செவ்வாய், 5 ஜூன், 2012

மூடு பனி - அதீதத்தில்

அதீதம் இதழில் வெளியாகும் இரண்டாவது சிறுகதை இது. இந்தக் கதையை வெளியிட்ட ஆசிரியர் குழுவிற்கும் நண்பர் எல்.கே அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

என்னைப் பற்றி, அதுவும் என் கல்வித் தந்தையின் பெயரோடு  சிறு குறிப்புடன் என் கதை வெளிவந்திருப்பதில் எல்லை இல்லா சந்தோஷம். அதீதம் ஆசிரியர் குழுவிற்கு சிரம் தாழ்ந்த நன்றி.

அதுவும் அப்பாதுரை, கோபால்கண்ணன் (மனவிழி - சத்ரியன்)  போன்ற மலைகளுடன் எனது கதையும் வெளியாகியிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி.

இனி மூடுபனிக்குள் பயணிப்போம்.

ழைய அட்லஸ் சைக்கிள் வேலுச்சாமியின் மிதிக்கிணங்க ‘கீச்… கீச்…’ என்று தாளநயத்துடன் போய்க் கொண்டிருந்தது. ஆனால் எப்பவும் சைக்கிளை வேகமாக மிதிக்கும் அவர் இன்று வேண்டா வெறுப்பாக மிதித்துக் கொண்டிருந்தார். அதற்கும் காரணம் இருந்தது. அதை நினைக்கையில் நெஞ்சு தடக் தடக்கென்று எக்ஸ்பிரசாக மாற, வாய் ‘சை என்ன வாழ்க்கை … எவன் எவங்கிட்டயோ பேச்சு வாங்கி… நாறப்பொழப்பு பொழக்க வேண்டியிருக்கு…’ என்று தானாக முணுமுணுத்தது.

படபடப்பாக வரவும் சைக்கிளை விட்டு இறங்கி ஸ்டாண்ட் போட்டுவிட்டு ரோட்டோரம் இருந்த வாகமரத்தடியில் ஒண்ணுக்கு இருந்துவிட்டு சொக்கலால் பீடியை பத்தவைத்து இழுத்ததும் கொஞ்சம் ஆசுவாசமாக இருப்பதுபோல் தோன்ற மீண்டும் சைக்கிளை மெதுவாக மிதிக்க ஆரம்பித்தார்.

சைக்கிள் முன்னால் செல்ல அவரின் மனசு மெல்ல பின்னால் சென்றது…

தொடர்ந்து வாசிக்க இந்த சுட்டியை தட்டுங்கள்.


-'பரிவை' சே.குமார்.

14 கருத்துகள்:

  1. குமார், வாழ்த்துக்கள். பெயரை போடச் சொல்லுங்கள். பெயர் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    உங்கள் இடுகை பிரபலமடைய எமது ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
    http://www.valaiyakam.com/page.php?page=votetools

    நன்றி

    வலையகம்
    http://www.valaiyakam.com/

    பதிலளிநீக்கு
  3. சகோதரி வாணிக்கு

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    பெயரிடாததால் எனக்கு தெரியப்படுத்தவும் இல்லை.

    ஜூன் 1 அன்று வந்துள்ளது. நான் 3ஆம் தேதி தான் பார்த்தேன். பெயரில்லை. நண்பர் எல்.கே அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அவரும் சரி செய்வதாக சொன்னார். பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  4. அதீதத்தில்...

    நண்பர் யோகா.S சொன்னது...
    அருமையான கதை.யதார்த்தத்தை அப்படியே புட்டுப்,புட்டு ……………………ஹும்!

    வாங்க நண்பரே
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

    -----------------------------------

    சகோதரி. ஆனந்தி சொன்னது...
    அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

    வாங்க சகோதரி...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. திரு.அப்பாதுரை சொன்னது...

    மிக நேர்த்தியாகச் சென்று கடைசி வரி அருமையான முத்தாய்ப்பாக முடிந்த கதை. பாராட்டுக்கள்.

    வாங்க சார்...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ------------------------------------------------------------

    அக்கா ஆசியா உமர் சொன்னது...
    எதார்த்தமான எழுத்து நடையில் கதை நல்லாயிருக்கு.முடிவில் வேலுச்சாமியின் ஆதங்கம் அழகாய் வெளிப்பட்டிருக்கு.

    வாங்க அக்கா...
    இங்கும் வாழ்த்தி, மின்னஞ்சலிலும் வாழ்த்தியமைக்கு நன்றி.
    உங்கள் பாராட்டு எப்பவும் எனக்கு கிடைக்கும் சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கள்!! அழகான எழுத்து நடையில் கதை மிக அருமை+பாராட்டுக்கள்!!

    பதிலளிநீக்கு
  7. இயல்பான எழுத்துநடை குமார்....கதையின் முடிவில் ஒருவரது மனநிலையை அழகாகச் சொல்லி முடித்திருக்கிறீர்கள்.பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
  8. சிறப்பான சிறுகதை குமார். வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  9. வாங்க சகோதரி ஹேமா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க மேனகாக்கா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வாங்க ராமலெக்ஷ்மி அக்கா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


    கூகிள்சிறி.கொம்...
    கண்டிப்பாக பகிர்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  11. அதீதத்தில் சீனா ஐயாவின் கருத்து:

    அன்பின் குமார் – கதை செல்லும் பாதை நன்று. கடன்பட்டார் நெஞ்சம் கலங்குவது விவரிக்கப் பட்டிருக்கும் விதம் நன்று. என்ன செய்வது ….. இறுதியில் ஆதங்கம் வெளிப்பட – தூணுறை மறந்து நடக்க……. நல்ல கதை – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. உங்களது கருத்துக்கள் எனக்கு உரம். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  12. வாழ்க்கையின் அவலத்தை மிக அழகாக யதார்த்தமாக எடுத்துச் சொல்கிறது கதை.
    நன்று

    பதிலளிநீக்கு
  13. வாங்க ஐயா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. அதீதத்தில்....

    சகோதரி ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி சொன்னது...

    அடக் கடவுளே, பாவம்ன்னு இல்லே நினைத்தேன். நல்லாயிருக்கு

    உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி