'மன்னிப்புக் கேள்' - தணிக்கைத் துறை
விஸ்வரூபம் திரைப்படம் விவகாரத்தில் மத்திய தணிக்கைத்துறை மீது குற்றம் சாட்டிய தமிழக அரசு மன்னிப்பு கோர வேண்டும் என மத்திய தணிக்கைத்துறை தெரிவித்துள்ளது.விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.
முத்தரப்பு பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து 144 தடையை நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை தணிக்கை துறை வெளியிட்டுள்ள செய்தியில், விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் தணிக்கை சான்று அளித்ததில் தவறு நடந்ததாக , கோர்ட்டில் தமிழக அரசு வக்கீல்கள் வாதாடினார்.இந்த விஷயத்தில் தவறான தகவல் தந்தததாக தமிழக அரசு வக்கீல், நவநீதிகிருஷ்ணன் மன்னிப்பு கோர வேண்டும் என தெரிவித்துள்ளது

-----****-----
‘கருத்து சுதந்திரம்' - சசிதரூர்
நாட்டில் சமீபத்திய விஸ்வரூபம் திரைப்படம், ஆஷிஸ்நந்தியின் பேச்சு ஆகியவற்றுக்கு கிளம்பியுள்ள எதிர்ப்புகளை பார்க்கும் போது சமுதாயம் சகிப்புதன்மை அற்று இருப்பதையே வெளிக்காட்டுகிறது என்றும், கருத்து சுதந்திரம் பறிபோய் வருகிறது என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சசிதரூர் கவலை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்: விஸ்வரூபம் சர்ச்சை , தாழ்த்தப்பட்டோர் குறித்து எழுத்தாளர் ஆஷிஸ் நந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு இந்த சமூகத்தில் எதிரொலித்திருக்கிறது. இது கலாச்சாரம் என்ற பெயரில் வளர்ந்து வந்துள்ளமை போட்டி மனப்பாங்கு கொண்ட சகிப்புத்தன்மையற்று போனதையே காட்டுகிறது.
எழுத்து, கருத்து சுதந்திரம் நீதிபதி மற்றும் அரசு மூலம் தான் வழிபிறக்கும் என்றால் நாம் இன்னும் பின்தங்கியே இருக்கின்றோம். இது குறித்து நானும் அதிகம் பேச விரும்பவில்லை. எந்தவொரு விமர்சனமும் யாரையும் புண்படுத்தக்கூடாது என்பதில் மாற்று கருத்து இல்லை. இதே நேரத்தில் கருத்து சுதந்திரம் பறிபோவது சரியல்ல. எந்தவொரு விஷயமானாலும் விவாதிக்கவோ, வாதிடவோ நமக்கு உரிமை உண்டு. சமூகத்திற்கு ஒரு சவாலாக இருந்து வரும் இந்த விஷயத்தில் ஒரு சம நிலை ஏற்பட வழி பிறக்க வேண்டும்.
தணிக்கை துறை சான்று :
விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்து இருக்க கூடாது. தணிக்கை துறை சான்று அளித்த பின்னர் இந்த நடவடிக்கை சரியானது அல்ல. படத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் இருந்த போதும், எதிர்ப்பு வரும் தேவையற்ற காட்சிகள் இருக்கும் யாரும் நினைத்தால் காட்சிகளை ரத்து செய்ய சொல்லி படத்தயாரிப்பாளரிடம் வாதிடலாம். ஆனால் தடை விதிக்க முன்வரக்கூடாது.
ஆஷிஸ்நந்தியின் பேச்சுக்காக அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுகிறது. இது தேவையற்றது. சல்மான் ருஷ்டி கோல்கட்டாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. இன்னும் நாம் பின்தங்கி இருப்பது கவலை அளிக்கிறது. இவ்வாறு சசி தரூர் கூறினார்.

நன்றி : தினமலர்
-'பரிவை' சே.குமார்.
என்னது,மன்னிப்பா?அரசுக்கு,அதுவும் தமிழக அரசுக்கே சவாலா?தணிக்கைக் குழுவையே இல்லாமப் பண்ணிடுவோம்,ஆமா!!!!(அம்மா வாய்ஸ்)
பதிலளிநீக்குதகவல் பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதணிக்கைக் குழு தான் இருப்பதை உணர்த்த இதுவல்லவோ சரியான சந்தர்ப்பம்! செய்திப் பகிர்வுக்கு மிக்க நன்றி!
பதிலளிநீக்கு