செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

வீடியோ : மாங்குயிலே... பூங்குயிலே....

இன்றைய பகிர்விலும் மீண்டும் மீண்டும் கேட்கும்... கேட்க நினைக்கும்... கேட்கத் தூண்டும் பாடல்கள் சிலவற்றைப்  பகிர்ந்திருக்கிறேன்.  எல்லாப் பாடல்களுமே கேட்கும் போது நமக்குள் ஒரு உற்சாகத்தைக் கொடுக்கும் பாடல்கள். அதுவும் கிராமிய இசையுடன் கிராமத்து பின்னணியும் சேர்ந்து கொள்ள சொல்லவா வேண்டும். நீங்களும் கேட்டுப் பாருங்கள்... 


படம் : ஒத்தையடிப் பாதையிலே
பாடல் : செப்புக்குடம் தூக்கிப் போற....




படம் : பகவதிபுரம் ரயில்வே கேட்
பாடல் : செவ்வரளி தோட்டத்திலே...




படம் : மெல்ல பேசுங்கள்
பாடல் : செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு...




படம் : பொல்லாதவன்
பாடல் : அதோ வாராண்டி வாராண்டி...




படம் : இளமைக்கோலம்
பாடல் : வச்ச பார்வை தீராதடி...




படம் : நீயா
பாடல் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்...




படம் : மௌன கீதங்கள்
பாடல் : மூக்குத்தி பூமேலே காற்று....





படம் : எட்டுப்பட்டி ராசா
பாடல் : பஞ்சு மிட்டாய் சேலை கட்டி...



எப்போது கேட்டாலும் இந்தப் பாடலின் இசையும் பாடலும் துள்ள வைக்கும்... வேலை நேரத்தில் பாடல் கேட்டுக் கொண்டே பணி செய்யும் போது இந்தப்பாடல் வந்தால் என்னையறியாமலே கை தாளம் போட ஆரம்பித்துவிடும்... \இந்தப் பாடல் கேட்டால் 'என்ன சேந்தம்பட்டியாரே சாமத்துல வாரே.. சாமந்திப்பூ தாரேன்னு சொன்னீங்க... எங்க சாமந்திப்பூவக் காணோம்' என கனகா கேட்பது ஞாபகத்தில் வரத் தவறுவதில்லை... 

என்னிடம் ராமராஜன் பாடல்கள் அதிகம் இருக்கின்றன. எல்லாப் பாடல்களையும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். காரணம் இசைராஜா... மோகனுக்குப் பின் ராமராஜனுக்கு எத்தனை விதமான ராகங்களைக் கொடுத்தார். அத்தனையும் தித்திப்பு.... 

இதோ  எப்போதும் நான் விரும்பும் பாடல்களில் ஒன்றான கரகாட்டக்காரன் படப்பாடல் மாங்குயிலே பூங்குயிலே...



பாடல் பகிர்வு தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

5 கருத்துகள்:

  1. அத்தனையும் அருமை!எப்போதும்,ராஜா ராஜா தான்.நன்றி குமார்,பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  2. ராமராஜனுக்காக இளையராஜா வழங்கிய பாடல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.
    அலுக்காது..

    பதிலளிநீக்கு
  3. ஒரே ஜீவன் பாடலும் பஞ்சுமிட்டாய் சேலைகட்டி பாடலும் பிடித்த பாடல் ஐயா ! மற்ற பாடல்கள் அதிகம் கேட்டதில்லை, பகிர்வு அருமை....

    பதிலளிநீக்கு
  4. நான் சிறுமியை இருந்த போது என் அத்தைகள் திருமண வயதுப்பெண்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் கேட்ட பல பாடல்கள் இந்த பட்டியலில் இருப்பதை பிள்ளை பருவம் நினைவுக்கு வருகிறது. நன்றி அண்ணா:))

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி