'மோடு ஒழுகுதுன்னே...
மழக்கி முன்னால பிரிச்சி
கட்ட வேண்டியதுதானே...'
'மூத்தவன் போனு கீனு
பண்ணுனானா..?
நல்லாயிருக்கானாமா...?'
'இருளாயி மவன் எவளோ
ஒருத்திய இழுத்துக்கிட்டு
ஓடிட்டானாமே தெரியுமா...'
'கொக்காளி... மாதவமுட்டு
மாடு ரெண்டு பர்லாங்கு
விட்டுட்டு வந்துச்சுய்யா...
என்ன வேகம்...?'
'ராசாத்தி மவ அப்பிடி
இப்பிடி திரியிறாளாமே...
ஒரு மாதிரி பேச்சு
அடிபட்டுகிட்டு இருக்கு...'
'சரச பொண்ணு பாத்துட்டுப்
போனாவளே... புடிச்சிருக்காமா..?
சீதனம் ரொம்ப எதிர்பாக்குறாகளா...?'
'என்ன எளவோ தெரியல..
மாம்பிஞ்சாக் கொட்டுது...'
'ரெண்டு நாளா மாடு கழியிதப்பா..
மருந்து கொடுத்தும் நிக்கல...
ஊசிதான் போடணுமோ...?'
'சாயக்குடியில வள்ளிதிருமணம்
வச்சிருந்தாங்க...
கரூர் இந்திராவும்
நாகலிங்கமும் தர்க்கம்
பண்ணியிருக்காவ பாரு...
அந்தப் பொம்பளதாய்யா வள்ளிக்கி...'
'சைக்கிளு வேற பஞ்சராக் கெடக்கு..
பஞ்சரு பாக்கலாம்ன்னு பாத்தா...
சொலுசன் இல்ல...
மாப்ளக்கிட்ட இருக்குமா...'
'மாரியத்தா கோவிலு
வெளக்கு எரியலப்பு...
பீசு போச்சு போல...
டவுனுக்குப் போனா
ஒண்ணு வாங்கியாந்து
போடுங்க காசு நாந்தாறேன்'
'கரகாட்டக்காரி துர்கா
வந்தா ஒரு கூட்டம் கூடுதய்யா...'
'வெவசாய கடன
தள்ளுபடி செய்வானா..?'
'தீவாளிக்கி ரெண்டு
வேட்டி வாங்கணுமப்பா...
நமுத்துப் போச்சு...'
எதார்த்தங்களோடும்
எள்ளல்களோடும்
நிறைந்து கிடந்த
கோவில் திண்ணை...
இப்போ பேசவும் ஆளில்லாமல்
கேட்கவும் ஆளில்லாமல்
வெறுமை சுமந்து
பொலிவிழந்து கிடக்கு...
மனிதர்கள் இல்லாத
அம்மன் கோவில்
ஊமையாகிப் போச்சு...
ஆமா இப்ப ஊருகூட
ஊனமாகிப் போச்சு...
-'பரிவை' சே.குமார்.
#மனிதர்கள் இல்லாத
பதிலளிநீக்குஅம்மன் கோவில்
ஊமையாகிப் போச்சு...#
கடவுள் மனிதனை நினைத்துப் பார்த்தால் தானே ,மனிதன் கடவுளை நினைக்கப் போறான் :)
வணக்கம் ஜி...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அருமை
பதிலளிநீக்குவணக்கம் நண்பரே...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அருமை. திண்ணைப்பேச்சுகள் எத்தனை ஸ்வாரஸ்யம்.
பதிலளிநீக்குவணக்கம் அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
திண்ணைப் பேச்சு வரிகள் - நல்ல
பதிலளிநீக்குஎண்ணங்களைச் சொல்லுகிறதே!
வணக்கம் கவிஞரே...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உண்மைதான்!
பதிலளிநீக்கு- அரிமா இளங்கண்ணன்
வணக்கம் கவிஞரே...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எத்தனை வருஷங்களாச்சுப்பா....இப்படிப்பட்டத் திண்ணைப் பேச்சுகளைக் கேட்டு...இப்போதும் கேரளத்தில் நிலவுகின்றதுதான்...அருமை ...
பதிலளிநீக்குவணக்கம் துளசி சார்...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.