வியாழன், 13 பிப்ரவரி, 2014

வீடியோ : பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள்

தமிழ்த் திரையுலகில் இமயத்துக்கும் சிகரத்துக்கும் இடையில் தனது கேமிராவால் காதல் காவியங்களை கண்ணுக்கு விருந்தாக்கி காலத்தால் அழியாத பல படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பாலு மகேந்திரா.  இவரின் படங்களில் ஓளியும் ஓலியும் பேசினாலும் நமது வாழ்வோடு ஒன்றிய கதைகளை திரையில் கொடுத்து நம்மைக் கட்டிப் போட்டவர் இந்த கேமிராக் கவிஞன். அழியாத கோலங்கள், வீடு, மூன்றாம் பிறை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். தலைமுறைகளில் நடித்த பாலு மகேந்திரா அவர்கள் தனது கனவாக தமிழ் திரைப்படங்களின் ஆவணக் காப்பகம் அமைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார் ஆனால் அவரது இந்தக் கனவு நனவாகுமா என்பது தெரியாமலேயே இயற்கை எய்திவிட்டார்.

இந்த மகா கலைஞனை தமிழ் சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைக்காமல் பெருமை தேடிக்கொண்டவர் தற்போதைய தமிழக முதல்வர் என்ற போதிலும் மதியாதார் தலைவாசல் மிதிக்காத மேதையே உண்மையில் வென்றவர். 

இங்கு அவரின் படங்களில் இருந்து சில பாடல்களை பகிர்ந்து இருக்கிறேன்... கேளுங்கள்... மகா கலைஞனை நினைவில் கொள்வோம்.

படம் : அழியாத கோலங்கள்
பாடல் : நான் எண்ணும் பொழுது...



படம் : அழியாத கோலங்கள்
பாடல் : பூவண்ணம் போல நெஞ்சம்...




படம் : மூடுபனி
பாடல் : என் இனிய பொன் நிலாவே...



படம்: நீங்கள் கேட்டவை
பாடல் : பிள்ளை நிலா இரண்டும்... 



படம் : உன் கண்ணில் நீர் வழிந்தால்
பாடல் : கண்ணில் என்ன கார்காலம்...



படம் : ரெட்டைவால் குருவி
பாடல் : ராஜராஜ சோழன் நான்...



படம் : வண்ண வண்ணப் பூக்கள்
பாடல் : கண்ணம்மா காதல் என்னும்...



படம் : மறுபடியும்
பாடல் : எல்லோரும் சொல்லும் பாட்டு...



படம் : ராமன் அப்துல்லா
பாடல் : உன் மதமா என் மதமா...



பாலு மகேந்திராவின் மேதின பேட்டியில் இருந்து கொஞ்சமாய்....



திரு. பாலுமகேந்திரா அவர்களின் ஆக்கங்கள் இவ்வுலகம் இருக்கும் வரை வரும் இளம் இயக்குநர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

அவரின் பாடல்களைச் சுமந்து தாலாட்டும் இந்தப் பகிர்வை அவருக்கே சமர்ப்பிக்கிறேன்...
-'பரிவை' சே.குமார்.

5 கருத்துகள்:

  1. துயர் தரும் செய்தி இப்போது தான் அவதானித்தேன் :((( சிறந்த இயக்குனர்
    அன்னாரின் ஆன்மா சாந்தி பெற பிரார்த்திப்போம் .

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    அண்ணா.

    என்ன செய்வது இறைவன் யாரை விட்டு வைத்தார் ..... அன்னாரின் ஆத்மா சாத்தியடையட்டும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. அழியாத கோலங்களும் மூன்றாம் பிறையும் என் ஃபேவரைட்ஸ்.

    பதிலளிநீக்கு
  4. இதில் பல பாடல்கள் இன்றும் என் தாலாட்டாய்!
    அருமையான அஞ்சலி !

    பதிலளிநீக்கு
  5. அத்தனையும் சிறப்பான பாடல்கள்.... ஒவ்வொன்றாய் கேட்கிறேன்.....

    த.ம. +1

    பா.ம. அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி