ஞாயிறு, 31 ஜூலை, 2011

வாழ்க்கை முழுமையானதா? பகுதி-II

  

முதல் பகுதி படிக்காதவர்களுக்காக... 


ஒரு அரசியல்வாதி நாட்டை ஆண்டு மறைந்தான் என்றால் இப்படி ஒருத்தன் இருந்தான் நாட்டு மக்களுக்கு செய்தானோ இல்லையோ வாரிசுக்குச் செய்தான் என்று அவன் வரலாறு பல காலம் பேசப்படும். அப்படிப் பேசப்பட்டால் அந்த அரசியல்வாதி முழுமையான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறான் என்று அர்த்தமாகிவிடுமா...? அவன் மனசுக்குள்ளும் சோகங்கள் இல்லாமலா இருந்திருக்கும்... இல்லை நிறைவான வாழ்க்கை வாழ்ந்து மறைந்தான் என்று யாராவது அடித்துச் சொல்லத்தான் முடியும.

ஒரு கவிஞன் தன் யோசனையில் விளைந்த முத்துக்களை புத்தகங்களாக வடித்து வைத்திருக்கிறான். அவன் காலத்துக்குப் பிறகு அவன் கவிதைகள் பேசப்பட்டால் அவன் முழுமையான வாழ்க்கை வாழ்ந்து சந்தோஷமாக மறைந்திருக்கிறான் என்று அர்த்தமாகிவிடுமா? இல்லை அந்தப் புத்தகங்கள் எத்தனை காலத்துக்கு அவன் புகழைப் பரப்பிக் கொண்டிருக்கும் சொல்லுங்கள்.

ஒரு நடிகன் தன் நடிப்பால் உலகையே கலக்கி மறைந்தானென்றால் அவன் நடிப்பு ஆஹா... ஓஹோவென்று பல காலங்கள் புகழப்படலாம். அப்படி புகழப்படும் நடிகன் உண்மையிலேயே சாதித்தானா... சந்தோஷமாக வாழ்ந்தானா... இந்தப் புகழ்ச்சி அவன் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தான் என்பதற்காக கிடைத்ததாக இருந்தால் எத்தனை காலத்துக்கு?

இவ்வளவு ஏன் நடிகர் திலகம் சிவாஜிக்கு சிலை வைத்திருக்கிறோம்... சிம்மக் குரலோன் என்று புகழ்கிறோம்... அடுத்த தலைமுறைக்கு சிவாஜி எப்படித் தெரிவார்... கலைஞனாகவா... இல்லை சிலையாகவா...? இப்ப இருக்கும் நாமே பழைய படங்களை பார்க்க யோசிக்கும் போது நாளைய உலகம்...?

இன்னும் இப்படியே அடுக்கிக் கொண்டே போகலாம்... மக்களுக்காக போராடிய தலைவர்கள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், அரசியல் வாதிகள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், போலிச்சாமியார்கள், பாடகர்கள் என எல்லாரும் புகழை மட்டுமே விட்டுச் செல்கிறார்கள். அப்படியென்றால் இந்த புகழ் என்ற போதை மட்டுமே வாழ்க்கையாகிறதா?



வாழ்ந்ததற்கு ஆதாரமாக எதையாவது விட்டுச் சென்றால் அது வாழ்க்கையாகிவிடுமா? தன் வாழ்நாளில் மரக் கன்றுகளை நடுவதை எத்தனையோ பேர் தவமாக செய்கிறார்கள்... நாம் அதை சிலாகித்துப் பேசுவோம்... அடுத்த தலைமுறையும் பேசும். அதன் பின் பேச மரம் இருந்தாலும் இருக்கும் மனுசனுக்கு இவர்களைத் தெரியுமா?

சரி வாழ்க்கை என்றால் என்ன? நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா? வைரமுத்து சொன்னது போல் எட்டு எட்டா மனித வாழ்க்கையை பிரிச்சுப் பார்த்தாலும் தம் சந்ததிக்காக வாழ்ந்து மறையும் வாழ்க்கை உண்மையான வாழ்க்கைதானா? இதில் நிம்மதியும் நிறைவும் இருக்கிறதா? அப்படி இரண்டுமே இருந்தால் நாம் வாழ்ந்த வாழ்க்கை முழுமையாகிவிடுமா? பணம், புகழ் எல்லாம் நம்மை நாளைய உலகுக்கு அடையாளம் காட்டும் என்றால் அது மட்டுமே வாழ்க்கையாகிவிடுமா?

சரிங்க... என் நண்பன் ஒருவன் வாழ்க்கையென்றால் என்ன என்று எதார்த்தமாக கேட்கப் போக, நானும் உக்காந்து யோசிச்சேன்... யோசிச்சேன்... ம்... மேலே சொன்ன எல்லாமும் வரிசையா வந்து நின்றது... ஆனா வாழ்க்கையைப் பற்றி ஒரு மண்ணும் தோணலை...

என்னடா இவன் இரண்டு இடுகை போட்டுட்டு கடைசியியல் ஒரு மண்ணும் தோணலைன்னு சொல்லிட்டானே 'எங்கடா அந்த அருவாளை எடுடான்னு' நீங்க சொல்றதுக்குள்ள இந்த வாழ்க்கை என்பது நாம் விட்டுச் செல்லும் உறவுகளாலும் நமது உடமைகளாலும் நெய்யப்பட்டதுதான் என்றாலும் அது முழுமையானது அல்ல... நாம் வாழ்வது முழுமையான வாழ்க்கையும் அல்ல... என்பதே என் கருத்து.

இந்தக் கருத்து முழுமையானதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும்.

அப்படியென்றால்...

வாழ்க்கை என்றால் என்ன என்பது குறித்து கொஞ்சம் நாமெல்லாம் சேர்ந்து விவாதிக்கலாமே... உங்களுக்கு தெரிந்ததை உங்கள் வலைப்பூக்களில் பகிருங்கள்... விவாதிப்போம்...



வாழ்க்கை முழுமையானதா? என்ற எனது  முதல் பகுதிக்கு நண்பர்கள் அளித்த பின்னூட்டத்தில் சில...


இந்த மாதிரி தேடலில் சுலபமாகத் தொலைந்து போக முடியும். நிறைய யோசிக்க வைக்கிறீர்கள். சாதனைகள் அவரவர் செயலைப் பொறுத்து வாழ்வில் நிறைவைத் தருகின்றன. சிலருக்கு மூச்சு விடுவதும் சாதனை. கட்டில் கிழவரின் சந்தோஷங்கள் வாழ்வில் நிறைவைத் தரலாம் என்றே நினைக்கிறேன்.

திருமதி. மனோ அம்மா...

ஏற்க‌ன‌வே இன்றைய‌ குழந்தைக‌ளுக்கு உறவின் அருமை தெரிவதில்லை! அதற்கு கணினி, மற்ற‌ புறச்சாதன‌ங்கள் மட்டும் காரணம் இல்லை! உறவுகளைப் பற்றியும் அன்பின் மேன்மையைப்பற்றியும் சொல்லிக்கொடுத்து வள‌ர்க்காத இன்றைய பெற்றோர்கள்தான் முக்கிய காரணம்!

முதுமை அடையும்போது அதுவரை வாழ்ந்த அனுபவங்கள் தந்த களைப்பும் நிறைவும்தான் அந்தக் கிழவரை அப்படிப் பேசச்சொல்லுகிறது!

திரு.ஜீ...

எல்லாரும் காலங்காலமாக ஓடிக்கொண்டே இருந்தாலும் வெகு சிலரின் தடங்களே சரித்திரத்தில்! மற்றவர்கள் எந்த அடையாளங்களும் இல்லாமல் நிறுத்திவிடுகிறோம்!

திருமதி ரமா(RAMVI) அக்கா...

உங்க பதிவை படித்தவுடன், ஆம் என்ன சாதித்து விட்டோம்? என்று எண்ண தொடங்கி விட்டேன்.

-'பரிவை' சே.குமார்.

Thanks : Photos from Google search

25 கருத்துகள்:

  1. வாழ்க்கை என்பது இது தான் என்று குறிப்பிட்டு சொன்னால் மூதாதையர்கள் ஏற்கனவே விட்டுச்சென்ற சொறகளை பின்பற்றுவதே ஆகும், அது இல்லை என்றால் அழிந்து தோன்றும் உயிர்களை குறிப்பிட்ட காலங்கள் வாழ வைக்க வேண்டி உயிர் இருப்பதே வாழ்க்கை எனலாம் ... குழப்பிவிட்டேனா... வாழ்க்கை இது தான் என்று சொன்னால் ஒரு வட்டத்திற்க்குள்..இருக்கின்றார் என்று அர்த்தம்... அதை மீறி வெளியெ வந்தாலும் புரிந்து கொள்ளமுடியாதது தான் ஏன் இந்த வாழ்க்கை என்ற கேள்வியான வாழ்க்கை இது இரண்டாவது குழப்பம் இல்லையா... முடிவில் வாழ்க்கை என்பது இது தான் என்று எல்லாம் தெரிந்த ஞானியே சொன்னாலும் அது தவறு தான் என்று நான் சொல்வேன்.... ஏன் எனில் எந்த ஜீவனாலும் இதற்கு விடை காண முடியாது என்பதே என் வாதம்......நன்றி

    பதிலளிநீக்கு
  2. வாழ்க்கை என்பது ஒரு விசேசமான வார்த்தை மட்டுமே, அதற்க்கு கடந்த காலமோ, எதிர் காலமோ இல்லை. எது நம்மால் உணர படுகிறதோ, அவற்றை நம்மால் வரையறுக்க இயலாது, வாழ்க்கையும் அப்படி பட்ட ஒன்றே.பதில் இல்லாத கேள்விகளில் இதுவும் ஒன்று.

    பதிலளிநீக்கு
  3. நிறைய யோசிக்க வைக்குது இந்தப் பதிவு...வெல்டன் குமார்.

    பதிலளிநீக்கு
  4. அழகாகச் சொல்லி, முடிவில வாழ்க்கை என்றால் என்ன எனக் கேட்டு அனைவரையும் மாட்டிவிட்டுவிட்டீங்க...

    உண்மைதான் வாழ்க்கை என்றால் என்ன? நானும் யோசிக்கிறேன்... என்னைப்பொறுத்து அனுபவங்கள்தானே வாழ்க்கை, ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொருவிதமாக இருக்கும்..

    ஆனால், நீங்க சொன்னதுபோல வாழ்க்கையில் யாரும் முழுமையாக திருப்பி அடைந்திருக்கவே முடியாது.

    பதிலளிநீக்கு
  5. சிந்திக்க வைக்கும் நல்ல பகிர்வு குமார்.

    பதிலளிநீக்கு
  6. சிந்திக்க வைக்கும் பதிவு. எண்ணங்களில் - attitude towards life and history ல - மாற்றங்கள் வராமல் ஒன்றும் செய்ய முடியாதுதான்.

    பதிலளிநீக்கு
  7. நல்ல பகிர்வுங்க.. வாழ்க்கை என்பதே அனுபவங்கள் நிறைந்த கலவை தான்.. சிறு குழந்தை பருவத்தில் இருந்தே... இந்த அனுபவங்கள் தொடர்கிறது.

    சரியான பாதையில் திருப்பப் பட்டால்.. இனிய வாழ்வாய் அமைகிறது!

    இதற்கு பெற்றோரின் பங்கு பெறும் பங்கு!!

    பதிலளிநீக்கு
  8. நிறைய யோசிக்கவைக்குது இந்த இடுகை..
    வாழ்க்கைன்னா என்னான்னு வரையறுப்பதென்பது கடலை குடுக்கைக்குள் அடைக்கும் முயற்சியாகவே எனக்கு தோணுது..

    பதிலளிநீக்கு
  9. நிறைய யோசிக்க வைக்குது ...........

    பதிலளிநீக்கு
  10. குமார்...நீங்கள் சொல்லச் சொல்ல என்னைப் பற்றி நிறையவே யோசிக்கிறேன்.வாழ்ந்து முடிந்தவர்கள் பற்றியும் யோசிக்கிறேன் !

    பதிலளிநீக்கு
  11. நிறைய யோசிக்க வைக்குது... நல்ல பகிர்வு!

    பதிலளிநீக்கு
  12. இப்படி எல்லாம் திங்க் பண்ண வெச்சுட்டீங்களே? அவ்வ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  13. சிந்திக்கதூண்டுகிற படைப்பு .....
    அழகாக சொன்னீங்க...
    என்னையே திருப்பிக்கேட்டபோது மௌனித்து நிற்கிறது மனசு..

    பதிலளிநீக்கு
  14. ஆம் வாழ்க்கை முழுமையானது அல்ல. முழுமை அடைய முடியுமா? என்று கேட்டால் பதில் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  15. வாங்க மாய உலகம்...
    நீங்கள் குழப்பவில்லை... உண்மைதான்... வாழ்க்கை இதுதான் என்று கற்றறிந்த ஞானிகளாலும் சொல்ல முடியாது.
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வாங்க நான் படித்ததில்...
    நீங்கள் சொல்வது போல் வாழ்க்கைக்கு கடந்த, எதிர்காலம் இல்லை என்பது ஏற்புடையதே. இது பதில் இல்லாத கேள்விதான்.
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வாங்க செங்கோவி...
    என்னையும் யோசிக்க வைத்த கேள்வியை கேட்ட என் நண்பன் இது குறித்து இன்னும் கருத்து சொல்லவில்லை. நானும் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வாங்க அதிராக்கா...
    அக்கா... நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை... அனுபவங்களே வாழ்க்கை...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வாங்க ராமலெஷ்மி அக்கா...
    என்னையும் சிந்திக்க வைத்ததால் வந்த பதிவுதான் இது.
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வாங்க சித்ராக்கா...
    கண்டிப்பாக மாற்றங்கள் வராமல் ஒன்றும் செய்யமுடியாதுதான்.
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வாங்க ஆனந்தி...
    உங்கள் கருத்துப்படி அனுபவ பாடங்களை மட்டும் வைத்து ஒன்றும் செய்ய முடியாது சரியான பாதையில் திருப்பப் பட்டால் வாழ்க்கை சுகமாகும்.
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வாங்க அமைதிசாரல் அக்கா...
    கடலை குடுவைக்குள் அடைக்க முடியாது என்பதே உண்மை. அதுபோல்தான் வாழ்க்கையும் வரையறுக்க முடியாதது.
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வாங்க மாலதி அக்கா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க ஹேமா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வாங்க சிபி அண்ணா...
    என்னண்ணா பண்றது... எப்படி யோசித்தாலும் உங்கள மாதிரி கல்லாக் கட்ட முடியலையே...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வாங்க பிரியாக்கா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க விடிவெள்ளி...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க ரமா அக்கா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி