பட்டாடை உடுத்தி
பல்வகை இனிப்பு உண்டு
பந்தங்களுடன் பாட்டாசு வெடித்து
பகட்டாக கொண்டாடினாலும்...
புதுத்துணி உடுத்தி
இட்லியுடன் சில இனிப்பும்
சில்லறை வெடிகளுமாய்
நடுத்தரமாக கொண்டாடினாலும்...
இருப்பதில் புதிது உடுத்தி...
இருப்பதை மகிழ்ந்து உண்டு
வெடிப்பதை பார்த்து மகிழ்ந்து
ஏழ்மைத் தீபாவளி கொண்டாடினாலும்...
ராமநாதன் கொடுத்த துணி அணிந்து
சாந்தியக்கா கொடுத்த இட்லியும்
சிந்தாமணி கொடுத்த சில வடையும்
சிக்கனமாய் சாப்பிட்டு
சுப்ரமணி மகன் வெடித்த வெடியில்
வெடிக்காததை தீயிலிட்டு வெடிக்க வைத்து
இல்லாமை தீபாவளி கொண்டாடினாலும்....
கிடைக்கும் சந்தோஷத்தில்
உயர்வேது... தாழ்வேது...
உள்ளத்தின் மகிழ்ச்சியில்
எல்லையில்லா இன்பத்தை
எல்லோருக்கும் கொடுக்கட்டும்
இத் தித்திக்கும் தீபாவளி...
என் இனிய உறவுகள் அனைவருக்கும்
உள்ளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
கொண்டாடுங்கள்... சந்தோஷமாய் இருங்கள்.
இத்தினம் மட்டுமல்ல...
இனி மலரும் தினங்கள் எல்லாம் மகிழ்வை
மலரச் செய்யட்டும்.
மலரச் செய்யட்டும்.
தன்மானமிக்க நட்புக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல் தமிழ்மணம் ஓட்டுப் பட்டையை நீக்கியுள்ளேன்.
வாழ்த்துக்களுடன்,
-‘பரிவை’ சே.குமார்.
Thanks: Google (Photos)
நண்பர் குமார் அவர்களுக்கு, நலம், நலமறிய ஆவல். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயங்கனிந்த தீபஒளி திருநாள் வாழ்த்துகள். இந்நன்னாளில் சந்தோசமும் மகிழ்ச்சியும் பெருகட்டும்.
பதிலளிநீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
பதிலளிநீக்குஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயங்கனிந்த தீபஒளி திருநாள் வாழ்த்துகள். இந்நன்னாளில் சந்தோசமும் மகிழ்ச்சியும் பெருகட்டும்.
பதிலளிநீக்குRead more: http://nanjilmano.blogspot.com/2011/10/blog-post_3230.html#ixzz1brzDs7Nh
தன்மான தமிழன்டா....!!!!
பதிலளிநீக்குகவிதை சூப்பரோ சூப்பர்ப்....!!!
பதிலளிநீக்குமகிழ்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
பதிலளிநீக்குயதார்த்தமான அருமையான கவிதை.
பதிலளிநீக்குமனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்
உங்களுக்கும் வாழ்த்துகள் குமார்.
பதிலளிநீக்குநல்லா எழுதி இருக்கீங்க :))
கிடைக்கும் சந்தோஷத்தில்
பதிலளிநீக்குஉயர்வேது... தாழ்வேது...
உள்ளத்தின் மகிழ்ச்சியில்
எல்லையில்லா இன்பத்தை
எல்லோருக்கும் கொடுக்கட்டும்
இத் தித்திக்கும் தீபாவளி...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள் குமார்.
இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்! ////தன்மானமிக்க நட்புக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல் தமிழ்மணம் ஓட்டுப் பட்டையை நீக்கியுள்ளேன்.////எப்போதோ எடுத்திருக்க வேண்டிய முடிவு.தீபாவளி தினத்தில் இந்த அறிவிப்பை விடுத்ததும் ஒரு வகையில் நரகாசுர வதம் தான்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே!
பதிலளிநீக்குதீபாவளி தீபாவளி தான்!
பதிலளிநீக்குஉங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!
//
பதிலளிநீக்குதன்மானமிக்க நட்புக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல் தமிழ்மணம் ஓட்டுப் பட்டையை நீக்கியுள்ளேன்.//
தரமான எழுத்துக்கு என்றும் மதிப்புண்டு. முடிவை வரவேற்கிறேன்..........
ஓட்டுபட்டை நீக்கினாலும் தானியங்கி மூலமாக தமிழ்மணத்தால் உங்கள் பதிவு திரட்டப்படுமே ;-)
அருமையான கவி வரிகள்
பதிலளிநீக்குதீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்
//கிடைக்கும் சந்தோஷத்தில்
பதிலளிநீக்குஉயர்வேது... தாழ்வேது...//
நச்........நச்.......
மனம் நிறைந்த தீபத்திருநாள் வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் !
பதிலளிநீக்குகுட்
பதிலளிநீக்குஅருமை தம்பி, அழகான கவிதை.என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு//ராமநாதன் கொடுத்த துணி அணிந்து
சாந்தியக்கா கொடுத்த இட்லியும்
சிந்தாமணி கொடுத்த சில வடையும்
சிக்கனமாய் சாப்பிட்டு
சுப்ரமணி மகன் வெடித்த வெடியில்//
இவுக எல்லாம் யாரு..
ஆமினா said...
பதிலளிநீக்கு//
தன்மானமிக்க நட்புக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல் தமிழ்மணம் ஓட்டுப் பட்டையை நீக்கியுள்ளேன்.//
ஓட்டுபட்டை நீக்கினாலும் தானியங்கி மூலமாக தமிழ்மணத்தால் உங்கள் பதிவு திரட்டப்படுமே?///அதனாலென்ன,த.ம. வும் நாலு காசு பார்க்கட்டுமே???
ஆஹா ! இப்ப தான் கடைசி செய்தியை பார்த்தேன்.மகிழ்ச்சி.நானும் போடுட்டேன்..தம்பி..
பதிலளிநீக்கு