செவ்வாய், 27 ஜூலை, 2010

பேரம்

(Thanks : Google)


"ம்பா... பழம் என்ன வெல..?"

"வெலயக்கேட்டு வாங்கப் போறியா பெரிசு... காலையில வந்து கடுப்பேத்தாதே..."

"என்னப்பா... காலையில வர்ற யாவாரத்துக்கிட்ட இப்புடி பேசுறியே நீ யாவரம் பாத்து கிழிச்சியல்ல"

"சரி... என்ன வெல வேணும் உனக்கு"

"பழ விலைதான் கேப்பாங்க... அப்புறம் பழக்கடைக்கு வந்துட்டு ஆடு வெலயாக் கேப்பாங்க"

"நல்லா பேசுற பெரிசு... பொத்தாம் பொதுவுல பழ வெல கேட்டா எதை சொல்ல... ம்... சரி... ஆப்பிள் அறுவது, ஆரஞ்சு முப்பது, திராட்சை இருபத்தி அஞ்சு, வாழப்பழம் டஜன் பதினெட்டு, சாத்துக்குடி நாப்பது..."

"இருப்பா...அடுக்கிக்கிட்டே போறே... நாப்பத்தஞ்சு ரூபான்னு ஆப்பிள்ல ஒரு கிலோ போடுப்பா"

"என்னது நாப்பத்தஞ்சா... அட போ பெரிசு, காலையில வந்து கழுத்தறுக்காம... எனக்கு அடக்கமே அம்பத்தஞ்சாகுது. அறுபதுக்கு குறைஞ்சு இல்ல"

"ஏம்ப்பு விக்கத்தானே வச்சிருக்கே... நான் கேக்குறது சரியின்னு படலைன்னா நீ கொடுக்கிறவிலைய சொல்லு அதை விட்டுட்டு..."

"பெரிசு அடக்கம் அம்பத்தஞ்சு அதுக்கு வேணா தாரேன். எனக்கு லாபம் இல்லாட்டாலும் பரவாயில்லை"

"ஆமா... நீ கூட லாபம் இல்லாம கொடுப்பே... அம்பதுன்னு போடுப்பா..."

"இல்ல பெரிசு... முத கிராக்கி தட்டிபோனா அப்புறம் எல்லாமே தட்டிப்போகும்... அம்பத்தி மூணுன்னு போடுறேன்..."

"சரி போடு... ம் அந்த பழத்தைப் போடு. இது வேணா அடிபட்டிருக்கு பாரு. நல்லதா போடு"

"எம் பெரிசு எங்க அடிபட்டிருக்கு... சும்மா ஏம்ப்பு.?"

"காசு கொடுத்துதானே வாங்குறோம்... சும்மாவா தாரே"

"அது சரி..."

"இன்னொரு பழம் ஒண்ணு போடுப்பா..."

"நிறுவையெல்லாம் கரெக்டா இருக்கும்ப்பு... வேணும்மா பக்கத்து கடையில கொடுத்து அளந்து பார்த்துக்க"

"ஆமா இதுக்காக நான் அவன் கடைக்கு போறேன். அட ஏம்ப்பு நீ வேற..."

"இந்தாங்க அம்பத்தி மூணு கொடுங்க"

"இருப்பு... முப்பதுன்னு சாத்துக்குடி ஒரு கிலோ குடு"

"சும்மா போ பெரிசு... இதுக்கு காசை குடுத்துட்டு அடுத்த கடையில வாங்கிக்க"

"ஆமா உங்கடையில ஆப்பிளு வாங்கிட்டு அடுத்த கடைக்கு போறேன்... எவ்வளவுன்னா கொடுப்பே..."

"முப்பத்தஞ்சுன்னு போட்டு வாங்கிக்க"

"சரி கொடு..."

"பாரு இதுலயும் அடிபட்டதை கொடுக்கப் பாக்குறே... நல்லதா போடுப்பா"

"ஏம் பெரிசு லேசா அடிபட்டதெல்லாம் வேண்டான்னா நான் எப்படி யாவாரம் பண்றது?"

"அதுக்கு நாந்தே கெடச்சனா... எவனாவது கிராமத்துல இருந்து முழங்காலுக்கு எத்திக்கட்டின வேட்டியும் வெத்து உடம்புமா வருவான் அவன் தலையில கட்டு..."

"அட இங்க பார்ரா பெரிசுக்கு லொல்லை... நீங்க எங்க இருந்து வாரீங்க... அமெரிக்காவுல இருந்தா... நீயும் பட்டிகாடுதானே... அப்புறம் என் இப்புடி அள்ளிவிடுறே..."

"என்ன பண்ண கிராமத்தான்னா ஏமாத்திடுவீங்கள்ல"

"சரிதான்... சரியான ஆளுதான். இந்தா புடி..."

"அப்புடியே வாழப்பழம் ஒரு டசன் கொடு"

"அப்பு இதுல கொறைக்க முடியாது... பதினெட்டுனா தர்றேன்... இல்லேன்னா இதுக்கு மட்டும் காச கொடு"

"அட ஒரு ரெண்டு ரூபா கம்மி பண்ணி கொடுப்பா..."

"அதானே பாத்தேன்... அது எப்புடி அதே வெலக்கு வாங்குவே... என்னாகுறது உன்னோட தீர்மானம்... சரி புடி இன்னைக்கு காலையில உங்கிட்ட மாட்டணுமுனு இருந்திருக்கு...ம்... அம்பத்தி மூணும் ஒரு முப்பத்தஞ்சும் எம்பத்தெட்டு... இது ஒரு பதினாரு... அப்பு நூத்தி நாலு கொடுப்பு..."

"இந்தா.."

"என்ன நூறு ரூபா கொடுக்கிறே... நாலு ரூபா கொடு"

"அட ரவுண்டா வச்சுக்கப்பா..."

"என்ன பெரிசு உன்னோட ஒரே ரோதனையாப் போச்சு... அட காலையில வதைய வாங்காம கொடு பெரிசு... அதான் எல்லாத்துலயும் கொறச்சு கொடுத்தாச்சுல்ல"

"என்னப்பா ஒண்ணோட... சில்லறயில்லப்பா"

"எவ்வளவுக்கு வேணும் நான் தர்றேன் கொடு..."

"விடமாட்டியே... சரி இந்தா ரெண்டு ரூபாதான் இருக்கு"

"அதுல ரெண்டு ரூபா குறைச்சாத்தான் ம்னசு ஆறும்போல... "

"வாரேம்பா..."

"வராதே...நல்ல நேரத்துல கடைய திறந்திருக்கேன். இன்னைக்கு யாரு முகத்துல முழிச்சேனோ நாளைக்கும் தேடிப்போயி முழிக்கணும்"

"என்னப்பா முணங்குறே..."

"ஒண்ணுமில்லே"



"ம்பா மல்லிகைப்பூ என்னப்பா வெல"

"அடுத்து மாமூவா... மாட்டுனேடி மாமூ"

"ஏம்ப்பா... அடுத்த கடையில சாமான் வாங்கும்போது நீ ஏன் பேசுறே. உங்கடையில யாவாரத்தைப் பாரு?"

"சரி பெரிசு... நீ ஆரம்பி"

"நூரு பத்து ரூபாயா? அடேயப்பா அநியாய வெலயா இருக்கே... மதுர மாட்டுத்தாவணியில நூரு ரெண்டு ரூவாக்குத்தாரான்..."

"சரி பெரிசு... இந்தா கண்ணப்பா கிளம்புது ஏறி முப்பது ரூபாக்கு டிக்கெட் எடுத்துக்கிட்டு படம் போடுவான் பாத்துக்கிட்டு போனா மதுரயில கொண்டே எறக்கிவிடுவான். நூறு ரெண்டு ரூபாக்கி வாங்கிக்கிட்டு வரலாம்"

"அடேங்கப்பா... எ உனக்கு இம்புட்டு கோவம்? விக்கிறான்னுதானே சொன்னே... உன்னைய கொடுக்கச் சொல்லலையே... கட்டுற வெலைக்கு கொடு..."

"அப்பு பத்து ரூபாதான்... உனக்கு எவ்வளவு வேணும் ஐநூறா... ஆயிரமா..? சொல்லு பாத்துப் போட்டுத்தாரேன்..."

"முதல்ல நீ வெலயச் சொல்லு"

"எட்டு ரூபான்னு தாரேன்..."

"சரி நூறு கொடுப்பா..."

"இதுக்குத்தான் இப்புடி பேரம் பேசினே... விளங்கிடும் போ..." என்றபடி மல்லிகைப்பூ கன்னியை எண்ண,

"நல்லா எண்ணுப்பு... பேசிக்கிட்டே கன்னிய விட்டுறப் போற. ரெண்டு கன்னி சேத்து வெட்டுப்பா"

"அப்பு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கா எண்ணுற எனக்கு கணக்குச் சொல்லித்தரியா? இந்தா எட்டு ரூபா எடு"

"இந்தாப்பா..."

"எங்ககிட்ட பேரம் பேசுங்க... பெரிய கடைக்குப் போயி சாமான் வாங்கும்போது போட்டிருக்க வெல கொடுத்து வாங்குவீங்க. அப்ப இப்புடி பேரம் பேச மாட்டிங்க. அவன் தரமாட்டான்னு தெரியும்"

"வாரேம்பா..."

"ம்..."

"மாமூ... வலுவான கிழடுதான். அதான் வீட்டுல இதை அனுப்பியிருக்காங்க."

"ஆமா... எல்லாத்துலயும் ரெண்டு ரூபாயாவது லாபம் பாக்காம பெரிசு விடலை பாத்தியா"


றுநாள்...

தனது சைக்கிளில் தோட்டத்தில் பறித்த காய்கறிகளை கட்டிக்கொண்டு வியாபாரத்துக்கு கிளம்பினார் பேரம்.

"பெரியவரே... கத்திரிக்காய் என்ன வெல"

"கிலோ பதினஞ்சும்மா"

"பதினஞ்சா... அரைக்கிலோ வேணும் வெலய பாத்துப் போட்டுக் கொடுங்க..."

"எத்தனை கிலோ வாங்கினாலும் அஞ்சு பைசா கூட கொறச்சுத் தரமாட்டேன். இது மூட்டைக் கத்திரி இல்ல... தோட்டத்துல காலையில பறிச்சு கொண்டு வாரேம்மா. கடக்காரங்கிட்ட காஞ்சு போன கத்திரிக்காயை இருவது ரூவா கொடுத்து வாங்குவீங்க... இது எப்புடியிருக்கு பாரு.... ஒரே வெலதான் வேணுமின்னா வாங்கு"

"சரி போடுங்க... அஞ்சு பைசா கூட கொறக்க மாட்டிங்களே" என்றபடி காயை வாங்க, 'கத்திரிக்காய், வெண்டைக்காய்... " என்று கத்தியபடி சைக்கிளை மிதித்தார் கறார் பேரம்.
 
-'பரிவை' சே.குமார்.

28 கருத்துகள்:

  1. Me the first :)) ?
    மீண்டும் வருவேன்

    பதிலளிநீக்கு
  2. மனத்தைக் கவர்ந்த கதை.. முதலில் இருவரிடம் பேரம் பேசும் பெரியவர் புதிய உத்தி..

    காசு முக்கியம்... என உணரவைத்த கதை.. பாராட்டுக்கள் குமார்...

    பதிலளிநீக்கு
  3. கறாரான கதை

    நல்லாருக்கு குமார்

    பதிலளிநீக்கு
  4. ஹாஹாஹா... ரைட்டு. மதுரைக்காரய்ங்கள்ல. அதாம்ப்பு.

    பதிலளிநீக்கு
  5. ஹா ஹா சூப்பர்ர் தாத்தா...

    பதிலளிநீக்கு
  6. கதை படிக்கப் படிக்க சிரிப்புத்தான்.என்றாலும் இதுதானே இயல்பு !

    பதிலளிநீக்கு
  7. எதார்த்தமான நடை... நல்லா இருக்குங்க கதை

    பதிலளிநீக்கு
  8. ஊருக்கு வந்துட்டு போன மாதிரி ஒரு வாசனை. இதை எல்லாம் காது கொடுத்து கேட்டு எம்புட்டு நாளாச்சு அப்பு! அருமை!

    பதிலளிநீக்கு
  9. வாங்க கார்த்திக்...
    பதிவிட்டதும் பறந்து வந்த வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வாங்க செந்தில்...
    ஆம் நண்பரே... எங்கு சென்றாலும் பேரம் என்பது முக்கியமானதே... எல்லாம் காசு பணத்துக்காகத்தான்.

    பதிலளிநீக்கு
  11. வாங்க முத்துலெட்சுமி அக்கா...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வாங்க சரவணன்...
    வாங்க கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வாங்க விக்னேஷ்வரி...
    ரொம்ப நாளா ஆளைக் காணோம். ரொம்ப பிஸியோ?
    ஆமால்ல... மதுரைக்காரங்கன்னா இப்படித்தானோ...?
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வாங்க மேனகாக்கா...
    சாதாரண தாத்தா இல்ல எமகாதக தாத்தா.
    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வாங்க ஹேமா...
    உங்கள் கருத்து உண்மை. இயல்பான வாழ்க்கையில் இதுவும் ஒன்றுதானே..?

    பதிலளிநீக்கு
  16. வாங்க தங்கமணி...
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வாங்க அப்துல்...
    நீங்க நம்ம ஊருப்பக்கமா... நம்ம பக்கத்து மக்களை வலைப்பூவில் அதிகம் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.
    அடிக்கடி வாங்கப்பு.

    பதிலளிநீக்கு
  18. மனதத் தொட்ட கதை.

    மிக இயல்பாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  19. "அட இங்க பார்ரா பெரிசுக்கு லொல்லை... நீங்க எங்க இருந்து வாரீங்க... அமெரிக்காவுல இருந்தா... நீயும் பட்டிகாடுதானே... அப்புறம் என் இப்புடி அள்ளிவிடுறே..."


    .... சரிங்க.....சரி.....:-)

    கதை, ரொம்ப நல்லா இருக்குதுங்க....

    பதிலளிநீக்கு
  20. வாங்க அக்பர்...
    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வாங்க சித்ரா...
    கருத்துக்கு நன்றி... எங்க பக்கத்து பேச்சு வழக்குல இதெல்லாம் அதுவா வந்து விழுகும்... அதுதான் கதையிலும்...

    மத்தபடி சத்தியமா உள்குத்து எதுவும் இல்லைங்க.

    தொடரும் நட்புக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  22. வழமை போலவே கதை மிகவும் அருமை . என்ன செய்வது நண்பரே இது போன்ற உழைப்பாளிகளிடம் மட்டும்தான் நாம் ஐந்து பைசாவிற்கும் ,பத்து பைசாவிற்கும் பேரம் பேசுவோம்
    .

    பதிலளிநீக்கு
  23. குமார், கதை சூப்பர். உரையாடல்கள் அருமை இருக்கு.

    பதிலளிநீக்கு
  24. வாங்க சங்கர்...
    ஆம் நண்பரே... பேரம் எல்லாமே உழைப்பாளிகளிடம் மட்டுமே.

    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வாங்க வானதி...
    உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி

    பதிலளிநீக்கு
  26. கதை, ரொம்ப நல்லா இருக்குதுங்க

    பதிலளிநீக்கு
  27. மிக எளிமையான
    ஆனால்
    வலிமையான படைப்பு.
    வாழ்த்துக்கள் குமார்.


    இதையும் பாருங்கள் :

    http://thejushivan.blogspot.com

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி