இன்று என்னுடன் பணி புரியும் பாகிஸ்தான் நண்பர் கண் வலிக்கிறது... கண்ணாடி சரியில்லைன்னு நினைக்கிறேன்... இன்று மாலை கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்றார். உடனே என் மனதில் ஊருக்கு வந்த போது கண் மருத்துவமனை சென்றது ஞாபகத்தில் வர அதையும் ஒரு பதிவாக்கிட்டோமுல்ல...
கணிப்பொறி பயன்படுத்துவதால் அடிக்கடி தலைவலி வருவதால் டாக்டர் பரிந்துரையின் பேரில் டே-நைட் (பகலிரவு!?) கண்ணாடி பயன்படுத்தி வந்தேன். சென்ற முறை ஊருக்கு செல்வதற்கு முன்னர் கீழே விழுந்து சிதறிவிட்டது. இங்கு விசாரித்தால் யானை விலை சொன்னார்கள். சரி ஊருக்குப் போறோமே அங்க போயி நல்லதா வாங்கிப் போட்டுக்கலாம் என்று நினைத்து இங்கு வாங்கும் எண்ணத்தை மூட்டைகட்டியாச்சு.
ஊருக்குப் போனதும் ஒரு நாள் நகரின் பிரபல கண் மருத்துவமனைக்கு சென்றேன். சென்ற முறையும் அங்குதான் பரிசோதனை செய்து கண்ணாடி வாங்கினேன். அதனால் மீண்டும் அங்கு சென்றேன். நான் சென்ற போது நல்ல கூட்டம். பெயர் சொல்லி... பழைய அட்டை இருக்கா என்ற கேள்விக்கு இல்லை என்று சொல்லி புதிதாய் அட்டை ஒன்று பெற்று அருகில் இருந்த சேரில் அமர்ந்தேன்.
நானும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்து இருக்கிறேன்... இருக்கிறேன்... இருந்து கொண்டே இருக்கிறேன்... எனக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் முதல் கட்ட பரிசோதனை பண்ணிவிட்டு இரண்டாவது சோதனைக்கான அறை முன்னர் ஆஜராகிவிட்டனர். பொறுமை இழந்த எனக்குள் இருந்த குமார், என்னம்மா... எவ்வளவு நேரம் இங்க இருக்கிறது... பின்னால வந்தவங்களை எல்லாம் கூப்பிடுறே... நான் இருக்கது உனக்கு தெரியலையா... என்று கொதித்து குமுறினான். இருங்க சார் அடுத்தது நீங்கதான் என்றாள். என்னைப் போல் ஒரு பெரியவரும், ஒரு பாட்டியை கூட்டி வந்த் பேத்தியும் சத்தமிட... அடுத்தடுத்து நாங்கள் அழைக்கப்பட்டோம்.
நானும் உள்ளே சென்றேன். சேரில் அமர்ந்து கண்ணில பரிசோதனை கண்ணாடி வைத்து நம்பரை வாசிக்க சொன்னுச்சு. நல்லாத்தாய்யா வாசிச்சேன்... ஒத்த கண்ண மூடி சொல்லிட்டு உடனே அடுத்த கண்ண தொறந்து இத மூடி படிங்கன்னு சொலலும் போது கண்ணு மங்கலாகுமா இல்லயா அதுதான் நடந்துச்சு... மங்கலா இருக்குன்னு சொன்னேன் பாருங்க... உடனே அந்தப் புள்ள ஒரு புத்தகத்தை எடுத்து அதுல இருக்கதுல சின்ன எழுத்த எடுத்து வாசிங்க பாப்போமுன்னு சவால் விட்டுச்சு... நாம யாரு விடுவோமா... சரியா வாசிட்டுட்டோமுல்ல... அப்புடியும் அந்தப் புள்ள விடலைய்யா... உடனே ஒரு கண்ணாடிய மாட்டி இப்ப படிங்கன்னு சொல்லுச்சு... அதையேதான் படிச்சேன்... ஆனா அந்தப்புள்ள கண்ணாடி போட்டு படிச்சப்போ வேகமா படிச்சீங்க... உங்களுக்கு பார்வை பிரச்சினை இருக்கு... அதுக்கு இந்த கண்ணாடி போடணுமுன்னு ஒரு நம்பரை அட்டையில எழுதுச்சு... அம்மா தாயே கண்ணெல்லாம் நல்லாத்தான் இருக்கு... எனக்கு சும்மா படிச்சப்போவும் அப்புறம் கண்ணாடி போட்டு படிச்சப்போவும் ஒரே மாதிரித்தான் இருந்துச்சு... பவரெல்லாம் கிடையாது... கணிப்பொறி பயன்படுத்துறதால கண்ண பரிசோதனை பண்ண வந்தேன்னு சொன்னதும் அந்தப் பொண்ணு சரியின்னு சொல்லிட்டு எழுதுன நம்பரை அழிச்சிட்டு எல்லாம் நல்லாயிருக்குன்னு எழுதிருச்சு.
அடுத்த அறைக்கு சென்றதும் அங்கிருந்த பெண், 'உங்களுக்கு இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை பண்ணனும்' என்றார். என்னடா இது கண்ண பரிசோதிக்க வந்த இரத்தம் நீரெல்லாம் எடுக்குறாங்கன்னு... இதெல்லாம் எதுக்கும்மா என்றேன். டாக்டர் உங்களுக்கு பண்ணச் சொல்லியிருக்கிறார் என்றாள். அடப்பாவி மக்கா... வாசல்ல இருந்து பாதித்தூரம் வந்திருக்ககேன்... டாக்டர் அறைப் பக்கமே இன்னும் போகலை அப்புறம் எப்படி டாக்டர் நம்மளை பார்த்தார் என்று நினைத்தபடி... கண்ணாடி போடனுமா வேண்டாமான்னு பாக்க வந்தா இதெல்லாம் எதுக்கு தேவையில்லம்மா... என்று பேசியதும் அந்தப் பெண் சார் சத்தம் போடுவார்... நீங்க அவரு கேட்டா சொல்லிடுங்க என்றாள்.
ஊருக்கு வாறதுக்கு முன்னாலதான் கால் வலிக்கு எல்லா பரிசோதனையும் பண்ணியிருக்கு... அவரு கேட்டா நான் சொல்லிக்கிறேன்னு வெளியில வந்துட்டேன்... வாறவங்களைப் பூராம் அங்க கொண்டு போயி இரத்தம் நீருன்னு கெடா வெட்டிருறாங்கய்யா. ஸ்... அப்பா இப்பவே கண்ணக் கட்டுதேன்னு நெனச்சுக்கிட்டு தலய ஒரு சிலுப்பு சிலுப்பிக்கிட்டு நடக்கிறது நடக்கட்டுமுடா இன்னும் பாதிக் கிணறுதான் பாக்கி நடடா சிங்கமேன்னு போயி அடுத்த அறையில உக்காந்து மனைவியிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தேன்.
மறுபடியும் இரத்தம் கேட்ட புள்ள கூப்பிட, டாக்டர் இரத்தம் எடுக்காம விடாதேன்னு கண்டிசன் போட்டுட்டாரோ என்று நினைத்தபடி சென்றேன். பிரஷர் பார்க்கிறேன் என்று பார்த்துவிட்டு உங்களுக்கு சுகர் இருக்கா என்றதும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. வரும் போது விட்டம்மா வீட்ல சுகர் இல்லைன்னு சொல்லி வாங்கியாறச் சொன்னாங்க... அதையே இன்னும் வாங்கலையே... அப்புறம் எப்படி நமக்கிட்ட சுகர் இருக்குமுன்னு ஆத்தா உனக்கு எம்மேல அப்படி என்னத்தா கோபம்... நல்லாயிருக்கவனைப் பார்த்து சுகர் இருக்கா... உப்பு நீர் இருக்கான்னு பீதியக் கெளப்புறே என்று கேட்டதும் மற்றொரு பெண் வந்து மீண்டும் பார்த்து எல்லாம் சரியா இருக்குன்னு சொல்லி போய் உக்காருங்க... டாக்டரை பாக்க வரிசையா கூப்பிடுவாங்கன்னு சொல்லிச்சு. ரத்தம் கொடுக்கமாட்டேன்னதும் அந்தப் புள்ளக்கி கோபம் போல... என்ன ஒரு கொலவெறி... அடி ஆத்தி...
கடைசியாக டாக்டர் பரிசோதித்து எல்லாம் சரியா இருக்கு... ஒண்ணும் பிரச்சினை இல்ல... கணிப்பொறி பயன்படுத்தும் போது மட்டும் போட்டுக்கிறதுக்கு ஒரு கண்ணாடி எழுதி தாறேன் அதை வாங்கி போட்டுக்கங்கன்னார். அங்கயே டிசைன்ஸ் பாத்து ஆர்டர் கொடுத்துட்டு வந்தேன்.
அப்புறம் மூன்று நாட்கள் கழித்து போய் வாங்கி வந்தேன். வீட்டிற்கு வந்து பார்க்கிறேன். ஒரு பக்கம் சரியான முறையில் மாட்டாமல் பிசிறு வெளியில் நீட்டிக் கொண்டிருந்தது. போய் கேட்டால் அங்கிருந்த பெண் சொன்ன பதிலென்ன தெரியுமா... இதெல்லாம் ஒண்ணும் பண்ணாது சார். நல்லா லாக் ஆகியிருக்கு. அப்படியே வச்சிக்குங்கன்னு அழகா சொல்லிடுச்சு. திரும்ப வாங்கி சரி பண்ணனுமின்னா மறுபடியும் திருப்பி அனுப்பி சரி பண்ணி வாங்கனும் எதுக்கு வேலயத்த வேலையின்னு பதில் சொல்லி திருப்பி அனுப்பியாச்சு.
இதை எதுக்கு சொல்ல வாறேன்னா கிராமத்துல இருந்தோ (நானும் கிராமத்தாந்தான்) அல்லது படிப்பறிவில்லாத அல்லது வயதான யாராவது வந்தால் எல்லா பரிசோதனைகளும் செய்து (ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை எல்லாருக்கும் தேவையா?) பணம் பறிக்கத்தானே செய்வார்கள். அவங்களை சொல்லியும் குற்றமில்லை... டாக்டர் சீட்டுக்காக லட்சங்களை கொடுத்து படித்து வந்து அவற்றை வட்டியும் முதலுமா எடுக்கனுமே... நாமதான் கொஞ்சம் சூதனமா இருக்கணும். டாக்டர்கிட்ட போகும் போது வீட்ல கொஞ்சம் விவரம் தெரிஞ்ச ஆளை கூட்டிக்கிட்டு போகணும். இல்லையின்னா மணிபர்ஸ்க்கு பிரசவம் பாத்து அனுப்பிடுவாங்கய்யா.
-'பரிவை' சே.குமார்
படங்கள் : கூகிள்
ஹாஹா ஹாஹா:-)
பதிலளிநீக்குவாசிக்கும்போது சிரிப்பு வந்துச்சு. யோசிக்கும்போது..... இப்படியெல்லாம் பணம்பிடுங்கியா இருக்காங்களே....இது என்ன வியாபாரமுன்னு நொந்துபோச்சு மனசு:(
பெரும்பாலும் இப்படித்தான் எல்லா டெஸ்ட்டும் பண்ன வேண்டுமென்று சொல்லி தனியார் மருத்துவமனைகளில் காசு சம்பாதிக்கிறார்கள். நானும் அப்படி டெஸ்ட் செய்ய மறுக்கும்போதெல்லாம் ‘பாவம், படிப்பறிவில்லாத மக்கள் என்ன செய்வார்களோ?’ என்று நினைத்துத்தான் கவலைப்படுவேன். பேசாமல் நீங்கள் இங்கேயே கண்ணாடி போட்டிருக்கலாம்.
பதிலளிநீக்குஉங்கள் வலைப்பூ கருமை நிறத்திலும் எழுத்துக்கள் சிறியதாயும் இருப்பதால் என்னைப்போன்றவர்களுக்கு படிக்க சிரமமாயுள்ளது. தவறாக நினைக்காமல் இதை கவனத்தில் கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன்.
இதை இந்தப் பதிவில் சொல்லுவது தான் சரியென்று நினைக்கிறேன்.
வணக்கம் உறவே
பதிலளிநீக்குஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/
முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.
5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.
ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி
வலையகம்
இப்படிப்பட்ட
பதிலளிநீக்குஇடங்களில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்
வேதனை
நல்ல பதிவு தோழரே
எல்லாம் பணமயம்
பதிலளிநீக்குஎன்னங்க இது பகல் கொள்ளையால்ல இருக்குது?கண் பார்வை சரி பண்றதுக்கும் பிளாட் டெஸ்ட்டா???
பதிலளிநீக்குசொல்றேனேன்னு கோவிச்சுக்காதீங்க சகோ. அரசாங்க மருத்துவமனைக்கு போவதற்கு என்ன? வீணான கவுரவத்திற்காக தனியார் மருத்துவமனைக்கு நாம் சென்றுவிட்டு குத்துதே குடையுதேன்னு சொன்னா என்ன அர்த்தம். இப்போ அரசாங்க மருத்துவமனைகள் எவ்வளவோ முன்னேறி இருக்கு. எங்க ஊரு ஆரம்ப சுகாதார நிலையமே படு சுத்தமாவும் அவசியமான தேவைகள் அனைத்தும் நிரம்பியவையா இருக்கு. அப்படியே இல்லாவிட்டாலும் நாம்தான் நம் பகுதிக்காக போராடனும்.
பதிலளிநீக்குநீங்க பார்த்தது கொஞ்சம்தான்...இன்னும் எவ்வளவோ இருக்கு சகோ...காசு அதிகமானலும் வெளிநாட்டிலேயே மருத்துவம் பார்த்துக்கலாம் என்பது என் அபிப்ராயம்...பல் புடுங்க போனா நல்லாயிருக்கிற பல்ல புடுங்கி அனுப்புறாங்க நம்ம நாட்டுல,என்னத்த சொல்றது...
பதிலளிநீக்குஎன்னாது?
பதிலளிநீக்குமனிபர்ஹுக்கு பிரசவமா? குமார், ஒரு டவுட்டு.
சுகப்பிரசவம் தானா? இல்ல அதுவும் சிஷேரியன் தானா?
நல்ல அனுபவ பகிர்வு மக்கா. ஆனாலும், டாக்டருங்கக்கிட்ட நம்ம பருப்பு வேகறதில்ல. ஹூம்ம்ம்!
"சிந்திக்க வைக்கும் பதிவு சார் !"
பதிலளிநீக்குபணம் மட்டுமே பிரதானம் என்பதாகி விட்டது உலகில்
பதிலளிநீக்குநல்ல பதிவு. கண் பார்வை மங்குவது நீரிழவு நோயின் அறிகுறி என்பார்கள். அதனால் தான் ப்ளட் டெஸ்ட் செய்ய சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஇன்னும் ஸ்கேன், எக்ஸ்ரேன்னு எல்லா டெஸ்ட்டும் எடுக்காம இத்தோட விட்டாங்களே :-))
பதிலளிநீக்குமணிபர்ஸ்க்கு பிரசவம்.....சிரிப்பாயிருந்தாலும் சிந்திக்க வைக்குது உங்கள் அனுபவம் !
பதிலளிநீக்குகனகாலமாச்சு உங்க பக்கம் வந்து.குமார் சுகம்தானே நீங்க !
வாங்க துளசி கோபால்...
பதிலளிநீக்குஉங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மனோ அம்மா...
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அம்மா... வலைப்பூவின் கலரை மாற்றிவிட்டேன்.
வாங்க வலைஞன்...
பதிலளிநீக்குஉங்க வருகைக்கு நன்றி.
பதிகிறேன்...
வாங்க செய்தாலி...
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மனசாட்சி...
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ராஜி...
பதிலளிநீக்குஉங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அரசு மருத்துவமனைக்கு போகலாம்தான் சகோதரி... எங்கள் ஊரில் அரசு மருத்துவமனையில் கண் டாக்டர் இல்லையே... என்ன பண்ணுவது... போராடலாம்தான் ஊரில் இருப்பது 30 நாட்கள் மட்டுமே என்ன செய்வது சொல்லுங்கள்...
வாங்க யோகா...
பதிலளிநீக்குஉங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மேனகாக்கா...
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சத்ரியன்...
பதிலளிநீக்குஉங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எப்படிங்க சுகப்பிரசவம் ஆகும்... நாம் கொடுத்த சுகம்...
இது கழுத்தறுத்து வாங்குறதுல்ல அதனால சிசேரியன்தான்...
வாங்க தனபாலன்...
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சரவணன்...
பதிலளிநீக்குஉங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வானதி...
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சகோதரி வயதானவங்க... பார்வை குறைந்தவர்கள் என்றால் நீங்கள் சொல்வது போல் இருக்கலாம். எல்லாருக்கும் எதற்கு என்பதுதான் என் கேள்வி.
வாங்க அமைதிச்சாரல் அக்கா...
பதிலளிநீக்குஉங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அதுபோல சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
வாங்க ஹேமா...
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீண்ட நாளாச்சு சகோதரி நம்ம பக்கம் வந்து... ரொம்ப நல்லாயிருக்கேன்.
தாங்களும் குடும்பத்தில் அனைவரும் சுகம்தானே.
////கணிப்பொறி பயன்படுத்துவதால் அடிக்கடி தலைவலி வருவதால் டாக்டர் பரிந்துரையின் பேரில் டே-நைட் (பகலிரவு!?) கண்ணாடி பயன்படுத்தி வந்தேன்./////
பதிலளிநீக்குஎனக்கும் இப்போது பாரிய தலையிடி சகோ... மருத்துவர் இதே ஆலோசனையையே கூறியுள்ளார்..