எத்தனையோ நினைவுகளைச்
சுமந்திருக்கும் நெஞ்சுக்குள்ளே
அத்தனைக்கும் நடுவே
எப்போதும் இளமையாய்...
காலை நேர பனித்துளியாய்...
குளிருக்கு இதமான தேநீராய்...
ஜன்னலோரத்துச் சாரலாய்...
பின்னிரவுத் தென்றலாய்...
பசுமை நிறைந்த வயல்வெளியாய்...
மடை திறந்த வெள்ளமாய்...
மனதை வருடும் இசையாய்...
மனம் மயக்கும் மல்லிகையாய்...
குழந்தையின் மழலையாய்...
கொட்டும் அருவியாய்...
கீறல் விழுந்த ரெக்காடாய்...
இப்படி எப்பொழுதும்
என்னுள்ளே கவித்துவமாய்
பூத்துக்கிடப்பவளே...
உன்னில் நானும்
என்னில் நீயுமாய்
வாழ்ந்து களிக்கும்
அன்பின் வாசத்தை
நினைவுகளில்
சுமந்தேனென்பதா..?
அல்லது
நினைவுகளில்
பூத்திருக்கிறதென்பதா..?
அப்படியோ...
இப்படியோ...
எப்படிச் சொன்னாலும்
நம் காதல்
நகைப்புக்குரியதாகிவிடாதா..?
(தமிழ்க்குடிலுக்காக எழுதியது)
-'பரிவை' சே.குமார்.
ம்.. நல்லது...
பதிலளிநீக்குநல்லதாய் முடியும்... காத்திருங்கள்
பதிலளிநீக்குசிறப்பான கவிதை. ரசித்தேன்.
பதிலளிநீக்குசிறப்பான கவிதை. ரசித்தேன்.
பதிலளிநீக்குஅதானே...? முடிவில் சொன்னவிதம் அருமை...!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
நன்றாக இருக்கிறது!இருக்கும்!!!
பதிலளிநீக்கு