மதுரை மாட்டுத்தாவணி ஏரியாவில் ரெங்கநாயகியைத் தெரியாதவர்களே கிடையாது. அந்தளவுக்கு அவ பிரபலமாகக் காரணம் மீனா மெஸ்தான். அந்தக் கடைக்கு அவதான் ஓனர். நல்ல சாப்பாடு... நியாயமான விலை என்ற பெயரை வாங்கி வைத்திருந்தாள்.
ரெங்கநாயகி மதுரைக்குப் பக்கத்துல ஒரு விவசாயக் குடும்பத்துல பிறந்தவ. வைகை ஓடுற பாதையில இருந்தாலும் வறண்ட வைகையை மறந்து வானம் பாத்து விவசாயம் செய்யிற குடும்பம்தான் அவ பிறந்த குடும்பம். எட்டாவது படிக்கும் போது பெரிய மனுசியாயிட்டா. அதுக்கப்புறம் பள்ளிக்கூடத்துக்கு அவ அப்பன் அனுப்பலை. பக்கத்து வீட்டு சுந்தரியக்கா வாங்குற ராணிப் புத்தகத்தை எழுத்துக் கூட்டாமயும் இங்கிலீஸ் எழுத்துன்னா எழுத்துக் கூட்டியும் படிக்கத் தெரியும்.
வீட்ல இருந்ததால விவசாய காலத்துல வயல் வேலை எல்லாத்தையும் சலிக்காம செய்வா. ஆம்பளைகளுக்குப் போட்டியா நாத்துப் பறிச்சு... அவங்களைவிட ஒரு குப்பம் அதிகமா கணக்குக் காட்டுவா. நாத்து நடுறது, களை எடுக்கிறது, கட்டு அடிக்கிறது என எல்லா வேலையும் அத்துபடி... அவ்வளவு ஏன்..? அவ சொளகு வீசுனான்னா பாத்துக்கிட்டே இருக்கலாம் அந்தளவுக்கு அவ கை விளையாடும்.
தூரத்து சொந்தத்துல வந்த முருகனுக்கு அவளை கட்டிக் கொடுத்தாங்க. முருகன் மதுரையில கோனார் மெஸ்க்குப் பக்கத்துல மீனா மெஸ்ன்னு ஒண்ணு வச்சிருந்தான். மெஸ் வச்சிருக்கான்னு பேருதான்... ஒரு நாளைக்கு பத்து சாப்பாடு விக்கிறதே பெரிசு. கோனார் மெஸ்ல கூடுற கூட்டத்தை வேடிக்கை பாக்கிறது மட்டுமே இவனோட வாடிக்கை.
சொந்த தொழில் வச்சிருக்கான் என்ற நம்பிக்கையில் கட்டிக் கொடுத்து விட்டார்கள். மதுரைக்கு வந்தவ புருஷனோட கடைக்குப் போனப்போதான் தெரிஞ்சது அவன் ஈ ஓட்டிக்கிட்டுத்தான் இருக்கான்னு. அப்புறம் அவளும் பஜ்ஜி, பனியாரம்... அது இதுன்னு போட்டுப்பாத்தா ஏதோ கொஞ்சம் பரவாயில்லாம ஓடுச்சு. மனைவி வந்த நேரம் கடை பிக்கபாயிடுச்சுன்னு அவனுக்கு மனசுக்குள்ள சந்தோஷம்.
அவங்க சந்தோஷத்துக்கு சாட்சியா பிரபாகரனும் பிரபாவதியும் பிறந்தாங்க. கஷ்டமோ நஷ்டமோ சந்தோஷ்ங்கிற மாடு பூட்டிய வண்டியில பயணம் செய்ததால அவங்களுக்குள்ள சண்டை சச்சரவு வரலை. ஆனா திடீர்ன்னு முருகனுக்கு காச்சல் வந்திருச்சு. அவளும் எல்லா ஆஸ்பத்திரியிலயும் காட்டியும் சரியா வரலை.
மீனாட்சி அம்மன் கோவிலு, பாண்டியையா கோவிலு, அழகர் கோவிலுன்னு எல்லா இடத்துக்கும் போயி புலம்பிட்டு வந்தா... ரெண்டு நாள் நல்லா இருப்பான்... மூணாவது நாள் காச்சல்ல படுத்துடுவான். மாயம் மந்திரமெல்லாம் பாத்துப்பாத்தா... ஒருநா காலையில ரொம்ப நேரமா எந்திரிக்காம தூங்குறானேன்னு எழுப்பிப் பாத்தா... அப்பதான் தெரிஞ்சது அவன் இனி எழும்பவே மாட்டான்னு..
ஆச்சு... அவன் காரியமெல்லாம் முடிஞ்சு ஒரு மாதத்துக்கு மேல... அவ அப்பன் ஆத்தா இங்க இருக்க வேண்டாம், கடையை கொடுத்துட்டு நம்ம ஊருக்கே வந்துடுன்னு எவ்வளவோ சொல்லியும் கேக்கலை. அவளே கடைய பாக்க ஆரம்பிச்சா. அவ புருஷன் இருக்கிறப்போ அக்கா, அக்கான்னு சொன்னவனெல்லாம் இப்போ வேற மாதிரி பாக்க ஆரம்பிச்சான். அவ தலையெழுத்தை நினைச்சுக்கிட்டு புள்ளைங்க எதிர்காலத்துக்காக எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு கடைய நடத்தினா.
அப்பத்தான் நடராசு ஒரு யோசனை சொன்னான். நடராசு... அவ புருஷனோட உயிர் நண்பன். காரைக்குடிக்காரன்... மதுரையில வேலைக்கு வந்தவன். இப்ப புதுமண்டபத்துப் பக்கம் பாத்திரக் கடை வச்சிருக்கான். பிறவியிலயே ஊனமாப் பிறந்தவன். ஆனா மனசுல ஊனம் கிடையாது. சூதுவாது தெரியாதவன். எல்லாப் பயலும் பச்சோந்தியா இருந்தாலும் இவன் மட்டும் எப்பவும் போல அவளுக்கு உதவுவான்.
நம்ம மாட்டுத்தாவணியில ஒரு கடை வருது. அதை எடுத்துப் பாத்தியன்னா வருமானத்துக்கு வழியிருக்கும். இந்தக் கடைய கட்டிக்கிட்டு வாரது வயித்துப் பொழப்புக்கு மட்டுமே போதுமின்னு இருந்தா நாளைக்கு புள்ளைங்க பெரிசாகும் போது என்ன பண்ணுவே. இதக் கொடுத்துட்டு அந்தக் கடைய எடுத்து நடத்தலாம் என்ன நான் சொல்றது என்று அவளிடம் கேட்டபோது அவனது யோசனை சரியென்றே அவளுக்குப்பட்டது.
அதன்பிறகு மீனா மெஸ்ஸை வந்த விலைக்கு கொடுத்துவிட்டு மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில மீனா மெஸ்ஸை ஆரம்பித்தாள். அவளுக்கு எல்லாவிதத்திலும் நடராசுதான் உதவினான். ஆரம்பத்தில் அவ்வளவாக கூட்டம் வரவில்லை. அவளுக்கு நல்ல கைப்பக்குவம் உண்டு. எனவே அவளே எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுப் பார்த்தாள்.
யாராவது குழந்தைக்கு இட்லி வாங்கினால் சட்னி, சாம்பார் கொடுக்க மறுப்போர் மத்தியில் ஒரு இட்லி என்றாலும் குழந்தைகளுக்கு என்றால் உரப்பில்லாமல் மோந்து வைத்திருக்கும் சாம்பாரைக் கொடுப்பாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளது சாப்பாட்டின் ருசி எல்லாக் கடைகளிலும் பரவி ரெங்கநாயகி அக்கா மெஸ்ல சாப்பிடலாம் வாடா என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறாள் என்றால் அதற்காக அவள் சிந்திய வேர்வை அதிகம்.
ஒரு நா மத்தியானம் கடைக்கு வந்த போலீஸ்காரர் சிக்கன் வாங்கி சாப்பிட்டுட்டு பேசாம போனாரு. சார்... சாப்பிட்டதுக்கு காசு கொடுங்க என்றாளே பார்க்கலாம் அவருக்கு வந்துச்சு கோவம் எதோ கேட்கக்கூடாததை கேட்டுட்ட மாதிரி... யாருக்கிட்டே காசு கேக்கிறே... நான் யாரு தெரியுமா? கடையை காலி பண்ண வச்சிடுவேன்னுன்னு குதிக்க ஆரம்பிச்சுட்டாரு.
என்ன சார் வண்டியிழுக்கிறவனெல்லாம் சாப்பிட்டா காசு குடுக்கிறான் நீயி கவர்மெண்ட்ல வெல பாக்கிறே கொடுக்காம போன என்ன சார் அர்த்தம். கோழி விக்கிற வெலயில பிரியா கொடுக்க முடியுமா நீங்களே சொல்லுங்கன்னு அவ கேக்கவும் அவருக்கு முகத்துல எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பிச்சிருச்சு. அந்த நேரம் அங்க வந்த நடராசு நிலமைய புரிஞ்சு அட யார்கிட்ட காசு கேக்கிறே நீயி. அவரு நம்ம சாரு... சாருதான் இந்த கடைய நமக்காக புடிச்சு விட்டவரு... சார் எதோ தெரியாம கேட்டுடுச்சி... நீங்க போங்க... என்று நிலமையை மாற்றினான்.
என்ன சார் வண்டியிழுக்கிறவனெல்லாம் சாப்பிட்டா காசு குடுக்கிறான் நீயி கவர்மெண்ட்ல வெல பாக்கிறே கொடுக்காம போன என்ன சார் அர்த்தம். கோழி விக்கிற வெலயில பிரியா கொடுக்க முடியுமா நீங்களே சொல்லுங்கன்னு அவ கேக்கவும் அவருக்கு முகத்துல எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பிச்சிருச்சு. அந்த நேரம் அங்க வந்த நடராசு நிலமைய புரிஞ்சு அட யார்கிட்ட காசு கேக்கிறே நீயி. அவரு நம்ம சாரு... சாருதான் இந்த கடைய நமக்காக புடிச்சு விட்டவரு... சார் எதோ தெரியாம கேட்டுடுச்சி... நீங்க போங்க... என்று நிலமையை மாற்றினான்.
அவரு போனதும் என்ன புள்ள நீயி... அந்த ஆளு தள்ளுவண்டிக்காரன் கடையிலயே பிரியாணி சாப்பிட்டுட்டு காசு கொடுக்காம போறவன். அவங்கிட்ட காசை கேட்டுக்கிட்டு... நாளைக்கு எதாவது பிரச்சினைய கிளப்பி கடைய காலி பண்ண வச்சாலும் வச்சிருவான். வந்தா தின்னுட்டுப் போகட்டும்... ஏதோ பிச்சைக்காரனுக்குப் போட்டதா நினைச்சுக்கோ என்றதும் பாவம் வெயில்ல வண்டி இழுக்கிறவனெல்லாம் காசு கொடுத்து சாப்பிடுறப்போ சம்பளம் வாங்கி கொட்டிக்கிற இவனுக்கு எதுக்கு பிரியாப் போடணும் என்றாள். இதெல்லாம் பாத்தா நாம தெருவுலதான் நிக்கணும். பேசாம வேலயப்பாரு என்றான். அதன் பிறகு அந்த போலீஸ்காரர் வந்து சாப்பிட்டாலும் அவ காசு கேட்பதில்லை. இப்ப கொஞ்ச நாளா ஆளக்காணலை. மாத்திப் பொயிட்டாரு போல... தொலஞ்சது சனியின்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டா.
கடையில நல்ல வருமானம் மனசு சந்தோஷத்துல இப்ப கொஞ்சம் பூசுனாப்புல ஆயிட்டா... அவ தளுக்கு மிளுக்கின்னு இருக்கிறதைப் பாத்து பக்கத்து வீட்டுக்காரிகளுக்கு பத்திக்கிட்டு வந்தது. புருஷனை இழந்தவ மாதிரியா இருக்கா... சும்மா குதிரக்கணக்கால்ல திரியிறா. அட நீ வேற அந்த நொண்டிப்பய இவளை வச்சிருக்கானாம். அவன் பாத்திரக்கடைக்கே போறதில்லையாம் எப்ப பாத்தாலும் இவ கடையேதான் கெதியின்னு கிடக்கானாம். அவனுக்கு குடும்பமெல்லாம் இல்லையா. அவனை எவ கட்டிப்பா... இன்னும் கலியாணம் ஆகலையாம்... அதான் இவ பின்னாடி சுத்துறான்... இவளும் புருசன் இல்லாம இருக்கவ... அவனை நறுக்குன்னு புடிச்சுக்கிட்டா... இப்ப இல்லயாம்... புருசன் இருந்தப்பவே ரெண்டு பேருக்கும் தொடர்பாம்... எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குமின்னு யாருக்கு தெரியும். கேவலப்பட்டவ என்ன செஞ்சா நமக்கென்ன... என்று ஆளாளுக்கு பேச ஆரம்பித்தார்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக அவள் காதுக்கு வரவும் முதலில் ஆடிப் பொயிட்டா. ஒரு பொம்பள தனியா போராடிச் செயிச்சா ஏன் ஏத்துக்க மறுக்கிறாங்க. நல்ல நண்பனா ஒரு ஆம்பள உதவக் கூடாதா?. அது ஏன் ஒரு பொண்ணுக்கு ஆணோ ஆணுக்கு பொண்ணோ உதவியா இருந்தா தப்பா பாக்கச் சொல்லுது... இது சமுதாயத்துல புரையோடிப்போன எண்ணத்துல இதுவும் ஒன்னு... இதுல நாமளும் மாட்டி ஒரு நல்லவனுக்கும் கெட்ட பேர வாங்கி கொடுத்தாச்சே என்று நினைத்த போது வருத்தமாக இருந்தது.
என்ன ரெங்கநாயகி யோசனையில இருக்கே என்றபடி எதிரில் வந்து அமர்ந்தான் நடராசு. வா ராசு... மனசு சரியில்ல... அதான். என்ன நம்மள இணைச்சுப் பேசுறதை கேட்டியாக்கும் என்று அவன் கேட்டதும் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். எனக்கு முன்னாலயே தெரியும் எத்தனையோ பேர் எங் காதுபடவே பேசிட்டாங்க. சூரியனைப் பாத்து நாய் கொலச்சா யாருக்கு வாய் வழிக்கும்... தரையில உக்கார்ந்து எந்திரிக்கும் போது ஒட்டியிருக்க மண்ணோடவா போறோம். தட்டித்தானே விடுறோம். அது மாதிரி இதையெல்லாம் தட்டிவிட்டுடனும். வீணா தூக்கி சுமக்கக்கூடாது. நம்ம மனசுக்குள்ள குப்பையில்லையே... குப்பையெல்லாம் பக்கத்துலதானே இருக்கு... நாம ஒதுங்கிப் போவோம் என்று அவன் சொல்லும் போது அவனது உயர்ந்த குணம் அவளுக்குத் தெரிந்தது.
சில நாட்களுக்குப் பிறகு இருவரும் திருமங்கலம் பொயிட்டு திரும்பும் போது ராசு நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியேன்னு ஆரம்பிச்சா. என்ன சொல்லு தப்பா நினைக்கிற மாதிரி கேக்கமாட்டேன்னு தெரியும் என்றான். இல்ல நீயும் கலியாணம் பண்ணாம இருக்க. நானும் கணவனை இழந்துட்டு நிக்கிறேன். ஏன் நாம கலியாணம் பண்ணிக்ககூடாது என்று அவள் கேட்கவும் அவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
ஊரு பேசினதை உண்மையாக்க நினைக்கிறியா?ன்னு கேட்டான். அப்படியில்ல பக்கத்து மனுசங்க பேசினதுக்கு பின்னாலதான் எனக்கு இப்படி ஒரு எண்ணம் தோணிச்சு. தப்பா இருந்தா மன்னிச்சுக்க... ஊருக்காக இல்ல நமக்காகத்தான்... நானும் பிள்ளைங்களோட கஷ்டப்படுறேன். நீயும் தனி மரமாத்தான் நிக்கிறாய்... நாம ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா இருக்கலாமே என்றவள் அவன் முகத்தைப் பார்த்தாள்.
அவன் பதில் சொல்லாமல் யோசிப்பது அவனது முகத்தில் தெரிந்தது. அவனது யோசனையும் சரியெனப்பட்டது. இத்தனை நாள் பலனை எதிர்பாக்காம உதவுனவனை... ஊர் தப்பா பேசியதைக் கூட சாதரணமாக எடுத்துக் கொண்டவனிடம் இப்படி கேட்டிருக்கக் கூடாதோ என்று நினைத்து தன்னைத்தானே கடிந்து கொண்டாள்.
இருவரின் மௌனமும் நேரத்தை தின்று கொண்டிருந்தன. இன்னும் நீடித்தால் நேரத்தை திங்கும் மௌனம் நம்மையும் சேர்த்து திங்க ஆரம்பித்துவிடுமோ என்ற பயத்தில் சரி விடு ராசு... இத இங்கயே விட்டுடலாம் என்றாள் மெதுவாக.
ரங்கநாயகி உன்னோட எண்ணஞ்சரிதான். ஊரு வாய அடைக்க இதுதான் வழியா இருக்கணுமின்னு இல்ல... ஆனா இதுவும் வழிதான்... நமக்கு நாம உதவியா இருக்க எத்தனையோ வழி இருந்தாலும் இது அந்நியோன்யமான உறவோட வாற வழி. ஆனா என்னால உடனே ஒத்துக்க முடியலை. எம்மனசு இன்னும் அந்தப் பக்குவத்துல உங்கிட்ட பழகலை. பாக்கலாம் எனக்குள்ள நீ வாரப்ப கட்டிக்கலாம். அது நாளைக்கா கூட இருக்கலாம் இல்ல நாலு மாசமோ... நாலு வருசமோ ஆகலாம். ஆனா அதுவரைக்கும் எப்பவும் போல உனக்கு நான் உதவியா இருப்பேன் என்றவனை எதுவும் சொல்லாமல் ஏறிட்டவளின் கரங்களை பற்றிக் கொண்டான். அதில் காதல் இருந்ததா... நட்பு இருந்ததா... என்பதை அறிய முடியாமல் அவளின் கண்கள் நீருக்குள் நீந்திக் கொண்டிருந்தன.
-'பரிவை' சே.குமார்.
Photo from Google
me first
பதிலளிநீக்குநல்ல உள்ளங்கள்
பதிலளிநீக்குநல்லாருக்கு குமார்
பதிலளிநீக்குஇயல்பான முடிவுடன் நல்ல கதை.
பதிலளிநீக்குநீட்டான கதை, அழகான லே அவுட், பொருத்தமான டைட்டில் குமார்
பதிலளிநீக்குகதை வழக்கம் போல் அருமை.முடிவும் நச்சென்று சொல்லியிருக்கீங்க.
பதிலளிநீக்குWav... Super Story...
பதிலளிநீக்குமிகச் சிறப்பான கதை குமார்..
பதிலளிநீக்குஅன்பு கலந்த நல்ல உள்ளங்கள். இதுபோல் எத்தனை பேர் தங்கள் உண்மையான அன்பையும் கூட வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.
பதிலளிநீக்குஅந்த அன்பு உள்ளங்கள் நலமுடன் சேர்ந்து வாழ வாழ்த்துவோம்!
உணர்வோடு பயணிக்கிறது கதை..
பதிலளிநீக்குஉணர்வோடு பயணிக்கிறது கதை..
பதிலளிநீக்குஇயல்பான நல்ல கதை...
பதிலளிநீக்குநல்லா வந்திருக்கு குமார்.
பதிலளிநீக்குgood one.
பதிலளிநீக்குஒரு பொம்பள தனியா போராடிச் செயிச்சா ஏன் ஏத்துக்க மறுக்கிறாங்க. நல்ல நண்பனா ஒரு ஆம்பள உதவக் கூடாதா?. அது ஏன் ஒரு பொண்ணுக்கு ஆணோ ஆணுக்கு பொண்ணோ உதவியா இருந்தா தப்பா பாக்கச் சொல்லுது... இது சமுதாயத்துல புரையோடிப்போன எண்ணத்துல இதுவும் ஒன்னு... இதுல நாமளும் மாட்டி ஒரு நல்லவனுக்கும் கெட்ட பேர வாங்கி கொடுத்தாச்சே என்று நினைத்த போது வருத்தமாக இருந்தது.
பதிலளிநீக்கு......பெண்ணுக்கே பெண்களே எதிரிகள் என்று இப்படி பேசும் போது - கதை கட்டி விடும் போது - தெரிகிறது.
very nice story and a good ending too...
பதிலளிநீக்குLovely story...not dramatic... very practical ending... nice..:)
பதிலளிநீக்குகதை எளிமையா அழகா இருக்கு குமார்...சொன்ன விதம்தான் கொஞ்சம் பழைய நெடி...
பதிலளிநீக்குகதைக்கான ஓவியம் அருமை...
குமார்.. கதையின் கடைசிவரிகள் மனத்தைக் குடைகிறது. அருமை
பதிலளிநீக்குகதை நல்லாயிருக்கு...
பதிலளிநீக்குkathai arumai.. mathurai vaadai adikkirathu..vaalththukkal.
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குவானம்பாடிகள் said...
நல்லா வந்திருக்கு குமார்//
மறுபடி சொல்லிக்கிறேன்
////அப்பத்தான் நடராசு ஒரு யோசனை சொன்னான். நடராசு... அவ புருஷனோட உயிர் நண்பன்////
பதிலளிநீக்குநல்லாயிருக்கதுங்க... மழை கட்டாயம் பெய்யும்....
முடிவுல அருமையா சொல்லி இருக்கீங்க..
பதிலளிநீக்குநெகிழ்வு.
Arumaiyana Story..
பதிலளிநீக்குரெங்கநாயகி + நடராசு
பதிலளிநீக்குஇருவரும் இணையவேண்டும்
என்பதே எம் அவா!
கதையோட்டம் அருமை, தொடர்ந்து எழுதுங்கள்.
பதிலளிநீக்குரொம்ப நல்ல கதை.. முடிவு உடனே சரி என்று சொல்லாம.. ராசு சொன்ன காரணம்.. மனதைத் தொட்டது..
பதிலளிநீக்குநன்றிங்க :)
//தரையில உக்கார்ந்து எந்திரிக்கும் போது ஒட்டியிருக்க மண்ணோடவா போறோம். தட்டித்தானே விடுறோம். அது மாதிரி ..//
பதிலளிநீக்குகுமார்,
அருமையா இருக்கு.
ஆனா, அங்கங்க பேச்சு வழக்கான வசனங்களுக்கு நடுவுல சுத்த இலக்கணமா ஒன்னு ரெண்டு வார்த்தைங்க மட்டும் கொஞ்சம் நெருடல்.
(// நீயும் தனி மரமாத்தான் நிக்கிறாய்.//- இதுல வார நிக்கிறாய் = நிக்குற-ன்னு இருந்தா நல்லாருக்கும்)
மனதைத் தொட்ட கதை;
பதிலளிநீக்குஉணர்வுப்பூர்வமான நடை;
சுபமான முடிவு'
அருமை நண்பரே!
-கலையன்பன்.
(இது பாடல் பற்றிய தேடல்!)
'வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது...)
வாங்க சரவணன்...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க கலாநேசன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ராமலெஷ்மி அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க செந்தில் அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஆசியாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சங்கவி...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தேனம்மை அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஸ்ரீஅகிலா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தமிழரசி அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மேனகாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஐயா...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சித்ராக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தங்கமணி அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தமிழ்ப்பறவை...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஜி...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ரியாஸ்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மதுரை சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க நசரேயன் அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சுதா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சுசிக்கா...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அஹமது...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க புலி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஆனந்தி...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சத்ரியன்...
கண்டிப்பா மாற்றிக் கொள்கிறேன்.... தவறுகளை சுட்டிக் காட்டுங்கள்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க கலையன்பன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.