிதம் வளருங்கள்
பதிலளிநீக்குமதம் நிலைக்கும்..//
நன்றாக சொன்னீர்கள்.