புதன், 10 ஜூலை, 2013

காதல் மனைவி


விடிந்த பொழுது
புரண்டு படுத்து
அருகே துழாவினால்
அவளைக் காணோம்...

விழித்துப் பார்க்க
நினைக்கும் போதே
காலைச் சோம்பல்
கட்டித் தழுவ
கோழித் தூக்கம்...

இன்னும் தூக்கமா
ஈரக் கூந்தலும்
சோப்பின் வாசமும்
நாசியில் நுழைய
செல்லத் தட்டல்...

கொஞ்ச நேரம்
கெஞ்சும் கண்களை
அதட்டி உருட்டி
போலிக் கோபம்
சீண்டும் வேளை...

எட்டிப் பிடித்து
மார்பில் சாய்த்து
இறுக்கி அணைக்க
உடைக்க முயன்று
தோற்றுப் போனாள்...

மறுபடியும் குளிக்கணும்
ஆடை திருத்தியவள்
சிணுங்கலின் ஊடே
உதிர்த்த வார்த்தையில்
வெட்கத்தின் வாசம்...

அடிக் கள்ளி...
தினமும் குளித்துத்தானே
எழுப்ப வருகிறாய்...
என்றாவது எழுப்பிவிட்டு
குளிக்கச் செல்கிறாயா..?

வந்த கேள்வியை
வாய்க்குள் கைது செய்து
இதமான முத்தத்தை
இணைப்பாய் கொடுத்தபோது
செல்லமாய் வெட்கி
இணைப்பைத் திருப்பி
இதழில் பதிக்கிறாள்.
-'பரிவை' சே.குமார்.

5 கருத்துகள்:

  1. // எட்டிப் பிடித்து
    மார்பில் சாய்த்து
    இறுக்கி அணைக்க
    உடைக்க முயன்று
    தோற்றுப் போனாள்... //

    மனதை கொள்ளை கொள்ளும் காதல் வரிகள்...

    பதிலளிநீக்கு
  2. வாங்க சங்கவி...

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ரொமான்ச் சூப்பர் தம்பீ. கவிதையை மிக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. அருமை தம்பி...காதல்வழிகிறது...;)

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி