சோவென பெய்தமழை
சோர்வுற்ற போதினிலே...
கீதமிசைக்கும் தவளைகள்..!
'டக்... டொக்...' தாளநயத்துடன்
குடிசைக்குள் வழியும் தண்ணீர்..!
காற்றை சில்லிப்பாக்கி
உடம்பை ஆட்டிப்பார்க்கும் குளிர்..!
சாக்கடைக்குள் கலக்கும்
தெரு நீரின் சலசலப்பு..!
உறுமியபடி நீரில் நீந்தும் வாகனம்..!
கருமேகங்களுக்கிடையே
கட்டழகி நிலவின் முகம்..!
வெளிச்சக் கீற்றை
அள்ளித்தெளிக்கும் மின்னல்..!
எங்கோ பெய்யும்
மழையின் இடியோசை..!
எல்லாம் ரம்மியமாய்..!
மழையால் விழித்துக் கொண்ட
கண்களுக்குள் இருட்டு பயம்..!
(மீள் பதிவு, 2009 ஆகஸ்ட்டில் நெடுங்கவிதைகள் தளத்தில் எழுதியது)
-'பரிவை' சே.குமார்.
மீள் பதிவு என்றாலும் தூள் பதிவு !மழைச்சாரலில் நனைந்த சுகம் !
பதிலளிநீக்குத ம 2
மழைக்கு இதமான வரிகள். பாராட்டுகள்.
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குஅப்புறம் எனக்கொரு சந்தேகம். மழை எதற்காக 'நாகேஷ்' என்றெல்லாம் பெய்யாமல் எப்போதும் 'சோ' என்றே பெய்கிறது?
:)))))))
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
மழைக்கவிதையை இரசித்தேன். பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மழைக்கால இரவு அப்படியே - கண் முன்னே..அருமை..
பதிலளிநீக்குரசனையான கவிதைப்பாடல் ஐயா! வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஅருமை குமார்.
பதிலளிநீக்குஅருமை நண்பரே
பதிலளிநீக்குரம்மியத்தை ரசித்தேன்...
பதிலளிநீக்குமழையை அனுபவித்த சுகம் கவிதையில்.
பதிலளிநீக்குஅருமையான மழை கவிதை.
இங்கு இடியும் மின்னலும் சிறு தூறலுமாய் எங்களை ஏமாற்றி செல்கிறது.
மனதிற்குள்ளும் மழை பொழிந்த உணர்வு
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குநல்ல எழுத்தின் நடை...
இரவிலும் கூட...
வாழ்த்துக்கள் நண்பா.
மழை............நன்று!நல்லதும் கூட!!!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
சென்று பார்வையிட முகவரி இதோ.http://blogintamil.blogspot.com/2014/08/blog-post_10.html?showComment=1407632115925#c853170747686434206
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-