செவ்வாய், 15 ஏப்ரல், 2014

மனசின் பக்கம் : வலைச்சரம் முதல் தேர்தல் வரை

ன்றைய வலைச்சரத்தில் சகோதரி செல்வி அவர்கள் எழுத்துலக ஜாம்பவான்கள் விஜயன் அண்ணா (இப்போது இவரது எழுத்துக்கள் முழுக்க முழுக்க முகநூலில் மட்டுமே) மற்றும் அனைவரும் அறிந்த நகைச்சுவை மன்னன் எங்கள் அண்ணன் நாஞ்சில் மனோ அவர்களுடனும் மதுரை மண்ணின் சிறப்பான எழுத்தாளர்களில் ஒருவரான சகோதரி ஆனந்தி (இப்போது இவரும் வலையில் எழுதுவதில்லை) அவர்களுடனும் என்னையும் செவ்வாயின் செவாலியர்கள் என்ற தலைப்பில் முதல் நாள் அறிமுகத்தில் சொல்லியிருக்கிறார். அறிமுகம் செய்த சகோதரிக்கு நன்றி. வலைச்சரத்தில் ஒவ்வொரு முறை அறிமுகம் ஆகும் போதும் கிடைக்கும் சந்தோஷத்திற்கு ஈடு எதுவும் இல்லை.  அறிமுக விவரம் நான் வலைச்சரம் போகும் முன்னரே தனபாலன் சார் மற்றும் சகோதரர் ரூபனால் எனக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருவருக்கும் நன்றி.


'விஜயகாந்தை கேலி செய்யலாமா என்ற எனது பதிவு இந்த வாரத்தில் அதிகம் பேரால் வாசிக்கப்பட்டிருப்பதுடன் சிலரின் சிறப்பான கருத்துக்களையும் படிக்க முடிந்தது. அதில் ஒரு சகோதரியின் கருத்தை கீழே கொடுத்துள்ளேன்.

Rrgana Bagam said...
சே.சேகர் சார் நிங்க சொல்றது 100/100 உண்மை ஆனா என்ன மாதிரி முஸ்லிம்களின் வாக்கு அவருக்கு கிடைக்காது அவா் உணமையிலோ மக்களின் பக்கம் என்றால் திமுக மாதிரி அதிமுக மாதிரி தனித்து நின்று ஜெயிக்க வேண்டும்மோ தவிர ஜாதி வேறி பிடித்த பாஜக உடன் ஏன் உடன்பாடு செய்து கொள்ள வேண்டும் தெளிவாக கூற முடியும் மா திரு.சே.சேகா் சார்.

சே.குமார் சேகராகிவிட்டேன்... அதை விடுங்க.... அதுவா முக்கியம் அவரின் கருத்துத்தானே முக்கியம்... முதலில் தங்களின் கருத்துக்கு நன்றி சகோதரி.

சகோதரிக்கு அந்தப் பதிவிலேயே கருத்துச் சொல்ல நினைத்தேன். ஆனால் எனக்கு அதை இங்கு சொல்வதுதான் சரியெனப்பட்டது. காரணம் இந்தப் பதிவு ஜாதிக் கட்சிகள் பற்றிய பகிர்வு கிடையாது. இது தனி மனிதனை கேலி செய்வது குறித்தான பகிர்வு. நான் இங்கு தே.மு.தி.கவுக்கோ பாஜகவுக்கோ ஓட்டுக் கேட்கவில்லை. மேலும் இன்று ஜாதிக்கு ஒரு கட்சி இருக்கத்தான் செய்கிறது. ஜாதிக் கட்சி ஆதரவு நிலையில் எழுதப்பட்ட பகிர்வு அல்ல இது. 

அதிமுக, திமுகவெல்லாம் தனித்து நிற்கிறது என்று யார் சொன்னார்கள். எல்லாருமே ஜாதிக்கட்சிகளை தொங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஏன் அதிமுகவில் எங்களுக்கு மரியாதை இல்லை என்று வெளியே வந்த முஸ்ஸீம் கட்சிகளில் ஒன்றுக்கு கருணாநிதி சிவப்புக் கம்பளம் விரிக்க தயாராக இருக்கிறேன் என்று சொல்லவில்லையா? 

மேலும் பஜக வேட்பாளர்களை தங்கள் ஊருக்குள் வரவிட மாட்டோம் என்று சொல்லும் உங்களவர்கள் சாதிக்கட்சிகளை நடத்தவில்லையா என்ன? வாக்களிப்பது உங்கள் உரிமை... யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது உங்களது முடிவு... அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. அதேபோல் அடுத்த வீட்டில் இருக்கும் குப்பையைப் பார்க்கும் முன்னர் நம் வீட்டில் இருக்கும் குப்பைகளையும் பார்க்க வேண்டுமல்லவா?

விஜயகாந்தின் மீதோ தேமுதிக மீதோ எனக்கு தனிப்பட்ட விருப்பம் எதுவும் இல்லை. முகநூலில் அவரை வைத்து நடக்கும் காமெடி கலாட்டாக்களைப் பார்த்து எழுதியதுதான் இந்தப் பதிவு. இதில் முழுக்க முழுக்க எனது கருத்துக்களே இடம் பெற்றுள்ளன. இதை எல்லாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. 

சகோதரிக்கு இப்படி எழுதலாமா என்று என்று யோசித்தேன். யோசனையின் முடிவில் இங்கு எழுதுவதுதான் நன்று என்று தோன்றியதால் எழுதிவிட்டேன்... எனக்கு எல்லோரும் ஒன்றுதான்... எங்கள் ஜாதிக்கும் ஒரு கட்சியிருக்கிறது... அதற்கும் ஒரு தலைவர் இருக்கிறார்... ஆனால் நான் அதில் உறுப்பினர் கூட இல்லை. சாதி மதம் கடந்த நட்புத்தான் எனக்கு அதிகம் உண்டு. அதைத்தான் நான் எப்போதும் விரும்புவேன். இங்கு எழுதியிருக்கும் எனது கருத்து யாரையேனும் புண்படுத்தும் விதமாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்.

ம்முட்டி நடித்த 'தெய்வத்தின்டே சொந்தம் கிளிட்டஸ்' என்ற படம் பார்த்தேன். நாடகத்தில் இயேசு பிரான் வேடமிடுவதற்காக பங்குத் தந்தையால் அழைத்து வரப்படும் ரவுடியாக மம்முட்டி நடித்திருந்தார். விரித்துப் போட்ட தலைமுடியுடன் தோளில் போட்ட சிவப்புத் துண்டை கையில் தாங்கியபடி அவர் நடந்து வரும் போது அந்த முகத்தில் தெரியும் தெய்வீகக் கலை சாட்சாத் இயேசு பிரானே நேரில் வருவது போல் இருந்தது. அடாவடித்தனம் கலந்த கதாபாத்திரம் ஓரளவு ரசிக்கும்படி செய்திருக்கிறார். படம் குறித்து கலவையான விமர்சனங்கள் இருந்த போதிலும் படம் போரடிக்காமல் சென்றது. 

ங்கு குளிர் காலம் முடிந்து வெயில் தொடங்கிவிட்டது. இன்று மதியமெல்லாம் நடந்து வர முடியாத அளவுக்கு வெயில் பட்டையை எடுக்க ஆரம்பித்துவிட்டது. இந்த வருடம் குளிர்காலத்தில் அதிக முறை மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் இன்னும் நான்கைந்து மாதங்களுக்கு நீடிக்கும் வெயிலின் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறதே.

தேர்தலில் கட்சி சார்பின்றி உங்களுக்கு எவர் நல்லவர் என்று தெரிகிறதோ அவருக்கு வாக்களியுங்கள். நம்மை ஏமாற்றி மீண்டும் மீண்டும் சம்பாதிக்கத் துடிப்போருக்கு சரியான பாடம் கற்பியுங்கள். எங்கள் சிவகெங்கைத் தொகுதியில் அதிமுக, பஜகவுக்கு இடையில்தான் போட்டி அதிகம் என்று சொல்கிறார்கள். அதிமுகவின் கை ஓங்கியிருப்பதாகவும் கூறுகிறார்கள். மொத்தத்தில் சிவகெங்கை சீமை எனக்குத்தான் என்று சென்ற தேர்தல் வரை இறுமாப்புடனே இருந்த ஐயா பசி அவர்களின் மகன் கார்த்தி சிதம்பரம் பந்தயத்தில் இறுதியில் இருப்பதாக நண்பன் ஒருவன் சந்தோஷமாகச் சொன்னான்.

இன்னும் நல்ல விஷயங்களுடன் அடுத்த மனசின் பக்கத்தில் சந்திப்போம்.
-'பரிவை' சே.குமார்.

12 கருத்துகள்:

  1. தேர்தல், அதில் பங்கேற்கும் கட்சித்தலைவர்கள் பற்றிய கருத்துக்கள் அமர்க்களம்! அமீரகத்தில் எப்போதுமே வெயில் கொளுத்தும் என்றாலும் தடை படாத மின்வெட்டில் ஏசி பாதுகாப்பில் பாதிப்பில்லாமல் இருக்கலாம். தற்போது தஞ்சையில் இருப்பதால் மின்வெட்டை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். தேர்தல் முடிந்ததும் மே மாதத்திலிருந்து மின்வெட்டு முழு வீச்சில் இங்கு அமுலாகும். அப்புறம் இருக்கிறது சூடெல்லாம்! அதற்குள் தப்பித்து அங்கு வந்து விடுவேன்.

    வலைச்சரத்தில் மறுபடியும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதற்கு இனிய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. கலாட்டாக்கள் (சில சமயம்) பிரபலமாக்கும்...

    பதிலளிநீக்கு
  3. வலைச் சரத்தில் உங்களை அறிமுகம் செய்திருந்ததை நானும் பார்த்தேன்.///'அந்த'ப் பதிவுக்கு பதிவில் பதில் உரைத்தமை நல்லது.///"ஓட்டு" ப் போடுங்கள்(எவருக்கென்றாலும்) மக்களே!

    பதிலளிநீக்கு
  4. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.நேரம் கிடைக்கும் பொழுது வருவேன்.

    பதிலளிநீக்கு
  5. வலைச்சரத்தில் அறிமுகமான தங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரா
    எவராக இருப்பினும் நல்ல மனிதர்களைத் தெருதலில் தேர்வு செய்து கொண்டால் போதுமானது மக்களின் நலனை மனதில் கொள்ளாதவர்களை மக்கள் தானே புறக்கணிக்க வேண்டும் .மிகவும் பொருத்தமான பகிர்வு இக் காலத்திற்கு ஏற்ற பதிவும் இதுவே மீண்டும் ஒரு முறை என்
    நன்றி கலந்த வாழ்த்துக்கள் சகோதரா .

    பதிலளிநீக்கு
  6. இப்போதைய அரசியலில் தனிப்பட்ட தாக்குதல்களும் ஜாதியும் நிறைய பங்கு வகிக்கின்றன. இவை வெறுக்கத் தக்கது! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. வலைச்சர அறிமுகத்துக்குப் பாராட்டுகள்.நல்லவர்கள் இல்லையென்றால் நோடாதானா!

    பதிலளிநீக்கு
  8. Good post. Some people are criticizing Vijaykanth in facebook, but for me he is a politician, who gets really angry and if controls his anger it would be better.

    பதிலளிநீக்கு
  9. சரியான பதில் ஐயா! ஜாதிகட்சியோடு சேராமல் தேர்தலை சந்திக்க எபோதும் யாருக்கும் தைரியம் வராது. வரும் வரை அதற்கு ஓட்டுப்போடுபவர்களும் வருவார்கள்....

    பதிலளிநீக்கு
  10. வலைச்சர அறிமுகத்துக்குப் பாராட்டுகள். வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  11. வலைச்சர அறிமுகத்துக்குப் வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  12. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள் குமார்.

    அரசியல் - எப்போதுமே இதில் சந்தர்ப்பவாதிகள் ஆதிக்கம் தான்.... ஒரே விஷயம் தனிமனித தாக்குதல்கள் இப்போது அதிகமாகிவிட்டது....

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி