புதன், 3 ஆகஸ்ட், 2016

கவிதை : எப்ப மச்சான் வருவீக..?

டுத்த தையிக்குள்ள
பரிசம் போடுவேன்னு
அய்யானாரு வாசலிலே
அடிச்சிச் சொன்னியளே...
அதை மறந்து போனியளோ..?

வெத்தலக் கொடியோரம்
வெசனப்பட்டு நிக்கயில
மாருல சாச்சிக்கிட்டு
தைரியம் சொன்னியளே...
அதை மறந்து போனியளோ..?


உங்க நினைவோட
உழுத வயலுக்குள்ள
அழுது நிக்கயில
ஆதரவா அணச்சீங்களே...
அதை மறந்து போனியளோ..?


திருவிழா ராத்திரி
தெருவுல நான் போக
பின்னால நீங்க வந்து
கைபிடித்து நடந்தீங்களே...
அதை மறந்து போனியளோ..?

கொட்டச் செடியோரம்
கொலுசு மாட்டிவிட்டு...
காலில் கோலமிட்டு
குறுகுறுக்க வச்சியளே...
அதை மறந்து போனியளோ..?

சொல்லித் தையி மூணாச்சு...
சொந்தமெல்லாம் கேட்டாச்சு...
வரும் தையில் வருவீங்கன்னு
வசதியாச் சொல்லி வச்சேன்...

உங்கழுத்துல எந்தாலின்னு
உறுதியாச் சொன்னியளே..!
எங்கழுத்து ஏங்கி நிக்கி
எப்ப மச்சான் வருவீக...?
-'பரிவை' சே.குமார்.

12 கருத்துகள்:

  1. தைப்பிறக்கட்டும் மச்சான் மச்சக்காளை வந்துருவான் புள்ளே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அண்ணா....
      தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அண்ணா...

      நீக்கு
  2. பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. வணக்கம் ஐயா....
      தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...

      நீக்கு
  3. நல்ல காலம் பொறக்குது..
    நல்ல காலம் பொறக்குது!..

    டுர்ர்ர்..ர்ர்ர்ர்..

    தலை வாசல் மாடத்துல
    தாயி வந்து சேதி சொல்றா..
    கார்த்திகை வெளக்கோட..
    கஷ்டமெல்லாம் தீருது..

    டுர்ர்ர்..ர்ர்ர்ர்..

    கன்னியவ மனங்குளிர
    சேதி ஒன்னு சேருது..
    கார்த்தியல்ல பாக்கு வெச்சா
    தை மாசம் கண்ணாலம்!..

    டுர்ர்ர்..ர்ர்ர்ர்..

    ஆயி மனசு போல அரிசி
    கொஞ்சம் அள்ளிப் போடு..

    நல்ல காலம் பொறக்குது..
    நல்ல காலம் பொறக்குது!..

    டுர்ர்ர்..ர்ர்ர்ர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா....
      ஆஹா... கவித.. கவித... அருமையான கவிதை.
      தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...

      நீக்கு
  4. அருமை அருமை குமார்....கிட்டத்தட்ட சங்க இலக்கியக் காதல் ஆனால் இப்போதைய மண்ணின் மணத்துடன்....(காதல் எப்போதுமே ஒரே போலத்தான் அப்படின்றீங்களோ...அதுவும் சரிதான்....)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துளசி சார்....
      தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...

      நீக்கு
  5. வாகா நாளு கிடைச்சா வாராம எங்க போவேன் புள்ள? காசு சேர்த்துக்கிட்டு கண்ணாலம் செய்தா கவலையில்லாம இருக்கலாமே புள்ள.. வெசனப்படாத.. வெரசா வந்துடறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அண்ணா....
      ஆஹா... அண்ணா.... கலக்கல்.
      தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...

      நீக்கு
  6. வெரசா மாமன் வருவான்..... கவலைப்படாதே புள்ள....

    நல்ல கவிதை குமார். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி