தீபாவளிக்கு இரண்டு நாள் முன்னதாக வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தலயின் ஆரம்பம் குறித்தான பல்வேறு விதமான விமர்சனங்கள் இணையத்தில் வந்துவிட்டன. இது ஆரம்பம் குறித்த விமர்சனப்பதிவு கிடையாது. எனது பார்வையில் ஆரம்பம் என்பதாகத்தான் இருக்கும்.
* அஜீத் தலைக்கு மை வைக்காமல் மங்காத்தாவில் வந்தது போல் இதிலும் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் நடித்திருக்கிறார்.
*டாஸ்மார்க்கில் ஒரு பாட்டாவது வேண்டும் என்ற சந்தானம் போன்ற காமெடியன்கள் மற்றும் சரக்கை வைத்த காலத்தை தள்ள வேண்டும் என்ற தற்போதைய சினிமா கோட்பாடுகளை உடைத்து தண்ணி, சிகரெட் இல்லாத சினிமாவாக வந்திருக்கிறது.
* அஜீத் இதில் டூயட் பாடவில்லை. நண்பனின் தங்கையாக இருந்தும் தன்னுடன் நெருங்கிப் பழகினாலும் நயன்தாராவைக் காதலிக்கவில்லை. அவருடன் கனவில் பாடல் பாடும் வாய்ப்பிருந்தும் தவிர்த்திருக்கிறார்.
* அஜீத் படத்தில் பெரும்பாலும் குட்டிக்குட்டி வசனங்கள்தான் பேசுகிறார். அத்தனையும் கைதட்டல் பெறுகின்றன. அதேபோல் அவர் வரும் காட்சிகளில் விசில் பறக்கிறது.
* காரில் இருந்து குதிக்கும் காட்சியில் டூப் இல்லாமல் நடித்திருக்கிறார். அவரது நடையில் அரங்கை அதிர வைக்கிறார்.
* குண்டுப் பையனாக வரும் ஆர்யா ரசிக்க வைக்கவில்லை. அஜீத்திடம் மாட்டிக் கொண்டு தப்பிக்க நினைக்கும் இடங்களிலும் அஜீத்தைப் பற்றி நயன் சொல்லக் கேட்டு அவருடன் இணைந்து செயல்படும் இடங்களிலும் நன்றாக செய்திருக்கிறார்.
* நகைச்சுவை நடிகர் இல்லாத குறையை சில இடங்களில் ஆர்யா தீர்த்து வைக்கிறார்.
* வெள்ளாவி வச்சி வெளுத்த டாப்ஸி, இதில் கொஞ்சம் நடித்திருக்கிறார். ஆடுகளத்தில் இருந்த அந்த பளபளப்பும் முகப் பொலிவும் இதில் மிஸ்ஸிங். பேபி.. பேபி என்று சில இடங்களில் ரசிக்க வைக்கிறார்.
* நயன்தாரா இதிலும் சிறப்பாகச் செய்திருக்கிறார். சொந்த வாழ்க்கையில் சிம்பு, பிரபுதேவா, ஆர்யா என சுழன்று சுழன்று அவரைத் தாக்கினாலும் தான் ஒரு சிறந்த நடிகைதான் எனக்குள் இருக்கும் பிரச்சினைகள் பற்றி கவலையில்லை என்பது போல் அசால்ட்டாக நடித்திருக்கிறார்.
* நயன் ஒரு காட்சியில் கவர்ச்சி மழை பொழிந்து இருக்கிறார். இயக்குநர்கள் நயனுக்கு ஏன் கோடிகளை அள்ளிக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பது அதைப் பார்க்கும் போதுதான் தெரிகிறது.
* நல்ல போலீஸாக எதார்த்த நடிகன் கிஷோர். மனிதர் பட்டையை கிளப்பி இருக்கிறார்.
* வில்லன் மந்திரியாக நடித்திருப்பவர் நன்றாகச் செய்திருக்கிறார். அவருக்கு உதவும் காவல்துறை கருப்பு ஆடாக அதுல் குல்கர்னி தன் பங்கை நன்றாகச் செய்திருக்கிறார்.
* அஜீத் நண்பனாக, நயனின் அண்ணனாக சில காட்சிகள் வந்து துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகும் ராணா மனதில் நிற்கிறார்.
* வாணி விஸ்வநாத் வில்லன்களுடன் வரும் வில்லியாக வந்து உயிரை விடுகிறார்.
* 'மேக் இட் சிம்பிள்' என்ற வசனத்தை இதில் அடிக்கடி சொல்கிறார் அஜீத்.
* கார் மற்றும் போட் சேசிங் காட்சி ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருக்கிறது. அஜீத் இந்தக் காட்சிகளில் கலக்கியிருக்கிறார்.
* பின்னணி இசை பல இடங்களில் பொய்த்தாலும் அஜீத் வரும் போதெல்லாம் தூள் பறக்கிறது. பாடல்களும் கேட்கலாம் ரகம்தான். அஜீத் படங்களுக்கென பிரத்தியோகமாக இசை அமைப்பார் போல் இசைஞானியின் வாரிசு.
* தனது படங்களின் காட்சி அமைப்பில் அதிகம் கவனம் செலுத்தும் விஷ்ணுவர்தன் இதிலும் பட்டையை கிளப்பியிருக்கிறார்.
*படத்தின் கதை நாட்டில் நடக்கும் ஊழலை பற்றி அமைந்திருப்பதால் அரசியல் சாயம் வந்துவிடாமல் கவனமாக கையாண்டிருக்கிறார் இயக்குநர்.
* நகைச்சுவைக் காட்சிகள் இல்லாது போனாலும் விறுவிறுப்பாக படம் செல்வதால் போரடிக்கவில்லை.
*இடைவேளை வரை பரபரப்பாக செல்லும் படம் இடைவேளைக்குப் பின்னர் கொஞ்சம் மெதுவாக நகர்வது போல் தெரிகிறது. பின்பாதி கதையில் சற்று கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
* படத்தின் குறைகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடுகிறார் தல என்பதே உண்மை.
* வசனம் பேசத்தெரியாது... கோட்டை மாட்டிக் கொண்டு நடப்பார் என்று பேசுபவர்கள் எல்லாம் இந்தப்படம் பார்த்தால் தெரியும் அவரது கண்களும் நடிப்பது.
* இந்த மாதிரிப் படங்களில் இருந்து சற்று விலகி இன்னும் நல்ல படங்களை கொடுத்தால் அஜீத்துக்கு நல்லது. இது போன்ற கதைகளுக்கு நிறைய கதாநாயகர்கள் வந்து போயிருக்கிறார்கள். சிலர் இன்னும் இருக்கிறார்கள்.
* ஆரம்பம் தல ரசிகர்களுக்கு தீபாவளி பட்டாசு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மற்றவர்களுக்கு பார்க்கலாம் என்றே தோன்றும் ரகம்தான்.
* தல படம் என்பதால் தீபாவளி அன்று இரவுக் காட்சி தியேட்டரில் சென்று பார்த்தோம்.
*ஆர்யா கோபத்தில் அஜீத்தை 'யோவ்' என்று விளிக்கும் இடத்தில் தியேட்டரில் இருந்த தல விசுவாசி 'டேய் தலய பார்த்து என்ன சொன்னே...' என்று கத்தினார்.
* தல... தலன்னு கத்தலும், விசிலுமாக நம்ம ஊரில் பார்ப்பது போல் இருந்தது.
-'பரிவை' சே.குமார்.
அன்பின் குமார்.. தங்களின் கண்ணோட்டம் நன்று!..
பதிலளிநீக்குEnjoyed reading your review.
பதிலளிநீக்குதல ரசிகரின் ஆரம்பம் பார்த்த அனுபவம் நன்று......
பதிலளிநீக்குசினிமா பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.
நிதானமாக எழுதப்பட்டாலும் அருமையான விமர்சனம்
பதிலளிநீக்குநீங்கள் எழுதியிருப்பதை ரசித்தேன்...சீக்கிரம் படத்தை பார்த்துடனும்..
பதிலளிநீக்குதொடர்கதை என்னச்சு,இல்ல நான் தான் தீபாவளி பிஸியில் படிக்கவில்லையா??
ஒரு க்ரை தொடர்கதை எழுதுங்களென் இதெல்லாம் படிக்க எனக்கு ரொம்ப ஆர்வம்,நேரம் கிடைக்கும் போது நிச்சயம் பின்னூட்டமிடுவேன்,நன்றி சகோ!!
நல்ல,நடு நிலையான விமர்சனம்.நான் கூட தல ரசிகன் தான்.முகப் புத்தகத்தில கூட,என்னோட பகிர்வு..............ஒரு தடவ பாக்கலாம் கிறது தான்!
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே..
பதிலளிநீக்குஅஜித் அவர்களிம் ஆரம்பம் படத்தினை நன்றாகவே அலசியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். //விசிலும் சத்தமாக நம்ம ஊரு மாதிரியே இருந்தது// மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி.
உங்களின் விரிவான விமர்சனம் 'ஆரம்பம்' திரைப்படத்தை உடனே பார்க்கத்தூண்டுகிறது!!
பதிலளிநீக்குவாங்க துரை அண்ணா...
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சகோதரி வாணி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குவாங்க வெங்கட் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க முத்துராசன் அண்ணா.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சகோதரி. மேனகா...
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சகோ. யோகராஜா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குவாங்க சகோ. பாண்டியன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மனோ அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குபொதுவா அதிகம் பார்ப்பதில்லை! என்
பேரனின் வேண்டுகோளுக்காக இதை பார்க நேர்ந்தது! அவ்வளவுதான்!