புதன், 22 பிப்ரவரி, 2017

6. என்னைப் பற்றி நான் - மதுரைத்தமிழன்

ன்னைப் பற்றி நானில் ஆறாவது முகமாய் தன்னைப் பற்றி விரிவாய் சொல்லியிருக்கிறார் 'அவர்கள் உண்மைகள்' மதுரைத் தமிழன் அவர்கள்... இவருடைய தளத்தில் பெரும்பாலும் பலரின் கருத்துக்கள் விரிவாய் இருக்கும். நான் பெரும்பாலும் சுருக்கமாய் ரெண்டு வரிக்குள்ளோ, ரெண்டு வார்த்தைக்குள்ளோ முடித்துக் கொள்வேன். இவரின் தளத்தை தொடர்ந்து வாசித்தாலும் பல நேரத்தில் கருத்து இடுவதும் இல்லை... இவரின் தளமின்றி தற்போது பெரும்பாலான தளங்களை வாசித்து விடுகிறேன். கருத்து இடமுடியாமல் அலுவலகம், சமையல் பணி, ஊருக்குப் பேசுதல் பின்னர் எப்படா சாப்பிட்டுப் படுப்போம் என நினைவு வர, படுத்துக் கொண்டே வாசித்துவிடுவேன்... கருத்து இட முடிவதில்லை.

மதுரைத் தமிழன் அவர்களுடன் பதிவு குறித்து கருத்துப் போரோ... முகநூல் அரட்டையில் விவாதமோ செய்ததில்லை... அவர் கலாய்க்கும் அரசியல் பதிவுகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். பெரும்பாலும் அரசியல்வாதிகள் குறிப்பாக மறைந்த அம்மா, கலைஞர், ஸ்டாலின், வைகோ என காமெடியாக எதாவது படம் தேடினால் அதில் கிடைப்பது இவர் எடிட் பண்ணின படங்களாக எனக்கு அமையும். குறிப்பாக தேர்தல் சமயத்தில் எழுதிய பதிவுகளில் பகிர்ந்த படங்கள் பெரும்பாலும் இவர் பகிர்ந்த படங்களே.

எழுத்தின் தொடர்பால் என்னைப் பற்றி நான் குறித்துச் சொல்லி அதற்கு தங்கள் பதிவு வேண்டும் என்று சொல்லிக் கேட்டதும் உடனே அனுப்பிக் கொடுத்தார். சென்ற வாரம் பகிர்ந்த கில்லர்ஜி அண்ணாவின் பதிவு வந்த ஒரு மணி நேரத்தில் இவரின் பதிவும் வந்தது. கேட்டதும் அனுப்பிக் கொடுத்த அண்ணாவுக்கு நன்றி.

இருவருக்கும் அதிகம் தொடர்பு இல்லை என்றாலும் புகுந்த வீட்டுத் தொடர்பு இருக்குல்ல அது போதும்ல்ல... அவரு செங்கோட்டையில் பிறந்து மதுரையில் படித்து வளர்ந்திருக்கிறார். என் மனைவி பிறந்தது மதுரை... அதனால ரெண்டு பேருக்கும் புகுந்த வீடு ஒண்ணுதானே... முகம் பார்க்காமல்... குரலைக் கேட்காமல்... ஏதோ ஒரு பந்தம் நம்மை இணைத்து வைக்க, அவரைப் பற்றி முழுமையாக அறிக் கொடுத்திருக்கிறார். வாசியுங்கள்... அதே அக்மார்க் மதுரைத் தமிழனின் குறும்பு எழுத்தில் கண்டிப்பாக உங்களைக் கவரும்...


பொதுவாக அடுத்தவர்களைப்பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் மனிதர்களுக்கு உண்டு அதன் அடிப்படையிலே பல வார இதழ் நாளிதழ்கள் செயல்படுகின்றன. மேலும் அவைகள் தனிப்பட்டவர்ளை பற்றி கிசு கிசுப்பு என்ற பாணியில் பல கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகின்றன. ஆனால் வலைப்பதிவர் மனசு குமார் அப்படி அல்லாமல் வலைப்பதிவர்களை பற்றி வாரம் தோறும் பதிவர்களையே 'என்னைப்பற்றி நான்' என்று கேட்டு வாங்கி பதிகிறார். அவர் என்னிடம் கேட்டு கொண்டதற்கிணங்க என்னை பற்றிய உண்மையாண தகவல்களில் எனது பேங்க் அக்கவுண்ட் . ,எனது பழைய மற்றும் இன்னாள் காதலிகள் போன்ற விஷயங்களை தவிர்த்து எழுதி இருக்கிறேன்

என்னைப்பற்றி என்று  சொல்லும் போது உயிரும் உடலும் தந்த அம்மா, அப்பா  வழிகாட்டியாக விளங்கிய  அண்ணன், ஆசிரியர்கள், வாழ்க்கையைச் செதுக்கிய & வாழவைத்த புத்தகங்கள், உயிர் நண்பர்கள் என்று பலதும் மனதில் முட்டிக்கொண்டு நிற்கின்றன. இதில்  எதை முதலில் சொல்வது எதை அடுத்துச் சொல்வது என்று தீர்மானிக்க இயலாத வண்ணம் அனைத்தும் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் இணைந்து நிற்பதை எப்படி  பிரித்து எதை முதலில் எழுதுவது எதை அடுத்து எழுதுவது என்பது விளங்கவில்லை. அதனால் மனம் போன போக்கில் எழுதுகிறேன்.

தமிழகத்தில் குற்றலாத்திற்கு அருகில் உள்ள செங்கோட்டை என்னும் ஊரில் பிறந்தவன் நான் அதனால் என்னை செங்கோட்டை சிங்கம் என நினைத்து கொள்ள வேண்டாம் குற்றாலத்தில் இருந்து தப்பி வந்த குரங்காவே கருதி கொள்ளுங்கள் (குரங்காக உங்களை கருதவில்லை நீங்கள் குரங்குதான் என்றுதான் நாங்கள் சத்தியம் பண்ணுகிறோம் என்று நீங்கள் முனுமுனுப்பது என் காதில் விழுகிறது) குற்றால குரங்காக இருந்த நான் அழகர்கோவில் குரங்காக மாறிவிட்டேன் அதுதானங்க மதுரைக்காரானாக மாறி மதுரையில் வளர்ந்தேன்.  அதன் பின் சென்னைவாசியாகி  கடைசியில்  அமெரிக்கா வாசியாகிவிட்டேன்

என் குடும்பத்தை பற்றி: எங்கள் வீட்டில் நாலு காளை மாடுங்க மட்டும் அதில் நாந்தன் கடைக்குட்டி என் மனைவி வீட்டில் மூன்று பசுமாடுக்கள் அதில் என் வீட்டாம்மா இரண்டாவது. நாங்கள் இருவரும் வேறு வேறு மதத்தை சார்ந்தவர்கள்.  நான் படித்தெல்லாம் என் மனைவி மதம் சார்ந்த் பள்ளிகளில் என் மனைவி படித்தது எல்லாம் என் மதம் சார்ந்த பள்ளிகளில். நாங்கள் இருவரும் ஒன்றாக படித்தவர்கள் அல்ல ஆனால் சென்னையில் ஒன்றாக மியூசிக் அகடமி அருகில் உள்ள நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்தவர்கள், அங்கு நான் வேலை பார்க்கும் போது அங்குள்ள வேறு ஒரு பெண்ணைக் காதலித்தேன் என் மனைவியோ என்னை காதலித்தாள் கடைசியில் என் காதலை பிரித்து தன் காதலை நிறைவேற்றிக் கொண்டாள். நானும் இந்த காதலுக்கு சம்மதித்ததுக்கு காரணம் "நீ விரும்பும் பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொள்வதைவிட உன்னை விரும்பும் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்" என்று ஒரு பெரிய மனுசன் சொன்னான் என்பதை படித்து அதன்படி நடந்து கொண்டேன், இப்ப அப்படி சொன்னவனை தேடிக் கொண்டிருக்கிறேன் மவனே அவன் மட்டும் என் கையில் கிடைத்தால்  ஒரு வழி பண்ணிவிடுவேன். ஆ ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் எங்கள் குடும்பம் வசித்தது எல்லாம் பிராமணர்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் அல்லது பிராமணர்கள் வீட்டுக்கு அருகில் அதுபோல என் மனைவி குடியிருந்த பல பகுதிகளில்  அதற்கு அப்போசிட்டாகத்தான்.

 நான் காதல் கல்யாணம் பண்ணிக் கொண்டதற்கும் என் மனைவி பண்ணிக் கொண்டதற்கும் சில உண்மையான காரணங்கள் இதுதானுங்க... எனக்கு ஆரேஞ்ச்டு மேரேஜ்ஜில் மாலை போட்டு ஊர்வலமாக வந்து எல்லோருக்கும் மத்தியில் உட்கார்ந்து உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு சுட்டிக்காட்டும் பொருளாக இருக்க விரும்பவில்லை அது போல என் மனைவி யாருக்கோ வரதட்சணை கொடுத்து அடிமையாக போக விருப்பம் இல்லாதவள் . இந்த காரணங்கள்தான் எங்களை இணைத்து கல்யாணம் வரைக்கும் கொண்டு சென்றது இதுதான் நாங்கள் இருவரும் காதல் கல்யாணம் பண்ணியதற்கான  உண்மையான காரணம். நாங்கள் ஒன்றும் சமுகபுரட்சி பண்ணவேண்டும் என்று கருதி கல்யாணம் பண்ணவில்லை.

நாங்கள் இருவரும் மதம் ஏதும் மாறவில்லை அவரவர்கள் மதத்தில்தான் இன்று வரை இருக்கிறோம் எங்கள் குடும்பங்களிலும் அது பிரச்சனைகளாக இருக்கவில்லை  எங்கள் காதல் வாழ்க்கை இன்று வரை நல்லபடியாக இருக்க எங்கள் வாழ்க்கையில் யாரையும் குறுக்கிட அனுமதிப்பதில்லை எங்கள் குடும்பத்தார்கள் யாராவது எங்கள் இருவரில் யாரையாவது குறை சொல்ல அனுமதிப்பதில்லை. இதுவரை அப்படி யாரும் முயற்சித்ததில்லை அப்படி முயற்சித்தாலும் அவர்களை தயவு தாட்சண்யம் பார்க்காது தூக்கி ஏறிந்துவிடுவோம். மேலும் எங்கள் உறவினர்கள் நண்பர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எங்கள் வீட்டில் தங்கும்  போது அவர்களது மத பழக்க வழக்கங்களை முழுமனதோடு செய்ய நாங்கள் என்றும் துணையாகவே இருப்போம். உதாரணமாக இந்து உறவினர்கள் நண்பர்கள் வந்து தங்கும் பொது இன்று அமாவாசை விரதம் இருக்கணும் அல்லது திதி பண்ணனும் பூஜை பண்ணனும் என்றால் அவர்களுக்கு தேவையானதை வாங்கி கொடுப்போம் இல்லை இஸ்லாமிய கிறிஸ்துவ உறவுகள் வந்தால் அவர்கள் விரும்பியவாறு தொழுகை நடத்தவோ அல்லது பைபிள் படித்து பிரார்த்தனை செய்ய விரும்பினால் அதற்கும் பைபிள் கொடுத்து பிரார்த்தனை செய்ய வழி செய்வோம் அது போல நண்பர்களுடன் சேரும் போது அவர்களின் வழிபாட்டு தளங்களுக்கும் எந்த ஒரு வேற்றுமை இன்றி சென்று வருவோம்

எங்களுக்கு இரு குழந்தைகள் ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் நாய்குட்டியும் எங்கள் வீட்டு நாய்குட்டியும் எனது குழந்தை போலத்தான் அந்த நாய்குட்டி என் கூட ஒரே பெட்டில்தான் தூங்குவான் எங்கள் வீட்டில் மிகமிக அதிகம் செல்லம் கொண்டவனும் அவனே. ஆ... ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் நான் PETA உறுப்பினரோ அல்லது ஆதரவாளனோ அல்ல

கல்லூரி படிப்பு படித்து முடித்துவிட்டு சென்னைக்கு வரும் வரையில் வீட்டிற்கு வெளியே தண்ணீர் கூட குடிப்பது கிடையாது ஆனால் சென்னைக்கு வந்த பின் எல்லாம் அப்படியே மாறிவிட்டது சென்னைக்கு வந்த பின் மஞ்சள் காமாலை வந்து அது குணம் ஆகிய சில மாதங்களுக்கு பிறகு உடல் அடக்கடி சோர்ந்து போன போது ஒரு மலையாளி நண்பரால் பீர் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது அதன் பின் என் கூட வேலை பார்த்த பார்ட் டைம் பெரியவர்கள் கூட சேர்ந்து அவர்கள் என்னைவிட வயதில் மூத்தவர்கள் ஒருவர் நியூ காலேஜ் புரபசர், ஒருவர் கோத்தாரி எக்ஸ்போர்ட் கம்பெனியில் பெரிய பதவி வகித்தவர், ஒரு சேல்ஸ் டாக்ஸ் ஏ,சி.ஒ, இன்னொருவர் நான் வேலை பார்த்த கம்பெனியின் இரண்டாம் ஸ்தானத்தில் இருந்தவர் என் அண்ணனுடைய நண்பர் மற்றும் சில நண்பர்களோடு தினமும் இரவு சரக்கு அருந்தி விட்டு மவுண்ட் ரோட், பாரிஸ் நுங்கம்பாக்கம் இப்படி பல இடங்களில் ராக்கோழிகள் போல அலைந்து ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவோம் அந்த பழக்கம் இங்கே அமெரிக்கா வந்ததும் அடியோட சில ஆண்டுகள் மாறி சரக்கு அடிப்பதே இல்லாமல் போயிற்று காரணம் கூட சேர்ந்து அடிப்பவர்கள் துணையில்லாததால் அதன் பின் என் மனைவியின் ஆபிஸ் நண்பர்கள் பழக்கம் ஆயினர் அதன் பின் வார விடுமுறையில் ஒரு நாள் சேர்ந்து அடிக்கும் பழக்கம் ஏற்பட்டது அதன் பின் நாங்கள் எல்லோரும் இங்கு பிரிந்து வேறு மாநிலங்கள் சென்ற பிறகு அந்த பழக்கம் சிலகாலம் தடைபட்டதும் அதன் பின் புது நண்பர்களுடனும் வீட்டிற்கு அருகில் குடி இருக்கும் குடும்பத்தினருடன் பார்ட்டிகளின் போது அருந்தும் பழக்கம் இருக்கிறது இப்போது அதுவும் மிக குறைந்துவிட்டது

எனக்கு பிடித்த பொழுது போக்கு வலைத்தளத்தில் அரசியல் தலைவர்களை நையாண்டி செய்வது அடுத்தபடியாக நண்பர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு என் கையால் சமைத்து கொடுத்து உண்று  குடித்து மகிழ்வது லாங்க் டிரைவ் பண்ணுவது, சிறுவயதில் எனக்கு மிகவும் பிடித்தது புத்தகங்கள் படிப்பது பாடப் புத்தகங்கள் அல்ல .பிடிக்காதது விமானப்பயணம், போனில் பேசுவது.

உணவு வகைகளில் நான் வெஜ் எப்போதாவது சாப்பிடுவது ஃபிஷ் பிரை மற்றும் எக் மட்டும் பிரியாணி பிடிக்கும் ஆனால் அதில் உள்ள சிக்கன் அல்லது மட்டனை எடுத்து வைத்து விட்டு சாப்பிடுவேன் அதுவும் எப்போதாவதுதான் சாப்பிடுவேன், சாப்பிடத்தான் மாட்டேனே தவிர நான்வெஜ் மிகவும் நன்றாக சமைப்பேன் அதிலும் பிரியாணி மிக அருமையாக சமைப்பேன் மாதத்திற்கு ஒரு நாள் குழந்தைக்காக மாமிக்கு தெரியாமல் வீட்டில் சமைப்பதுண்டு. சமைப்பதில் அதிக ஆர்வம் உண்டு அதுவும் அமெரிக்கா வந்த பின்.தான்.

மனிதர்களின்  காலில் விழுந்தும் வணங்கமாட்டேன் விழுந்து வணங்கியது எல்லாம் மத வழிபாட்டு தளங்களில் மட்டுமே . யாரிடமும் வாக்குவாதம் செய்ய மாட்டேன் என் கருத்துதான் சரி என்று யார் மேலும் திணிக்க மாட்டேன் எதிரில் உள்ளவர்கள் தவறான கருத்தைச் சொன்னாலும் அதை மறுத்துப் பேசமாட்டேன் ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான் என்று சொல்லி நகர்ந்து விடுவேன். யாரையும் வெற்றி கொள்ள வேண்டும் என நினைப்பதில்லை. யாரையும் வாதத்தில் ஜெயித்து ஒன்றும் ஆவப்போவதில்லை என்பதுதான் காரணம். வாதம் சண்டை போடுவது என்றால் மனைவியிடம் மட்டுமே. பூரிக்கட்டை விவகாரம் எல்லாம் பதிவிற்க்காக மட்டுமே நேரில் கிடையாது சிறு வயதில் இருந்து இன்று வரை என்னிடம் பழகிய யாரும் என்னை மோசம் என்று சுட்டிக்காட்டியது கூட கிடையாது அப்படி ஒரு முகராசி அதனால் என்னை நல்லவன் என்று நினைத்துவிட வேண்டாம் .என்னை நல்லவன் என்று எல்லோரும் நம்புவதால் அப்படியே நடந்து கொண்டிருக்கிறேன் அதுமட்டுமல்ல கெட்டது செய்ய சூழ்நிலை ஏதும் வாய்க்கவில்லை என்பது உண்மை. மனைவி மிகவும் அமைதியான டைப், என் மனைவி மட்டும் விஜய் டிவியில் நீயா நானாவில் கலந்து கொண்டால் டி ஆர் பி ரேட் சும்ம பிச்சுகிட்டு போவும் அதற்கு நான் உறுதி இப்படி சொல்ல காரணம் தமிழில் எந்த படம் வந்தாலும் கண்ணீர் விட்டு அழாமல் படம் பார்த்தது இல்லை

இந்த சுயபுராணம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

அன்புடன்
மதுரைத்தமிழன்

****************
தன்னைப் பற்றி விரிவாய்... விவரமாய்... நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் மதுரைத் தமிழன் அண்ணாவைப் பற்றி அறியாதவர்கள் அறிந்திருப்பீர்கள். இதுவரை ஆறு வாரங்களைக் கடந்துவிட்டேன்.  அடுத்த வாரத்துக்கு எதாவது ஒரு உறவிடம் இருந்து பகிர்வு வரும் என்ற நம்பிக்கையுடன்...

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

57 கருத்துகள்:

  1. தமிழா...நல்ல தொகுப்பு..
    நையாண்டி மிளிரும் உவகை..
    வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே

      நீக்கு
    2. வணக்கம் அண்ணா....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ உறவுகளோடு எந்த ஒரு வேற்றுமை இன்றி பழகுவது... இது ஒன்றே போதும்... வாழ்த்துகள் தல...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுலகில் தல என்றால் அது நீங்கள் மட்டும்தான் தனபாலன்...நானெல்லாம் "வாலு" அதுவும் குரங்கு வாலு

      நீக்கு
    2. வணக்கம் அண்ணா....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. மதுரைத் தமிழனின் அவர்கள் உண்மைகள் போல அதிரா சொல்லுவது போல ட்ரூத் ட்ரூத் ஆஹா!!! சூப்பர் மதுரைத் தமிழன்!!! பல நாங்கள் இருவரும் பேசிக் கொள்வதுதான்...உங்கள் பூரிக்கட்டை பதிவுகள் ஃபேமஸ் என்றாலும் அது பதிவிற்காக என்பதும் தெரியும்.

    எங்கள் இருவரது ஹேட்ஸ் ஆஃப் அண்ட் சல்யூட் உங்களது காதல் திருமணத்திற்கு! அதாவது அன்புடன் காதலுடன் அமைந்ததற்கு. அமைத்துக் கொண்டதற்கும். நிறைய தெரிந்து கொண்டோம் நாங்கள் ரசித்துத் தொடரும் அன்பான பதிவர் என்பதாலும்.....நேரில் கண்ட போது பதிவில் அதிரடியாய் பேசுபவர் மாடஸ்ட் அண்ட் அமைதியாய் படு அமைதியாய்..ரொம்பச் சமர்த்துப் பிள்ளையாய்...மக்களே உண்மைதான் மக்களே ..அவர்..ரொம்ப அமரிக்கையாய்...சரி சரி...இருவர் கருத்திலிருந்து கீழே கீதா...

    கீதா: ஆ! சத்தியமாக உள்ளூணர்வு!!! இன்று காலை எங்கள் ப்ளாகில் மதுரைத் தமிழனின் கலாய்த்தலுக்கு ஒரு கருத்தைக் கமெண்டிட்டு, நாங்கள் குமார் கேட்ட பதிவிற்கு எழுதிக் கொண்டிருந்தபடியால்....உடன் இந்த வாரம் ஒரு வேளை மதுரைத் தமிழனாக இருக்குமோ? அவரிடம் குமார் கேட்டிருப்பாரோ? அதற்குமதுரைத் தமிழன் எழுதியிருப்பாரோ? இல்லை முகம் காட்டாதது போல் இதிலும் காட்டாமல் இருப்பாரோ என்று நினைத்து எழுதியிருப்பார் என்று உள்ளுணர்வு ஏதோ சொல்ல,,,வாட்சப்பில் வந்து விழுந்தது குமாரின் லிங்க்!!!!!!!ஆ!!!!!!

    ஹலோ மதுரை தமிழா மேலே உள்ள கருத்தின் லாஸ்ட் லைன் படிங்க கொஞ்சம்...ஹிஹிஹிஹிஹி இப்ப மறுக்க முடியாதுதானே!!!ஹிஹிஹிஹி..நேரில் கண்ட போது அதிலிருந்து..வலையுலகின் செல்லப் பிள்ளை என்று இளங்கோ அண்ணா கொடுத்த அடைமொழிக்குச் சொந்தக்காரரான..இவர் தரும் பின்னூட்டங்களையும் ரசித்துப் படித்துச் சிரிப்பவள்.....

    மிக்க நன்றி குமார் இங்கு மதுரைத் தமிழன் அவர்களின் என்னைப் பற்றியைப் பகிர்ந்தமைக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா பார்த்தீங்களா நீங்க பார்த்தது டூப்தான் அதனாலதான் அவர் மாடஸ்ட் அண்ட் அமைதியாய் படு அமைதியாய்..ரொம்பச் சமர்த்துப் பிள்ளையாய்...நடித்து இருக்கிறார். நானெல்லாம் எப்போதும் அதிரடிதான் அதுவும் மனைவி பக்கத்தில் இல்லாத நேரத்தில் ஹீஹீ

      நீக்கு
    2. வணக்கம் துளசி அண்ணா / கீதா அக்கா....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. நம்பிட்டோம் நாங்க பாத்தது உம்ம டூப்புன்னு சொன்னத இல்ல. இப்ப உட்டீரே இது தான் உம்ம டூப்புலயே டாப்பு.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் ரொம்ப சத்தம் போட்டீர் என்றால் வீட்டுக்கு ஆட்டோ வந்துடும்

      நீக்கு
    2. வணக்கம் ஐயா....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  5. பூரி க் கட்டை "இல்லாத சுய புராணமா? ஒரு வரியில் சொல்லிவிட்டுத் தாண்டிவிட்டிர்களே
    இவ்வளவு வேலைகளுக்கிடையில் எப்படி பதிவுகள் போடமுடிகிறது என்பதையும் சொல்லியிருக்கலாமே ?

    அது ஒரு தனித்திறமை .என் போன்றவைகளுக்கு உபயோகமாக இருக்கும் .
    மொத்தத்தில் நன்றாக இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப சிம்பிள் வேலையில் இருந்து சீக்கிரம் வீட்டிற்கு வந்துவிடுவேம் மகள் ஹோம் வொர்க் பண்ணும் போது அன்றைய தின நிகழ்வுகளை இந்திய நாளிதழ்கலில் மேம்போக்காக ஒரு பார்வை அதன் பின் சமுக வலைத்தளங்களில் ஒரு சின்ன மேய்ச்சல் அதன் பின் வலைத்தளங்களில் ஒரு பார்வை இப்படி செய்யௌம் போது ஏதோ ஒரு வரி மனதில் க்ளிக் ஆகும் அதன் பின் ரவு சமைக்கும் போது அதை பற்றி என்ன்னிடம் இருக்கும் சிறுமூளை அதை அசைப் போட்டு அன்றைய பதிவு ரெடியாகிவிடும் அதன் பின் இரவு பெண்ணையும் மனைவியையும் பெட்டுக்கு அனுப்பி விட்டு பதிவை டைப்பண்னி அதற்கு ஏற்றார் போல ஒரு படம் ரெடி பண்ணி பதிவு வந்துவிடும். பதிவு இட்டுவிட்டு நேரம் இருந்தால் மற்றைய பதிவர்களின் பதிவுகளுக்கு சென்று ஏதாவது கிண்டலாக கருத்து சொல்ல முடிந்தால் சொல்லிவிட்டு சென்றுவிடுவேன் அப்படி கிண்டலாக சொல்ல முடியாவிட்டால் அப்படியே நகர்ந்துவிடுவேன் இதுதா நான் பதிவிடும் ரகசியம்

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. நன்றி நண்பரே

      நீக்கு
    2. வணக்கம் நண்பரே....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. ஆஹா “ட்ருத்”... ட்ருத் பேசப்போகிறார் இன்று என கேள்விப்பட்டு... கச்சானும் கடலை முட்டாயும் வாங்கி வந்திட்டேன்ன்ன்.. சாப்பிட்டுச் சாப்பிட்டுப் படிக்க... இருங்கோ முதல்ல கடமை முக்கியம்... அதான் வோட் போட்டிட்டேன்ன்ன் பொய் எனில், என் கையை செக் பண்ணுங்கோ மை இன்னமும் இருக்கே:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடலைமிட்டாய் சாப்பிடும் அளவிற்கு பல்லு உங்களுக்கு ஸ்ட்ராங்காக இருக்கிறதா?

      நீக்கு
    2. வணக்கம் சகோ....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  8. அடடா என்ன இப்பூடிப் பண்ணிட்டீங்களே.... நாங்க எதிர்பார்த்து வந்ததே.. அந்த உங்கட சுவிஸ்பாங் பலன்ஸ் பற்றியும்... உங்கள் முன்னால் காதல் பற்றியும் தானே..:)) வயசாகிவிட்டதால(உங்களைச் சொன்னேன்:)) அனைத்தும் மறந்தாலும் காதல் மறக்காதே.. இருங்கோ டிஸ்ரேப் பண்ணாதீங்கோ தொடர்ந்து படிக்கிறேன்ன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. சுவிஸ் பேங்குல எல்லாம் போட்டு வைக்கலை ஆனால் அங்க இருக்கும் நம்ம பதிவர் நிஷா அவர்களிடம்தான் கொடுத்து வைத்திருக்கிறேன் அதனால் யாருக்கும் தேவைப்பட்டால் நிஷாவிடம் கேளுங்க அவங்க கண்டிப்பாக தருவாங்க ஆனால் கேட்கும் போது கொஞ்சம் சோகத்தை முகத்தில் வைச்சு கேட்டுட்டா அவங்க் உடனே தந்துடுவாங்க இளகிய மனசு உள்ளவர்..

      நீக்கு
    2. வணக்கம் சகோ....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  9. ஹா ஹா ஹா ஹையோ முருகா.. எனக்கு இன்றோடு ஏதும் ஆகிடும்போல இருக்கே வைரவா....:) முந்தநாள் சொன்னார் தான் ஒரு சிங்கம் என... நேற்று அதை மாத்தி “ஆத்தா” ஆகிட்டேன் என்றார்ர்.. இன்று கு.ரங்குப்பிள்ளையாமே.... ஹாஹ்ஹ்ஹ்ஹாஅஹ்ஹ்ஹாஆஆ... இனி நாளைக்கு என்னவோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்...:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. என் மனைவிக்கிட்ட கேட்டால் என்னை கழுதை என்று சொல்லுவார். இப்ப்டி பல வேஷங்கள் போடும் திறமை உண்டு

      நீக்கு
    2. வணக்கம் சகோ....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  10. ஹா ஹா ஹா உங்க காதல் கதை படிச்சதில் .. என் கையிலிருந்த கப்பிலிருந்த ரீ எல்லாம் கீ போர்ட்டில் கொட்டிவிட்டது:).. நீங்க பண்ணிய இவ் ஒருதலைக்காதலால் என் கீபோர்ட்டுக்கு நஸ்ட ஈடு தரோணும்:)..

    இருந்தாலும் பெண்மை வென்றதில் மட்டட்ட மகிழ்ச்சி எனக்கு:))

    அப்போ முடிவா உங்கள் காதல் என்பது, சீர்வரிசை கொடுக்க விரும்பாமையாலும்.. மாலை போட்டு ஊர்வலம் போக விரும்பாமையாலுமே வந்ததே ஒளிய:)... அன்பு பாசத்தால் வரவில்லை.. அதுதான் லவ்வு.. அதைச் சொன்னேன்ன்.. ஹா ஹா எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. அன்பு பாசம் என்று என் அகராதியில் இல்லாத வார்தைகளாக சொல்லுறீங்க ஆமாம் அதற்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம்?

      நீக்கு
    2. வணக்கம் சகோ....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  11. உங்கள் மதக் கொள்கை சூப்பர்ர்.. எங்கள் வீட்டில் நாங்களும் அப்படித்தான், நாம் இந்து எனினும் எல்லா மதக் கோயிலுக்கும் போவோம்ம்.. எல்லா நிகழ்ச்சியிலும் பங்கெடுப்போம்ம்... எல்லாம் கடவுள்தானே கொள்கைதானே வேறு என்பதை நம்புவோம்....

    ஆ... நானும் ஒன்று சொல்ல மறந்திட்டேன்ன்ன்:) நாய்க்குட்டியோடு படுத்துத் தூங்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ என்னமோ நான் புதிய மதத்தை ஆரம்பிச்சு நடத்துகிற மாதிரி உங்கள் மதக் கொள்கைகள் சூப்ப்ர் என சொல்லுறீங்க எல்லா மதத்தையும் ஈக்குவலாக நினைப்பதற்கு காரணம் எல்லா மதத்திலும் எனக்கு காதலிகள் இருந்ததால்தான்

      நீக்கு
    2. நல்ல வேளை என் மனைவி இந்த பக்கம் எல்லாம் வருவதில்லை அப்படி வந்தால் நீங்க தான் அவர்களின் முதல் எதிரி அவளோட தூங்காமல் நாய்க்குடியோட தூங்கினதுக்கு வாழ்த்தா சொல்லுறீங்க

      நீக்கு
    3. வணக்கம் சகோ....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  12. ஆவ்வ்வ் உங்களைப் பற்றிய விபரங்களை ஒளிவு மறைவின்றிச் சொல்லியமை மிக நன்று... உங்கள் மனைவியையும் கூட்டி வந்து, எங்களோடு நட்பாக்கி விடுங்கோவன்...

    ஊசிக்குறிப்பு:
    ஹலோ கீதா... கொஞ்சம் அந்த டூப் போட்டோவை இங்கின வெளியிடுங்கோ... :).. ஒரிஜினல் போட்டோ போடத்தான் கொப்பிவலது உண்டு:) டூப் க்குக் கிடையாது... நான் சாட்சி சொல்ல ரெடி:)).. பயப்பிடாதீங்கோ:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. என் மனைவியோட நட்பா இருக்கனும் என்றால் சில கண்டிஷன்கள் உண்டு முதலில் நீங்கள் இணையத்திற்கு வருபவராக இருக்க கூடாது.....2 அவங்க செய்யும் சமையலை பாராட்டி செல்லனும். 3 நீங்கள் அன்னை தெரசாவாக இருக்கனும்... 4 சமுக அநீதிகளை கண்டு பொங்கி எழனும். 5 நம்நாட்டில் உள்ள அர்சியல் தலைவர்களி கூண்டோட அழிப்பதாக சொல்லி அதை செய்யனும். 6 அவர் கூட சேர்ந்து சர்ச்க்கு செல்லனும்.....என்ன இப்படி தலை தெறிக்க ஒடுறீங்க

      நீக்கு
    2. இது எல்லாமே எனக்கு ஓகே நான் ரெடி :)

      நீக்கு
    3. வணக்கம் சகோ....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  13. இருங்க ஒரு நிமிஷம் ஸ்டெடியா அட்டென்க்ஷன்ல நின்னு ஒரு சல்யூட் :)
    உங்களைப்பற்றி அட்டகாசமான பதிவு அவர்கள் ட்ரூத் :)

    அந்த அக்கவுண்ட் நம்பரும் அப்புறம் அந்த AI பொண்ணும்இந்நாள்..GIRL FRIENDS:) பற்றியும் சொல்லியிருக்கலாம் :)
    உங்க குடும்பத்தை நினைச்சா பெருமையா இருக்கு .. விஷயங்களை செய்கிறீர்கள் இறைவனின் ஆசிர்வாதம் எப்பவும் உங்களுக்குண்டு ..
    நாங்களும் நேற்றுகூட நண்பர் கொடுத்த பெர்மிங்ஹாம் திருப்பதி லட்டு சாப்பிட்டோம் ..நிறைய பேருக்கு ஒரு விஷயம் புரியதாதல்தான் குழப்பத்தில் இருக்காங்க .. அன்பு மட்டுமே நிலையானது என்பதை புரிந்துகொண்டதால்தான் சமத்துவமுடன் பழக முடிகிறது ..தொடரட்டும் நற்செயல்கள் .
    அரேஞ்ட் மேரேஜ் அல்லது லவ் மேரேஜ் ரெண்டிலும் அன்பு இல்லைனா அது நோ யூஸ் ..
    நான் மிகவும் மதிக்கும் ஒரு நண்பரைப்பற்றி இன்று இன்னமும் அதிகமாக தெரிந்துகொண்டேன்
    பகிர்வுக்கு நன்றி சகோ குமார் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது என்ன ஸ்டெடியா சல்யூட் நின்று என்று சொல்லி இருக்கீங்க?இதை படிக்கும் போது சரக்கு அடிச்சு தள்ளாடி வருபவன் மனைவியை பார்த்தது ஸ்டெடியாக நின்று வணக்கம் சொல்லுவது போலவே இருக்கிறது ஆமாம் எப்ப இருந்து இந்த பழக்கம். ஹலோ வேலைக்கு செல்லும் நேரம் வந்துடுச்சு ஹீஹீ மீ எஸ்கேப்..

      நீக்கு
    2. //நிறைய நல்ல விஷயங்களை செய்கிறீர்கள் //எழுதி பேஸ்ட்டும்போது கட்டாகிருச்சி ..

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  14. மனம் திறந்து சொல்லியிருக்கிறார் மதுரைத்தமிழன். அவர் சொல்வதைப்பார்த்தால் இனி அவரை செங்கோட்டையன் என்று அழைக்கலாம் போல. காதல் & திருமண வாழ்க்கை பற்றி அவர் சமீபத்தில் அவர் தளத்தில் சொல்லியிருந்ததைப் படித்துதான் தெரிந்து கொண்டேன். வாழ்த்துகள் மதுரைத்தமிழன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பவே ஊர்ல அடிக்க பல பேர் காத்து கொண்டிருக்கிறார்கள் இதுல வேற நீங்க என்னை செங்கோட்டையன் என்று அழைத்தால் அதிமுக அமைச்சர் என்று நினைத்து சாணியை கரைச்சு என் மேல் ஊற்றப் போகிறார்கள்

      நீக்கு
    2. வணக்கம் அண்ணா....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  15. உள்ளது உள்ளபடி, உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல், தன் வாழ்வையே குறள் போல் திருக்குறள் போல், சுருக்கி, சுவையோடு படைத்திருக்கிறார், செங்கோட்டையில் பிறந்த மதுரைத் தமிழர்.
    என்றெனும் ஒரு நாள், இந்த நண்பரை நேருக்கு நேராய் சந்திக்க வேண்டும்,
    கை குலுக்கி மகிழ வேண்டும் என்னும் ஆவல், உள்ளத்தில் நிரந்தரமாய் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை போல உள்ளவர்களை சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அது பெரும் பாக்கியமே

      நீக்கு
    2. வணக்கம் ஐயா....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  16. வித்தியாசமான பதிவுகளை பதிவிடும் மதுரை தமிழரின்...பதிவு...அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  17. அன்பு, காதல், விட்டுக்கொடுத்தல் என்று அருமையாக தன்னைபற்றிய விவரங்கள் சொல்லி இருக்கிறார்.
    வாழ்த்துக்கள். அன்பு மனைவி, குழந்தைகளுடன் பல்லாண்டு வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அம்மா....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  18. மதுரைத் தமிழனைப் பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி ்எழுத்தில் பளிச்சிடும் நகைச்சுவையே மதுரைத் தமிழனின் வெற்றிக்குக் காரணம். அவரது சுறுசுறுப்பு அலாதியானது.சரியோ தவறோ மனதில் உள்ளதை அப்படியே சொல்லும் நேர்மை எனக்கு ரொம்பவே பிடிக்கும். நமது கருத்துக்கு மாற்றுக் கருத்தாக இருந்தாலும் ரசிக்காமல் இருக்க முடியாது.அவருக்கும் அவரது அழகான குடும்பத்திற்கும் வாழ்த்துகள். சே.குமாரின் மனசுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  19. மதுரைத்தமிழனைப் பற்றி கூடுதலாக பல செய்திகளை அறிந்தோம். அவருடைய எழுத்து நடையை ரசிப்பவர்களில் நானும் ஒருவன். அவருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  20. மதுரைத் தமிழன் அவர்களின் இனிய இல்லறம் சிறப்பாக நடக்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி