வெள்ளி, 22 அக்டோபர், 2021

பிக்பாஸ் - 5 : 5. அசிங்கப்பட்ட அபி

பிக்பாஸில் பட்ஜெட் போட்டி தொடர்ந்து கொண்டிருந்தது, காயின் கை மாறிப் போய்க் கொண்டேயிருந்தது, எல்லாரும் திருட்டுப் பேய்களாக உலாவிக் கொண்டிருக்க, ராஜூம் அண்ணாச்சியும் மட்டுமே இது எங்களுக்கு வேண்டாம் என்ற மனநிலையில் சுற்றினார்கள். சின்னப்பொண்ணுக்கும் தாமரைக்கும் நாங்க கொடுப்போம் என சிங்கர் அணி உலகுக்கே சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆமாம் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். தனுஷ் படத்தில் மச்சான் நீ கேளேன்... நீ கேளேன்னு கருணாஸ் சொல்ற மாதிரி நீ அம்மாவுக்கு கொடு, அக்காவுக்கு கொடுன்னு மற்றவர்களை ஏதோ கொடுக்க மாட்டேன்னு சொல்ற மாதிரியும் இவங்க மட்டும் விட்டுக் கொடுக்குற மாதிரியும் காட்டிக்கிட்டாங்க.

பிக்கி கூப்பிட்டு யார் யார் காயின் வச்சிருக்கீங்களோ அதை எடுத்துக்கிட்டு வந்து பிளாஸ்மாவுக்கு முன்னாடி நின்னு சொல்லுங்கடான்னு சொல்ல, பாவனி, தாமரை, இசை, வருண் மற்றும் அர்னால்ட் காமிக்க, இப்ப காற்றுன்னா வெளியில, நீர்னா கழிப்பறை, நெருப்புன்னா கிச்சன் அப்படின்னு சொல்லி அஞ்சு பேருக்கும் பாகம் பிரிச்சிக் கொடுத்து, நீங்க பாதுகாத்துக்கங்க - உங்க ஏரியாவுக்குள்ள யார் வரணுமின்னாலும் நீங்க சொல்றதைச் செஞ்சாத்தான் வரலாம்ன்னு சொல்லலாமுன்னு சொல்லிட்டார். அஞ்சு குழுவா உருவாகிட்டாங்க.

இதுல சிங்கர் குழு அவங்களுக்குத் தனியா ஒரு விதிமுறை வச்சிக்கிட்டாங்க, அங்க அர்னால்ட் பேசல, ஆலயமணி அபிலாஷ்தான் பேசிக்கிட்டே இருந்தான். ப்ரியங்காவை மட்டும் ஏழு மணிக்கே படுக்க விட்டானுங்க... பிக்கி நாய விட்டுக் குரைக்க வைத்து, அதன் பின் யாருமே விதிமுறைகளைப் பின்பற்றவில்லைன்னு பொங்கிட்டாரு.

ஆலயமணி இசையோட காயினை எடுத்து நான் எடுத்துட்டேன்னு சீமானாட்டம் சீறிக்கிட்டு இருந்தான். என் காயினைக் கொடுன்னு பதினாறு வயதினிலே கமல் மாதிரி திரும்பத்திரும்ப கேட்டுக்கிட்டு இருந்துச்சு, அவனும் எனக்கு இது வேணான்டி, நா கார்டன் ஏரியாவ எடுத்துக்கிறேன். வருணை வசமிழக்க வைக்கிறேன், அண்ணாச்சிய ஆணியில அடிச்சிடுறேன், ராஜூவை ரகசிய அறைக்குள்ள போடுறேன், ப்ரியங்காவை பினாயில் குடிக்க வைக்கிறேன்னு  ரோட்டோரத்துல நாட்டு மருந்து விக்கிறவன் மாதிரிப் பேசினான். இசையும் சுருதியும் ஒண்ணு சேர்ந்ததும் அபியால ரஜினி பொண்ணு, தனுஷ் மனைவி ஆடுன பரதநாட்டிய நிலமை ஆயிப்போயி ஆள் எஸ்கேப் ஆயிட்டான்.

எங்கிட்டுப் போனாலும் அடிக்கிறானுகளே நாரதரா இருந்துடலாமுன்னு பார்த்தா நாலு பக்கமும் முட்டுச் சந்துல அடிவாங்குற வடிவேலு மாதிரி ஆக்கிட்டானுங்கன்னு பய பயந்து போய் அர்னால்ட்கிட்ட நான் பைனலிஸ்ட் மூணு பேர்ல வர என்ன செய்யணும்ன்னு கேட்டான். அவனோ வாயை வச்சிக்கிட்டு இரு, ஆனா நீதான் இங்க அதிகமா சுவராஸ்யத்தைக் கொடுக்கிறே இருந்தாலும் அதையே ஒவராக் கொடுத்துக் கெடுக்கிறேன்னு சொன்னான். சரி மாத்திக்கிறேன் ஆனா நாம மூணு பேர்தான் இறுதிப் போட்டியில இருக்கணும் இருப்போம் என்று சூளுரைத்தான்.

போட்டி வேற மாதிரிப் போறதப் பார்த்து பிக்கி போட்டி முடிந்ததா அறிவிச்சி, இங்க நீ என்ன உனக்குப் பிடிக்காத மற்றவன் என்னன்னு இதே பஞ்ச பூதத்தை வச்சிச் சொல்லுங்கடான்னு சொல்ல, ஆளாளுக்கு ஒண்ணொன்னு சொல்ல, ராஜூ சொன்னதுதான் ஹைலைட் - நான் காற்று எங்கிட்ட நல்லாப் பழகுனா தென்றல், மோதிப்பாக்க நெனச்சா புயல்ன்னு சொன்னதும் சிங்கர் அணிக்கு சிரியஸாவே ஒரு பயம் வந்திருச்சு. அண்ணாச்சி வேற ஆலயமணியைத் தட்டி விட்டுட்டாரு.

இந்தப் பாவனி வேற லூசுத்தனமாப் பேசுது, சிபி இசைக்கு காயினைக் கொடுத்தது தப்பு எனக்குத் தந்திருக்கணும் அப்ப நான் உனக்கு வேண்டாமான்னு அவனுக்கு அணை கட்டுச்சு, பின்ன அவன் உங்கிட்ட இருக்குல்லன்னு சொன்னப்போ இல்லைன்னு சொன்னுச்சு - ஆனா பிளாஸ்மாக்கிட்ட காட்டுச்சு - சரி நான் உனக்கு கொடுத்தா என்ன பண்ணுவேன்னு அவன் கேட்க, மத்தவங்களுக்கு கொடுப்பேன்னு சொன்னுச்சு, அடி லூசு அதைத்தானே நான் செஞ்சேன்னு வேதாளம் அஜீத் மாதிரி சிரிச்சிட்டுப் பொயிட்டான்.

ராஜூவை அடித்து ஆடணுங்கிறதுதான் சிங்கர் அணியோட எண்ணம் ஆனா அவனைத் தொட முடியாததால அவன் யார் கூட பேசுறானோ அவங்களை எல்லாம் அடிக்கிறாங்க... அவன் பொங்குவான்னு பாக்குறாங்க, அவனோ மந்திரப்புன்னகையை வீசிட்டு போயிடுறான்.

பாவம் ப்ரியங்கா - எங்கிட்டு மோதினாலும் அதுக்கு கட்டையைப் போட்டுடுறானுங்க, சூப்பர் சிங்கர்ல கத்துற மாதிரி கத்திப் பேசுது. விரைவில் அடிபடும் - அடிப்பது அண்ணாச்சியாவும் இருக்கலாம், ராஜூவாகவும் இருக்கலாம் இவங்கள்லாம் இல்லைன்னா அக்சராவாக்கூட இருக்கலாம்.

இந்த அக்சரா அழுது நான் வீட்டுக்குப் போறேன்னு சொன்னதும் பிக்கி கூப்பிட்டு ஆறுதல் சொல்லி அனுப்புனாரு, அக்சரா பேச்சுவார்த்தை நடத்துனப்போ ஆலயமணிக்குத்தான் வயித்தக் கலக்கிருச்சு. அப்படிக் கலக்கனதோட சுருதிக்கிட்ட மோத, அது என்ன சொன்னுச்சு தெரியுமா..?

'நீ மூடிக்கிட்டு உன் வேலையைப் பாரு...'

அம்புட்டுத்தான் தன்னோட அத்தனை ராஜதந்திரமும் செத்துப் போச்சேன்னு பய இப்ப என்ன செய்யலாமுன்னு யோசிக்க ஆரம்பிச்சிருக்கான்.

தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

1 கருத்து:

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி