'அப்பாவி தங்கமணி' என்னும் வலைப்பூவில் எழுதி வந்த சகோதரி திருமதி. கோவிந்த் அவர்கள் 'சஹானா' என்ற பெயரில் இணைய இதழ் ஒன்றை நடத்துகிறார்.
பட்டாம்பூச்சியை வாசிக்க இங்கு சொடுக்குங்கள்.
**********
சமீபத்தில் ஒரு இணையக் குழுமத்தின் சிறுகதை போட்டிக்கான முடிவை காணொளிக் கூட்டம் மூலமாக நடத்தினார்கள். முதன்மை நடுவர் சிறுகதைகள் பற்றி மிகச் சிறப்பான உரை நிகழ்த்தினார்... அவரின் உரை அடிக்கடி தடைபட, நிகழ்வு நடத்தியவர்கள் மைண்ட் வாய்ஸ் என நினைத்து மைக்கை ஆப் பண்ணாமல் பேசிக் கொண்டிருந்ததே காரணம் என்றாலும் உரையைப் பொறுத்தவரை புதிய எழுத்தாளர்களுக்கான நிறைவான உரை... குமுதம், ஆவி போன்ற வெகு ஜனப் பத்திரிக்கைகள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட வணிகப் பத்திரிக்கைகள்... அவற்றுக்கு எழுதுவது போல் எழுதாதீர்கள் என்றும், நல்ல கதைக்கு மோசமான தலைப்பு... நல்ல தலைப்புக்கு மோசமான எழுத்து நடை என்பதெல்லாம் கதையை வாசிக்கும் போது நமக்கு வெறுப்பைக் கொடுக்கும் என்றெல்லாம் பேசினார்.
மேலும் பிரபலமானவர்களின் கதைகள் மேலே சொன்ன பத்திரிக்கைகளில் அதிகம் வந்தன என்றும், ஆனால் அந்தப் பத்திரிக்கைகள் இவர்களின் கதைகளைப் போட்டு அடுத்த மூணாவது பக்கத்தில் ஒரு மூணாந்தர (கவனிக்க... பிரபலம் தவிர மற்றவர்கள் மூணாந்தரம்) எழுத்தாளரின் கதைகளைப் போட்டு இவர்களைக் கேவலப்படுத்தும் என்றார். சரி மூணாந்தர எழுத்தாளர்களாய் இருந்துதானே இவர்கள் முதன்மை எழுத்தாளர்கள் ஆகியிருப்பார்கள்... அல்லது மூணாந்தர எழுத்தாளனின் கதையைப் பகிரும் வணிகப் பத்திரிக்கைக்கு இவர்கள் ஏன் எழுதினார்கள் பணத்துக்காகத்தானே... பேசலாம் என்றால் எல்லாம் பேசுவார்கள்... கேட்க ஆளிருக்கு என்பதே இதற்குக் காரணம். இன்னமும் ஆசிரியர்களுக்கு அரியர்ஸ் பணம் வந்த போது புத்தகம் வாங்காமல் இடங்களையும் நகைகளையும் வாங்கினார்கள் என்றார். இவர் யார் யார் என்ன வாங்கினார்கள் எனப் போய்ப் பார்த்தாரா...? வாங்கிய சம்பளத்தில் பெரும்பாலானதை புத்தகங்கள் வாங்கவே செலவழித்த, இப்பவும் புத்தகங்களைக் வாங்கிக் குவிக்கும் ஆசிரியர்களுடன் பழகியவன்... பழகிக் கொண்டிருப்பவன் என்பதால் அவரின் இந்தப் பேச்சு தேவையில்லாத ஆணியே எனத் தோன்றியது.
அடுத்து நடந்ததுதான் நகைச்சுவையிலும் நகைச்சுவை... ஒரே நடுவர் என்பதால் நானூற்றி அம்பதுக்கும் மேல் வந்த கதைகளில் சல்லடை போட்டு, பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்து நாற்பது கதைகளைத் தேர்ந்தெடுத்து அவரிடம் கொடுத்ததாய்ச் சொன்னார்கள். அந்த நடுவர் நான் படித்த இருபத்தி நாலு கதைகளில் ஆறு கதைகளை பரிசுக்குரியவை என்றில்லாமல் நல்ல கதைகள் என்ற கணக்கில் சொல்கிறேன் எனத் தலைப்புக்களைச் சொன்னார். ஆக... (இந்த ஆக... ஸ்டாலின் சொல்வது இல்லை...) கொடுத்தது 40 ஆனால் வாசித்தது 24 அப்ப அந்த 16... அதெல்லாம் கேட்காதீங்க...
அடுத்த நகைச்சுவையையும் வாசிச்சிருங்க... ஆறு பேர் கதை சொல்லிட்டேங்க... அவங்க பேர் என்னன்னு நீங்க சொல்லுங்க என்றதும் 450க்கும் மேல சல்லடை போட்டுத் தேடி நாப்பதை எடுக்கவே அலுத்துப் போச்சுங்க... இந்த நாப்பதுக்கும் நாங்க தற்காலிக நம்பர் கொடுத்துத்தான் உங்களுக்கு அனுப்பினோம், அதனால் இனி இதைத் தேடி எழுதியவர் பேரை எடுக்கணும்... எப்படியும் நாளைக்கு உங்களுக்குச் சொல்கிறோம் என்றார்கள். என்னோட கேள்வி என்னன்னா ஏய்யா... நானூறுல நாப்பத எடுத்தப்போ அழகா ஒரு எக்ஸெல் பைலைத் தயாரித்து வைத்திருக்கலாமே... அவர் சொன்னதும் எழுதியவர்கள் இவர்கள் எனச் சொல்லியிருந்தால் எழுதியவருக்கும் மகிழ்வாய் இருந்திருக்குமே... என்னமோ போடா மாதவா.. நாப்பது இருபத்தி நாலு கதை வந்தப்பவே நேரலை பண்ணியிருக்க வேண்டாமோ என யோசித்திருப்பார்கள்தானே.
**********
அமேசானுக்குள் வாங்கன்னு தனபாலன் அண்ணா, ஜோதிஜி அண்ணா எல்லாம் சொல்ல, வெங்கட் அண்ணா என்ன வேணுமின்னாலும் எங்கிட்ட கேளுன்னு சொல்ல, முன்னாடி 'பென் டூ பப்ளிஷ்' போட்டிக்கு போட்டிருந்த 'நெருஞ்சியும் குறிஞ்சியும்' நாவலுடன் போன வாரத்தில் சில கவிதைகளைத் தொகுத்து 'சொல்ல மறந்த கவிதைகள்- I' என்ற பெயரில் போட்டாச்சு. அவர்கள் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலையே எனக்கு அதிகமாத்தான் தெரியுது... இலவசமா வாசிக்க முடிஞ்சா வாசிச்சி உங்க கருத்தைச் சொல்லுங்க... தொடர்வதா வேண்டாமா என்று முடிவு செய்ய வசதியாய் இருக்கும்.
நெருஞ்சியும் குறிஞ்சியும் ( இன்றும் நாளையும் இலவசம்)
**********
தொடர்ந்து ரெண்டு மூன்று மாதமாக பெரும்பாலான இரவு நேரத்தில் குறைந்தது பத்துப் பக்கம் எழுதி, எதிர்சேவை கதையின் கருவை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு நாவல் எழுதி முடித்திருக்கிறேன். கிட்டத்தட்ட 560 பக்கங்கள் வந்திருக்கும் நாவலை சிவகங்கை மாவட்டப் பேச்சு வழக்கு நன்கு அறிந்த ஒருவரிடம் கொடுத்து அதில் தேவையில்லாத பகுதிகளை நீக்கி, எழுத்துப் பிழை பார்த்துத் திருத்த வேண்டும்... இதுவும் கிராமத்து வாழ்க்கைதான்... அழகன் குளம் என்னும் கிராமமும் மதுரையும் இணைந்தே பயணிக்கும் கதை... குடும்ப உறவுகள், சண்டை, திருவிழாக்கள், காதல் என நகர்ந்திருக்கும் கதைக்குள் சில புத்தகங்கள், சில கோவில்களின் வரலாறுகள் என கொஞ்சமாய் உண்மைகளும் இணைத்துப் பயணித்திருக்கும் கதையின் நாயகி பெயர் எப்பவும் போல் புவனாதான்... எழுதிய எனக்கு எப்பவும் போல் பிடித்தது... வாசித்த சகோதரர் நல்லா வந்திருக்கு என்றார். இனி வெளியில் கொடுத்து வாங்கும் போதுதான் நாவல் எப்படி இருக்கிறது என்பதை அறியமுடியும்.
மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.
நமது வலைத்திரட்டி: வலை ஓலை
பதிலளிநீக்குதங்கள் பதிவு வலை ஓலை வலைத் திரட்டியில் வெளியாகியுள்ளது.
சிறுகதைப் போட்டி என்று வந்தால் அதற்கு வரும் அத்தனை கதைகளையும் முழுமையாக வாசித்து தானே தீர்மானிக்க வேண்டும்? ஆளாளுக்கு விழா எடுத்தால் இப்படி தான் போல.
தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள். விரைவில் நூல் வெளியீட்டை எதிர்பார்க்கிறேன்.
அன்பின் இனிய
பதிலளிநீக்குநல்வாழ்த்துகளுடன்...
ஆகா கிண்டில் வந்தாச்சா... மகிழ்ச்சி... வாழ்த்துகள் குமார்...
பதிலளிநீக்குதரவிறக்கம் செய்கிறேன்... நன்றி...
மற்றபடி ஆதங்கம் புரிகிறது...
சஹானா இணைய இதழில் உங்கள் பட்டாம்பூச்சி முன்னரே வாசித்தேன். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகிண்டில் - வெற்றி பெற வாழ்த்துகள் குமார். தொடர்ந்து வெளியிடுங்கள்.