இயற்கை அன்னை
அரவணைப்பில்
பசுமை நிறைந்தது
எங்கள் ஊர் என
பொய்யுரைக்க மனமில்லை..!
ஒரு காலத்தில்
பசுமையோடு
இருந்த இடம்
இன்று பாலைவனமாய்..!
கருவேல மரங்களின்
கட்டுப்பாட்டிற்குள்
விளை நிலங்கள்..!
மழையின் போது
நிறைமாத கர்ப்பிணியாகும்
கண்மாயில்
பாசிகளின் பவனியால்
மனிதர்கள் நனைவதில்லை..!
குடிநீர்க் குளமோ
தாகமெடுத்தால்
தண்ணீர் தேடும்
அவல நிலையில்..!
பராமரிப்பின்றி
பாவமாய்
ஊர்க்காவல் தெய்வம்..!
வீட்டுக் கொன்றாய்
வாழ்ந்த மனிதர்கள்..!
வருடம் ஒருமுறை
எட்டிப்பார்க்கும் வாரிசுகள்..!
எது எப்படியோ
இன்னும் உயிர்ப்புடன்
அடி வாங்கி
தண்ணீர் கொடுக்கும்
அடி குழாய்..!
*** நெடுங்கவிதைகள் தளத்தில் கிறுக்கியது.... மீள்பதிவாக
-'பரிவை' சே.குமார்
யதார்த்தமான உண்மைகள்...
பதிலளிநீக்குஇனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஇன்று : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html
இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஇன்று : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html
வணக்கம்
பதிலளிநீக்குகவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்;
பதிலளிநீக்குமறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?
எல்லா கிராமங்களும் இப்படித்ததான் உள்ளது நீங்கள் அங்கு வசிப்பதே கிராமத்திற்கு சிறப்புதானே
பதிலளிநீக்குTyped with Panini Keypad
எல்லா கிராமங்களும் இப்படித்ததான் உள்ளது நீங்கள் அங்கு வசிப்பதே கிராமத்திற்கு சிறப்புதானே
பதிலளிநீக்குTyped with Panini Keypad
உங்கள் ஊர்...எங்கள் ஊர்... நம்ம ஊர்!
பதிலளிநீக்குஅலங்காரம் அரிதாரம் இல்லாத அழகு
பதிலளிநீக்குஉண்மையில் போற்றத் தக்கதே .....
உண்மைதான் சகோ!
பதிலளிநீக்குஎங்களூர் எங்கள் கிராமம், எங்கள் வீடு என்று
காலம் போகிற போகில் இப்படி நினைத்துப்
பெருமூச்செற்றிதலுடன் எம் வாழ்வும் தொலைகிறதே...
நல்ல நினைவுடன் வருந்தும் பதிவு!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
வறண்ட கிராமம் ஆயினும் பிறந்த கிராமம் நம்மை ஈர்க்கும்! அருமை!
பதிலளிநீக்குநல்ல கவிதை குமார். நிதர்சனம் இதுவே.
பதிலளிநீக்குஇனிய தீபாவளி வாழ்த்துகள்!
நல்ல கவிதை குமார். நிதர்சனம் இதுவே.
பதிலளிநீக்குஇனிய தீபாவளி வாழ்த்துகள்!
வணக்கம் சகோதரரே..
பதிலளிநீக்குஉண்மைகள் அடங்கிய யதார்த்தம் ததும்பிடும் அழகிய பதிவு. பகிர்வுக்கு நன்றி..
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
உண்மை,உங்கள் ஊர்...எங்கள் ஊர்... நம்ம ஊர்!
பதிலளிநீக்குஇதயம் கனிந்த தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇன்றைய அவல நிலையை அழுத்தமாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்
பதிலளிநீக்குஎப்படியோ உங்க ஊரில் தண்ணீராவது கிடைக்கிறதே மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஎங்க ஊரை நினைவுப்படுத்தி போன வரிகள்.