நீயும் நானும்
காதலித்த தருணங்களில்
வாய் ஓயாது
பேசியபடி நீயும்...
ரசித்தபடி நானும்...
சாலையில் வருவோர்
பற்றிய கவலையின்றி
செல்வோமே..!
மழையில் நனைந்து
நான் வரும்
வேளைகளில்
துப்பட்டா துறந்து
துடைப்பாயே..!
உனக்குப்
பிடிக்காத போதும்
எனக்காக
நண்பன் வீட்டில்
மீன் சமைத்தாயே..!
எல்லாம் எனக்கு
மீண்டும் வேண்டும்..!
வயசையும்...
வாரிசுகளையும்...
காரணம காட்டி
காதலைக்
கட்டிப் போட்டுவிட்டாயே...
நியாயமா..?
(2010 நெடுங்கவிதைகள் தளத்தில் கிறுக்கியது...)
-'பரிவை' சே.குமார்
அருமையான கவிதை.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குகுமார்(அண்ணா)
வயசையும்...
வாரிசுகளையும்...
காரணம காட்டி
காதலைக்
கட்டிப் போட்டுவிட்டாயே...
நியாயமா..?
என்ன வரிகள் நன்று நன்று மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நியாயமல்ல
பதிலளிநீக்குகாதலித்த போது தேவதைன்னு சொன்னீங்க ,இன்னைக்கி தேவைதானான்னு நினைக்காம அதே காதலோட சொல்லிப் பாருங்க ...நியாயம் கிடைக்கும் !
பதிலளிநீக்குநீ இப்பதான் ரொம்ப அழகா இருக்கே பிள்ள என்று சொல்லி பாருங்க குமார்.
பதிலளிநீக்குஅதானே...? இதெல்லாம் நியாயம் கிடையாது... ஹிஹி
பதிலளிநீக்குநல்ல கவிதை
பதிலளிநீக்குஅழகான கவிதை. நியாயமான கேள்வி இதே கேள்வியை ஆணும் பெண்ணும் மாறி மாறி கேட்டுக்க வேண்டியது தான்.
பதிலளிநீக்குஆதாம்- ஏவாள் ஜோடிக்குப் பின்னே அடுத்த ஜோடி இது தான்
பதிலளிநீக்குஎன்று ஊர் சொல்லும் அளவிற்கு நிலைமை கட்டாயம்
மாறத் தான் வேண்டும்.
கவிதை நல்லாயிருக்கு.
பதிலளிநீக்குகாலங்கள் உருண்டோடுகின்றன எண்ணங்கள் அங்கேயே நிற்கின்றன
பதிலளிநீக்குஇருந்தும் உங்கள் கேள்வியில் நியாயம் இருக்கிறது குமார்
நல்லத்தாயிருக்கு
பதிலளிநீக்குகாதலுக்கு எது வயது? :))
பதிலளிநீக்குகருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
பதிலளிநீக்கு