லிங்கா பார்த்தாச்சு... ரஜினி ரசிகர்களுக்கு பிடிக்காத படம்தான் என்பது உண்மை. எங்கயோ கேட்ட குரல், புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை என அவர் நடிப்பாற்றலை கொண்டு வந்த படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி ரஜினி என்றால் பஞ்ச் டயலாக்கும், பவர்புல்லான நடையும் என்ற நிலைக்கு அவரை சினிமா மாற்றி ரொம்ப நாளாச்சு. இந்நிலையில் அப்படி ஒரு படம்... இது பேசப்படும் படமாக அமைய வேண்டியது... ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாததால் மிகவும் மோசமாக பேசப்படும் படமாக அமைந்து விட்டது.
படத்தின் கிளைமேக்ஸை சின்னப்புள்ளத்தனமாக இயக்கியிருப்பது ரவிக்குமார்தானா என யோசிக்க வைத்தது. குருவியில டாக்டர்... இன்றைய சூப்பர்ஸ்டார் விஜய் பறந்ததை மறக்காத நம்மால் 64 வயதில் ரஜினி பறப்பதைப் பார்க்கும் போது அவர் மீது பரிதாபப்பட வைத்தது. ரஜினி சார்... டூயெட்டெல்லாம் வேண்டாம்... வயசுக்கு தகுந்த கதாபாத்திரமா தேர்ந்தெடுத்து நடிங்கன்னு சொல்லணும் போல இருந்தது... நாயகிகளை மையப்படுத்தும் கேமரா முன்னால் ரஜினி கையைக் காலை ஆட்டி (வேகம் இல்லை) நடனமாடியபோது. இருப்பினும் ஒரு வித்தியாசமான நாம் அறிந்த கதைக்களம்.
ரஜினியின் நடிப்பில் பந்தாக்கள் இல்லாத ஒரு நல்ல படம்... அவசர கிளைமேக்ஸ்... இழுவையான காட்சி நகர்த்துதலால் மோசமான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. ரஜினி தன் ரசிகர்களுக்காக பண்ணிய படம் என்றார்கள் ஆனால் ரசிகர்களே வெறுத்துப் போய் இருக்கிறார்கள்... என்ன உலகமடா இது... லிங்கா... மலிங்கா வேகத்தில் வந்திருந்தால் கங்குலி சிக்ஸர்தான்... இப்ப... ஹர்பஜன் சிக்ஸர் அடிச்சாலும் பலூனாய் பறக்கும் கடைசிக் காட்சியில் இந்திய அணி போல் ஆரம்பத்திலிருந்து கொண்டு வந்த கதை பொலபொலவென்று சரிகிறது. மேலும்... அட அப்பா... இதுக்கு மேல ஏதாவது பேசினா அக்கவுண்டை முடக்கிருவாங்களாமே... ஸோ லிங்காவை விமர்சிக்கவில்லை என்பதை லிங்கா மீது ஆணையாக தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
-----------------------------------
இதிகாசா... என்னைக் கவர்ந்த மலையாளப் படம். ஹாலிவுட் படமான 'The Hot Chick' என்ற படத்தின் தழுவல்தான் கதை. ஆண் பெண்ணாகவும் பெண் ஆணாகவும் மாறுவதை வைத்து ஒரு நகைச்சுவைப் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். படத்தின் ஆரம்பத்திலேயே இரண்டு மோதிரங்கள் பற்றி சின்ன வரலாற்றுக் கதையைச் சொல்லியிருக்கிறார்கள். அந்த மோதிரங்களை அருங்காட்சியகத்தில் இருந்து திருடி விற்க சிலர் முயலும் போது அது நாயகன் மற்றும் அவனது நண்பன் கையில் கிடைக்க, அவர்கள் அதை விற்க நினைக்கிறார்கள். அது எதிர்பார்த்த விலைபோகாததால் எதற்கு என நாயகனின் நண்பன் தன்னிடம் இருந்த ஒரு மோதிரத்தை கடற்கரையில் வீச,. மற்றொன்று நாயகன் வசம் இருக்கிறது. ஒரு தருணத்தில் கடலில் வீசிய மோதிரம் கிடைக்கப் பெற்ற சாப்ட்வேர் துறையில் பணிபுரியும் நாயகியும் திருடனான நாயகனும் மோதிரத்தை விரலில் மாட்டுகிறார்கள். அதன் பின் இவர் அவராகவும் அவர் இவராகவும் மாற விபரீதம் ஆரம்பிக்கிறது. அப்புறம் என்ன பெண் உருவில் ஆணும் ஆண் உருவில் பெண்ணுமாக ஒரே கலக்கல்தான் போங்க.
இருவரும் போட்டி போட்டுச் செய்திருந்தாலும் பெண் உருவில் திருடனின் நடை உடை பேச்சு என கலந்து கட்டி ஆட்டம் போட்டிருக்கும் அனுஸ்ரீ பெண்ணாக நளினம் காட்டும் ஷைன் டாம் ஷாக்கோவை (சரியான தமிழ்தானா தெரியலை) பின்னுக்கு தள்ளி விடுகிறார். பெரும்பாலும் இவருக்கான காட்சிகள்தான் அதிகம்... அடாவடி, சண்டை, நண்பனை மிரட்டுதல், ஷாக்கோவை அரட்டுதல் என பின்னிப் பெடலெடுக்கிறார். இருவரும் சந்திக்கும் போது இடைவேளை... பின்னரும் படம் சுவராஸ்யமாய் போகிறது.
-----------------------------------
ஞானக்கிறுக்கன்னு ஒரு படம் பார்த்தோம்... ஆரம்பத்தில் டேனியல் பாலாஜி பயங்காட்ட படமும் கிராமத்து வாசனையோடு அழகாய் நகர்வது போல் இருந்தது. நாயகன் வீட்டில் பிரச்சினையுடன் திருச்சி போய் வந்து... மீண்டும் திருச்சி போக... டேனியல் பாலாஜி, கிராமம், நாயகனின் அம்மா, சகோதரிகள், காதலித்த பெண் என எல்லாரையும் தஞ்சாவூர்ல இறக்கிவிட்டுட்டு... திருச்சியிலயும் பிரச்சினைன்னு சொல்லி நம்ம ஹீரோவை சென்னைக்கு அனுப்புனானுங்க... அப்பத்தான் இடைவேளை வந்துச்சு... திருச்சியில இருந்து சென்னைக்கு 320 கிமி அப்படின்னு போட்டானுங்க...
சரி படம் தஞ்சாவூர்ல ஆரம்பிச்சி... திருச்சி வந்து... இப்ப சென்னை போகுதுன்னு பார்த்தா திருச்சியில இருந்து அரசுப் பேருந்தை சென்னைக்கு 35 கிமி வேகத்தில் ஓட்டும்... மன்னிக்கவும் உருட்டும் டிரைவரைப் போல உருட்ட ஆரம்பிச்சிட்டானுங்க... என்ன கதை... எங்கே பயணிக்குதுன்னு இல்லாம... எப்படியெப்படி எல்லாமோ சொல்லி அங்க ஒரு பாதிக்கப்பட்ட பொண்ணைக் காப்பாத்தி... அவளை ஊருக்கு அனுப்பச் சொன்னானுங்க... எங்கடான்னு கேட்டா.. காரைக்குடியின்னு சொல்லி அங்கயும் பஸ்ஸ விட்டானுங்க... சிராவயல் பொட்டல்ல புள்ளய தனியா விட்டுட்டு மீண்டும் பய சென்னைக்கு வந்துடுறான்.
ஒரு நாள் பாத்தா அந்தப் புள்ள பைத்தியமாட்டம் சென்னை மெயின் ரோட்டுல போக அப்புறம் என்ன பய நாந்தேன் உனக்குப் புருஷன்னு ரோட்டுல நின்னு கத்தி அவளை கூட்டிக்கிட்டுப் போறான்... இப்ப நாஞ்சொன்னது எதாவது புரிஞ்சிச்சா... இப்படித்தான் ஞானக் கிறுக்கன்னு சொல்லி பாத்த நம்மளை... இல்லை இல்லை... எங்களை கேனக் கிறுக்கனாக்கிட்டானுங்க... அப்பா சாமிகளா படத்தை எடுத்து ஒரு தடவை போட்டுப் பாப்பீங்களா இல்லையா...? மிடியலை சாமி.
--------------------------------
பஹத் பாசிலின் நடிப்பில் வெளியான மணி ரத்னம் நல்லா இருந்துச்சு. பஹத்தின் நடிப்பு எப்பவுமே நல்லா இருக்கும். மற்ற படங்களுடன் ஒப்பிடும் போது கொஞ்சம் சுமார்தான்.
----------------------------------
விதார்த் நடித்த காடு, பார்க்க வேண்டிய படம். நல்லா பண்ணியிருக்காங்க... சமுத்திரக்கனி போராளியாக நடித்திருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் எல்லாம் நறுக் வசனங்கள். படமும் நல்லாயிருக்கு... காட்டை அழிக்காதீங்கன்னு சொல்றாங்க... ஒரு முறை பார்க்கலாமே...
சினிமா சம்பந்தமான பதிவுகளைத் தவிர் என்று நண்பன் திட்டினாலும் கொஞ்சம் ரிலாக்ஸாக ஒரு பதிவு.. நண்பா மன்னிச்சு....
-'பரிவை' சே.குமார்.
சுருக்கமாக நறுக் விமர்சனங்கள் அனைத்தும் அருமை!
பதிலளிநீக்குவணக்கம் சார்...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குஅருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்ரூபன்..
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்கள் தளம் இன்னும் எனக்குத் திறக்கவில்லை.
மற்ற படங்களை அதிகமாக சொன்னதற்கு நன்றி... அக்கவுண்டு தப்பித்ததா...? ஹா... ஹா...
பதிலளிநீக்குவணக்கம் அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தாங்கள் தானே காப்பாற்றிக் கொடுத்தீர்கள்...
அதனால் தப்பித்தது.
காடு பார்க்கிறேன் நண்பரே
பதிலளிநீக்குநன்றி
வணக்கம் ஐயா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பாருங்கள் ஐயா... தங்களுக்குப் பிடிக்கும்.
தம 4
பதிலளிநீக்குவாக்களித்தமைக்கு நன்றி ஐயா...
நீக்குலிங்கா பார்க்கலாமா என்று ஒரு நினைப்பு இருந்தது. நல்ல வேளையாக, உங்களின் விமர்சனம் படித்த பின் அந்த நினைப்பு மறைந்து விட்டது.
பதிலளிநீக்குவணக்கம் அம்மா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ரொம்ப நாள் ஆச்சு... நல்லா இருக்கீங்களா?
பாருங்க... எப்படியிருக்குன்னு பாக்கலாம்ல்ல...
பொறுப்பான விமர்சனங்கள்.. ஆனாலும் -
பதிலளிநீக்குநான் இந்த வளையத்திற்குள் சிக்குவதே இல்லை!..
வணக்கம் ஐயா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அட!! மல்டி ப்ளெக்ஸ் மால்களை போல பல படங்கள்.....ஒரு பதிவு:)))
பதிலளிநீக்குசூப்பர் அண்ணா!
வணக்கம் தங்கை...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஒரே விமர்சனமா போட்டுத் தாக்கிட்டீங்களே....!
பதிலளிநீக்கு:)))))))))
வணக்கம் அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ம்ம்ம்.... படங்கள் பற்றிய பகிர்வு.....
பதிலளிநீக்குஇங்கே பார்க்க முடியாத சூழல் குமார்... :)
வணக்கம் அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இங்கு வேறென்ன பொழுது போக்கு இருக்கு. விடுமுறை தினங்களில் அறையில் புரஜெக்டர் வைத்து படம் போட்டுப் பார்ப்போம்.
என்னங்க நடக்குது ஒரு பதிவில் பல படங்கள்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் பதிவிற்கு ...
த ம ஆறு
வணக்கம் சகோ...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
விமர்சனம் அருமை நண்பரே...
பதிலளிநீக்குவாங்க அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.