காய்ந்த கண்மாய்க்குள்
காலாற நடந்த போது
தண்ணீர் தூக்கும் உன்
உருவம் கானல் நீராய்..!
பாலத்தில் படுத்து
பால் நிலா பார்த்தபோது
நிலவில் ஊடே உன்
உருவம் கலைந்த மேகமாய்...!
கோயில் சுவற்றில் வரைந்த
ஓவியங்களை வியந்து
பார்த்த கண்ணுக்குள் உன்
உருவம் வரையாத ஓவியமாய்...!
இன்னும் என்னுள்
இறக்காத உன் நினைவுகள்...
அடிக்கடி அழ வைக்கின்றன...
அழுகை ஆண்மைக்கு
அழகல்ல என்பாயே...
அழுக வைத்துச் செல்வது
பெண்மைக்கு அழகா..?
உன்னை கேட்க நினைத்து
உயிருக்குள் புதைத்தேன்...
நினைவுகளை விதையாக்கி
நித்தம் விதைக்கிறேன்...
இழந்த காதலை
இதயத்தில் சுமந்து
உலர்ந்த புன்னகையுடன்
உலகுக்காக வாழ்கிறேன்...
-'பரிவை' சே.குமார்.
அசத்தலான கவிதை நண்பா..
பதிலளிநீக்கு//அழுகை ஆண்மைக்கு
பதிலளிநீக்குஅழகல்ல என்பாயே...
அழுக வைத்துச் செல்வது
பெண்மைக்கு அழகா..?//
nice.........
/////////
பதிலளிநீக்குஇழந்த காதலை
இதயத்தில் சுமந்து
உலர்ந்த புன்னகையுடன்
உலகுக்காக வாழ்கிறேன்.../////
உலகில் பலப்போர் மனதில் புகைந்துக் கொண்டிருக்கும் விஷயம்...
காதலைஇழந்த அனைவருக்கும் இந்த கவிதை ருசிக்கும்..
//அழுகை ஆண்மைக்கு
பதிலளிநீக்குஅழகல்ல என்பாயே...
அழுக வைத்துச் செல்வது
பெண்மைக்கு அழகா..?//
பிரமாதம் குமார்..
அண்ணே சூப்பர் கவிதை ... அழகாய் இருக்கின்றன வரிகள்
பதிலளிநீக்கு//காய்ந்த கண்மாய்க்குள்
பதிலளிநீக்குகாலாற நடந்த போது// அடடா..ஆரம்பமே அசத்துதே.
//அழுகை ஆண்மைக்கு
பதிலளிநீக்குஅழகல்ல என்பாயே...
அழுக வைத்துச் செல்வது
பெண்மைக்கு அழகா..?//
இந்தப் பொம்பளைகளே இப்படித் தான் எசமான்!
//இழந்த காதலை
பதிலளிநீக்குஇதயத்தில் சுமந்து
உலர்ந்த புன்னகையுடன்
உலகுக்காக வாழ்கிறேன்...
//
பெரும்பாலும் இப்படித்தான் போலும்..
செங்கோவி said...
பதிலளிநீக்கு//அழுகை ஆண்மைக்கு
அழகல்ல என்பாயே...
அழுக வைத்துச் செல்வது
பெண்மைக்கு அழகா..?//
இந்தப் பொம்பளைகளே இப்படித் தான் எசமான்
என்ன நாங்க மாத்தி சொல்வோம் அம்புட்டு தான் வித்தியாசம்..ஆனால் இரண்டு பேரையும் எதோ ஒரு காரணத்துக்காக பிரித்து வைத்து அழச் செய்யும் காதல்..
அழுகை ஆண்மைக்கு
பதிலளிநீக்குஅழகல்ல என்பாயே...
அழுக வைத்துச் செல்வது
பெண்மைக்கு அழகா..?
சூப்பர் கவிதை...:-)
குமார் அண்ணா நீண்ட நாட்களாய் உங்க பக்கம் வந்து வந்து போனேன்...எங்கே பதிவுகள் கன நாட்களாய் காணவில்லை...
பதிலளிநீக்குநேரமில்லையா?
நலமாய் இருக்கிறீங்களா?
"இன்னும் என்னுள்
இறக்காத உன் நினைவுகள்...
அடிக்கடி அழ வைக்கின்றன...
அழுகை ஆண்மைக்கு
அழகல்ல என்பாயே...
அழுக வைத்துச் செல்வது
பெண்மைக்கு அழகா..?"
அற்புதம்
மொத்தமாய் சொன்னால் எல்லா வரிகளுமே சுப்பர்...
வாழ்த்துக்கள்
நல்ல கவிதை குமார்!
பதிலளிநீக்குநீண்ட நாட்களுக்குப் பிறகு பதிவிட்டாலும் உங்களின் நீங்காத அன்பில் என்னை நனைத்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குவாங்க கருன்...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தொப்பிதொப்பி..
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சௌந்தர்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க RAMVI...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தினேஷ்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க செங்கோவி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தமிழரசி அக்கா...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ரேவா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க விடிவெள்ளி...
பதிலளிநீக்குஉங்கள் அன்புக்கு நன்றி. உங்கள் வருகையை அறிந்தேன். தற்போது பரவாயில்லை. மனசு வருத்தம் அதிகமானதால் பதிவிடும் எண்ணம் இல்லை. உங்கள் பக்கமும் விரைவில் வருகிறேன்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஜி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சூப்பர் கவிதை. உங்கள் வலைப்பூ லோட் ஆக நேரம் எடுக்குது. என்ன காரணம்??
பதிலளிநீக்கு////அழுகை ஆண்மைக்கு
பதிலளிநீக்குஅழகல்ல என்பாயே...
அழுக வைத்துச் செல்வது
பெண்மைக்கு அழகா..?////
வாசிக்கையில் இந்த இடத்தில் மட்டும் வழிகள் மெதுவாகவே நகர்கிறது.. நன்றாயிருக்குங்க..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)
அழகான வார்த்தைகள் கவிதை நன்றாக இருக்கிறது!
பதிலளிநீக்கு