நண்பேன்டாவில் நட்பின் சாரல் ஆரம்பகால நண்பர்கள் முதல் ஒவ்வொருவராக வரிசையாக வருகிறது. அந்த வரிசைப்படி பார்த்தால் இன்னும் சிலரின் பகிர்வுகளுக்குப் பிறகே இவன் வர வேண்டும். ஆனால் இன்றைய ஸ்பெஷலாய் இவன் மற்றவர்களை முந்திக் கொள்கிறான். காரணம்... படிங்க தெரியும்...
என் உயிர் நண்பன் தமிழ்க்காதலன்.
தமிழ் மேல் கொண்ட தீராக்காதலால் தனது பெயரை தமிழ்க்காதலன் ஆக்கிக் கொண்டவன். எனக்கு பள்ளிக் கால நட்போ... கல்லூரிக் கால நட்போ... பணியிட நட்போ... இல்லை இவன்.,. இணையம் மூலம் எழுத்தால் என்னுள் புகுந்தவன்... இன்று என் நட்பில் முதலிடத்தில் இருப்பவன்... இன்று மட்டுமல்ல... இருக்கும் வரை எனக்கு நண்பனாய்... நல் ஆசானாய்... சகோதரனாய் இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனைகளும் ஆசையும்.
பெரம்பலூர் அருகே ஒரு கிராமத்தில் பிறந்தவன் இவன், நான் மனசு வலைப்பூ ஆரம்பித்து எழுத ஆரம்பித்த உருவான நட்பு வட்டத்தில் இவனும் ஒருவன். இவனின் இதயச்சாரலுக்குள் நுழைந்த போது அங்கிருந்த கவிதைகளில்... இல்லையில்லை காவியங்களில் கரைந்து உருகி நின்றேன்... அன்று என் கரம் பிடித்த நட்பு இன்று வரை சுக துக்கம் எல்லாத்திலும் பங்கு கொள்ளும் நல்ல நட்பாக உயர்ந்து நிற்கிறது.
மிகச் சிறந்த கவிஞன். இவனது கவிதைகள் எல்லாம் ஒரு முறைக்கு இரு முறை படித்தால்தான் என்னைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு அதன் அர்த்தம் புரிய வரும். அத்தனையும் மிகச் சிறப்பான கவிதைகள். எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் அதன் கீழ் அருமையான கவிதையைப் படைப்பான். இருவரும் ஒரு கருவை எடுத்து எழுதுவது எனத் தீர்மானித்து அதன்படி அவன் கவிதையாகவும் நான் கதையாகவும் எழுதினோம். என் கதையை விட இவனது கவிதையே மிகச் சிறப்பானதாக இருந்தது. அப்படிப்பட்ட திறமையான கவிஞன்.
எனது கதைகளை அக்குவேர் ஆணி வேராக விமர்சிப்பவன். நல்லாயில்லை என்றால் ஏண்டா இப்படி எழுதுறேன்னு திட்டுவான்.... முகநூல் அரட்டையில் வந்து கண்டபடி திட்டுவான். மனசில் சினிமா பற்றி எழுதியதைப் படித்ததும் என்னாடா குப்பையாக வைத்திருக்கிறாய் என கத்துக் கத்து என்று கத்தினான். உனது எழுத்து எப்படி இருக்கணுமின்னு முதல்ல முடிவு பண்ணு... சும்மா எல்லாவற்றையும் கிறுக்காதே எனச் சொல்லி கதைகள் இப்படி எழுத ஆரம்பி எனச் சொல்லி எனக்கான ஒரு வாசலைக் காண்பித்தான்.
அவன் சொல்லியபடி எழுத இன்னும் நிறைய வாசிக்க வேண்டும் அத்தோடு யோசிக்கவும் வேண்டும்... நாமெல்லாம் என்ன தமிழ்க்காதலனா ஓரளவுக்காகவாவது தமிழையும் அதன் வரலாறுகளையும் கரைத்துக் குடிப்பதற்கு... அதனால் அதற்கான காலம் என்னுள் கனிய இன்னும் பல நாட்களாகும்... அதுவரை என் பாணியில் ஓரளவுக்கு அவன் நினைத்தது போல எழுதவே எண்ணம்.
எந்த ஒரு பிரச்சினை என்றாலும் அதற்கு நல்ல தீர்வு சொல்லுபவன்... இணையப் பழக்கத்தில் என்னைக் காண ஊருக்கே தேடி வந்தவன். இவன் வந்தபோது சரிவரக் கூட கவனிக்க முடியாத சூழல்... அப்படியிருந்தும் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் எப்போது என்னோடு ஒரு சகோதரன் போல் இதைச் செய்... அதைச் செய்யாதே என உரிமையோடு சொல்லுபவன்.
(நண்பனின் பிறந்தநாளுக்காக காயத்ரி அக்கா தயாரித்த வீடியோ வாழ்த்து...
கவிதை : தமிழ்க்காதலன், பாடியவர் : டாக்டர் அருணாஸ்ரீ)
தமிழ்... தமிழ்... என தமிழின் தொன்மைக் காலத்து வரலாறுகளைப் படித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறான். நண்பர்களுடன் இணைந்து தமிழ்க்குடில் என்ற அறக்கட்டளை ஆரம்பித்து நிறைய உதவிகளைச் செய்து வருகிறான். நிறைய நல்ல காரியங்கள் செய்யும் இவன், தனது கவிதைப் பணியை இதயச்சாரலில் குறைத்தாலும் முகநூலில் அதிகம் பகிர்கிறான். நிறையக் கவிதைகளை பிரதி எடுக்காமலே பதிந்து தொலைத்திருக்கிறான். ஒழுங்கா பதிவை தனியாக பதிந்து வை என்று சொன்னாலும் அப்படி எடுத்து வைக்காமலே நிறைய இழந்திருக்கிறான்.
நண்பா, நீ இன்னும் உயரத்திற்குச் செல்ல வேண்டும். உனது கவிதைகள் எல்லாம் எல்லாத் திசைகளிலும் ஒளிக்க வேண்டும். தமிழ்க்காதலன் இந்த தரணியெல்லாம் தெரிய வேண்டும். உனது எண்ணங்களும் எழுத்துக்களும் பறந்து விரிய வேண்டும்.
நண்பா, எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா. டிசம்பர் -26ல் பிறந்தவனுக்கு காலையில் இந்தப் பகிர்வைப் பகிராமல் இரவு பதினோரு மணிக்கு மேல் பகிர்கிறேனே என்று நினைக்கலாம். என்னமோ பெரும்பாலான பகிர்வுகள் இரவில்தான் பகிர முடிகிறது என்றாலும் இந்தப் பகிர்வு காலையில் எழுத நினைத்தது உடல் நலமின்மையால் எழுதவில்லை. காய்ச்சலும் ஜலதோஷமும் இருமலுமாய் இரண்டு நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் எழுத நினைத்த எல்லாமும் அப்படியே இருக்கிறது. உடல் சோர்வும்தான்...
நண்பனை முகநூலிலும் போனிலும் வாழ்த்தியாச்சு. இருந்தும் மனசில் வாழ்த்தலைன்னா நல்லாயிருக்காதுல்ல... அதான் இரவு அறையில் 'ர' படம் ஓடிக்கொண்டிருக்கும் வேலையில் எழுதிக் கொண்டிருக்கிறேன் என் நண்பனுக்கான பிறந்தநாள் பகிர்வை...
(இன்றைய தினச்செய்தியில் வெளியான நண்பனின் கவிதை) |
நண்பா... எல்லா வளமும் நலமும் பெற்று நாடு போற்றும் சிறந்த கவிஞனாக வாழ வாழ்த்துக்கள்.
தமிழ்க்காதலனின் கவிதைச் சாரலில் நனைய இதயச்சாரலுக்குள் சென்று வாருங்கள்.
முகநூலில் நண்பனை வாழ்த்திப் பகிர்ந்த நாலு வரி கீழே...
சாரல் என மனசுக்குள் வந்தாய்...
தூறலாக சுக ராகம் இசைத்தாய்...
பெரும் மழையாய் பெய்யெனப் பெய்து...
என்றும் என்னுள் நீடித்திருக்கும் நண்பா...
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா...
-'பரிவை' சே.குமார்.
வணக்கம்
பதிலளிநீக்குகுறளை வைத்து நட்பு சொல்லிய விதம் கண்டு மகிழ்ந்தேன் தங்களின் அன்பு நண்பர் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன்...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்கள் நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//எல்லா வளமும் நலமும் பெற்று நாடு போற்றும் சிறந்த கவிஞனாக வாழ வாழ்த்துக்கள்.//
உங்கள் எண்ணம் போல் அவர் சிறந்த கவிஞனாக உலகம் போற்ற வாழ வாழ்த்துக்கள்.
வாங்க அம்மா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களின் ஆருயிர் நண்பருக்கு
பதிலளிநீக்குஇனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
தம 2
வாங்க ஐயா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாக்களித்தமைக்கும் நன்றி.
இணைய நட்பாயினும் இணைபிரியா நட்பாய் தொடரட்டும் . வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாங்க ஐயா..
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்பு கொண்ட நண்பருக்காக தாங்கள் வழங்கிய பதிவு - அருமை!..
பதிலளிநீக்குவாழ்க நலம்.. வளர்க நட்பு!..
வாங்க ஐயா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எனது நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவாங்க அண்ணா..
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்புடன் வாழ்த்திய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எம் மனம் கனிந்த அன்பும் நன்றியும். என் நண்பனின் அன்பு உங்கள் அனைவருக்கும் நன்மைகளை வாரி வழங்கும்.
பதிலளிநீக்குவாங்க நண்பா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அருமை தம்பி.... நண்பனுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.. சிறப்பாக பகிரந்த தம்பிக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.. என்றும் தொடரட்டும் நட்பும், உறவும்..
பதிலளிநீக்கு//நாமெல்லாம் என்ன தமிழ்க்காதலனா ஓரளவுக்காகவாவது தமிழையும் அதன் வரலாறுகளையும் கரைத்துக் குடிப்பதற்கு...// அதான சரியாத்தான் சொல்லியிருக்க...) நானும் வழி மொழிகிறேன்..:)
//நண்பா, நீ இன்னும் உயரத்திற்குச் செல்ல வேண்டும். உனது கவிதைகள் எல்லாம் எல்லாத் திசைகளிலும் ஒளிக்க வேண்டும். தமிழ்க்காதலன் இந்த தரணியெல்லாம் தெரிய வேண்டும். உனது எண்ணங்களும் எழுத்துக்களும் பறந்து விரிய வேண்டும்// ம்ம்ம் தம்பியின் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துகளோடு எம்முடைய பிரார்த்தனையும் வாழ்த்துகளும்...:) வாழ்க வளமுடன். :)
வாங்க அக்கா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நட்பைப் போற்றிப் பாராட்டும் நல்ல ‘மனசு’
பதிலளிநீக்குவாங்க ஐயா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நண்பருக்கு, கவிஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாங்க அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அருமை நண்பரை அவரது பிறந்தநாளில் அறிமுகம் செய்து அசத்திவிட்டீர்கள்! நண்பருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவாங்க சகோதரரே...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இனிய கவிஞர் நண்பரின்நட்பு இறுதிவரைட் தொடர வாழ்த்துக்கள் நண்பரே! அருமையான பதிவு
பதிலளிநீக்கு