நாம் காதலித்த
அந்த தருணங்களை
இப்போது நினைத்தாலும்
நெஞ்சுக்குள் பசுமையாய்
துளிர் விடுகிறது
நம் காதல்..!
நம் முதல் சந்திப்பு
முருகன் கோவிலில்...
உன் அம்மா பின்னே
நீலத்தாவணியில் நீ..!
நான் பார்ப்பதை
அறிந்து விரலால்
மாக்கோலமிட்டாய்
மார்பிள் தரையில்..!
பின்னர் அடிக்கடி
சந்திப்பதற்காகவே
உன் வீட்டுப் பாதையில்
உலாவரலானேன் நான்..!
காதல் மலர்ந்ததும்
எனக்காக நீயும்...
உனக்காக நானும்...
யாரும் பார்த்து
விடக்கூடாதென்ற
பயத்துடன் தெருமுனையில்
காத்திருப்போமே..!
இன்று நினைத்தாலும்
உள்ளுக்குள் அசசம்..!
பாய் கடைக்கு எனக்காக
போன் பேச வரும் உன்னை
பேப்பர் படிப்பது போல்
படித்த அந்த இனிய தருணங்கள்..!
நீ சைக்கிள் ஓட்டும்
அழகை என் வீட்டு
மாடியில் இருந்து
நான் பார்த்து ரசித்த
அந்த அழகிய நாட்கள்..!
ஆற்றில் நீ குளித்துத்
திரும்புகையில்
உன் முகத்தில்
அழகாய் இருக்கும்
தண்ணீர் துளிகளை
கண்டு ரசிப்பதற்காகவே
ஒற்றையடிப் பாதையில்
உன் எதிரே வந்து
அருகில் வந்தும்
ஒதுங்காமல் ஒரு கணம்
மெய் சிலிர்த்து நிற்கும்
அந்த மாலை நேரங்கள்..!
ஒருமுறை நான் கேட்டேன்
என்பதற்காக நீ கஷ்டப்பட்டு
பயத்துடன் கொடுத்த
அந்த முதல் முத்தத்தின்
ஈரம் என் கன்னத்தில்
இன்றும் பதமாய்..!
இப்படி எத்தனையோ தருணங்கள்
நினைத்த மாத்திரத்தில்
நெஞ்சுக்குள் பசுமையாய்..!
திருமணத்திற்குப் பின்னும்
தொடர்ந்த நம் காதல்...
அதனால் கிடைத்த
சந்தோஷங்கள்
ஒன்றா... இரண்டா..?
நம் காதல் காத்திருப்புகள்
இன்றும் தொடர்கின்றன...
அன்று உன் வரவுக்காக
காத்திருந்தேன்..!
இன்று உன்னிடம் வருவதற்காக
காத்திருக்கிறேன்...
காலன் வருவானா..?
(2009 - ல் நெடுங்கவிதைகள் தளத்தில் எழுதியது)
-'பரிவை' சே.குமார்.
தண்ணீர் துளிகளை ரசித்தேன்...
பதிலளிநீக்குஎன்ன இப்படி முடித்து விட்டீர்கள்...?
அன்பின் குமார்..
பதிலளிநீக்குநலம் தானே!..
இறுதியில் ட்விஸ்ட்...
பதிலளிநீக்குகாதலி என்ன ஆனாள்?ஏன் இந்த விபரீத முடிவு ?
பதிலளிநீக்குத ம 4
செத்துப் பிழைக்கும் மனத்தின் ஓலம் ஆழமான காதல் காவியமாக இங்கே உருத் தரித்த விதம் கண்களைக் குளமாக்கிச் சென்றுள்ளது சகோதரா .இன்று என் வலையில் இதே காதல் காவியம் ஒன்றை வரைந்துள்ளேன் அவசியம் படியுங்கள் .பகிர்வுக்கு மிக்க நன்றி .
பதிலளிநீக்குஇன்று உன்னிடம் வருவதற்காக
பதிலளிநீக்குகாத்திருக்கிறேன்...
காலன் வருவானா..?
///இன்று உன்னிடம் வருவதற்காக
காத்திருக்கிறேன்...
கா(வ)லன் வருவானா..?என்று வந்திருக்க வேண்டும்,ஹ!ஹ!!ஹா!!!
இறுதி வரிதான் என்னவோ செய்கிறது
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குபாய் கடைக்கு எனக்காக
போன் பேச வரும் உன்னை
பேப்பர் படிப்பது போல்
படித்த அந்த இனிய தருணங்கள்..!
இந்த வரிகள் காலக்கண்ணாடியாய் !
அப்போ போன் ரொம்ப ரேர் இல்ல ?
ரசித்தேன். முடிவு மட்டும் ஏன் அப்படி?
பதிலளிநீக்குவயதானாலும் காதல் நினைவின் நிறம் மாறுவதில்லை...விட்டுச் சென்ற இணையை எண்ணி எழுதிய கவிதையாய் எண்ணுகிறேன்...
பதிலளிநீக்குWell written.
பதிலளிநீக்குநல்ல கவிதை....
பதிலளிநீக்குமுடிவு.... :(