செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

தேகத் தீண்டல்




நெருக்கத்தில் நாம்...
தீண்டல்களின் தீயில்
தகித்துக் கொண்டிருக்கும்
மனங்கள்..!

உன் விரல் கோலத்தால்
உடம்புக்குள் மின்சாரம்...!

தீண்டும் இடங்கள்
தவிர்த்து தீண்டா
இடங்களில் தவிப்பு..!

உலரும் நாவால்
வருடப்பட்டது
உலர்ந்த உதடு..!

உன் நகக் கீறல்களில்
வியர்வை துளிகள் புகுந்து
எரிகின்ற தேகத்திற்கு
எண்ணெய் வார்க்கின்றது..!

இயங்கிக் கொண்டிருக்கும்
உடல்களால் இயக்கம்
மறந்தது இதயம்..!

அறியாப் பருவத்துக்குப் பின்
ஆடைகளின்றி நாம்..!

கூடிக்கலந்த சந்தோசம்
முகத்தில் மட்டுமல்ல
மனதிலும்..!

எழ முயன்றபோது
மீண்டும் என்கிறாய்...
மறுத்தாலும் உன் மடியில்..!

-'பரிவை' சே.குமார்

வலைச்சரத்தில் எனது "தித்திக்கும் தமிழ்" என்ற கட்டுரையை படிக்க இங்கு சொடுக்கவும். 

19 கருத்துகள்:

  1. ஆகா...

    பிரமாதம்.. பிரமாதம் ...

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப நல்லாருக்குங்க!

    பதிலளிநீக்கு
  3. வாங்க செந்தில்...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வாங்க விந்தைமனிதன்...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. இன்னும் நளினமா முடியுமே:)

    பதிலளிநீக்கு
  6. உன் விரல் கோலத்தால்
    உடம்புக்குள் மின்சாரம்...!

    ஆகா கலக்கல் குமார்

    மிக மிக ரசித்தேன் வார்த்தைகள் அழகு

    பதிலளிநீக்கு
  7. வாங்க வானம்பாடிகள் சார்...
    எதோ எழுதினேன்... முயற்சிக்கிறேன்.
    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வாங்க சரவணன்...
    உங்கள் ரசனைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அருமையான கவிதை.. காதல் பயணிக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா18/8/10, 7:33 AM

    //உன் நகக் கீறல்களில்
    வியர்வை துளிகள் புகுந்து
    எரிகின்ற தேகத்திற்கு
    எண்ணெய் வார்க்கின்றது..! //
    அருமை குமார்!

    பதிலளிநீக்கு
  11. கவிதை.. கவிதை..

    ஒவ்வொரு வரிகளும் அருமையா எழுதியிருக்கீங்க..

    ரொம்ப நல்லாயிருக்கு.. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  12. ரொம்ப நல்லாருக்கு நண்பா

    பதிலளிநீக்கு
  13. வாங்க சிநேகிதன் அக்பர்...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    ஆமா பெயர் மாற்றம் நல்லாயிருக்கு.
    வாழ்த்துக்கள்.


    வாங்க ஸ்டார்ஜன்...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க வானதி...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வாங்க பாலாஜி சரவணன்...
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க பதிவுலகில் பாபு...
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க உழவன்...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. கவிதையைப் படிச்சதும் 'மீண்டும்'னு தோணுது

    பதிலளிநீக்கு
  16. வாங்க அப்பாதுரை...

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. ரொம்ப நல்லாயிருக்குங்க குமார்

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி