தெனாலிராமன்... அரசியல் விளையாட்டால் தமிழ் சினிமா விலக்கி வைத்த வடிவேலுக்கு இரண்டரை வருட காலத்துக்குப் பிறகு மறு பிரவேசம் கொடுத்திருக்கும் படம். 'அவ்வ்வ்வ்....', 'ரொம்ப ஓவராத்தான் பொயிட்டோமோ...', 'அட பக்கி...', 'உஸ் அப்பா... இப்பவே கண்ணைக் கட்டுதே...' என்ற வசனங்களை தொலைக்காட்சிகளில் தினமும் கண்டுகளித்தவர்களை இந்தத் தெனாலிராமன் கவர்ந்தானா என்றால் அரைக்கிணறுதான் தாண்டியது என்று சொல்லலாம். வடிவேலுவின் முகத்தில் முதிர்ச்சி, உடலமைப்பு எல்லாமாக சேர்ந்து காதல் காட்சிகளைக் களவாடிவிட்டது. குறிப்பாக 'ஆணழகா...' பாடல்.... ரொம்பக் கஷ்டம்.
இரண்டு வருட போராட்டத்திற்குப் பிறகு ஒரு கலைஞன் திரும்பி வரும் போது 'அட... அட... என்னமா கலக்கியிருக்காரு...' என்று சொல்ல வைக்க வேண்டாமா. இம்சை அரசனைப் போன்றதொரு கதை அமைப்பு... சிரிப்பு என்று செய்ததெல்லாம் புலிகேசியைப் போல சலிப்பைத்தான் தந்தது எனலாம். இருந்தும் மன்னனைவிட மதியூகி கதாபாத்திரம் சிறப்பு. பானை வயிற்றையெல்லாம் வைத்துக் கொண்டு டூயெட்டெல்லாம் பாடாமல் எப்பவும் போல் தனி ஆவர்த்தனம் பண்ணியிருந்தால் இன்னும் உச்சம் தொட்டிருக்கலாம். இப்போதே சந்தானங்களுக்கெல்லாம் கிலி பிடித்திருக்கும்.
பெரும்பாலான நடிகர்களைப் பிடித்துப் போட்டிருக்கிறார்கள்..படம் முழுவதும் முகம் தெரிந்த நடிகர் பட்டாளமாக இருந்தும் பயனில்லை, தொப்புள் காட்டும் நாயகியாக இருந்தாலும் வடிவேலுவுடன் டூயட் பாடியதற்காக பாராட்டலாம். மற்றபடி அவருக்கு படத்தில் அதிகம் வேலை இல்லை. மொத்தத்தில் வடிவேலுக்கு மறு பிரவேசம் கொடுத்திருக்கும் படம் என்றாலும் வைகைப் புயலின் எப்போதும் ரசிக்கும்படியான காமெடிகளுடன் அடுத்த படத்தை அதிகம் எதிர்பார்ப்பவர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன்.
கடந்த நான்கைந்து நாட்களாக ஊருக்குச் செல்வதற்கான வேலைகள் என்றாலும் அலுவலகத்திலும் அதிகம் வேலை இணையம் பக்கம் வருவதற்கே நேரமில்லை. எனது நட்புக்களின் பதிவுகளைப் படிக்கவில்லை என்பது வருத்தம்தான். இனி ஒரு மாதத்திற்கு அப்படித்தான்... முடிந்தவரை படிக்கிறேன்.... நாளை இங்கிருந்து ஊருக்குப் புறப்படுகிறேன். நாளை இரவு திருச்சியில் வந்து இறங்கிவிடுவோம்.. மனைவியையும் குழந்தைகளையும் விமான நிலையத்தில் வைத்துப் பார்த்துவிடுவோம் என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. எனக்கே இப்படி என்றால் நான் ஊருக்கு வருகிறேன் என்று சொன்ன தினத்தில் இருந்து நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் மகள், மகன் மற்றும் மனைவிக்கு... சொல்லவா வேண்டும். அப்புறம் ஒரு மாதம் ஊரில்தான்... நண்பர்கள் தொடர்பில் வாருங்கள்... தொடர்பு கொள்ள 0091- 8012811774-ல் அழையுங்கள். என்னிடம் சில உறவுகளின் தொலைபேசி எண் இருக்கிறது. கண்டிப்பாக அனைவரையும் அழைக்கிறேன்... நன்றி.
-மனசின் பக்கம் வளரும்...
-'பரிவை' சே.குமார்.
நல்லபடியாக சென்று வாருங்கள்!..
பதிலளிநீக்குநல்லபடியாக வந்து சேருங்கள் !
பதிலளிநீக்குத ம 3
வருக....வருக...
பதிலளிநீக்குதமிழகத்திற்குத் தங்களை அன்போடு வரவேற்கின்றேன் நண்பரே
பதிலளிநீக்குநான் தஞ்சாவூர்
நேரமிருக்கும் பொழுது அழையுங்கள்
பேசக் காத்திருக்கிறேன்
94434 76716
நல்லபடியாக ஊர் சென்று,மனைவி&குழந்தைகள்,உறவினர் நண்பர்களை சந்தித்து மன நிறைவுடன் திரும்புங்கள்.பயணம் இனிதே நிறைவுற ஆண்டவன் துணையிருக்க வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குதமிழகம் உங்களை வரவேற்கிறது. மே மாதம் முழுவதும் நானும் தென்னிந்தியாவில் இருக்க திட்டமிட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குதிருச்சியில் இருக்கும்போது அழைக்கிறேன்....
தெனாலி ராமன் - வடிவேலுவின் மறு பிரவேசம் என்பதால் பார்க்க நினைத்திருக்கிறேன்.
வருக வருக.... சென்னை வருவீர்களா?
பதிலளிநீக்குஉங்களின் இனிமையான பொழுதுகளுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். குடும்பத்துடன் இனிமையாக பொழுதுகள் அமைய வாழ்த்துக்கள் . சென்னை வந்தால் சொல்லுங்கள் சந்திப்போம்.
பதிலளிநீக்குதெனாலிராமன்........குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படமாக மட்டும் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்
பதிலளிநீக்கு