மழை-
விவசாயிக்கு பருவ காலத்தில்
சந்தோஷத்தையும்...
அறுவடை காலத்தில்
வருத்தத்தையும் கொடுக்கும்...
மழை-
குடை விற்பவனுக்கு
சந்தோஷத்தையும்...உப்பு விற்பவனுக்கு
வருத்தத்தையும் கொடுக்கும்...
மழை-
பள்ளிக் குழந்தைக்கு
சந்தோசத்தையும்பெற்றவளுக்கு
வருத்தத்தையும் கொடுக்கும்...
மழை-
எருமைக்கு
சந்தோஷத்தையும்பசுவுக்கு
வருத்தத்தையும் கொடுக்கும்...
சிலருக்கு சந்தோஷத்தையும்
சிலருக்கு வருத்தத்தையும்
கொடுக்கும் மழை...
அது
சாரலோ....
தூறலோ...
பெருமழையோ
எதுவாகினும்
ஒரு மழை நாளில்
மலர்ந்த நம் காதல்
நினைவுளை
நீர்க்குமிழிகளாய்
நீந்த விடுவதால்...
எப்போதும் வேண்டுமடி
மழை எனக்கு..!
-'பரிவை' சே.குமார்.
பதிலளிநீக்குநல்ல வைரவரிகளை செதுக்கிய கவி
அருமை நண்பரே....
பதிலளிநீக்குத,ம, 1
விசும்பின் துளி
பதிலளிநீக்குஅமிர்தத்துளி அல்லவா?
என்றுமே வேண்டும்...!
பதிலளிநீக்குஇந்த அழகிய கவிதைகாகவாவது மழை வரட்டும்:)
பதிலளிநீக்குஉங்களுக்கு மட்டுமா மழை வேண்டும்!..
பதிலளிநீக்கு- எங்களுக்கும் தான்!..
மழை கவிதை அருமை.
பதிலளிநீக்குஇது முன்பு எழுதிய கவிதையா?
அல்லது புதிதாக எழுதிய கவிதையா குமார்?
அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஉங்கள் வேண்டுகோள் நிறைவேறட்டும்.
பதிலளிநீக்குமழை
பதிலளிநீக்குசாலைகள் கந்தலாய் ஆனாலும் சென்னைக்காரர்களுக்கு எப்போதுமே தேவையான ஒன்றுதான்.
:)))
நீர்க்குமிழிகளாய் நினைவுகளை நீந்த விடும்போதே இப்படின்னா .காதலியை கட்டியிருந்தா புயல் வெள்ளமே வந்தாளும் வரவேற்பீங்க போலிருக்கே :)
பதிலளிநீக்குத ம 5
மழை மழைக்காதல் நனையாது குடையோது போனது பிழை ....
பதிலளிநீக்குசும்மா எழுதி பார்த்தேன் அண்ணே ... நல்லாருக்கு
வெளியே செல்லும் போது மழை வேண்டாம். வீடு திரும்பும்போது மழை வந்தால் நிச்சயம் நன்றாக இருக்கும்!
பதிலளிநீக்குநல்ல கவிதை.... பாராட்டுகள் குமார்.
மழை பொழியட்டும்
பதிலளிநீக்குஅருமை நண்பரே
நன்றி
தம +1
உங்கள் மழை எனக்கு மகிழ்வு ...
பதிலளிநீக்குதொடரட்டும் கவிப்பணி
வோட்டு எட்டு...
பதிலளிநீக்குஓக்கேயா..
மழை! இயற்கையின் வரப்பிரசாதம். அது யாருக்கு வேண்டுமோ வேண்டாமோ, மனிதர் வாழும் வறண்ட பூமிக்கு, வானம் பார்த்து வாழும் பூமிக்கு வேண்டும் மழை!!
பதிலளிநீக்குநல்ல கவிதை வரிகள் நண்பரே!
பதிலளிநீக்குஅன்பு தமிழ் உறவே!
பதிலளிநீக்குவணக்கம்!
இன்றைய வலைச் சரத்தின்,
திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
"மழை" யில்
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துகள்!
வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
உவகை தரும் உமது பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
(குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)
வணக்கம்சகோ,
பதிலளிநீக்குஅருமை,எப்போதும் வேண்டும் மழை
ஆழ்குழாய்க்கிணறுகளில்
நீர் வற்றிப்போகிறது.