சனி, 26 அக்டோபர், 2013

சன்னலோரப் பயணம்



எப்பொழுதும் விரும்பும்
சன்னலோர பேருந்துப்
பயணத்தில் 
இப்போதெல்லாம்
மனசு லயிப்பதில்லை...

பசுமை போர்த்திய
வயல்களெல்லாம்
கட்டிடங்களையும்
கருவை மரங்களையும்
சுமந்து தவிக்கின்றன...

கடந்து செல்லும்
சாலையோர மரங்கள்
காணாமல் போய்
மூங்கிலோ... சவுக்கோ...
இரும்போ சுமந்த
கட்சிக் கொடியும்
சாதிக் கொடியும்
ஆங்காங்கே 
கடந்து செல்கின்றன...

சலசலவென 
தண்ணீரோடிய
வாய்க்காலெல்லாம்
சுயமிழந்து வறண்டு
வாடிக்கிடக்கின்றன...

கையாட்டியபடி
செல்லும் சிறார்கள்
இலவச பேருந்திலோ...
பள்ளிப் பேருந்திலோ...
பயணிக்க பழகிவிட்டனர்...

ஒட்டிய தேகத்தில்
சுற்றிய ஆடையுடன்
மூங்கில் கழிகொண்டு
ஆடு, மாடுகளை
விரட்டிச் செல்லும்
முதிர்ந்த மனிதர்களைக்
காண முடிவதில்லை...

கடந்து செல்லும்
வாகனங்கள் எல்லாமே
அவசர கதியில்
பயணிக்கின்றன...

சன்னலோர இருக்கையும்
வெப்பக் காற்றில்
வெம்ப ஆரம்பிக்க...

இப்போதெல்லாம்
சன்னலோரப் பயணத்தில்
மனம் லயிப்பதேயில்லை...
-'பரிவை' சே.குமார்.

23 கருத்துகள்:


  1. உண்மைதான் குமார்! இயற்கையின்
    அழகு எப்போதோ போய் விட்டது!

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா26/10/13, 10:02 AM

    ஆனால் என் மனம் உங்கள் சன்னலோர பயணக்
    கவிதையில் லயித்துப் போனது.

    பதிலளிநீக்கு
  3. அதெல்லாம் கடந்த காலம் ..,பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்னு ரசிக்கிற காலம் இது !
    த,ம 4

    பதிலளிநீக்கு
  4. இப்போதுதான் Ipad இலும் Iphone இலும் லயித்து விடுகின்றதே.காலம் ஓடிக்கொண்டிருக்கும் போது கடந்து வந்த பாதைகள் நிழலாகவே எம்மத்தியில் தொடரும். போன நினைவுகளை மட்டுமே தங்க வைக்க எம் இதயம் உத்தரவு போடும்

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் சொல்வது சரிதான் சாலையோர பசுமைக்களை எங்கும் காணத்தான் முடியவில்லை...!
    என்னது எப்போதும் மலரும் நினைவுகளாவே இருக்கு... ? நிகழ் காலத்தில் ரசிக்க ஒன்றுமே இல்லையா சார்?

    பதிலளிநீக்கு
  6. நிஜம்தான். இப்போலாம் பேருந்து பயணமே கசக்கிறது

    பதிலளிநீக்கு
  7. இழந்துபோன இயற்கை வனப்புகள் ஏராளம்...

    சொல்லிச் சென்ற வரிகளில் மனம் இன்னும் நிற்கிறது...

    அருமை!
    வாழ்த்துக்கள்!

    த ம.4

    பதிலளிநீக்கு
  8. வாங்க ஸ்ரீராம் அண்ணா...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க புலவர் ஐயா...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வாங்க சகோ.ஸ்ரவாணி...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க தனபாலன் சார்...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வாங்க பகவான்ஜி...
    பாருங்க பேருந்தில் நீ எனக்கு சன்னலோரம்ன்னுதான் சொல்றோம்...நாம சன்னலோர சீட்ல உக்காரலையில்ல... அதைத்தான் நான் சொல்லியிருக்கேன்... ஹி...ஹி.. (சமாளிப்பு)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வாங்க உஷா அக்கா...
    இது மலரும் நினைவு இல்லை...
    எங்க ஊருக்கு பஸ்செல்லாம் கிடையாது...
    இது இப்போது இருப்பதை சொல்லும் கவிதைதானே...
    ஒருவேளை ஊரில் இருந்தால் ரசிக்கலாம் என்று நினைக்கிறேன்... இங்கு இருப்பதால் ஊரில் ரசித்ததை அசை போடுகிறது மனசு...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  12. வாங்க சகோ. சந்திரகௌரி...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க சகோ.ராஜி...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க சகோ. இளமதி...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. சக மனிதனிடம் மனம் லயித்து அன்பு கூர்வதைக் கூட மறந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில் - ஜன்னலோர காட்சிகளை ரசிப்பதா!...

    எனினும்..தாங்கள் வடித்த கவிதை அழகு!..

    பதிலளிநீக்கு
  14. உண்மையான வார்த்தைகள். நாற்கர சாலைகளுக்காக மரங்கள் காவுபட அவசர உலகில் பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கின்றது உலகம்! ஜன்னலோர காட்சிகள் இனி வேதனைதான்! அருமையான படைப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  15. அருமையான கருத்து. ஆசாகான கவிதை. - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை (த.ம.)

    பதிலளிநீக்கு
  16. இன்றைய பயணத்தை அருமையாக சொன்னீர்கள்... முக்கியமாய் கட்சிக்கொடிகள் பற்றி....

    பதிலளிநீக்கு
  17. அருமையான கவிதை. மரங்களும் வயல்களும் இருந்த இடத்தில் காங்க்ரீட் காடுகள்.... பார்க்கவே வருத்தம் தான் மிஞ்சுகிறது மனதில்!

    பதிலளிநீக்கு
  18. உண்மை!நிலக் கபளீகரம் எங்கே கொண்டு சென்று வருங்கால சந்ததியை நிறுத்தப் போகிறதோ?

    பதிலளிநீக்கு
  19. வாஸ்தவம்தான்.எதுவுமே நிச்சயமற்ற சமூகமாகிப்போனபின் நீங்கள் கூறியிருப்பதெல்லாம் ஜன்னலோரத்தில் நாம் அமராவிட்டாலும் நடக்கும் நிச்சயம்/நன்றி வணக்கம்./

    பதிலளிநீக்கு
  20. உங்களுக்கு கவிதை எழுதும் தகுதியுள்ளது.

    (நாலு வார்த்தை)

    பதிலளிநீக்கு
  21. உண்மைதான்

    நாம் இழப்பது எது பெறுவது எது என்பபதை காலம்தான் சொல்ல வேண்டும்
    பாப்போம்

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி