திண்ணையில் கிடக்குதே இந்த மர நாற்காலி இதுதான் அப்பாவின் சிம்மாசனம். இதில் அமர்ந்திருக்கும் போது அவரது மிடுக்கு மிகவும் அழகாக இருக்கும். பெரும்பாலான பொழுதுகளை இதில்தான் கழிப்பார். காலையில் குளித்து முருகனை வணங்கி நெற்றி நிறைய விபூதி பூசி அதன் மீது அழகாக குங்குமம் வைத்து நாற்காலியில் வந்து அமர்ந்துவிடுவார். மணியக்கார சோமு சித்தப்பா தினமும் வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கும் பேப்பரைப் படிப்பது, அம்மா கொடுக்கும் காபியைக் குடிப்பது எல்லாமே இதில் அமர்ந்தபடிதான். விவசாய காலங்களில்தான் இந்த நாற்காலிக்கு அதிக ஓய்வு கிடைக்கும் மற்ற நாட்களிலெல்லாம் அவரை மட்டுமே அதிகம் சுமக்கும்.
நானும் என் தங்கையும் பள்ளியில் படிக்கும் காலத்தில் அப்பாவின் இருக்கையாக இருந்து ஒரு இரும்புச் சேர்தான். அதில் அமர்ந்து சுருட்டுப் பிடித்துக் கொண்டு அவர் வயதொத்தவர்களிடம் ஊர்க்கதைகள் பேசுவார். சில கதைகள் பேசும் போது நாங்கள் அருகில் இருந்தால் ஒன்றும் சொல்லமாட்டார். பொண்டு பிள்ளை கதைகள் என்றால் இங்க உங்களுக்கு என்னடா வேலை... உள்ள போங்க என்று விரட்டுவார். அம்மாவிடமும் அப்பத்தாவிடமும் எங்களுக்கு இருந்த நெருக்கும் ஏனோ அப்பாவிடமும் ஐயாவிடமும் இல்லை. மரியாதை என்பதைவிட அவர்கள் இருவரும் வைத்திருந்த முரட்டு மீசையே காரணம். பேசும் போது மீசையை லாவகமாக விளக்கிவிடும் அப்பாவை பார்க்க ஆவலாய் இருக்கும்.
நான் ஆறாவதோ ஏழாவதோ படிக்கும் போதுன்னு நினைக்கிறேன் சரியா ஞாபகமில்லை வயலில் நின்ற வைரம் பாய்ந்த வேல மரத்தை வெட்டி அதில்தான் இந்த நாற்காலியை செய்தார். அதுவும் அவரது நண்பரும், மர வேலையில் கெட்டிக்காரரான சின்னப்ப ஆசாரி மாமாதான் செய்தார். அவர் கால்களை ரெடி பண்ணும் போது இத நல்லா சீவுடா... அதை அப்படி பண்ணுடான்னு நச்சரிச்சுக்கிட்டே இருப்பாரு. அப்பல்லாம் சின்னப்ப ஆசாரி மாமா மாப்ளே, உங்கப்பனை விட்டாலே அழகா செய்திடுவான் போல... எனக்கு தொழில் சொல்லித்தாரான் பாரு... மத்தவங்க போட்டுட்டுப் போயிடுவாங்கன்னுதான் என்னய கூப்பிட்டிருக்கான்னு சொல்லி சிரிப்பாங்க. ஆமா, இவரு பெரிய டவுசரு...அரைகுறை வேலைக்காரனுக்கு சொல்லித்தான் தரணும். போட்டுடுட்டுப் போனியன்னா என் தங்கச்சி சோறு போடாதுடி என்று பதிலடி கொடுப்பார்.
அப்பாகிட்ட ஒரு குணம் உழைக்கிறவனுக்கு அவன் கேக்கிறதை விட அதிகமா பணம் கொடுப்பார். யாராவது கேட்டா அவன் இன்னைக்கு பார்த்த வேலைய ரெண்டு நாள் பாத்திருந்த இதவிட கூடக் கிடைச்சிருக்கும். உழைக்கிறவன் திங்கிறதுல தப்பேயில்லை என்பார். நாற்காலி செய்த அன்றும் அப்படித்தான் மாமா கடைசி வரை இருந்து அழகாக செய்து முடித்தார். அப்பாவுக்கு அவ்வளவு சந்தோஷம். நீதான்டா வேலைக்காரன்... நல்லா இருக்குடா... எவ்வளவுடா என்றார். ஆனால மாமா பணம் வாங்க மறுத்தார். இங்க பாரு நட்பு வேற ... தொழில் வேற... இன்னைக்கு வேற எடத்துக்குப் போயிருந்தா பணம் வாங்காம வருவியான்னு சொல்லி அவர் மறுக்க மறுக்க அவர் வாங்கும் சம்பளத்தைவிட கூடுதலாய் பாக்கெட்டில் திணித்தார்.
அடுத்த நாள் வேம்பு மாமா வந்து அதுக்கு பாலீஸ் தடவி கருகருன்னு ஆக்கிட்டுப் போனாரு. அதுக்கப்புறம் அந்த நாற்காலியில்தான் அப்பா அமர்வது வழக்கம். அதுவும் குடும்பப் பிரச்சினை என்று வருபவர்கள் அவரது நாற்காலிக்கு முன்னர் திண்ணையில் அமர, நாற்காலியில் அமர்ந்து ஓம் முருகா சுருட்டைப் பிடித்தபடி அவர்கள் சொல்லும் பிரச்சினைகளை கூர்ந்து கேட்டு தீர்ப்பு வழங்குவார். எங்கள் பகுதியில் யார் வீட்டில் பிரச்சினை என்றாலும் அப்பாவிடம்தான் வருவார்கள். சும்மா நாட்டாமைக் கனக்கா தீர்ப்பு சொல்வாரு. அதிகம் அம்பேத்கார் காலனியில உள்ள பொம்பளைங்கதான் வருவாங்க... உட்காராம நின்னுக்கிட்டே இருப்பாங்க. அப்பல்லாம் அப்பா ஆம்பளைங்கிறதால மரியாதை போலன்னு நினைப்பேன். ஏன்னா எங்களுக்கு உக்காந்து சோறு போடுற அம்மா, அப்பா சாப்பிடுறப்போ நின்னுக்கிட்டேதான் போடுவாங்க. அதுமாதிரி நிக்கிறாங்கன்னு நினைச்சுப்பேன். அவங்க சொல்ற பிரச்சினைகள்ல பெரும்பாலும் குடிச்சிட்டு போட்டு அடிக்கிறான், கூத்தியா வச்சிருக்கான், சாப்பாட்டுக்கு பணமே தரமாட்டேங்கிறாங்கிற கதைகள்தான் அதிகம் இருக்கும். தீர்ப்பு சொல்றதோட மட்டுமில்லாம சாமிக்கண்ணு இங்க வாடான்னு என்னய கூப்பிட்டு என்னோட எடவார எடுத்தான்னு சொல்லி அதுல இருந்து பணமெடுத்துக் கொடுத்து இந்தா தாயி புள்ளைகளுக்கு எதாவது வாங்கி ஆக்கிப் போடுன்னு கொடுப்பாரு. அதனால அந்த மக்களுக்கு அப்பாதான் கருணமகாராஜா.
ஒரு தடவை எதோ பிரச்சினையின்னு எங்க தோட்டத்துல வேலை செய்யிற மாரியண்ணனும் சோனையண்ணனும் வந்திருந்தாங்க.அப்பாகிட்ட பிரச்சினையை சொல்லிட்டு துண்ட எடுத்து கக்கத்துல வச்சி அதோட ஒரு தலைப்பை எடுத்து வாயைப் பொத்திக்கிட்டு வாசல்ல நின்னாக, எனக்கு ஒண்ணும் புரியலை. அப்பாகிட்ட கேக்கமுடியாது, அம்மாகிட்ட கேட்டப்போ, அவங்க கீழ்சாதி, நம்ம வீட்டுக்கு வந்தா தீட்டுன்னு சொன்னாங்க... என்னம்மா தீட்டு தோட்டத்துக்கு போறப்பல்லாம் மாரியண்ணன் எளநீ வெட்டித்தருது. அதைதான் அப்பாவும் , நாமும் குடிக்கிறோம். அது மட்டும் தீட்டில்லையான்னு கேட்டதுக்கு உனக்குத் தெரியாது பெரிய இவனாட்டம் பேசாதேன்னு வாய அடைச்சிட்டாங்க. நானும் அதுக்கு அப்புறம் பேசலை. அப்பாவோட தீர்ப்பு அவங்களுக்கு சரியின்னு பட்டதும் ரொம்ப நன்றி சாமின்னு சொல்லிட்டு பொயிட்டாங்க.
எல்லாரும் சாப்பிட உக்காந்தப்போ ஓ மகன் என்னமோ ஒங்கிட்ட கேட்டானே என்னன்னு அம்மாகிட்ட கேட்டாரு. அம்மா ஒண்ணுமில்லேன்னு சொல்ல, சும்மா சொல்லு, என்ன உக்காராம நிக்கிறாங்கன்னுதானே என்றதும் உங்களுக்கு பாம்புக்காதுன்னு அம்மா சொல்லி சிரிச்சாங்க. பாம்புக்கு காது இருக்கான்னு எனக்குத் தெரியாது. போச்சுடி உனக்கு இன்னைக்கு பூஜை இருக்குன்னு மெதுவாக என் காதைக்கடித்தாள் தங்கை புஷ்பா. அவளை முறைத்தாலும் எதற்கும் முன்னெச்சரிக்கையாக கைக்கெட்டாத தூரத்தில் தள்ளி அமர்ந்து கொண்டேன்.
இதெல்லாம் வழிவழியா வார வரைமுறைகள்... இதெல்லாம் உனக்கு இப்ப புரியாது. காலம் போகப் போகத்தெரியும். அவங்க நம்ம வீட்டுக்குள்ள வரமாட்டாங்க... குடியானவங்க யாரு போனாலும் ஐயர் வீட்டுக்குள்ள விடமாட்டங்க... நமக்கு இவங்க கீழ்சாதி, ஐயருமாருக்கு நாம எல்லாரும் கீழ்சாதி... விடு... உனக்கு எதுக்கு இதெல்லாம்ன்னு பொதுவா பேசினாலும் எனக்கு இந்த சாதிக் கட்டுப்பாடுகள் சுத்தமாக பிடிக்கவில்லை. திருவிழா வேலைகளை எல்லாம் அவர்கள் பார்க்க, அலங்கரித்த அம்மன் பள்ளக்கில் வரும் போது அவர்கள் தெருப்பக்கமே திரும்பாமல் வருவதை பார்க்கும் போதெல்லாம் மனிதன் தான் சாதிப் போர்வையை போர்த்தியிருக்கான்னா... தெய்வத்துக்குமான்னு நினைப்பு வரும். என்ன செய்ய பழமையில் ஊறிய ஊரில் சின்ன வயதில் நான் என்ன செய்யமுடியும். ஆனா இப்ப அப்படியில்லை... சாதியாவது மதமாவது எங்க ஊரு மாரியாத்தா இப்பல்லாம் பள்ளக்குல எல்லாவீதிக்கும் போய்வருது. விழாவுக்கு வார ஐயரு எங்க வீட்லயும் காபி சாப்பிடுறாரு... இந்த மாற்றம் எங்க ஊருக்குள்ள வர எத்தனையோ வருடங்கள் வீழ்த்தப்பட்டிருக்கு.
எங்க வீட்ல எங்க அப்பாவுட்டு பொருள்கள் எல்லாமே அப்பா என்ற அடைமொழியோடதான் இருக்கும். தண்ணி குடிக்க தம்ளரை எடுத்தா அப்பா டம்ளரை எடுக்காதேன்னு அம்மா திட்டுவாங்க. சாப்பிட தட்டை எடுத்துக்கிட்டு வந்து உக்கார்ந்தா எத்தனை தடவையிடா சொல்றது உங்க அப்பமுட்டு தட்டை எடுக்காதேன்னு அப்பத்தா தலையில கொட்டும். சைக்கிளுக்குப் பேரு அப்பா சைக்கிள், குடைக்குப் பேரு அப்பா குடை இப்படி அவர் பயன்படுத்தும் பொருட்கள் எல்லாம் அப்பா பொருட்கள்... அந்த வரிசையில் மர நாற்காலியும் அப்பா சேராயாயிருச்சு.
அப்பா இல்லாதப்ப அதுல உட்கார்ந்து படிக்க எனக்கும் என் தங்கைக்கும் போட்டியே நடக்கும். அப்பா சேர்ல உக்காந்தாலே எனக்கு யானை பலம் வந்த மாதிரி ஒரு நினைப்பு வரும் . இல்லாத மீசை வளர்ந்து இருக்க மாதிரி தடவி விடச் சொல்லும். யாராவது பசங்களை பிடிச்சாந்து அவரு மாதிரி கனச்சுக்கிட்டு தீர்ப்பு சொல்லிப்பாக்கச் சொல்லும். அவருக்கு வயசானாலும் அந்த நாற்காலி அப்படியே இருந்துச்சு. அப்பாவும் மிடுக்கு குறையாமல் அதுல உக்காந்து இருப்பாரு.
சில வருஷத்துக்கு முன்னால உடம்பு சரியில்லாம இருந்தப்ப இதுல உக்காந்து வாசலை வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்தாரு. அவரைப் பாக்க களத்தூர்ல இருந்து புஷ்பா புள்ளைங்களோட வந்திருந்தா. அம்மா, நான், சித்ரா, புஷ்பா எல்லாரும் பேசிக்கிட்டு இருந்தோம். பசங்களெல்லாம் விளையாடிக்கிட்டு இருந்தாங்க. அப்ப திண்ணையில இருந்து ஏவ்வ்ன்னு ஒரு சத்தம், என்னமோ எதோன்னு போயிப்பாத்தா நாற்காலியில அமர்ந்தபடி அப்பாவோட உயிர் போயிடுச்சு... எல்லாரும் கதறுறாங்க... அப்புறம் என்ன அவருக்கு புடிச்ச நாற்காலியிலயே வச்சி எல்லாக் காரியமும் பண்ணி அடக்கம் பண்ணிட்டு வந்தோம்.
அடுத்த நாள் அந்த திண்ணைய பாக்கிறப்போ கலையிழந்து இருந்துச்சு. அப்பா இல்லாம அனாதையா கிடந்த நாற்காலிய பார்க்கிறப்போ அப்பாவின் இழப்பு எங்களைவிட அதை அதிகம் பாதிச்சதை உணர முடிந்தது. அந்தப் பக்கமா போனா அதுல அப்பா உட்காந்திருக்க மாதிரியே தோணும். ரோட்ல போறவங்ககூட இந்த சேரப்பாக்கயில ஐயா உக்காந்திருக்க மாதிரியே தோணுது தம்பி. மனுசன் இது மேல உக்காந்திருக்கிற அழகே தனிதான் போங்கன்னு சொல்லுவாங்க.
அம்மா இருக்கும் வரை அப்பா சேரை தொடச்சுத் தொடச்சு வச்சுபாங்க... அதுக்குப் பக்கத்துலதான் மதிய நேரத்துல படுத்திருப்பாங்க. எதோ அப்பா வந்து அதுல அமர்ந்திருக்க மாதிரியும் அவரோட காலடியில இவங்க படுத்திருக்க மாதிரியும் நினைச்சுக்குவாங்க போல. சின்ன வயசுல அப்பா சேர்ல உக்கார சண்டை போட்ட நான் அவர் மறைவுக்குப் பின்னால அதுல உக்கார நினைக்கலை. அது எனக்கு அப்பாவாத்தான் தெரிஞ்சது.
கால மாற்றத்துல அப்பா சேர் திண்ணையின் ஒரு மூலைக்குப் போனாலும் என்னோட பேரப்பிள்ளைங்க யாராவது அதுமேல ஏறிக்குதிச்சு விளையாண்டா, டேய் அது தாத்தா சேர்... கீழ இறங்குன்னு சத்தம் போடுறதை மட்டும் நிறுத்தமுடியலை.
-'பரிவை' சே.குமார்.
மனித உணர்வுகளை அழகா படம் பிடிச்சு இருக்கீங்க. வழக்கம் போல கதை சொல்லி என்கிற சிறப்பு பெயரை தட்டி சென்று விட்டீர்கள். நிறைய இடங்களில் மண் வாசம் வீசுகிறது. மனமணக்கும் கதை. கொஞ்சம் மனம் கனக்கும் கதை. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குgood one:)
பதிலளிநீக்குஉணர்வுகளின் அருமையான வெளிப்பாடு.. நெகிழ வைக்கிறது....
பதிலளிநீக்குமிக அருமை.
பதிலளிநீக்குஇது போன்ற அப்பா சேர், தாத்தா சேர் அதனுடனான நினைவுகள் பலருக்கும் உள்ளன.
நல்ல பகிர்வு.
மண் மணக்கும் கதை. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஅம்மா இருக்கும் வரை அப்பா சேரை தொடச்சுத் தொடச்சு வச்சுபாங்க... அதுக்குப் பக்கத்துலதான் மதிய நேரத்துல படுத்திருப்பாங்க. எதோ அப்பா வந்து அதுல அமர்ந்திருக்க மாதிரியும் அவரோட காலடியில இவங்க படுத்திருக்க மாதிரியும் நினைச்சுக்குவாங்க போல. சின்ன வயசுல அப்பா சேர்ல உக்கார சண்டை போட்ட நான் அவர் மறைவுக்குப் பின்னால அதுல உக்கார நினைக்கலை. அது எனக்கு அப்பாவாத்தான் தெரிஞ்சது.
பதிலளிநீக்கு......கதை என்று தெரிந்தாலும், உண்மையான உணர்வுகளின் வெளிச்சம்.... இந்த வரிகளை வாசிக்கும் போது, என்னையும் அறியாமல், என் தந்தையின் நினைவுகளில் மூழ்கி - கண்களில் நீர்.....
எல்லோருக்குள்ளும் இதை போன்ற நெகிழ்ச்சியான நினைவுகள் இருக்கும். அவற்றை நினவுக்கு கொண்டு வருகிறது உங்களின் இந்த இடுகை.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு குமார்!
பதிலளிநீக்குநெகிழ்ச்சியான நினைவலைகள் குமார்! நன்று!
பதிலளிநீக்குவாங்க தமிழ்...
பதிலளிநீக்குமுதல் கருத்து... நல்ல கருத்து.
ரொம்ப நன்றிங்க.
வாங்க வானம்பாடிகள் ஐயா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஜெயந்த் அண்ணா...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ராமலெஷ்மி அக்கா...
ஆமா... வாழ்க்கையில் இதுபோல எல்லாருக்கும் இருக்கும்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சரவணன்...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சித்ராக்கா...
என் கதை அப்பா ஞாபகத்தை மேலும் அதிகமாக்கிவிட்டதா? என்னக்கா செய்வது வாழ்க்கையில் சில நினைவுகள் நம்மை பலமுறை அழவைக்கின்றன என்பதே உண்மை.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அம்பிகாக்கா...
பதிலளிநீக்குரொம்ப நன்றிக்கா... என் கதைக்கு உங்கள் பாராட்டு எனக்கு உற்சாகத்தைத் தருகிறது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பாலாசி சரவணா...
நினைவுகள் இல்லை நண்பரே... சிறுகதைதான்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ரொம்ப அருமையான எழுத்து. சபாஷ்
பதிலளிநீக்குvery good post
பதிலளிநீக்கு>>>அப்பாகிட்ட ஒரு குணம் உழைக்கிறவனுக்கு அவன் கேக்கிறதை விட அதிகமா பணம் கொடுப்பார். யாராவது கேட்டா அவன் இன்னைக்கு பார்த்த வேலைய ரெண்டு நாள் பாத்திருந்த இதவிட கூடக் கிடைச்சிருக்கும். உழைக்கிறவன் திங்கிறதுல தப்பேயில்லை என்பார்.
பதிலளிநீக்குtouching lines
அந்த சேரில் ஒருமுறை உட்கார ஆசை ...
பதிலளிநீக்குமிக அருமை,
பதிலளிநீக்குஅப்பா சேர்,
இப்படி அந்த காலத்தில் எல்லார் வீட்டிலும் ஒவ்வொரு பொருளை சொல்வதுண்டு,
என் மாமனார் கூட் குளி தட்டில் தான் சாப்பிடுவார், மாமியார் யாராவது அந்த தட்டை எடுத்தால் யாரும் அதை எடுக்காதீம்க்க வாப்பா தட்டு அது என்பார்கள்.
வாங்க உழவன்....
பதிலளிநீக்குஉங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சி.பி.செந்தில்...
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க செந்தில் அண்ணா...
பதிலளிநீக்குஉட்கார்ந்து பாத்திடலாம்... உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஜலீலாக்கா...
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அருமையாய் வந்திருக்கு மகன்ஸ்!
பதிலளிநீக்குகிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இப்போதும் தப்பிப் பிழைத்து இருக்கும் இது போன்ற நாற்காலிகள் எத்தனை சோகத்தையும் மகிழ்ச்சியை சுமந்திருக்கும்?
பதிலளிநீக்குகுமார், நல்ல கதை. மனதை தொடும் வரிகள் பல இடங்களில்.
பதிலளிநீக்குஉங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
பதிலளிநீக்குhttp://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html
உணர்வுகள் நிறைந்தக் கதை. மனதையும் தொடுகிறது.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு சகோ.இந்த எழுத்திற்கு என்ன பரிசு தரலாம்?தருவதற்கு மனதிற்கு பிடித்த மாதிரி எதுவும் அமையவில்லை.
பதிலளிநீக்குஅம்மா இருக்கும் வரை அப்பா சேரை தொடச்சுத் தொடச்சு வச்சுபாங்க... அதுக்குப் பக்கத்துலதான் மதிய நேரத்துல படுத்திருப்பாங்க. எதோ அப்பா வந்து அதுல அமர்ந்திருக்க மாதிரியும் அவரோட காலடியில இவங்க படுத்திருக்க மாதிரியும் நினைச்சுக்குவாங்க போல. சின்ன வயசுல அப்பா சேர்ல உக்கார சண்டை போட்ட நான் அவர் மறைவுக்குப் பின்னால அதுல உக்கார நினைக்கலை. அது எனக்கு அப்பாவாத்தான் தெரிஞ்சது.
கண்ணில் நீரை வரவழைத்து விட்டது.
வாங்க ஜோதிஜி...
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி.
வாங்க வானதி...
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி.
வாங்க பிரஷா...
நீங்கள் கொடுத்திருக்கும் விருதுக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி.
வாங்க சித்தப்பா...
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி.
வாங்க ஸ்ரீஅகிலா...
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி.
வாங்க ஆசியாக்கா...
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றிக்கா.
எனக்கு பரிசெல்லாம் தரவேண்டாங்க்கா. இந்த உறவே இறைவன் தந்த பரிசுதானேக்கா. நமது அக்கா-தம்பி உறவு கடைசி வரை தொடர்ந்தாலே போதுங்க்கா.
அப்பா அம்மாவின் அந்யோன்யமும் அவர்மேல் உங்கள் மதிப்பும் பாசமும் எழுத்துக்கள் முழுதும் நிறைந்து நிற்கிறது குமார் !
பதிலளிநீக்குhttp://www.blogintamil.blogspot.ae/2013/06/blog-post_19.html
பதிலளிநீக்குவலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.நன்றி.
inspiring story with feelings
பதிலளிநீக்கு