இன்றைய தேர்தல் முடிவுகள் ஆளும் காங்கிரசுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது என்றால் ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது. இந்த வளர்ச்சி என்பது அவர்களின் செயல்பாட்டுக்கு கிடைத்தது என்றாலும் காங்கிரசின் மீதான மக்களின் அதிருப்தி அலையும் சேர்ந்ததுதான் என்பதே உண்மை. இந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள தலைநகரில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் தங்கள் கட்சியின் செயல்பாட்டை வளர்க்க வேண்டும். இந்த மடம் இல்லை என்றால் அந்த மடம் என்ற நிலையை மாற்றும் கட்சியாக உருவாக வேண்டும். இதுவரை தமிழக கட்சிகள் செய்யத் தயங்கியதை செய்து காட்டிய விஜயகாந்த், வாங்கிய ஓட்டுக்களைப் பற்றி கவலைப்படாமல் சொன்னது போல் தலைநகர் வாழ் தமிழர்களுக்காக பாடுபடவேண்டும். காங்கிரஸ் தோற்கவில்லை வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது என்று ஞான தேசிகன் சொல்லியிருக்கிறார். விழுந்துட்டோம் ஆனா எங்க மேல மண்ணே ஒட்டலைன்னு சொன்னா நம்புறதுக்கு நாங்க என்ன காங்கிரஸ் தொண்டர்களா? விரைவில் பெரிய அடியை தமிழக மக்கள் கொடுப்பார்கள் தேசிகரே... அப்போதும் இப்படியே சொல்லுங்கள்.
விலைவாசி என்பது இப்போது கட்டுக்குள் இல்லை என்பதை நினைக்கும் போதே பயமாக இருக்கிறது. இன்று எங்கள் ஊரில் வாரச் சந்தை, காலையில் சந்தைக்குச் சென்ற மனைவி சொன்ன விலைகளைக் கேட்டதும் ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டேன். ஒரு சின்ன சுரைக்காய் - 15 ரூபாய், கால்கிலோ கேரட் - 25 ரூபாய், ஒரு மாதுளம் பழம் - 25 ரூபாய் இப்படி அடுக்கிக் கொண்டே போனார். கொண்டு போன 600 ரூபாயில் ஒரு ரூபாய் கூட மிச்சமில்லை என்ற போது பேசாமல் இந்தப்பக்கமே இருந்துவிடலாம் என்று தோன்றியது.
ஜன்னல் ஓரம் படம் பார்த்தேன். லாஜிக்கே இல்லாமல் ஏகப்பட்ட காட்சிகள் இருந்தாலும் ஆரம்பத்தில் பார்த்திபன் விமல் கூட்டணியின் ரகளையில் கதை பயணித்தது பார்க்கும்படி இருந்தது. எந்த ஊரில் பெண்கள் குளித்துவிட்டு அப்படியே பஸ்ஸில் ஏறி வருகிறார்கள்? இதை இயக்குநர் இரண்டு இடத்தில் வேறு வைத்திருக்கிறார். கொலை, போலீஸ் கைது, கொலையாளியை கண்டுபிடித்தல் எனப் போகும் கதையில் கடைசியில் கொலையாளி இவன்தான் எனும்போது போலீஸ் பக்கமே போகாமல் கதை முடிகிறது. மொத்தத்தில் ஜன்னல் ஓரம் அரசுப்பேருந்தில் பயணிப்பது போலிருந்தாலும் ஒருமுறை பார்க்கலாம் என்ற ரகம்தான்.
எங்க ஊருக்கு விஷால் போனாலே 'நீ குமாரு மகனாடா... அவன மாதிரியே இருக்கே'ன்னு எல்லாரும் கேக்குறாங்களாம். ஒரு வாரம் முன்பு எனக்கு அத்தை முறை வேண்டிய ஒருவர், 'அப்படியே குமாரு மாதிரியே இருக்கேடா'ன்னு சொல்லியிருப்பாங்க போல. உடனே 'நீங்களும் ஆரம்பிச்சிட்டிங்களா... குமாரு மகனா... குமாரு மகனான்னு... தொல்லை தாங்க முடியலை'ன்னு பொரிந்து தள்ளிட்டானாம். உடனே அவங்க 'எங்க மாப்பிள்ளை இப்படியெல்லாம் பேசாது. நீ அது மாதிரி இல்லை' என்று சொல்லிவிட்டார்களாம். ஏன்டா அப்படிச் சொன்னேன்னு கேட்டா, 'ஆமா குமாரு மகனா... குமாரு மகனான்னு கேட்டா... குமாரு மகன்னு தெரியுதுல்ல அப்புறம் எதுக்கு கேக்கிறாங்க... எப்பப் போனாலும் எல்லோரும் இதேதான் கேக்குறாங்க'ன்னு கோபமாச் சொல்லுறான்.. ஊர்க்காரர்கள் எல்லாம் அவனை இப்படி கேட்டுக் கேட்டு சூடாக்கிட்டாங்க போல. இப்போ பிரண்ட்ஸ்கிட்ட பேச சாம்சங்ல சின்னதா டச் போன் வேணுமாம். வாங்கிட்டிங்களாப்பான்னு இப்போ போன் பண்ணிக் கேட்கிறார். படிப்பது யூ.கே.ஜி தான். ஒண்ணும் புரியலை போங்க.
மலையாள சினிமாவா செல்லுலாய்டு பார்த்தேன். மலையாளத்தில் முதல் சினிமா எடுத்த இயக்குநர் ஜே.சி. டேனியலைப் பற்றிய கதை. மலையாளத்தில் அவர் எடுத்த முதல் படத்தில் நாயகியாக ரோசம்மா என்ற கீழ்ஜாதிப் பெண் நடித்ததால் படத்தை ஓட விடாமல் செய்து அந்தப் பெண்ணின் குடும்பத்தை அடித்து உதைத்து வீட்டிற்கு தீவைக்க அந்தப் பெண் அங்கிருந்து தப்பியோடுகிறாள். தான் நடித்த படத்தை பார்க்கவே இல்லை என்பது வேதனையான விஷயம். பின்னர் டேனியலும் தமிழ்நாட்டுக்கு வந்து பல் டாக்டராகி கஷ்டப்பட்டு இறக்கிறார். தான் எடுத்த படத்தின் பிலிம் சுருளை தனது ஆறு வயது மகன் எரித்துவிட, மலையாளத்தின் முதல் சினிமா எரிந்து சாம்பலாக, சாதி ஆதிக்கத்தில் வேறொருவரின் படம் முதல்படமாக, ஒரு பத்திரிக்கை ஆசிரியர் முதல்படம் டேனியல் எடுத்த விஹத குமாரன்தான் என உலகுக்கு வெளிப்படுத்துகிறார். நல்லதொரு படம்.
-மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.
கேட்டுக் கேட்டு சூடாக்கிட்டாங்க போல...
பதிலளிநீக்குநல்லது நன்றி...
கேப்டன் வாழ்க
பதிலளிநீக்குதேர்தல் முடிவுகள் நல்லதொரு பாடத்தை தரும் என நம்புவோம்....
பதிலளிநீக்குநிகழ்வுகளின் அலசல்கள் மிகவும் அருமை சகோதரரே..
பதிலளிநீக்குதேர்தல் முடிவுகள் படிப்பினையைத் தரும் என்று நம்புவோம்
பதிலளிநீக்குபல்வேறு மலர்களால் தொடுக்கப்பட்ட கதம்ப சரம்!.. இனிய நறுமணம்!..
பதிலளிநீக்குமற்றபடி - மகன் கேட்ட சாம்சங் !.. மறந்து விடாதீர்கள்!..