திங்கள், 14 அக்டோபர், 2013

கண்ணீரில் கரையும் காதல்



வீசியெறிந்த வார்த்தைகள்
பொறுக்க ஆளின்றி
வீடெங்கும் இரைந்து
கிடக்கின்றன...

கோபத்தில் எட்டி
உதைத்த பாத்திரங்கள்
எடுப்பாரின்றி உருண்டோடி
சிதறிக்கிடக்கின்றன...

விசிறியடித்த புத்தகங்கள்
கிழிந்தும் மடங்கியும்
காற்றில் படபடத்துக்
கொண்டிருக்கின்றன...

கழற்றி எறிந்த சட்டை
கசங்கிய இதயமாய்
விழுந்து கிடக்கிறது...

எப்போதும் இப்படி
என்றால் பழகிவிடும்...
எப்போதாவது இப்படி
என்னும்போதுதான்
வலியின் உச்சம்
பழகிக் கொள்ள மறுக்கிறது...

மனங்களைக் காதலித்து
வாழ்க்கை என்னும் 
பந்தத்தில் இணைந்த
புரிந்த மனங்களுக்குள்
எப்படிப் புகுந்தது இது..?

யோசனையில் இறங்கும்
கண்ணீரில் கரைகிறது காதல்...

-'பரிவை' சே.குமார்

35 கருத்துகள்:

  1. காதல் கரையாது. பலவீனங்களும் இணைந்ததுதான் வாழ்க்கை என்ற புரிதலுக்குப்பின் இன்னும் இறுகும்!

    பதிலளிநீக்கு
  2. எப்போதாவது இப்படி என்றால் சிரமம் தான்...

    பதிலளிநீக்கு
  3. காதல் என்றாலே சோகம் இருக்க வேண்டும் ....அதில்தான் சுகம்

    பதிலளிநீக்கு
  4. கரைவதற்கு காதல் என்ன அச்சு வெல்லமா?கால வெள்ளம் உங்கள் வலியையும் அடித்துக் கொண்டு சென்று விடும் !மீண்டும் இனிக்கத் தொடங்கிவிடும் !

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா14/10/13, 4:07 PM

    ஏன் ? காரணம் சந்தேகமோ ?
    பொய்க்காதல் கரையும் . உண்மைக் காதல் கண்ணீரிலும் பொங்கி வழியும்.

    பதிலளிநீக்கு
  6. யோசனையில் இறங்கும்
    கண்ணீரில் கரைகிறது காதல்...// அருமை..

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா14/10/13, 4:22 PM

    வணக்கம்.
    சே.குமார்

    மனங்களைக் காதலித்து
    வாழ்க்கை என்னும்
    பந்தத்தில் இணைந்த
    புரிந்த மனங்களுக்குள்
    எப்படிப் புகுந்தது இது..?

    இந்த வரிகளை சிந்திக்க வேண்டிய வரிகள் கவிதை நன்று வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. எப்போதாவது இப்படி
    என்னும்போதுதான்
    வலியின் உச்சம்
    பழகிக் கொள்ள மறுக்கிறது...


    கவிதை நன்றாகவுள்ளது நண்பா.

    பதிலளிநீக்கு
  9. மனங்களைக் காதலித்து ???

    காதல் என்பதை விடவும் வறுமை என்பதும் இவ்வாறானவற்றுக்கு வழி வகுக்கும்

    இங்கு எதுவோ தெரியாது

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. எப்போதும் இப்படி
    என்றில்லாமல் -
    எப்போதாவது தான் இப்படி
    எனும் போது...!

    மனதின் சோகத்தை மயிலிறகால் வருடுவதைப்போல இருக்கின்றது.

    விரைவில் சரியாகிவிடும்!..

    பதிலளிநீக்கு
  11. ////////
    மனங்களைக் காதலித்து
    வாழ்க்கை என்னும்
    பந்தத்தில் இணைந்த
    புரிந்த மனங்களுக்குள்
    எப்படிப் புகுந்தது இது..?

    ////////

    இது புரியாமல் தான் பலகுடும்பங்கள் குழப்பத்தில் இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  12. கவிதை அருமை!எப்போதும் இப்படியென்றால்....................காதல்?????

    பதிலளிநீக்கு
  13. காதலின் நிதர்சனம் சொல்லும் கவிதை...

    பதிலளிநீக்கு
  14. எப்­போ­தும் ­இப்­ப­டி ­என்­றால் ­ம­னம் ­வெ­றுத்­து ­வி­டும். எப்­போ­தா­வ­து ­இப்­ப­டி ­என்­றால் ­வே­த­னை ­எ­னி­னும் ­சீக்­கி­ரம் ­க­ரைந்­து ­அ­து ­மா­றி­வி­டும்! கா­த­லின் ­இ­யல்­பை ­அ­ழ­காய் ­சொல்­லி­ய­து ­க­வி­தை!

    பதிலளிநீக்கு
  15. படம் மிக அருமை. கவிதையும் தான்.....

    பதிலளிநீக்கு
  16. உள்மன ஓசைகளைக் கவிதையாக்குகிறேன் பேர்வழி என்று ஏதாவது உளறிக்கொட்டும் கவிதைகள் சலிப்பூட்டும்.
    உங்களின் உள்மன ஓசை “நம்வீட்டு நிகழ்வு இவருக்கு எப்படித் தெரிந்தது?” என்று வியக்க வைக்கிறது!

    அதிலும்,
    “எப்போதும் இப்படி
    என்றால் பழகிவிடும்...
    எப்போதாவது இப்படி
    என்னும்போதுதான்
    வலியின் உச்சம்
    பழகிக் கொள்ள மறுக்கிறது”
    என்னும் வரிகள் மிகஇயல்பும் அருமையுமாக வந்திருக்கின்றன.
    வாழ்த்துகள் கவிஞரே!
    தொடர்ந்து எழுதுங்கள்!

    பதிலளிநீக்கு
  17. இயல்பான வரிகள்.
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  18. எதார்த்தமான விஷயத்தை அற்புதமாக கவிதையாய் எழுதியிருக்கிறீர்கள்... கண்ணீரில் கரையும் காதல்...
    கடைசி டச்... ரொம்பவே அற்புதம்..மனம் கவர்ந்தது எழுத்து....

    பதிலளிநீக்கு
  19. ஊடல் இல்லாதக் காதல்
    கூடலில் சுவைக்காதாம்.... வள்ளுவர் வாக்கு.

    காதலில் இதெல்லாம சகஜமப்பா....

    கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. வாங்க ஸ்ரீராம் அண்ணா...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க தனபாலன் சார்...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வாங்க முத்துராசன் அண்ணா...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க பகவான்ஜி அண்ணா...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வாங்க சகோதரி. ஸ்ரவாணி...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க நண்பா கருண்...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வாங்க சகோ.ரூபன்...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க ராமலெக்ஷ்மி அக்கா...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வாங்க முனைவரே...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க ஆத்மா அவர்களே...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வாங்க துரை அண்ணா....
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க சகோ.சௌந்தர்...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  26. வாங்க சகோ.யோகராஜா...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க சகோ. மகேந்திரன்...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. வாங்க ஜெயக்குமார் ஐயா...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க கணேஷ் அண்ணா...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  28. வாங்க வெங்கட் அண்ணா...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க நண்பா சுப்பு...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வாங்க முத்து நிலவன் ஐயா...
    உங்களைப் போன்ற தமிழறிஞர்களின் வாழ்த்துக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
    தங்கள் வாயால் கவிஞரே என்று சொல்லியிருப்பது மிக்க மகிழ்ச்சி.
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. வாங்க சகோ. ஹரிணி...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க சாய்ரோஸ்...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க சகோதரி. அருணா...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  31. சிற்சில சமயங்களில் புரிதலில் வரும் சிறு இடைவெளிகளினால் நிகழும் ஒரு சம்பவமே இங்கு கவிதையாய் முகிழ்ந்ததாய் உணர்கிறேன்!

    பதிலளிநீக்கு
  32. எப்போதாவதுதானே இப்படி... இந்த சகிப்புத்தன்மையும் காதல்தான்...

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி